இருவகைச் சந்தங்கள்

சுக்லாம்பரதரம்ச்லோகத்தை எடுத்துக்கொண்டு அதில் (உயிரெழுத்து ரீதியில்) எத்தனை அக்ஷரம் இருக்கிறது என்று பார்த்தால் 32 அக்ஷரம் கணக்கு வருகிறது. இது

சுக்லாம்ரம் விஷ்ணும்

சிவர்ணம்துர்புஜம் |

ப்ரஸன்னம் த்யாயேத்

ஸர்விக்நோசாந்தயே ||

என்று எட்டெட்டு எழுத்து கொண்ட நாலு பாதங்களாகப் பிரிந்திருக்கிறது. ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்என்பது முதல் பாதம். ‘சசிவர்ணம் சதுர்புஜம்இரண்டாம் பாதம். ‘ப்ரஸன்ன வதனம் த்யாயேத்என்பது மூன்றாம் பாதம். ‘ஸர்வ விக்நோபசாந்தயேஎன்பது நாலாவது பாதம்.

ஸரி, அப்படியானால்ஷட்பதீஎன்கிறஆறுகால் ஸ்தோத்ரத்தில் ஒவ்வொரு ச்லோகத்திலும் இப்படி ஆறு அடிகள் இருக்கின்றனவா? இல்லை. ஒவ்வொரு ச்லோகத்திலும் நாலு பாதங்கள்தான் இருக்கின்றன. ஸாதாரணமாக அப்படி இருப்பதுதான் வழக்கம்.

இந்தஷட்பதீஸ்தோத்ரத்திலே ஒரு ச்லோகத்தை எடுத்துக்கொண்டால் அதற்குள்ளே வருகிற பாதங்கள்சுக்லாம்பரதரத்தில் இருக்கிற மாதிரி ஸமமான அக்ஷரம் கொண்டதாக இல்லை.

சந்தஸ் சாஸ்திரம்என்பதாகக் கவிதா லக்ஷ்ணம் கூறும் ஸம்ஸ்க்ருத யாப்பிலக்கணத்திலேயே இந்த விதமான அக்ஷரக்கணக்கில் வராத சந்தங்களை (‘மீட்டர்களை)ப் பற்றியும் இருக்கிறது. மீட்டரில் இரண்டு தினுஸை அது சொல்கிறது. ஒன்றுதான் ஒரு உயிரெழுத்துக்கு ஒரு அக்ஷரம் என்ற கணக்குப்படி இருக்கும் மீட்டர். இதற்குவ்ருத்தம்என்று பேர். தமிழில்விருத்தம் பாடுவதுஎன்று சொல்வது இதன் தொடர்புடையதாகத்தான் வந்திருக்கவேண்டும். இன்னொன்றுஜாதிஎனப்படும்.

ஜாதிக்கும், வ்ருத்தத்துக்கும் என்ன வித்யாஸமென்றால், வ்ருத்தத்தில் குறில், நெடில், கூட்டெழுத்து எல்லாவற்றுக்கும் ஒரேவால்யூதான். ‘சுக்லாம்என்பதில்சுஎன்பது குறில்; ‘க்லாம்நெடில்; அதோடுகூடக்லாம்என்பது க், ல், ம், என்ற மூன்று சப்தங்கள் கொண்ட கூட்டெழுத்தாக இருக்கிறது. இப்படியிருந்தாலும், நாம் எந்த அக்ஷரமானாலும் அதற்கு வால்யூ ஒன்று என்று வைத்து, ‘சுஒரு அக்ஷரம், ‘க்லாம்’ – உம் ஒரு அக்ஷரம் என்றுதானே கணக்குப் பண்ணினோம்?

ஜாதியில் ஒரு உயிரெழுத்துக் கொண்ட அக்ஷரம் ஒவ்வொன்றுக்கும் ஒரே மதிப்பு (value) கொடுப்பதில்லை. ‘வால்யூஎன்றும்மதிப்புஎன்றும் சொல்வதற்குமாத்ராஎன்று பெயர். மாத்திரை என்று தமிழில் ஆகும். metre என்பதுகூடமாத்ராவிலிருந்து வந்ததுதான். குறில், நெடில் என்று இரண்டு இருக்கின்றன அல்லவா? குட்டையான , , முதலானவை குறில். நெட்டையான , , முதலானவை நெடில். இவற்றை முறையேஹ்ரஸ்வம்என்றும்தீர்க்கம்என்றும் சொல்வது வழக்கம். யாப்பிலக்கணத்திலே குறிலான ஹ்ரஸ்வத்தைலகுஎன்றும், நெடிலான தீர்க்கத்தைகுருஎன்றும் சொல்லியிருக்கிறது. (லகு என்றால் லேசானது; குரு என்றால் கனமானது.) ஜாதி எனப்படும் சந்த வகையில் லகுவான அக்ஷரத்துக்கு, அதாவது குறிலுக்கு, வால்யூ ஒன்று; குருவான நெடில் அக்ஷரத்துக்கு வால்யூ இரண்டு. இப்படிப் பொதுவாகக் குறிலுக்கு ஒரு மாத்திரை என்றாலும் சில எழுத்துக்களோடு சேர்ந்து ஒரு குறில் வரும்போது, அது இரண்டு மாத்திரையாகிவிடும். அம், கம், சம் என்பதுபோல ஒரு குறிலுடன்அநுஸ்வாரம்என்கிறம்சேரும்போது அந்தக் குறிலுக்கு இரண்டு மாத்திரை ஏற்பட்டுவிடும். ‘விஸர்கம்என்பதாகசப்தத்துடன் அநேக சொற்கள் முடியும். “:” என்று இரண்டு புள்ளி போட்டு விஸர்கத்தைக் குறிப்பிடுவார்கள். ‘ராம:’ என்பதைராமஹஎன்று சொல்லவேண்டும். இப்படிப்பட்ட விஸர்கம் ஒரு குறிலை அடுத்து வந்தால் அப்போதும் குறிலுக்கு இரண்டு மாத்திரை. உதாரணமாகராம:’வில் வரும்இரட்டை மாத்திரை பெற்றுவிடுகிறது. ஒரு குறிலை அடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்துக்களின் கூட்டு வந்தாலும் அப்போது குறில் இரண்டு மாத்திரை பெற்றுவிடும். உதாரணமாக, ‘விஷ்ணுஎன்ற வார்த்தையில்ஷ்ணுஎன்பதுஷ், ண், என்பதாக இரண்டு மெய்யெழுத்துக்களும் ஒரு உயிரெழுத்தும் சேர்ந்த சப்தம். ‘விஎன்ற குறிலை அடுத்து இங்கே ஷ், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்கள் வரும். அந்தக் குறில் இரண்டு மாத்திரை பெற்று வரும்.

அக்ஷரங்களை வைத்துவ்ருத்தம்என்ற மீட்டர் முறை இருக்கிறாற்போலவே மாத்திரைகளை இப்படிக் கணக்குப் பண்ணிஜாதிஎன்றமீட்டர்முறையும் இருக்கிறது. இப்படிஜாதியில் பல சந்தஸ்கள் (சந்தங்கள்) இருக்கின்றன. ஒரு ச்லோகத்தைப் பாதங்கள் என்ற நான்கு பகுதிகளாக (வ்ருத்தத்தில் போலவே) இதிலும் பிரித்து, ஒவ்வொரு பாதத்துக்கும் இத்தனை மாத்திரைகள் இருக்கவேண்டுமென்று இந்த முறையில் வைத்திருக்கிறது. ஆனால், ‘ஜாதியில் ஒரு சுலோகத்தின் எல்லாப் பாதத்துக்கும் ஸமமான மாத்திரையாயில்லாமல், ஒவ்வொரு பாதத்துக்கும் வெவ்வேறாக இத்தனையித்தனை மாத்திரை என்று வைத்திருக்கும்.

சுக்லாம் பரதரம்ச்லோகத்தில்சுவும் ஒரு அக்ஷரம், ‘க்லாமும் ஒரு அக்ஷரம் என்று வ்ருத்த முறையில் கணக்குப் பண்ணினோமல்லவா? இதையே ஜாதி முறைப்படி செய்தால் இந்த இடத்தில் அந்த அக்ஷரம் ஒவ்வொன்றும் இரண்டு மாத்திரையாகிவிடும். ‘சுஎன்பது குறிலானதால் பொதுவாக அதற்கு ஒரு மாத்திரைதானென்றாலும், இங்கே அடுத்துக்லாமில் க், ல் என்ற இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தாற்போல் வந்துவிடுகின்றனவல்லவா? அதனால் இங்கே குறிலானசுவுக்கே இரண்டு மாத்திரை. ‘க்லாம்என்பதில்என்கிற நெடில் (க்,ல்,ம் என்பவற்றோடு) வருவதால், அதற்கும் இரண்டு மாத்திரை.

பொதுவாக, ஜாதி என்பதையும் வ்ருத்தம் என்றே சொல்லிவிடுகிறார்கள். மீட்டரில் இருப்பதெல்லாம் வ்ருத்தம் என்ற அபிப்ராயத்தில் இப்படிச் சொல்வதாயிருக்கிறது. அதனால்தான்ஜாதிவகையைச் சேர்ந்தஆர்யாமுதலான மீட்டர்களைக்கூடஆர்யா வ்ருத்தம்என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.

காமாக்ஷி அம்பாளைப் பற்றிய ப்ரஸித்த ஸ்தோத்ரமானமூக பஞ்ச சதீயில் முதல் நூறு ச்லோகங்கள் ஆர்யா என்ற ஜாதியைச் சேர்ந்தவையே. அந்தப் பகுதிக்குஆர்யா சதகம்என்றே பெயர். பரம உயர்வு பொருந்தியவள் என்பதால் அம்பாளுக்கேஆர்யாஎன்று பெயருண்டு. ஆசார்யாளுடைய அம்மாவின் பெயர் ஆர்யாம்பாள் என்பதுதான். பாடப்படும் அம்பாள், பாடல் அமைந்த மீட்டர் இரண்டுக்கும் பொருந்தும்படிஆர்யா சதகம்என்று ச்லேஷையாகத் தலைப்புக் கொடுத்திருக்கிறது.

சற்றுமுன் சொன்னாற்போல் ஜாதி சந்தஸ்களில் இன்னொரு விசேஷம், நாலு பாதங்களில் ஒவ்வொன்றும் ஒரே எண்ணிக்கையுள்ள மாத்திரைகள் கொண்டதாக இருப்பதில்லை.

வ்ருத்தம் என்று உயிரெழுத்துக்களைக் கொண்டு கணக்கு பண்ணுவதிலுங்கூட பாதத்துக்குப் பாதம் அக்ஷர வித்யாஸமுள்ளதாயும் சில மீட்டர்கள் உண்டுதான். எல்லாப் பாதமும் ஒரே அளவான அக்ஷரம் கொண்டது ஸம வ்ருத்தம். இப்படியில்லாமல் முதல் பாதத்திலும் மூன்றாம் பாதத்திலும் ஒரே அளவு அக்ஷரங்களும், அதற்கு வித்யாஸமாக இரண்டாம் பாதத்திலும் நாலாம் பாதத்திலும் ஒரே அளவான அக்ஷரங்களும் கொண்ட மீட்டர்களும் உண்டு. இவற்றை அர்த்த ஸமவ்ருத்தம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு பாதமுமே வேறு வேறு எண்ணிக்கையில் அக்ஷரங்கள் கொண்ட மீட்டர்கள்கூட இருக்கின்றன. இவைவிஷம வ்ருத்தம்எனப்படும். ‘அதென்ன விஷமம்?’ என்றால், விஸமம் என்பதே விஷமம். ‘ஸமத்துக்கு எதிரானதுவிஸமம்’. எல்லாப் பாதமும் ஸமமான அக்ஷரம் கொண்டதாயில்லாமல் இருப்பதால்விஷம வ்ருத்தம்என்று பெயர். யாரைப் பற்றியோ விஷமமாகப் பாடுவது என்று அர்த்தமில்லை!

விஷமம் என்ற வார்த்தைமிஸ்சீஃப்என்று அர்த்தம் கொடுப்பதற்குக் காரணம்கூட, அது ஸமநிலையில் அதாவது நடுநிலையில் இருந்துகொண்டுஉள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் வெளியிலே ஒரு அர்த்தமும் உள்ளுக்குள்ளே திரிசமனாக இன்னொரு அர்த்தமும் கொடுக்கும்படியாகப் பேசுவது அல்லது கார்யம் செய்வதாக இருப்பதுதான். ‘திரிசமன்என்கிறபோதும் அது ஸமமாக இருப்பதைத் திரிப்பது என்று பொருள்படுவதாகவே தோன்றுகிறது.

இரண்டால் வகுத்து ஸம பாதிகளாக ஈவு கொடுக்காத ஒற்றைப்படை எண்களையெல்லாம்விஷமம்என்பார்கள். ஐந்து, மூன்று ஆகியவை ஒற்றைப்படை எண்கள்தானே? ஆகையால் ஐந்து புஷ்ப பாணங்களை உடைய மன்மதனைவிஷமசரன்என்றும், முக்கண்ணான பரமேச்வரனைவிஷமநேத்ரன்என்றும் சொல்வதுண்டு.

இங்கிலீஷில் odd, even என்கிறபோதும் even என்பது இரட்டைப் படையை மட்டுமில்லாமல், even – minded என்பதில் ஸமநிலையான மனஸைக் குறிப்பிடுகிறது. ஒற்றைப் படையைக் குறிக்கும் odd என்பது விஷமம் (மிஸ்சீஃப்) என்று அர்த்தம் தராவிட்டாலும், அதற்குக் கிட்டே உள்ளவிசித்ரமான’, ‘fanciful’ என்ற அர்த்தங்களையும் தருகிறது – ‘ஆட் பிஹேவியர்’, ‘ஆட் எக்ஸ்ப்ளனேஷன்என்று சொல்லும்போது!

வ்ருத்தங்கள் பெரும்பாலும் ஸமமாயிருப்பவைதான். அர்த்த ஸம, விஷம வ்ருத்தங்கள் அபூர்வமே. ஆனால், ஜாதிகளிலோ வரிக்கு வரி (பாதத்துக்கு பாதம்) மாத்ரைகளின் எண்ணிக்கை வித்யாஸமாயிருப்பதே பொது வழக்கமாயிருக்கிறது. உதாரணமாகஆர்யாவில் முதல் பாதம், மூன்றாம் பாதம் ஆகிய இரண்டில் தலைக்குப் பன்னிரண்டு மாத்ரைகள் இருக்கவேண்டும். இரண்டாம் பாதத்தில் பதினெட்டு மாத்ரை இருக்கணும். கடைசியான நாலாவதில் பதினைந்து.

நம்முடைய ஷட்பதீ ஸ்தோத்ரத்தின் ச்லோகங்கள் ஆர்யா ஜாதியில் அமைந்தவைதான்.

அதன் முதல் ச்லோகத்தை எடுத்துக்கொண்டால் முதல் பாதம் அல்லது வரி: ‘அவிநய மபநய விஷ்ணோ.’

மாத்திரைக் கணக்குப் பண்ணினால்விஎன்ற எட்டும் அநுஸ்வாரம், விஸர்கம், அடுத்தாற்போல் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யெழுத்து என்கப்பட்ட எதுவுமில்லாமல் சுத்தமான குறில்களாக இருக்கின்றன. அதனால் இந்த எட்டுக்கும் எட்டு மாத்திரை. அப்புறம்விஷ்ணோஎன்று வருவதிலுள்ளவிமட்டும், அது குறிலாக உள்ள போதிலும், அதன் பின்னால் ஷ், ண் என்ற இரண்டு மெய்யெழுத்து வருவதால், நெடிலைப் போல இரண்டு மாத்திரை பெற்றுவிடுகிறது. முதலில் சொன்ன எட்டு மாத்திரை ப்ளஸ் இரண்டு. அதாவது பத்து, ‘ஷ்ணோஎன்பதில்என்ற நெடில் வருகிறது. அதற்கு இரண்டு மாத்திரை. மொத்தம், முதல் வரியில் பத்து ப்ளஸ் இரண்டு, அதாவது பன்னிரண்டு மாத்திரை.

இரண்டாவது வரி, ‘தமய மந: சமய விஷயம்ருக த்ருஷ்ணாம்.’

(என்ற) ஒவ்வொன்றுக்கும் ஒரு மாத்திரை வீதம் மொத்தம் நாலு. அப்புறம்:’ என்று குறியானக்குப் பின்னால் விஸர்கம் வருவதால் இரண்டு மாத்திரை. நாலு ப்ளஸ் இரண்டு, அதாவது ஆறு. அப்புறம், விம்ரு என்ற எட்டும் சுத்தமான குறில்கள். ‘ம்ருஎன்பதுகூட, ‘காரத்தைத் தாழ்த்திச் சொல்லும் குற்றியலுகர வர்க்கத்தைச் சேர்ந்ததால் ஸம்ஸ்க்ருதத்தில் ஒற்றை மெய்யெழுத்துக் குறில்தான். அதை ம், ர், என்பதாக இரட்டை மெய்யெழுத்துடன் சேர்ந்த உயிரெழுத்தாகக் கொள்ளக் கூடாது. இதோடு இரண்டாம் வரியில் ஆறு ப்ளஸ் எட்டு, அதாவது, பதினான்கு மாத்திரை. அப்புறம்த்ருஷ்ணாம்என்பதில் வரும்த்ருவும் சற்று முன் சொன்னம்ருமாதிரிக் குற்றியலுகரமானதால் அதற்கும் ஒற்றை மாத்திரைதானென்றாலும், அதை அடுத்துவரும்ஷ்ணாம்என்பதில்ஷ், ண்என்ற இரட்டை மெய்யெழுத்துக்கள் வருவதால் இங்கேத்ருவுக்கு இரண்டு மாத்திரை. பதினான்கு ப்ளஸ் இரண்டு. முடிவில் வரும் ‘ (ஷ்)ணா(ம்) ‘ நெடிலானதால் அதற்கும் இரண்டு மாத்திரை. ஆக மொத்தம், இரண்டாம் பாதத்தில் பதினெட்டு மாத்திரை.

மூன்றாவது பாதம்: ‘பூத தயாம் விஸ்தாரய.’

பூநெடிலானதால் இரண்டு மாத்திரை. ‘வுக்கு ஒவ்வொரு மாத்திரை. ‘யாம்நெடில்; இரண்டு மாத்திரை. ‘விக்குச் சேர்ந்தாற்போல்ஸ், த்என்று இரண்டு மெய்யெழுத்து வருவதால் இரட்டை மாத்திரை. ‘தாநெடிலானதால் இரண்டு. ‘ஒவ்வொன்றும் ஒன்று. மொத்தம் மூன்றாம் வரியில், முதல் வரி போலவே, பன்னிரண்டு மாத்திரைகள்.

இந்த முதல் ச்லோகத்தின் கடைசி வரி: ‘தாரய ஸம்ஸார ஸாகரத:’ ‘தாஇரண்டு மாத்திரை. ‘’ – தலைக்கு ஒவ்வொரு மாத்திரை. ‘ஸம்என்பதில்ம்என்கிற அநுஸ்வாரம் வருவதால் இரட்டை மாத்திரை. ‘ஸாஇரண்டு மாத்திரை. ‘’- ஒன்று. மறுபடியும் ஸாஇரண்டு. ‘தலைக்கு ஒவ்வொரு மாத்திரை. ‘:’ என்று முடிவதில் விஸர்கம் வருவதால் இரண்டு. மொத்தம் கடைசிப் பாதத்தில் பதினைந்து மாத்திரை.

ஆர்யாமீட்டரிலேயேகீதிஎன்றும் சற்று வித்யாஸமாக ஒன்று உண்டு. அதிலேயும் முதல், மூன்றாம் பாதங்களுக்குப் பன்னிரண்டு மாத்திரைதான். ஆனால், இரண்டு, நான்கு ஆகிய இரு பாதங்களுக்கும் இதிலே பதினெட்டு மாத்திரைகள். இரண்டு பாதங்கள் 12 மாத்திரையும், இரண்டு பாதங்கள் 18 மாத்திரையும் கொண்ட இது அர்த்த ஸம மாத்ரா ஜாதியைச் சேர்ந்ததாகும். ‘மூக பஞ்ச சதீயின்ஆர்யா சதகச்லோகங்கள் இந்த ஜாதியில் அமைந்தவைதான். முதல் ச்லோகம்:

காரண பர சித்ரூபா

காஞ்சீபுர ஸீம்நி காம பீடகதா |

காசந விஹரதி கருணா

காச்மீர ஸ்தபக கோமளாங்கலதா ||

முதல் பாதம் : கா(2) (3) (4) (5) (6) சி(8) [அடுத்துத்ரூவில் இரட்டை மெய்யெழுத்து வருவதால்] த்ரூ (10) [நெடிலானதால்] பா(12) – மொத்தம் 12 மாத்திரை.

இரண்டாம் பாதம் : கா(2) ஞ்சீ(4) பு(5) (6) ஸீ(8) ம்நி(9) கா(11) (12) பீ(14) (15) (16) தா(18) – மொத்தம் 18 மாத்திரை.

மூன்றாம் பாதம் : கா(2) (3) (4) வி(5) (6) (7) தி(8) (9) ரு(10) ணா(12) – மொத்தம் 12 மாத்திரை.

நான்காம் பாதம் : கா(2) ச்மீ(4) (6) [அடுத்தாற்போல்ஸ், த்என்ற இரண்டு மெய்யெழுத்து வருவதால்] ஸ்த(7) (8) (9) கோ(11) (12) ளா(14) ங்க(15) (16) தா(18) – மொத்தம் பதினெட்டு மாத்திரை.