சேர்த்து வைத்துக்கொண்டாலும், மேலே பல ஸ்வரங்களில் பாடுகிறாறப்போல, அபஸ்வரம் தட்டாமல் கவனமாகப் பாடுகிறாற்போல், பல விதமான கடமைகளையும் கவனமாக, ஸின்ஸியராக, பெர்ஃபெக்ட் – ஆகப் பண்ணிக்கொண்டேதான் போக வேண்டும். இல்லாவிட்டால் ச்ருதியோடேயே சேராத அபஸ்வரக் களஞ்சியமாக வேறே எதுவோ செய்வதாகத் தான் இருக்குமே தவிர, சாந்தமாக மெளனமாக ஆகிவிடாது. சப்த ப்ரஹ்மம், நாத ப்ரஹ்மம் என்று அநுஸந்தானம் பண்ணிக்கொண்டு போனால் அதுவே மெளனத்தில் இழைத்து விடுகிறாற்போல, சாஸ்த்ரீய கார்யங்கள் கார்யமில்லாத நிலையிலே முடிவில் இழைத்து விடும்; ஸகுணோபாஸனை நிர்குணத்தில் இழைத்துவிடும்.
என்ன கார்யம், கடமை பண்ணினாலும் பாரத்தை அவன் தலையில் போட்டுவிட வேண்டும். பட்டுக்கொளள்ளாமல், ஆனாலும், பெர்ஃபெக்டாகப் பண்ணவேண்டும். இது தான் நிஷ்காம்ய கர்மா. அவன் தலையில் போடுவது என்பதுதான் பக்தி. அப்புறம் அவனுடைய தலையிலே போட எந்த பாரமும் இல்லாமல் ஜீவனுடைய கர்மச் சுமை முழுதும் தீர்ந்து போய்விடும். ‘தான் எதுவும் பண்ணாதவன், தன்னை எதுவும் என்னவும் பண்ணமுடியாது’ என்ற நிலைக்கு ஜீவன் வாஸ்தவமாகவே போய்விடுவான்.