பிரஸித்தமான பெயர்

ஸுமுகச்சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||

விநாயகர்என்பது அடுத்த பேர். பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. ‘பிள்ளையார் சதுர்த்திஎன்று பேச்சில் சொல்வதையேவிநாயக சதுர்த்திஎனறுதான் நாம் formal- ஆகக் குறிப்பிடுகிறோம். வடக்கேகணேஷ் சதுர்த்திஎன்பார்கள். ஸித்தி விநாயகர், வரஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோவில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். ‘விநாயகர் அகவல்என்றே ஒளவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்திற்குப் பெயர் இருக்கிறது.

விநாயகர். நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.