வியவஹாரத்தில் சாக்ஷி

வியவஹார தசையில், லோகம் என்ற ஒன்று இருப்பதாகவும், அதிலே ஜீவ ராசிகள் வாழ்கிறதாகவும், தெரிகிற நிலையில், இது எல்லாவற்றையும்ப்ளான்பண்ணி, ஆட்டிப் படைத்து நடத்தி வைக்கிறவன் ஈச்வரன் தான். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாதுஎன்கிறோம். ஆத்மாவை ஸாக்ஷி என்று சொல்லிவிட்டு அப்புறம் ஸாக்ஷி இல்லை என்று சொன்ன மாதிரி இந்தஅவனன்றி அணுவும் அசையாதுகொள்கைக்கும் மாறாக இன்னொன்று சொல்ல வேண்டியிருக்கிறது. ‘மாறாகஎன்றால் முற்றிலும்ஆப்போஸிட்டாக’  இல்லை. அதைக் கொஞ்சம்அமெண்ட்பண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘எல்லாம் அவன் செயல்’ ’எல்லாம் சிவன் செயல்என்றால், ‘திருட்டுப் புரட்டு, அடிதடி, கொலை, கொள்ளை, ஃபோர்ஜரி, கோழிப் பெடிஷன் எதுவுமே தப்பில்லை; எல்லாம் அவன் ஆட்டிப் படைத்து நடத்துகிறது தானே?’ என்று ஆகி வியவஹாரத்தில் தர்மாதர்ம வியவஸ்தையே போய் விடும். அதனால்தான்அமெண்ட்மெண்ட்போட வேண்டியதாகிறது. என்ன அமெண்ட்மெண்ட் என்றால், நல்லதுகெட்டது, தப்புஸரி எல்லாவற்றுக்குமே அவன் தான் மூலம், ஒரு புழு பூச்சியிலிருந்து ஆனை திமிங்கலம் வரையில் அததற்கும் கொடுத்திருக்கிற சக்தி அவனொருத்தனிடமிருந்தே வந்தது தான் என்றாலும் எல்லார் செய்கிற எல்லாக் கார்யங்களையும் நேராக அவன் செய்யவில்லை. ஜீவ வர்க்கத்துக்கு தனித்தனி மனஸ்களை அவன் கொடுத்து, அவரவர்க்கும் தனக்கென்று ஒரு எண்ணம், உணர்ச்சி, ஆசைத்வேஷம் இத்யாதி என்று அவனிடமிருந்து பிரிந்து நினைக்கும்படியாக வைத்திருக்கிறான். எல்லாரும் அவனுடைய வேஷந்தான் என்றாலும், தன்னுடைய மஹா வினோதமான மாயா சக்தியினால்  அந்த வேஷக்காரர்களுக்குத் தங்களுடைய ஒரிஜனல், தங்களுடைய மூலஸ்வரூபம் அவனேதான் என்பது அடியோடு தெரியாமல் மயக்கி லோக நாடகம் ஆடுகிறான். ஆனாலும் வேஷத்தைக் கலைத்துத் தன்னோடு அவர்கள் ஏகீ பாவம் (ஐக்கிய உணர்ச்சி) பெறுவதற்கும் அவன் வழி காட்டாமலில்லை. நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அவனே படைத்திருந்தாலும், ஜீவ மனஸ் இவற்றிலே கெட்டதுகளில் போய்ப் போய் விழுகிற மாதிரி மயக்கப் பண்ணினாலும், அந்த ஜீவனுக்கே புத்தி என்கிற ஒன்றையும் கொடுத்து, ‘இது நல்லது இது கெட்டதுஎன்று பாகுபாடு பண்ணிப் பார்த்து நல்லதிலேயே போக வேண்டும் என்று தீர்மானிக்கிற சக்தியைக் கொடுத்திருக்கிறான். வழுக்க மரத்திலே ஏறுகிற மாதிரி, புத்தியின் த்ருட ஸங்கல்ப சக்தியினாலே  ஏறுகிறதும், மனஸின் சாபல்ய (சபலத்திற்கு ஆளாகிற) சக்தியாலே வழுக்கி, வழுக்கி இறங்குகிறதுமாக ஏற்ற இறக்கங்களைப் பண்ணி வேடிக்கைப் பார்த்து, ஜன்மாந்தரங்களுக்கு அப்புறமாவது ஒரு ஜீவன் கெட்டதான மாயையிலேயே மறுபடி வழுக்கி விழாமல், நல்லதாய் அதிலிருந்து மேலே ஏறித் தன்னை ஈச்வரன் என்கிற கல்யாண் குணநிலயமான ரூபத்திலே அடையும்படியும், அதற்கும் அப்புறம் அந்த வேறான ஈச்வர ரூபமும் போய், நிர்குண ஸ்வரூபமான ப்ரம்மத்திலே ஏகாத்மாவாக ஒன்றாய்விடும்படியும் அநுக்ரஹிக்கிறான்தான் ஜீவனுக்குக் கொடுத்திருக்கிற புத்தியால் அவனே ஆலோசித்து நல்லது கெட்டதைத் தெரிந்து கொள்வதும் போதாது என்ற பரம கருணையால் அவற்றை எடுத்துச் சொல்லும் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறான். தானே அவதாரங்கள் எடுத்தும், தன்னுடைய அம்சமாக மஹான்களை, ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைத்தும் அந்த சாஸ்திரப் பிரகாரமான ஆதர்ச வாழ்க்கையை நடத்திக் காட்டி ஜனங்களுக்கு நல்ல வழியில் பிடிப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

இருந்தாலும் அவன் அநுக்ரஹம் ஆவேசமாக ஒரு ஜீவனை ஆட்கொண்டு அவனைக் கார்யமில்லாத சாந்தத்தில் சேர்க்கிறவரை, அல்லது ஒரு ஜீவனுக்கு ஸொந்த ஆசாத்வேஷங்களில்லாமல் ஈச்வர்னுடைய கருவி மாத்ரமாகவே அவன் கார்யம் செய்கிற நிலை வருகிற வரை, ஜீவர்கள் அவரவர்களே கார்யம் செய்கிற மாதிரியும், தங்கள் கார்யத்துக்கு ஜவாப்தாரியாக நல்லது பண்ணினால் ஸந்தோஷமும், கெட்டது பண்ணினால் துக்கமும் அடைய வேண்டுமென்றுதான் நிர்ணயித்து அப்படியே நாடகம் நடத்தி வருகிறான்.  ’கர்மா தியரிஎன்று இப்போது தேசாந்திரங்களில், மதாந்திரங்களிலும் பல பேர்  ஒப்புக் கொண்டு வருவதான நம்முடைய மதத்தின் ஒரு ஆணி வேரான கொள்கை இப்படி ஜீவனைக் கர்த்தாவாகக் கொண்டுதான் ஏற்பட்டிருப்பது. ஸகலத்துக்கும் ஈச்வர்னே கர்த்தா, எல்லாம் சிவன் செயல் என்றால் நல்ல கார்யங்கள் தான் புண்யமானவை, ஸந்தோஷத்தைத் தருகிறவை, கெட்ட கார்யங்கள் பாபமானவை, அவை துக்கத்தையே தரும் என்று பிரித்துச் சொல்ல நியாயமில்லாமல் போகும்.
ஆனபடியால், ஸாமான்ய ஜனங்களான நாமெல்லோரும் இருந்து வாழ்க்கை நடத்தும் நடைமுறை ஸ்திதியில், நம் ஸகலருடைய சக்தி ஸாமர்த்தியங்களுக்கும் ஈச்வரன் தான் மூலம் என்றாலும், அந்த அர்த்த்த்தில்அவனன்றி ஓர் அணுவும் அசையாதுஎன்பது வாஸ்தவம்தான் என்றாலும், தனித் தனிக் கார்யம் என்று எடுத்துக் கொண்டால், ஜீவர்களான நாம்தான் அவற்றுக்கு ஜவாப் சொல்ல வேண்டிய கர்த்தா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி நம்மையெல்லாம் கார்யம் பண்ணவிட்டிருக்கிற அவன் என்ன பண்ணுகிறானென்றால் நாம் செய்கிற அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஸர்வ வியாபி அல்லவா? ‘அவனுடைய கை எல்லா இடத்திலும் விரிந்திருக்கிறது. அவனுடைய பாதம் எங்கும் பரவியிருக்கிறது. அவனுக்கே எங்கே பார்த்தாலும் கண்; எங்கே பார்த்தாலும் மூஞ்சியும் காதும் வாயும். லோகத்தில் ஸர்வத்தையும் அவன் வ்யாபித்திருக்கிறான்என்று அவன் வாயாலேயே கீதையில் சொல்லியிருக்கிறது.

ஸர்வதபாணிபாதம் த்த் ஸர்வதோக்ஷி சிரோமுகம் |
ஸர்வதச்ருதிமல் – லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட்தி||  **

ஸர்வதோஷி’ – ’எங்கே பார்த்தாலும் அவனுக்குக் கண்என்பதுதான் குறிப்பாக நமக்கு விஷயம். எங்கே பார்த்தாலும் கண்ணாயிருப்பதால் லோகத்திலே நாம் பண்ணும் அத்தனை கார்யங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிற மஹா பெரிய ஸாக்ஷியாக அவன் இருக்கிறான். ’விச்வ ஸாக்ஷிணீ’  என்று ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளுக்குப் பேர் சொல்லியிருக்கிறது. ‘கர்மாதி ஸாக்ஷிணீஎன்று த்ரிசதியிலும் வருகிறது.

அந்தப்பராசக்தி, அல்லதுபரமாத்மாவின்பார்வையில்படாமல்யாரும்எதுவும்பண்ணமுடியாது.

பார்த்தால்பார்த்துவிட்டுப்போகட்டுமேஎன்றுநாம்பாட்டுக்குஅடாவடிபண்ணிக்கொண்டுபோகமுடியாது. ஏனென்றால்அவன்வெறுமனேபார்த்துஸாக்ஷியம்சொல்கிறவிட்னஸ்மட்டுமில்லை. பார்க்கிறகார்யங்களின்பலனைநமக்குத்தீர்ப்பாக, தண்டனையாக, அல்லதுஅவார்ட்’, ‘ரிவார்ட்களாகவழங்குகிறஜட்ஜும்அவன்தான். ஸாக்ஷிநியாயாதிபதிஇரண்டுமாகஇருக்கிறவன்அவன். பாரமார்த்திகமாகஒருஸ்டேஜில்பார்த்தால்கார்யம்பண்ணுகிற(பெரும்பாலும்குற்றவாளியாகவேஇருக்கிற) பேர்வழியும்அவன்தான். ஆனால்அந்தப்பாரமார்த்திகம்நமக்குஇப்போதுஎட்டாதுஎன்றுதானேமெடபிஸிக்ஸைத்தள்ளிவைத்துவிட்டுக்கதைபேசவந்திருக்கிறோம்? இங்கேஅவன்விட்னஸ், ஜட்ஜ்இரண்டுமாகஇருப்பவன்என்பதோடுநிறுத்திக்கொண்டால்போதும்.
ஸாக்ஷி, நியாயாதிபதிஇரண்டும்ஒரேஆஸாமியாகஇருப்பதால்பொய்ஸாக்ஷியைநிஜமென்றுநம்பிநியாயாதிபதிதீர்ப்புக்கொடுக்கிறதற்குஇடமேயில்லை. இந்தஸாக்ஷிநியாயாதிபதியையாரும்ஏமாற்றமுடியாது. அநேகக்குற்றங்கள்கோர்ட்டுக்கேபோகாதமாதிரிஇந்தப்பெரியகோர்ட்டாரிடமிருந்துயாரும்தப்பிக்கவும்முடியாது!

அந்தப்ரக்ஞைதான்அநாதிகாலமாகஜனஸமுதாயத்தைஇந்தமட்டுமாவதுநல்லவழியில்போகும்படிப்பண்ணியிருக்கிறது. அந்தஸர்வஸாக்ஷிநாம்பண்ணிகிறதையெல்லாம்பார்த்துக்கொண்டிருக்கிறான்என்றுஅப்பப்பவாவதுநமக்குஞாபகம்வருவதால்தான்ஏதோஒருஅளவுக்காவதுதப்புத்தண்டாக்களில்போகமலிருக்கிறோம்.

நமக்குஅதில்எவ்வளவுநம்பிக்கைஇருந்தாலும்இல்லாவிட்டாலும், எதிராளிஒருவர்நம்முடையவார்த்தையைநம்பப்பண்ணவேண்டுமானால்அதற்குதெய்வஸாக்ஷியைஇழுப்பதுமாதிரிவேறுஎதற்கும்பவர்இல்லைஎன்றுநன்றாகத்தெரிகிறது! நம்வார்த்தையைநம்பாதவரைநம்பவைப்பதற்குப்பெரியஅஸ்திரம், ‘ஸ்வாமிஸாக்ஷியாசொல்றேன்’, ‘அம்பாள்ஸாக்ஷி’, ‘ஆகாசவாணி, பூமிதேவிஸாக்ஷிஎன்றுஇந்தமாதிரிஸத்தியம்வைப்பதுதான்! “ஸத்யமாசொல்றேன்என்றுநம்முடையசொந்தஹோதாவில்பிரதிக்ஞைபண்ணுவதைவிடதெய்வஸாக்ஷியைத்துணைக்குக்கூப்பிட்டால்தான்அதுஎதிராளியிடம்எடுபடுகிறது. தாமேசெய்கிறஸத்தியத்துக்குவெயிட்கொடுக்காதவர்கள்கூட, ‘ஸ்வாமிபேரைத்தைரியமாஇழுத்துட்டுபொய்யைச்சொல்லமாட்டான்என்று, நாம்தெய்வத்தின்மேல்ஸாக்ஷிவைப்பதற்குவெய்ட்கொடுப்பார்கள்.

சிலஸமயங்களில்ஸ்தூலமாகவேதெய்வஸாக்ஷிக்குஅடையாளம்வைத்துக்கொண்டுகார்யங்கள்செய்கிறோம். இரண்டுதரப்புக்கள்ஒன்றுசேர்ந்துமுக்யமானஒப்பந்தங்கள்பண்ணிக்கொள்வதுபோன்றஸமயங்களில், ஸர்வவ்யாபகமாகஉள்ளஸர்வஸாக்ஷிநம்கண்ணுக்குத்தெரியாததால்கண்ணுக்குத்தெரிகிறவிதத்தில்அந்தஸாக்ஷியைஆக்கிக்கொண்டுஒருஒப்பந்தம்பண்ணிக்கொண்டால்அதைமீறப்படாதுஎன்றபயமிருக்குமென்பதால்இப்படிப்பண்ணுகிறோம்.

நம்முடையவைதிகமதத்தில்ஸ்வாமிக்குஅப்படிப்பட்டமுக்யமானமூர்த்தியாகஇருப்பதுஅக்னி. அதனால்தான்அக்னிஸாக்ஷியாகப்பண்ணுவதென்றுவைத்துக்கொண்டிருக்கிறோம். வதூவரர்கள்(மணமகள்மணமகன்) செய்துகொள்ளும்ஆயுஸுக்காலஒப்பந்தம்தான்விவாஹம். அதைஅக்னிஸாக்ஷியாகவேசெய்கிறோம்.