பாஷை ஆராய்ச்சி: அதிலும் பரமாத்ம-ஜீவாத்மா

ஒரு செப்புச் சொம்பு இருக்கிறது

சொம்புஎன்பதுசெம்புஎன்பதன் திரிபு. செப்பு என்பதும் செம்புதான். தமிழ் பாஷையில்ம்புஎன்பதுப்புஎன்று ஆகிறதிலே ஒரு வேடிக்கைஇதில் ஒரு பொது விதியே இருக்கிறது. பெரிசாக, மூலமாக ஒன்று இருக்கிறபோது அதன் பெயரில்ம்புவரும். அதிலிருந்தே சின்னதாக இன்னொன்று வரும்போது, அல்லது சின்னதாக ஒன்றைச் செய்கிறபோது அதன் பெயரில்ம்புஎன்பதுப்புஎன்று மாறிவிடும். தாய்ச் சரக்கும்பு’; அதிலிருந்து வந்த குழந்தைச் சரக்குகள்ப்புஎன்று சொல்லலாம். இரும்பு என்பது மூலப் பொருள்அது ()லோஹத்துக்குப் பேர். ஆனால், அந்த இரும்பைக் கொண்டு ரயில்வே லைன் போட்டால்இருப்புப்பாதைஎன்கிறோம். இதே மாதிரி, இலுப்பச் சட்டி என்பது இருப்புச் சட்டிதான். ‘வரம்புஎன்பது பொதுப்படையான எல்லை. இதையே குறுக்கி ஒரு வயலுக்கு எல்லை கட்டும்போதுவரப்புஎன்கிறோம். கரும்பு பொதுப்பேர். அதைச் சின்னதாக particularise பண்ணும்போது (குறிப்பிட்ட ஒன்றாக ஆக்கும்போது) கருப்பஞ்சாறு, கருப்பட்டி என்றெல்லாம் ஆகிறது. புலவர்களாக இருக்கப்பட்டவர்கள் மன்மதன் கையிலிருக்கிற தநுஸைக்கருப்புவில் என்றுதான் சொல்வார்கள். ‘கம்புஎன்பது கழிக்குப் பொதுப்பேர். இதையே ஒரு மரத்தோடு சேர்த்து அதன் பாகமாகச் சொல்லும்போதுகப்பும் கிளையுமாகஎன்கிறோம். ‘திரும்புவதுபொதுக்கார்யம்; திருப்பம், திருப்புமுனை என்று அதைபர்ட்டிகுலராகப் பண்ணுகிறோம்.

வினைச் சொல்லில்ம்புஎன்றிருப்பது பெயர்ச் சொல்லில்ப்புஎன்றாகிறதும் உண்டு. விரும்புவினைச் சொல், விருப்புபெயர்ச்சொல். திரும்புதிருப்பம் என்பதைக்கூட இப்படிச் சொல்லலாம்.

ம்பு’, ‘ப்புஇரண்டையும் சில ஸமயம் ஒரே அர்த்தத்தில் சொல்வதையும் பார்க்கிறோம். ஸம்ஸ்க்ருதத்திலேயே ஜலத்துக்குஅம்பு’, அப்புஎன்ற இரண்டு பேர்களும் இருக்கின்றன. ‘தூசி தும்பு’, ‘தூசி துப்புஎன்று இரண்டு தினுஸாகவும் சொல்கிறோம்.

பொதுவாகச் சொன்னால், பொதுவாயிருப்பதும்பு’, அதிலே குறிப்பாக ஒன்றாக ஆக்கினதுப்பு’.

சொம்பு, சொப்புவுக்கு வருகிறேன். முன்னாளில் குழந்தைகள் சமையல் விளையாட்டு விளையாடுவதற்குச் செம்பினால் ஆன பாத்ரங்கள்தான் சின்னச் சின்னதாகப் பண்ணிக்கொடுத்தார்கள். அதனால் அவற்றுக்குச்செப்புஎன்று பெயர். செப்புப் பாத்திரம் என்பதாக எத்தனையோ இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுடைய விளையாட்டு ஸாமான்களுக்கேசெப்புஎன்று பேர் வந்துவிட்டது. ‘சொப்புஎன்பது அதைத்தான். இப்படி செம்பினால் ஆன ரொம்பவும் சின்ன வஸ்துவுக்குச்செப்புஎன்று பேர் ஏற்பட்டபின், அதே லோஹத்தினாலான பெரிய பாத்ரங்களில் அதிகம் உபயோகிக்கப்படுவதான தீர்த்த பாத்திரத்துக்குச்செம்பு’ (சொம்பு) என்று பேர்வைக்கும்படி ஆயிற்று. தாய்ச் சரக்கின் பேரில்ம்புவரும், அதில் உண்டாகும் குழந்தைச் சரக்கின் பேரில் அதுப்புஎன்றாகிவிடுமென்றேனல்லவா? குழந்தை வைத்துக் கொண்டிருப்பதுசொப்புஎன்பதால், தாயார் வைத்துக்கொண்டிருப்பதுசொம்புஆகிவிடுகிறது! வாஸ்வதத்தில் அதுவும் செப்புப் பாத்திரம்தான்.

ஆத்ம தத்வத்திலிருந்து இப்படி பாஷை ஆராய்ச்சிக்கு வந்துவிட்டோமே என்று பார்த்தால் இதிலும் வேதாந்த ஸமாசாரம் வருவதாக ஸமாதானம் பண்ணிக்கொள்ளலாம். எப்படியென்றால், ‘ம்புஎன்பது மூலமான பரமாத்மா மாதிரி, ‘ப்புஅதிலிருந்து வந்த ஜீவாத்மா மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்!