இருக்கும் நிலையும், செய்யும் நிலையும்

மனஸானது நினைப்பு என்ற வேலையில்லாமலும், சரீரம் ஓடியாடிச் செய்யும் வேலையில்லாமலும் தூங்குகிறபோது அல்லது ஸமாதி நிலையிலிருக்கும்போது ஜீவன் அந்த ஆத்மாவாகவே இருக்கிறான் என்று சொன்னேன்.

அது இருக்கிற நிலை. மனஸும் உடம்பும் வந்தவிட்டதோ, உடனே அந்தஇருக்கிறநிலை போய், ‘செய்கிறநிலை வந்துவிடுகிறது. இவை இல்லாதபோது ஆத்மா ஏதாவது செய்ததா? இல்லை. எதுவுமே செய்யவில்லை. வெறுமனே இருந்துகொண்டு மட்டும் இருக்கிறது. இதைத்தான்கேவல ஸ்திதிஎன்பது. “கேவலம்என்றால் மட்டமானது என்று அர்த்தமில்லை. எதனாலோ இப்படி (அர்த்தம்) வந்து விட்டது. அந்த வார்த்தைக்கு ஸரியான அர்த்தம், இன்னொன்றின் கலப்பில்லாமல், தன்னன்தனியாக ஸ்வச்சமாக இருப்பது என்பதே. இப்படிகேவலமாக ஆத்மாவைப் பிரித்து அதிலே நிலைத்திருக்கும் அநுபவம்தான்கைவல்யம்.” கைவல்ய பதவி, கைவல்ய மோக்ஷம் என்று கேள்விப்படிட்டிருப்பீர்கள். அப்படியென்றால், மனஸின் பந்தமும் அதனால் ஏற்படும் ஸம்ஸார பந்தமும் இல்லாமல் விடுபட்டுத்தான்மட்டும் கலப்பற்று நிற்கிற சாச்வதாநுபவம் என்று அர்த்தம்.

மோக்ஷம் என்பதை ஒவ்வொரு ஸித்தாந்தம் ஒவ்வொரு பெயரில் சொல்லியிருக்கும். அத்வைதிகள் அதை ஆத்ம ஸாக்ஷாத்காரம் அல்லது ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் என்கிறோம். சைவர்களும், வைஷ்ணவர்களும் சிவ ஸாயுஜ்யம், விஷ்ணு ஸாயுஜ்யம் என்பார்கள். புத்தர் ஒரு தீபம் அணைந்து போய்விட்டாற்போல ஸகலமும் அழிந்து போய்விட்டநிர்வாணம்என்கிறார். ந்யாயவைசேஷிக ஸித்தாந்திகள் துக்கம் என்பதே இல்லாததானஅபவர்க்கம்என்பார்கள். ஜைன மதத்திலும், யோக சாஸ்த்ரத்திலும்கேவல ஸ்திதி”, கைவல்யம்என்றே மோக்ஷத்தைச் சொல்லியிருக்கிறது.

இப்படி வெறுமனேஇருந்துகொண்டு மட்டும் இருக்கிற நிலைபோய், மனஸ் முளைத்துசெய்கிற நிலைஏற்பட்டு விட்டால் உடனே அனர்த்த பரம்பரை அத்தனையும் புற்றீசல் மாதிரிப் புறப்பட்டு விடுகின்றன.