‘புரோஹிதர்’

குருவுக்கு உள்ள அநேகப் பெயர்களில்) ‘புரோஹிதர்பாக்கியிருக்கிறது. அநேக ஸம்ஸ்க்ருத வார்த்தைகளில் ஸம்யுக்தாட்சரம் என்ற கூட்டெழுத்துக்கள் வரும். உதாரணமாகசுக்லாம்பரதரம்என்பதில்க்லா‘ (என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிர்மெய்யெழுத்தும் ஒன்றாகக் கூடிய எழுத்து. தமிழில் அப்படிப்பட்ட கூட்டெழுத்துகளும், basic ஆகக் கூட்டொலிகளுமே கிடையாது. அதனால்சுக்லம்என்பதைத் தமிழில்சுக்கிலம்என்றுதூன் எழுதுவார்கள். தமிழில்க்முதலிய மெய்யெழுத்துக்கள் அதே வர்க்கத்தைஇந்த உதரணத்தில்என்பதைசேர்ந்த உயிர்மெய்யுடன் தான் சேரும். அதனால்தான்சுக்கில‘, ‘பச்சை‘, ‘மைத்துன‘, ‘அப்பா‘, ‘அம்மாஎன்பது மாதிரியான கூட்டொலிகளே தமிழில் உண்டு. ‘க்ருஷ்ணர்என்று ஆரம்பத்திலேயே மெய்யெழுத்து தமிழில் வராதாகையால்தான் அதைக்கிருஷ்ணஎன்பது. தமிழ்ப் புலவர்கள்ஷ்ணவும் தமிழில் வராது என்பதால்கிருட்டிணஎன்றே சொல்வார்கள், எழுதுவார்கள். அதே ரீதியில்ப்ரோக்ஷணம்என்பதைத் தமிழில்புரோட்சணம்என்றே எழுதுவார்கள். ‘ட்சஎன்று ஸம்ஸ்க்ருதக்ஷ‘ (க்க்ஷ) வைச் சொல்வதுகூட ஸரியில்லை என்று நினைக்கும் புலவர்கள்புரோக்கணம்என்றே சொல்வார்கள். எதற்கு இந்தப் பேச்சு வந்திருக்கிறது என்றால், ‘புரோஹிதர்என்பதிலும் ஆரம்பம்புரோதானே? தலைகீழ்ப் பாடமாக இங்கே பல பேர் ஒரு தப்புப் பண்ணுகிறார்கள். என்ன தப்பு என்றால், ‘ப்ரோட்சணம்மாதிரிதான் இதுவும் மூலத்தில்ப்ரோஹிதர்என்ற வார்த்தை என்றும் அதையே தமிழ் வழக்கில்புரோகிதர்ஆகியிருக்கிறது என்றும் நினைக்கிறார்கள். இலக்கணமாக எழுதுவது மாதிரிப் பேச்சு வழக்கில் பண்ணுவதில்லையாகையால், பேசும்போதுப்ரோஹித்என்றே சொல்கிறார்கள். அது தப்பு. மூலமான ஸம்ஸ்க்ருதத்திலேயே அது புரோஹிதர்தான், ‘ப்ரோஹிதர்இல்லை. ‘புராஎன்றால்முன்னால்‘. ‘புராணம்என்றால் முற்காலத்தில் நடந்தது. ‘புரோஹிதஎன்றால்முன்னால் ஹிதம்‘. ஒருத்தனுக்கு எது ஹிதமோ அதை முன்கூட்டியே சொல்பவர்தான் புரோஹிதர். ‘ஹிதம்என்றால் நல்லது அது நல்லதாக இருப்பதோடு மாத்திரமில்லாமல் மனஸுக்கு ஸந்தோஷமாகவும் இருக்கும். ஸாதாரணமாக நமக்கு எதெது நல்லதோ அதெல்லாந்தான் மனஸுக்குப் பிடிக்காததாக இருப்பது!அப்படித்தான் உபநிஷத்தே வித்யாஸப்படுத்தி நல்லதைச்ரேயஸ்என்றும், மனஸுக்குப் பிடித்ததை, ப்ரியமானதைப்ரேயஸ்என்றும் சொல்கிறது. நல்லதையே மனஸுக்கும் பிடித்த மாதிரியான முறையில் செய்வதும், சொல்வதுந்தான் ஹிதம்.

ஒரு கட்டிகிழங்கு வந்து ரொம்பக் கஷ்டப் படுத்துகிறது. மேலே ஸரியான சூட்டிலே ஜலம் விட்டால், ஒத்தடம் கொடுத்தால் கஷ்டம் அப்போதைக்காவது, ஓடிப்போகிறது, “எதம்..மா இருக்குஎன்கிறோம். அந்தஎதம்என்பதுஹிதம்தான். பாபம் நம்மை ஸம்ஸாரத்தில் கட்டிப்போட்டுக் கஷ்டப்படுத்துகிறது. இதுவும் ஒருகட்டி‘. பாபம் தீரப் புண்யம் பண்ணவேண்டும். அந்தப் புண்யம் ஸாதாரணமாக நமக்கு எரிச்சல் தரும் மருந்தாகவே இருக்கும். அப்படி இல்லாமல் அதையும் ஸெளக்யம் தரும் ஒத்தடமாக்கிக் கொடுப்பவர்தான் நமக்கு ஹிதம்

செய்கிற, ஹிதமாக இருக்கும் குரு.

ஸத்யம் நல்லது .ஆனால் அது அநேகமாக மனஸுக்குப் பிடிக்காது. “ஸத்யத்தையும் ஹிதமாகச் சொல்லி, பிடிக்கிற மாதிரி பண்ணு, ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத்என்று மநு சொல்கிறார். திருவள்ளுவரும்

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

என்கிறார். ‘தீமை இலாத‘, அதாவது ஹிதமாக!

ஹிதோபதேசம்என்று ஒரு புஸ்தகம். ‘பஞ்சதந்த்ரக் கதைகள்என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். cF உபதேசம் என்றால் ஸாதாரணமாக யாருக்குமே அது ரஞ்ஜகமாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்குங்கூட நீதிபோதனை பிடிக்கும் படியாகக் கதாரூபத்தில் மிருகபட்சிகளைக்கூட பாத்திரங்களாக வைத்து பஹ§ ஸ்வாரஸ்யமாக விஷ்ணு சர்மா என்கிறவர் ஒரு புஸ்தகம் எழுதினார். அதற்குப் பேர்தான்பஞ்சதந்த்ரம்‘. ஐந்து முக்யமானடாபிக்கு களாகப் பிரித்து எழுதியதால் அப்படிப் பேர். அது கிறிஸ்து சகாப்த ஆரம்ப நூற்றாண்டுகளில் எழுதியது என்று வெள்ளைக்காரர்களே சொல்கிறார்கள். அதை base பண்ணி, இன்னமுங்கூட நைஸ் பண்ணி பல நீதிக் கதைகளாகச் சிறு வயசு மாணவர்களும் ஆசையாகப் படிக்கிற விதத்தில் நாராயணர் என்ற வங்காளியர் எண்ணூறு வருஷத்திற்கு முன் எழுதினதுதான்ஹிதோபதேசம்‘. Middle School என்கிற நடுநிலைப் பள்ளிக்கூட கட்டத்தில் ஸம்ஸ்க்ருத மாணவர்களுக்குஹிதோபதேச‘ –த்திலிருந்து பாடங்களும், ஹைஸ்கூல் வகுப்பு மாணவர்களுக்கு மூலபஞ்சதந்த்ரத்திலிருந்து பாடங்களும் வைப்பதாக முன்னெல்லாம் நடந்து வந்தது.