தார்மீக கர்ம நேரான மோக்ஷ உபாயமல்ல

ஆனாலும், இன்னொன்றை இங்கேயே சொல்லி விடணும். ஸ்வதர்ம கர்மா மட்டும் ஆத்மாவை மனஸின் கட்டிலிருந்து விடுவித்து விடாது. அதாவது, நிஷ்காம்ய கர்ம யோகம் என்பதே நேராக மோக்ஷத்தை அளித்துவிடாது.

மனஸே அற்றுப்போன நிலை அல்லவா மோக்ஷம்? அப்போது எண்ணம் என்பது இல்லை. எண்ணமே இல்லாத போது கார்யம் நிச்சயமாக இல்லை. எனவே, கார்யரூபமான ஒரு யோகம் அதை அடைவிப்பதற்கில்லை.