உறவினர் உதவாது

7. கடைசியாய் வரும் ஏழாவது ஷரத்தும் இந்த ஐந்தாம், ஆறாம் ஷரத்துக்களை ஒட்டி அவற்றைக் ‘காம்ப்ளிமெண்ட்’ பண்ணுவதாகவே (இட்டு நிரப்புவதாகவே) இருக்கிறது. அது என்ன சொல்கிறதென்றால் புதிதாக அங்கத்தினர் ஆகிறவர்கள் ஏற்கெனவே அங்கத்தினர்களாக இருந்தவர்களின் நெருங்கிய பந்துக்களாக இருக்கப்படாது என்கிறது. ‘வாரியம் செய்தொழித்த பெருமக்களுக்கு ஆத்ம பந்துக்களல்லாதார்’ என்பது சாஸன வாக்கு.