எருமைத்துதி

அந்த நூல் இப்போது இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்குமஹிஷ சதகம்என்று பெயர் எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிறேதால்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

மஹிஷிஎன்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்ட மஹிஷிஎன்கிறோம். ஆனால் ராஜாவுக்குமஹிஷன்என்று பேரில்லை. ‘மஹிஎன்றால் பூமி என்பதை வைத்துமஹீசன்’, ‘மஹிபதிஎன்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிக் கவி மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவர்சதகம்பண்ணத்தான் நினைத்தாரோ அல்லதுஸாஹஸ் ரீயாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ச்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பி வந்தார்.

அதன் ஸப்ஜெக்டைச் சுருக்கமாகச் சொன்னால், அஸத்தானவர்களைத் தன் ஸபையில் வைத்துக்கொண்டு அவர்களுக்குஆமாம் பூசாரிபோடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட ஒரு எருமைக்கடாவை வைத்துக்கொண்டு அதனால்உழுதுண்டு வாழ்வதே மேல்என்பதுதான்! ‘உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் பின் செல்கிறோமோ அந்த எருமையையேதொழுதுஸ்துதிப்பதாகத்தான் ச்லோகங்கள் செய்தார்!

அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

மஹாபண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்தையைக் காசுக்கு விற்கிறார். ஷட்தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர் சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்தர்சனமாவது, சை! க்யாதி வாய்ந்த குட்டிக் கவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்து விட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனானஎருமைக் கடவுளானஉன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்கியத்தின் பலன்தான்!” என்று ஒரு ச்லோகம்1.

இன்னொன்றில், “எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! ‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்திய மில்லையேஎன்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதீ என்றெ சொல்லணுமாக்கும்என்றார்2.

இவர் அனுப்ப அனுப்ப ச்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்குஅவனும் உள்ளூற நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே, அதனால்மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.