சிவத்துக்கும் ஜீவசக்தி: ஆண் பெண் பெயர்கள்

ஆனால், வேடிக்கையாக, இப்படி சிவநாமாவில் ஆரம்பித்திருந்தாலும், அந்த நாமாவிலேயேகூட சக்தி மஹிமையைத்தான் அம்பாள் பக்தர்கள் காட்டுவார்கள்! என்ன சொல்வார்களென்றால் : ‘சிவனும் சக்தியும் சேர்ந்திருக்கிறது போல இங்கே முதலில் வரும் சிவ நாமாவோடு அடுத்ததாகசக்த்யாஎன்று வருவதில் சக்தி நாமா சேர்ந்திருப்பது மாத்திரமில்லை. ‘சிவஎன்கிறதிலேயேசிஎன்ற முதல் அக்ஷரத்தில் சக்தி சேர்ந்திருக்கிறாள். அப்படிச் சேர்ந்திருப்பதால்தான் அந்த சிவ நாமாவுக்கு ஜீவனே ஏற்பட்டிருக்கிறதுஎன்பார்கள்.

எப்படியென்றால்உங்களுக்குத் தெரியாத விஷயம் சொல்கிறேன்: ‘சிவ என்கிறதில் முதல் அக்ஷரமானசியில்காரம் இருக்கிறதல்லவா? ‘ச்என்ற மெய்யெழுத்தோடு இந்த உயிரெழுத்தானசேர்ந்துதானேசிஆகியிருக்கிறது? இந்த’, ‘என்பதே அம்பாள் பேர்தான் மெய்யெழுத்துக்கள் சிவ அக்ஷரங்கள், உயிரெழுத்துக்கள் சக்தி அக்ஷரங்கள் என்று பொதுவிதி. அது மட்டுமில்லாமல் உயிரெழுத்துக்களிலும்க்கள் அம்பாள் ஸ்வரூபமே. காரியமில்லாத பிரம்மத்திற்குப் பிரணவம் பேர் என்கிறது போல, காரியமில்லாத பிராம்மமான சிவனோடு காரியப் பிரம்மமான சக்தியும் சேர்ந்துள்ளதான சிவசக்திக்கு ஒரு பிரணவம் உண்டு. அதிலே சக்திக்கான அக்ஷரம்தான் ச்ருதி [வேத]ப் பிரமாணமே இருக்கிறது, ‘காரம் அம்பாள் என்பதற்கு. ஹ்ருதய பத்மத்தில் லக்ஷ்மி ஸ்வரூபமாக உள்ள அம்பாளுக்கு [வேதத்திலுள்ள] ஸ்ரீசுக்தத்தில் பத்மினி என்று பெயர் சொல்லி, ” ‘காரமாக இருக்கும் அவளிடம் சரணாகதி செய்கிறேன்என்று ப்ரபத்தி பண்ணியிருக்கிறது. ‘ஸ்ரீஎன்பதும் ஈகாரமாகத்தானே இருக்கிறது?

புருஷப் பெயர்களில்காரத்தில் முடிவதே ஜாஸ்தி இருக்கின்றனசங்கர, நாராயண, ராம, க்ருஷ்ண, ஸுப்ரஹ்மண்ய, கணேச என்ற மாதிரி. ஸம்ஸ்கிருதத்தில் விஸர்கம் சேர்த்து சங்கரஹ, நாராயணஹ என்றெல்லாம் சொல்வார்கள். தமிழில் சங்கரன், நாராயணன் என்கிறோம். ஹிந்திக்காரர்கள் சங்கர், நாராயண் என்கிறார்கள். வர வரத் தமிழ்தேசத்திலும் அப்படிச் சொல்வதே ஃபாஷனாகிக் கொண்டு வருகிறது.

பெண்பால் பெயர்கள்யில் முடிவதே ஜாஸ்தி: சங்கரி, நாராயணி, லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி, காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி. புருஷ தெய்வங்களின் சக்தியை, பத்னியைச் சொல்லவேண்டுமானால், ‘’-வில் முடியும் பேரைஆக்கிவிடுவதைப் பார்க்கிறோம்: சங்கரசங்கரி, ஈச்வரஈச்வரி, நாராயணநாராயணி, நரஸிம்ஹநாரஸிம்ஹிநாராயணி, வைஷ்ணவி என்ற இரண்டு பெயர்களில் மட்டும் ஒரு விசேஷம். அவை நாராயண பத்னியை, விஷ்ணு பத்னியைவிடக் குறிப்பாக அவருக்கு ஸஹோதரியாயுள்ள அம்பாளைத்தான் குறிப்பிடுகின்றன. அம்பாளுக்கும் விஷ்ணுவுக்குமுள்ள நெருக்கம் அப்படி! அதனால்தான் ரொம்பவும் வேடிக்கையாக சங்கரசங்கரி மாதிரி ஹரஹரி என்னும்போது அந்த ஹரி, அம்பாள் பேராக இல்லாமல் விஷ்ணு பேராகவே இருக்கிறது! தேவதேவி, ஸஹோதரஸஹோதரி, புத்ரபுத்ரி என்றிப்படி ஆண்பால்காராந்தம் [அகார முடிவு] பெண்பாலில்காராந்தமாயிருக்கிறது. வெள்ளைக்காரர் பெயர்களிலும் பொம்மனாட்டிகளுக்கு மேரி, லூஸி, அன்னி, ஜூலி என்றுகாரப் பெயர்கள் நிறைய இருக்கின்றன. நம் தேசத்திலேயேகாராந்தப் புருஷப் பெயர்களை ஒரு பாஷையில் சங்கரன், நாராயணன் என்று [முடிவில்] ‘ன்போட்டும், இன்னொன்றில் ஷங்கர், நாராயண் என்று ஒடித்தும், இன்னொன்றில் சங்கருடு, நாராயணுடு என்று இன்னொரு விதமாக முடித்தும் சொன்னாலும் இகாராந்த ஸ்த்ரீ லிங்க [பெண்பால்] பெயர் முடிவுகளை மட்டும் மாற்றாமல் எல்லா பாஷைகளிலும் காமாக்ஷி, மீநாக்ஷி இத்யாதியாகவே தான் சொல்கிறோம்.

சங்கரசங்கரி, ஈச்வரஈச்வரி மாதிரிருத்ரஎன்றால்ருத்ரிஎன்று சொல்லாமல் ருத்ராணி என்று சொல்லணும். இப்படியே சிவசிவாநி, சர்வசர்வாணி, பவபவாநி, இந்த்ரஇந்த்ராணி, ப்ரஹ்மப்ரஹ்மாணி என்று அநேகம். இங்கேயும் ஸ்த்ரீ நாமங்கள்யில்தான் முடிகின்றன.

சிவவுக்குசிவாநிமட்டுந்தான் பெண்பால் என்றில்லை;’ சிவாஎன்றாலும் சிவ பத்னிதான். சிவன்ஸ்வாமி, சிவாஅம்பாள். இப்படியே ராமராமா, க்ருஷ்ணக்ருஷ்ணா. அதாவது அகாராந்தப் புருஷப் பெயர் ஸ்த்ரீ பெயராகும்போது ஒன்று, ‘ஆகிறது; இல்லாவிட்டால்ஆகிறது. ‘ராமஆகாரமாகராமாஎன்று ஆனாலும்அபிராமஎன்பது இகாரமாக அபிராமி என்று ஆகியிருக்கிறது.

க்களைப் போலவேவில் முடிவதாகவும் நிறையப் பெண்பால் பெயர்கள் இருக்கின்றனஉமா, ரமா, துர்கா, பாலா, லலிதா, சாரதா.

அமரம்’ (அமரகோசம்) என்ற ஸம்ஸ்கிருத நிகண்டுவிலே அடுக்கிக் கொண்டே போயிருக்கிற அம்பாள் நாமாக்களைப் பார்த்தால் ஒன்று அதுயில் முடியணும், இல்லாவிட்டால்வில் முடியணும் என்று தெளிவாகத் தெரிகிறது.

உமா, காத்யாயநீ, கௌரீ, காளீ, ஹைமவதீ, ()ச்வரீ

சிவா, பவாநீ, ருத்ராணீ, சர்வாணீ, ஸர்வமங்களா

அபர்ணா, பார்வதீ, துர்கா, ம்ருடாநீ, சண்டிகா, ()ம்பிகா

ஆர்யா, தாக்ஷாயணீ, சைவ கிரிஜா, மேநகாத்மஜா

கர்மமோடீ, து சாமுண்டா, சர்மமுண்டா, து சர்சிகா

சைவ’, ‘துஎன்பதெல்லாம் பேரில்லை. ‘மேலும்என்று அர்த்தம்.

லக்ஷ்மியின் பெயர்களை [அமரத்தில்] பார்த்தாலும் இப்படியே இருக்கும்.

லக்ஷ்மீ : பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர் ஹரிப்ரியா

இந்திரா லோகமாதா மா க்ஷீரோததநயா ரமா

பார்கவீ லோகஜநநீ க்ஷீரஸாசுரகந்யகா

ஸரஸ்வதி பேர்களும் அல்லது அந்தமாகவே இருக்கிறது:

ப்ராஹ்மீ து பாரதீ பாஷா கீர் வாக் வாணீ ஸரஸ்வதீ

வாக்என்பதற்கு மூலம்வாச்’. அதுவும்கீர்என்பதும் மட்டும் மெய்யெழுத்தில் முடிகிறது. ஆனால் இது ரொம்ப அபூர்வம். பொதுவாகக் காணப்படுவது ஸ்த்ரீ நாமாக்கள் ஆகாராந்தமாகவோ ஈகாரந்தமாகவோ இருப்பதைத்தான்.

தமிழிலும் பெண்பாலைக் குறிக்கதான் போடுகிறோம். அரசன்அரசி, அண்ணன்அண்ணி, இறைவன்இறைவி இப்படி ஆனால்காரந்தமாகத் தமிழில் பொம்மனாட்டிப் பேர்கள் முடிவதில்லை. ஸ்மஸ்கிருதத்தில்வில் முடிவதைக்கூடத் தமிழில்ஆக்கியிருக்கிறோம்: ஸீதாஸீதை, லலிதாலலிதை என்று. ஸம்ஸ்கிருதத்தில்என்று பேர் முடியவே முடியாது. ஐகாரத்தில் சப்தமே [வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பெயர்ச் சொற்களைக் கூறும் அமைப்பு] கிடையாது. ஆனாலும் மந்த்ர சாஸ்திரத்தில் அம்பாளை வாக்தேவியாகச் சொல்லும்போது இது வருகிறது.

காரம் ஸ்த்ரீ நாமங்களுக்கு மட்டுமே ஆனது. [சிரித்து] எக்ஸ்க்ளூஸிவ்! ‘வில் முடியும் புருஷப் பேரே கிடையாது.

அந்நிய தேசங்களிலும் டயானா, ஜூலியானா, ஃபாதிமா, கதிஜா என்று ஸ்த்ரீகளின் பெயர்கள்வில் முடிவதாக நிறைய இருக்கின்றன. வெள்ளைக்கார ஸ்த்ரீபுருஷப் பெயர்கள் பல தினுஸாக முடிகின்றன.

ஆனால் அங்கேயும் ஒரு புருஷப் பெயரை ஸ்த்ரீ பெயராக்கும்போதுகாரமாக்கியே முடிக்கிறார்கள்அலெக்ஸாண்டர்: புருஷப் பெயர்; அதையே பொம்மனாட்டிப் பேராக்கும் போது அலெக்ஸான்ட்ரா; விக்டர்விக்டோரியா. நம்மில் அடியோடுகாரந்தமாகப் புருஷப் பேரே இல்லையென்றால் அங்கேயும் அபூர்வமாகவே ஜோஷுவா, ஜெரிமியா மாதிரி ஒன்று, இரண்டு தவிரவில் முடியும் புருஷப் பெயரில்லை.

காராந்தமாக ஸ்த்ரீ பெயர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் ஹரி, கணபதி, ராமமூர்த்தி என்றிப்படி பல புருஷப் பெயர்களும் முடிகின்றன. ஆனால்காரந்தமாக பெண் பெயர்கள் மாத்திரமே இருக்கின்றன. புல்லிங்கத்தில் [ஆண்பாலில்] ஆகாரந்தமான பேரே கிடையாது என்று சப்த புஸ்தகத்தைப் பார்த்தால் தெரியும். புருஷ சப்தங்களில்காரந்தராமசப்தத்துக்கு அடுத்தாற் போலகாரந்தஹரிசப்தம்தான் போட்டிருக்கும். ‘வில் முடிவதாக எதுவுமே கிடையாது. ஸ்த்ரீ சப்தங்களிலோகாரந்தமே இருக்காது. எடுத்தவுடனேயேரமாஎன்றுவில் முடிவதுதான். அப்புறம்யில் முடியும்மதிசப்தம்; அதற்கப்புறம்யில் முடியும். கௌரீ சப்தம்.

நாம் தமிழில் லக்ஷ்மி, ஸரஸ்வதி, பார்வதி என்றுயாகக் குறிலில் எழுதும் எல்லாமே [ஸம்ஸ்கிருத] மூலத்தில் லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, பார்வதீ என்று [நெடிலான] ‘யில்தான் முடிவது. வித்யாஸம் பார்க்காமல் நான் சேர்த்தே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ‘யில் முடியும் மிகப் பெரும்பாலான பெயர்ச் சொற்கள் பெண்பாலாகவே இருக்கின்றன: ‘காரந்தத்தைவிடவும் குறைவாகவே ஆண்பாலில்காராந்தம் இருக்கிறதுஸேநாநீ (ஸேநாதிபதி), க்ராமணீ (கிராமணியார் என்கிற கிராமத் தலைவர்), ஸுதீ (நல்லறிவுள்ளவர்) முதலான ஒரு சில.

ப்ரஹ்மா, தாதா, கேசிஹா, தர்பஹா, த்வஷ்டா, ஆத்மா1 என்றெல்லாம்காராந்தமாக விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேர்கள் வருகிறதே! இவரானால் ஆகாராந்த புல்லிங்க சப்தமே இல்லை என்கிறாரே!” என்று நினைக்கலாம். இங்கேவில் முடிவதாகச் சொன்ன எல்லாப் பெயர்களுக்கும் மூல ரூபம் அப்படி முடியாமல் வேறே விதமாகவே முடியும். ‘ப்ரஹ்மாவின் மூல ரூபம்ப்ரஹ்மன்’; ‘ஆத்மாவின் மூல ரூபம்ஆத்மன்’; இப்படியேகேசிஹா’, ‘தர்பஹாஎன்பதும்கேசிஹன்’, ‘தர்பஹன்தான். ‘தாதா’, ‘த்வஷ்டாஎன்பவை மூலத்தில்தாத்ரு’, ‘த்வஷ்ட்ருஎன்றே முடியும். அதாவது ஆகாரத்தில் அந்தப் பெயர்கள் முடியவில்லை.

பிதாஎன்று ஆண்பாலான தகப்பனாரைச் சொல்கிறோம். இதுவும்பித்ருஎன்ற மூலத்திலிருந்து வந்ததே. மாத்ருமாதா; பித்ருபிதா, சர்மா, வர்மா, குப்தா என்று சொல்லும் [முறையே பிராமண, க்ஷத்ரிய, வைசிய] ஜாதிப் பெயர்களும் மூலத்தில்வில் முடியாமல் சர்மன், வர்மன் என்றும்குப்தஎன்று [குறிலான] அகாராந்தமாக முடிவதாகவுமே இருக்கின்றன. ‘ஸகா’ – தோழன்என்ற புருஷ சப்தத்தைக்கூடகாராந்தமாகச் சொல்லாமல், ரொம்பவும் வேடிக்கையாகஸகிஎன்றே மூல ரூபம் காட்டிகாரந்தமாகவேடிக்ளைன்செய்திருக்கும் [வேற்றுமை உருபுகளைச் சேர்த்துக் கொடுத்திருக்கும்].

[முன்னேயே] சொன்னாற்போல்காரத்தில் முடியும் ஸ்த்ரீலிங்கப் பெயரும் இல்லை. ‘காரத்தில் முடியும் புல்லிங்கப் பெயரும் இல்லை. இரண்டிலும் முடிவதாக ஸ்த்ரீலிங்கப் பெயர்களே அதிகம் இருக்கின்றன.

புருஷர்கள்தான் ஸ்த்ரீகளைவிட நெட்டையாக இருப்பவர்கள். ஆனாலும் ஆனா ஆவன்னாவை எடுத்துக் கொண்டாலோ குட்டை [குறில்] அகாராந்தமே புருஷர்களுக்கு, நெட்டை [நெடில்] ஆகாராந்தம் ஸ்த்ரீகளுக்கு என்று இருக்கிறது. இங்கே ஸ்த்ரீகளைத்தான் புருஷர்களை விட [சிரித்து] ‘உயர்த்திச் சொல்லியிருக்கிறது!

குட்டை நெட்டை இரண்டுமே ஸ்த்ரீ பெயர் முடிவுகளில் அதிகம் இருக்கின்றன.

சக்திஎன்பதேயில் முடிவதுதான்! ‘தேவீ’, ‘ஈச்வரீஎன்பவையில் முடிகின்றன. ‘அம்பாவும்அம்பிகாவும்வில் முடிகின்றன.

முடிவுதான் ஸ்த்ரீகளுக்குஎக்ஸ்க்ளூஸிவ்என்றாலும், இகார ஈகாரங்களையே சக்தி ஸ்வரூபமாகச் சொல்வதுதான் வழக்கம். அதன் ரஹஸ்யம் மந்த்ரவித்துக்களுக்குத் தெரியும். இந்த விஷயம் ரஹஸ்யமாகப் போஷித்து அதிகாரிகளுக்கே [உபாஸிக்கத் தகுதி பெற்றவர்களுக்கே] சொல்ல வேண்டியது. சுருக்கமாக: அத்தனைக்கும் ஜீவ சைதன்யத்தை [உயிரியக்கத்தையும் அறிவொளியையும்] தருவதுகாரந்தான்.

சிவஎன்கிறபோது முதல் எழுத்தானசியிலேயே அம்பாள்காரமாகப் பிரிவற ஒட்டிக்கொண்டு உயிர் தருகிறாளென்று சொல்ல வந்தேன்.

சிவத்தில் இந்தபோய்விட்டால் என்ன ஆகும்? புருஷப் பெயராச்சே என்று இகாரத்தை அகாரமாக்கினால் என்ன ஆகும்? பரம மங்களமான சிவ நாமாவே பரம அமங்களத்தைக் குறிப்பதாகிவிடும்! ‘சியிலிருந்துயை மைனஸ் பண்ணினால் அதுஎன்றுதானே ஆகும்? அப்போதுசிவம்’? ‘சவம்என்றல்லவா ஆகிவிடும்? ‘என்ற உயிரெழுத்துதான் ஈச்வரனுக்கே ஜீவனை, உயிரைத் தருகிறது. இது போனால் உயிர் போன சவம்தான்!

இதைச் சொல்லும்போதே இன்னொன்று கண்டு பிடித்திருக்கிறேன்!’ ஈச்வரன்என்றாலும் முதலில்தான் உட்கார்ந்திருக்கிறது! வேதாந்தத்தில் ஈச்வர சப்தந்தான் ஸகுண ப்ரஹ்மத்தைஅதாவது கார்ய ஸம்பந்தமுள்ள ப்ரஹ்மத்தைகுறிப்பது. கார்யமெல்லாம் சக்தி பீஜமானயில்தான் ஆரம்பிக்கிறது.

பீஜம் என்றால் விதை. ஒரு சின்ன விதைக்குள் எப்படி மரமே மறைந்திருக்கிறதோ, அப்படி மஹா மந்த்ர சக்தியை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டுள்ள திவ்ய அக்ஷரங்களையேபீஜம்’, ‘பீஜாக்ஷரம்என்பது.

சக்தி சேராவிட்டால் சிவம் சவம் என்பதை நம் தமிழ் வழக்கில் ஒலிகளுக்கு அழகாகப் பெயர் கொடுத்திருக்கும் முறையில் பார்க்கிறோம். சிவசக்தி ப்ரணவத்தில்வருகிறது; இதுதான் அம்பாளுக்கான அக்ஷரம் என்றேன். ‘என்பது தமிழ் வழக்கில் உயிர் எழுத்து. இதோடுகூட சிவசக்தி ப்ரணவத்தில் ஈச்வரனின் சப்தரூபமான மெய்யெழுத்து சேர்ந்திருக்கிறது. மெய் என்று உடம்புக்குப் பேர். ஆக, சிவசக்தி ப்ரணவத்தில் ஸ்வாமி உடம்பு எழுத்தாகவும் அம்பாளே உயிர் எழுத்தாகவும் இருக்கிறார்கள். உயிர் இல்லாத உடம்பு என்ன? ‘சிவம்மைனஸ்என்னவென்று பார்த்தோமே, அதுதானே?

சக்தி இல்லாவிட்டால் சிவம் சவம் என்றால் என்ன அர்த்தம்? [சிரித்து] யசமானியம்மாள் இல்லாமல் ஐயாவுக்குச் செயலே இல்லை என்று அர்த்தம்! பேச்சு வழக்கைக்கூடச் சொன்னேனே, ”உனக்குப் இதைப் பண்ண சக்தி இருந்தா பண்ணு! இல்லாட்டா சிவனேன்னு கிடஎன்கிறோம்! செயல் புரியும் திறமை இருந்தால்சக்தி’; ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால்சிவனேஎன்று! இதிலிருந்து அவளின்றி அவனுக்குச் செயலில்லை என்று ஆகிறதல்லவா? யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது? ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?

தன் சக்தியை பிரம்மம் அறிந்ததால்தான் அதைக் கொண்டு ஸ்ருஷ்டியை உண்டாக்க முடிந்தது. சக்தி இருப்பதாக அது அறியும்படி செய்ததும் அதனுடைய சக்தி தானே? இதைத்தான் ஸ்தோத்திரத் தொடக்கத்தில், ”சிவனும்கூட சக்தியான உன்னோடு கூடியிருந்தால்தான் பிரபஞ்ச வியாபாரம் நடத்தத் திறமையுள்ளவராகிறார். இல்லாவிட்டால் அவரால் துளி அசையக்கூடஸாமர்த்தியமில்லாமல் கிடப்பார்என்று சொல்லி, இது ஸர்வ நிச்சயம் என்று உறுதிப்படுத்த, ” கலு” – “அப்படித்தானே?” என்கிறார்.

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

சேத் ஏவம் தேவோ கலு குசல: ஸ்பந்திதும் அபி

ஸ்பந்திதும்’ – அசைவதற்கு; ‘அபி’ – கூட; ‘குசல: கலு’ – ஸாமர்த்தியமில்லாமல் திராணியில்லாமல்தானே இருப்பார்?

சக்தியில்லாவிட்டால் சிவம் சவமாகத்தானே கிடக்க வேண்டும்?