அகில தேசாபிமானமும் பிரதேசப் பித்தும்

தமிழ்நாடு தவிர நம்முடைய இந்தியா தேசம் முழுக்க எல்லாப் பகுதிகளிலும்நமஸ்தேதான் சொல்கிறார்கள். ‘நமஸ்காரம்என்பதில்நம:’ என்பதே வணக்கத்தைத் தெரிவிப்பது. ‘நமஸ்காரம்என்பதுவணக்கம் புரிவதுஎன்ற செயலைக் குறிப்பதே. ‘நமோ நம:’ என்கிறதிலும், சிவ பஞ்சாக்ஷரீ, நாராயண அஷ்டாக்ஷரீ முதலானவற்றிலும்காரம்சேர்க்காமல்நம:’ மட்டும்தானே சொல்கிறோம்? அதே மாதிரி ஒருத்தரைப் பார்க்கும்போதுஉங்களுக்கு வணக்கம்என்பதுதான்நமஸ்தே’. ‘தேஎன்றால்உங்களுக்கு’. இந்த நமஸ்தேயைத்தான் நம் தேசம் பூராவிலும், தமிழ்நாடு ஒன்று மட்டும் நீங்கலாக, மரியாதை greeting – ஆகச் சொல்கிறார்கள். த்ராவிட ராஜ்யங்களேயான ஆந்திரகர்நாடககேரள ராஜ்யங்களிலும்நமஸ்தேக்குத் தங்கள் தங்கள் தாய் பாஷையான தெலுங்குகன்னடமலையாள பாஷைகளில் வார்த்தை சொல்லாமல்நமஸ்தே’-யைத்தான்அடாப்ட்செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில்வணக்கம்இருக்கிற மாதிரித் தெலுங்கில்ம்ரொக்கஎன்று வார்த்தை இருக்கிறது. என்றாலும் அவர்கள் ரொம்பவும் அபூர்வமாகத் தான் அந்த வார்த்தையை உபயோகிப்பது. பொதுவாகச் சொல்கிறது ஸம்ஸ்க்ருதநமஸ்தேதான். அதையேநமஸ்காரமண்டிஎன்று மரியாதையாய் சொல்வார்கள். தமிழ் தேசத்தில் மட்டும் பாஷா த்வேஷம் காரணமாகவேஆல்இன்டியா கரென்ஸியாக உள்ளநமஸ்தே’, ‘நமஸ்காரங்களைத் தள்ளிவிட்டுவணக்கம்சொல்வதாக வழக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கேயும் முன்னேயெல்லாம் பொதுவாகப் பேசும்போதும் எழுதும்போதும்நமஸ்காரம்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமஸ்காரம்நமஸ்தே இரண்டுக்கும் ஒரே base தானே? அப்படித்தான் இங்கேயும் பழக்கம் இருந்தது. அப்புறந்தான் வேண்டுமென்றுவணக்கத்தைக் கொண்டு வந்திருப்பது. அது அழகான, அர்த்த புஷ்டியான வார்த்தை தான் என்றாலும் அதைக் கொண்டு வந்திருக்கும் உத்தேசம் நல்லதாக இல்லை. பிரதேசாபிமானம் இருக்க வேண்டியது தான். ‘ரீஜனல் கல்ச்சர்என்பதாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் விசேஷமாக இருக்கிற கலாசார மரபுகளையும் பேணிக் காப்பாற்றத்தான் வேண்டும். ஆனாலும் ஸர்வதேசியமாக இருந்துகொண்டிருக்கிற விஷயங்களிலும் வேண்டுமென்று தேசியத்தைத் தள்ளிப் பிரதேசத்தைக் கொண்டு வருவது முறை தவறான பிரதேசாபிமானமேயாகும். இதைப் பிரதேச அபிமானம் என்பதை விடப் பிரதேசப் பித்து, மிஞ்சிப் போகிறபோது பிரதேச வெறி என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும் பிரதேசாபிமானம் என்பதன் பேரில் ஒரு பிராந்தியத்தில் நடப்பதைத் தாங்களும் மதித்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; வோட்டுப் பெட்டியை உத்தேசித்தும் எல்லாப் பிரதேச ஜனங்களையும்ப்ளீஸ்பண்ண வேண்டும் என்பதால் மற்ற ராஜயத்துக்காரர்களும் வடக்கத்தித் தலைவர்களும்கூட இங்கே வந்து கூட்டங்களில் பேசுகிற போதுவணக்கம்என்றே சொல்வதாகத் தெரிகிறது. ‘வணக்கம்என்று தப்பாகவாவது சொல்பவர்களும் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்!

வெளியிலே இப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள்ளே அவர்களுக்கெல்லாம் இதிலே ஒரு வருத்தம், நம்மைப் பற்றி ஒரு குறை இருக்கிறது. என்னிடமே ஒருத்தர் அதைத் தெரிவித்தார். தேசம் பூராவும் ஒரே ரீதியில் போய்க் கொண்டிருக்கும் விஷயங்களில், அந்த mainstream-ல் சேராமல், கொஞ்சம் துண்டித்துக் கொண்டு இந்த மாதிரிச் சின்ன அம்சங்களில் மாறுதலாகப் போவதுங்கூட ஒருமைப்பாட்டுக்குக் கொஞ்சம் ஊனம் செய்கிற மாதிரித்தான் என்று அவர் சொன்னார். ‘வணக்கம்விஷயமாகவும் அவர் உதாரணம் காட்டிச் சொன்னாரென்றாலும் அவர் முக்யமாகச் சொன்னது தமிழ் அர்ச்சனை பற்றித்தான்.