அம்பிகையின் வடிவேயான துதி

அவளுடைய குணம் வேறே, ரூபம் வேறே இல்லை. இந்த ஸ்தோத்ரமும் அவளுக்கு வேறே இல்லை. அவளுடைய அனந்த கல்யாண குணங்கள் கேசாதி பாதமாக அவயவங்களில் ஒரு ரூபம் எடுத்துக் கொண்டது போலவே, அந்த அவயவ வர்ணனையைக் கேசாதி பாதம் பண்ணியுள்ள இந்த ஸ்தோத்ரமாகவும் வாக்கு ரூபம்சொல்லுருவம்எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு ஸ்தோத்ரத்தை முடிக்கும்போதுஇதைப் பாராயணம் செய்தால் இன்ன பலன் கிடைக்கும்என்று சொல்வது வழக்கம். அதற்குபலச்ருதிஎன்று பெயர். ‘ஸெளந்தர்ய லஹரிகடைசி ச்லோகமோ, வாங்மயீயாகசொற் பிரபஞ்சம் முழுதுமாகஉள்ள அம்பாளிடமிருந்தே ஏதோ ஸ்வல்ப வாக்குகளை எடுத்து அவளுக்கே ஸ்தோத்ரம் என்று பண்ணிய அசட்டு ஸாஹஸம்தான் இந்த ஸ்தோத்ரம் என்று ஜகதாசார்யாள் ஒரே அடக்கமாகச் சொல்லி ஸமர்ப்பணம் பண்ணுவதாக இருக்கிறது. அதற்கு முந்தின ச்லோகந்தான் (ச்லோகம் 99) பலச்ருதி மாதிரியிருக்கிறது. பலச்ருதிமாதிரிஎன்று ஏன் சொல்கிறேனென்றால்இதைப் பாராயணம் பண்ணுவதால் இன்ன பலன்கள்என்று அதில் சொல்லியிருக்கவில்லை. பொதுப்படையாக, ‘உன்னை உபாஸிப்பவன் இன்ன பலன்கள் அடைகிறான்என்றே சொல்லியிருக்கிறது. அவை என்ன என்று அப்புறம் அந்த ச்லோகத்திற்கு வருகிறபோது பார்த்துக்கொள்ளலாம்! இங்கே சொல்ல வந்தது, ஆசார்யாள்இந்த ஸ்தோத்ர பாராயண பலன்என்று போடவேண்டிய இடத்தில்அம்பாளை உபாஸிப்பதன் பலன்என்று போட்டிருப்பதைத்தான். ஏன் அப்படிப் போட்டார்? இரண்டு காரணம் சொல்லலாம். ஆசார்யாளுக்கு அஹம்பாவ லேசமும் இல்லாததால் தாம் பண்ணிய ஸ்தோத்ரத்திற்கு அந்தப் பலன்களைத் தருகிற சக்தி இருப்பதாகச் சொல்லிக் கொள்ள எண்ணமில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், இந்த ஸ்தோத்ரமே அம்பாளுடைய ஸ்வரூபந்தான், அவளுடைய சொல் வடிவந்தான்; ஆனபடியால் இதைப் பாராயணம் பண்ணுவதே அவளை உபாஸிப்பதுதான்என்பதே. ஸ்தோத்ரமே ஸ்தோத்ரிக்கப்படும் தேவி ஸ்வரூபமாயிருக்கும்போது அதன் பாராயண பலனே தேவி உபாஸனையின் பலனைத் தரத்தானே செய்யும்? இதைத் தான் அந்த ச்லோகத்தில் குறிப்பால் உணர்த்தியிருப்பதாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.