பெயர் வந்த விவரம்

ஹிந்து  மதம்பற்றிய விவரங்களை அறிய முற்படும்போது, முதலில்பார்க்க வேண்டிய விவரம்ஒன்றிருக்கிறது. ஹிந்து மதம்என்ற பெயரே, ஓர்அடையாளமே தவிர, இந்த மதத்தின்தொடக்கத்திலிருந்து (“தொடக்கம்எப்போது? என்பதே, விடை கிட்டாத ஒரு கேள்வி) வழங்கி வருகிற பெயர்அல்ல

இது பற்றி, காஞ்சி மஹாஸ்வாமிகள்ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்‌, மிகவும்எளிமையாக விளக்கம்அளித்திருக்கிறார்‌. அந்நிய நாட்டவர்கள்‌, ஸிந்து நதியைக்கடந்து இங்கே வந்தார்கள்‌; ‘ஸிந்துஎன்ற பெயரை, அவர்கள்‌ ‘ஹிந்துஎன்று உச்சரித்தார்கள்‌. அதைக்கடந்து வந்து பார்த்தபோது, இங்கே மக்கள்பின்பற்றிய மதம்‌, அவர்களுக்கு ஹிந்து மதம்ஆகியது. அதுவே வழக்கில்வந்து விட்டதால்‌, நாமும்அதை ஏற்கிறோம்‌. 

அதற்கு முன்பு, இந்த மதத்திற்கு ஒரு பெயர்இருக்கவில்லை. ஸனாதனம்என்றால்‌, தொன்று தொட்டு வந்து நிலைத்து நிற்பது. ஆகையால்‌, ஸனாதன தர்மம்என்பதே இதற்குப்பெயர்என்றும்கூற முடியாது. அதற்கும்இம்மத நூல்களில்எந்த ஆதாரமும்கிடை யாது. வைதீக மதம்‌ – என்றும்சொல்ல முடியாது; அப்படி இதை விளக்கலாமே தவிர, இதற்கு அந்தப்பெயர்இிடையாது.  

பின்‌, இந்த மதத்திற்கு என்னதான்பெயர்‌? பெயர்கிடையாது. பெயரில்லாத மதமா?’ என்று கேட்டால்‌, ‘ஆமாம்‌!” என்பதுதான்பதில்‌. இது எப்படி?

ராமஸ்வாமி வந்திருக்கிறான்‌! என்று ஒருவர்சொன்னால்‌ ‘எந்த ராமஸ்வாமி?” என்று கேட்போம்‌. ஏனென்றால்நமக்குப்பல ராமஸ்வாமிகளைத்தெரியும்‌. வக்கீல்ராமஸ்வாமி, டாக்டர்ராமஸ்வாமி, எதிர்த்த வீட்டு ராமஸ்வாமி, இருச்சிராப்பள்ளி ராம ஸ்வாமிஎன்று அடையாளம்கூறினால்தான்‌, வந்திருப்பது எந்த ராமஸ்வாமி என்பது நமக்குப்புரியும்‌. பல ராமஸ்வாமிகள்இருப்பதால்இப்படி அடையாளம்தேவைப்படுகிறது.

அதே போல, பல மதங்கள்இருக்கிறபோது, ‘மதம்இப்படிச்சொல்கிறது! என்று சொன்னால்போதாது. எந்த மதம்அப்படிச்சொல்கிறது என்பதையும்கூற வேண்டியிருக்கும்‌. ஆனால்ஒரே ஒரு மதம்தான்இருக்கிறது என்றால்‌ – அப்போது இந்த அடை யாளப்பெயர்தேவையே இல்லையே!

இந்த இடத்தில்ஒரு விஷயம்‌. ‘மதம்‌’ என்ற சொல்லை, தமிழில்‌ 17௪௦08! என்று உச்சரிக்கிறோம்‌. ‘தண்டனைஎன்பதில்வருவது போல, ‘வைப்பயன்படுத்துகிறோம்‌. இது தவறு. மதம்என்பதில்‌  1 வருகிற‘, தமிழ்என்பதில்வருகிறபோன்றதுஅதாவது 17018! என்றுதான்உச்சரிக்க வேண்டும்‌.  _

 மதம்என்பதற்கு நம்பிக்கை, சிந்தனை என்பது போன்ற அர்த்தங்கள்உள்ளன. ஆனால்இதையே நாம்‌ ‘மதம்‌ – 14006! என்று கூறுகிறபோது, ‘வெறி, ……’ என்பது போன்ற அர்த்தங்கள்வந்து விடுகின்றன. ஆனால்ஸம்ஸ்க்ருத வார்த்தை யாகிய தமிழில்ஆகிவிட்டது! இது ஒன்றும்விபரீதமானதல்ல

தமிழ்ப்பெயர்கள்பலவற்றை, வட இந்தியர்கள்‌, தங்கள்மொழியில்இஷ்டத்திற்குப்பயன்படுத்துகிறார்கள்‌. ‘மாறன்‌! என்பது இன்று வரை, மரான்தான்‌. ‘செழியன்‌’ என்பது செஜியன்அல்லது செலியன்‌! இது அந்தந்த மொழியின்வழக்கத்திற்கேற்ப உண்டாகி விடுகிற மாறுதல்‌.  ஆக, 108018 என்பதை 180081! என்று நாம்சொன்னாலும்‌, வெறி என்ற அர்த்தத்தில்அதை நாம்கூறுவதில்லை. ஸம்ஸ்க்ருதத்தில்‌, ஒவ்வொரு ஒலிக்கும்‌ – மெல்லியது, கொஞ்சம்அழுத்த மானது, மிக அழுத்தமானதுஎன்று நான்கு எழுத்துக்கள்இருக்இன்றன. ‘வில்நான்கு உச்சரிப்புகளைக்கொண்ட‘-க்கள்‌. ‘வில்நான்குஎன்று இருக்கிறது. தமிழிலோ, ஓர்எழுத்துதான்‌; இடத்திற்கேற்ப நாம்அதை உச்சரிக்கிறோம்‌; ஸம்ஸ்க்ருதத்திலோ சந்தேகத்திற்கு இடமில்லாமல்எழுத்தே, உச்சரிப்பைக்காட்டி விடுகிறது

சரி, இந்த மதத்தின்ஸ்தாபகர்யார்‌? அப்படி ஒருவரும்கிடை யாது. இதுவரை எந்த ஆராய்ச்சியாளரும்‌, அப்படி ஒரு ஸ்தாபகரை இந்த மதத்திற்குக்கண்டுபிடிக்கவில்லை. ப்ரும்ம ஸூத்ரம்என்ற விளக்க நூலை எழுதிய வியாஸரும்சரி, பகவத்கதையை உப தேசித்த கிருஷ்ண பரமாத்மாவும்சரி, தங்களை ஸ்தாபகர்களாகக்காட்டிக்கொள்ளவில்லை; தங்களுக்கும்முன்பாகவே இருந்து வந்த வேதங்களைக்குறிப்பிட்டு அவர்கள்பேசுகிறார்கள்‌. அந்த வேதங்களை உலகிற்கு அருளிய ரிஷிகள்தாம்ஸ்தாபகர்கள்என்றும்சொல்ல முடியாது. ஏனென்றால்‌, அவர்கள்‌ ‘எங்கள்மூலம்இந்த வேத மந்திரங்கள்உலகிற்கு வந்தன; ஆனால்நாங்கள்அவற்றை இயற்றவில்லை; நாங்கள்தியானத்தில்அமர்ந்தபோது, இந்த மந்திரங்களை உணர்ந்து கொண்டோம்‌. நாங்கள்அவற்றை கண்டவர்களே தவிர, அவற்றை சிருஷ்டி செய்தவர்கள்அல்ல என்று கூறுகிறார்கள்‌.  சப்தங்கள்‌ – ஒலிஆகாயத்தில்நிலவுகின்றன; அவற்றின்அதிர்வுகள்ரிஷிகளால்உணரப்பட்டு, உலகிற்கு தரப்பட்டன; அவையே வேத மந்திரங்கள்‌. எந்தெந்த மந்திரங்களை, எந்தெந்த ரிஷிகள்எப்படி உணர்ந்தார்களோஅந்தந்த மந்திரங்கள்‌, அந்தந்த ரிஷிகளின்பெயரால்வழங்குகின்றனஆனால்‌, அந்த மந்திரங்கள்ஏற்கெனவே இருந்தவை, அவற்றை கண்டவர்கள்‌ – அல்லது உணர்ந்தவர்கள்‌ – அந்த ரிஷிகள்‌. ஆகையால்‌, அவர்களும்ஸ்தாபகர்கள்அல்ல. மற்ற எல்லா மதங்களுக்கும்ஸ்தாபகர்ஒருவர்உண்டு. அவர்பெயரையோ, அல்லது அவர்காட்டிய மார்க்கத்தின்பெயரையோ கொண்டு அந்தந்த மதம்உருவாகியது. ஹிந்து மதத்திற்கு பெயரும்‌  கிடையாது; ஸ்தாபகரும்‌ கிடையாது.

இந்த மதத்தின்‌ ஆதார மாகிய வேதங்களோ – அபெளருஷேயம்‌; ஒரு மனிதரால்‌ – புருஷ னால்‌ – உருவாக்கப்பட்டது அல்ல; அதனால்‌ பெளருஷேயம்‌ அல்ல; அபெளருஷேயம்‌.  அதனால்தான்‌ இது எப்போது தோன்றியது என்று யாராலும்‌ கூற முடியவில்லை. கிறிஸ்தவ மதம்‌, இஸ்லாமிய மதம்‌, பெளத்த மதம்‌, ஜைன மதம்‌… என்று வேறு எந்த மதத்தை எடுத்துக்‌ கொண்டாலும்‌, அதன்‌ ஸ்தாபகர்‌ பெயரோ, அவர்‌ காட்டிய மார்க்‌ கத்தின்‌ பெயரோ, அந்த மதத்திற்குக்‌ கட்டுகிறது. ஹிந்து மதத்திற்கு இதுவும்‌ கிடையாது. ‘

இப்போது ஹிந்து மதம்‌ என்று சொல்லப்‌ படுகிற நமது மதம்‌ ஒன்றே ஆதியில்‌ லோகம்‌ முழுதும்‌ பரவி இருந்தது; அந்த ஒரே மதம்‌ இருந்ததால்தான்‌ அதற்குத்‌ தனியாகப்‌ பெயர்‌ வைக்க வேண்டிய அவசியம்‌ இருக்கவில்லை; அதனால்‌ தான்‌ நம்‌ ஆதார நூல்களில்‌ ஹிந்து மதத்திற்கு பெயரே இல்லை – என்பது என்‌ அபிப்பிராயம்‌! – என்று மஹாஸ்வாமிகள்‌ கூறி யிருக்கிறார்‌.  உலகம்‌ முழுதும்‌, இம்மதம்தான்‌ பரவியிருந்தது என்ற முடி விற்கு அவர்‌ வருவதற்கு என்ன காரணங்கள்‌? பல நாடுகளில்‌, வேதத்தை ஆதாரமாகக்‌ கொண்ட மத சம்பந்தமான அம்சங்கள்‌  ்‌ புதைபொருள்‌ ஆராய்ச்சியாளர்களுக்குக்‌ கிட்டியிருக்கின்றன. 

கி.மு.1300-க்கு முன்பு, எகிப்தில்‌ இரண்டு அரசர்கள்‌ செய்து கொண்ட ஒப்பந்தம்‌ தொடர்பான ஓர்‌ ஆதாரம்‌ கிட்டியது; அதில்‌ ‘மித்ர வருண சாட்சியாக! அந்த உடன்படிக்கை செய்யப்பட்டதாகக்‌ கூறப்பட்டிருக்கிறது. மித்ரனும்‌, வருணனும்‌ வேதத்தில்‌ சொல்லப்‌ பட்டுள்ள தேவதைகள்‌…  ஆஃப்ரிக்காவின்‌ தென்‌ கிழக்குப்‌ பகுதிக்கு அருகில்‌ உள்ள, மடகாஸ்கர்‌ என்ற (தீவு) நாட்டில்‌ பல இடங்களில்‌ வழங்கப்படுகிற மொழியில்‌, ஸம்ஸ்க்ருதக்‌ கலப்பு எழுபத்தைந்து சதவிகிதம்‌ இருக்‌ இறது… நமது நவராத்திரி பண்டிகை சமயத்தில்‌, மெக்ஸிகோவில்‌ ஓர்‌ உற்சவம்‌ நடக்கிறது; அதற்கு ‘ராம ஸீதா! என்று பெயர்‌; அங்கே பல இடங்களில்‌ பூமிக்கடியிலிருந்து விநாயகர்‌ விக்ரஹங்கள்‌ கிடைத்‌ இருக்கின்றன…

மேலும்‌ சில ஆதாரங்களையும்‌ மஹாஸ்வாமிகள்‌ காட்டியிருக்‌ கிறார்‌. பெரு நாட்டில்‌, நமது ‘விஷு புண்ய காலம்‌’ என்ற நேரத்‌ ்‌ இல்‌, சூரிய வழிபாடு நடக்கிறது; அங்கே உள்ள மக்கள்‌ இனம்‌ ‘இன்காஸ்‌’ என்ற பெயருடையது – இனன்‌ என்பது சூரியனுக்கு உள்ள பெயர்களில்‌ ஒன்று…  ஆஸ்திரேலியாவின்‌ பழங்குடி மக்களைப்‌ பற்றிய புத்தகம்‌ ஒன்‌ றில்‌, அவர்களுடைய நடனம்‌ படமாக வெளியாகி இருக்கிறது; அதற்கு ‘சிவா நடனம்‌! என்ற பெயர்‌ குறிப்பிடப்பட்டிருக்கிறது; நடனம்‌ ஆடுபவர்கள்‌ நெற்றியில்‌, மூன்றாவது கண்‌ வரையப்பட்‌ டிருக்கிறது… 

போர்னியோ நாட்டில்‌ கிடைத்த ஒரு செப்பேட்டில்‌, ‘இந்த அரசன்‌, இந்த யாகத்தைச்‌ செய்தான்‌; இந்தக்‌ கொடிமரம்‌ நட்‌ டான்‌; அந்தணர்களுக்கு தானம்‌ செய்தான்‌’ என்றெல்லாம்‌ குறிப்‌ பிடப்பட்டிருக்கிறது…  ஆதாம்‌, ஏவாள்‌ கதை; ஹீப்ரு மற்றும்‌ கிறிஸ்தவ மதங்களில்‌ வருகிறது. ‘அறிவு மரம்‌ என்ற மரத்தின்‌ பழத்தைச்‌ சாப்பிடக்‌ கூடாது என்ற கடவுளின்‌ கட்டளையை மீறி, ஏவாள்‌ அதைச்‌ சாப்பிட்டாள்‌. அதைப்‌ பார்த்துக்‌ கொண்டேயிருந்த ஆதாம்‌, முத லில்‌ தயங்கி, பின்னர்‌ தானும்‌ சாப்பிட்டான்‌. அதன்‌ பின்னர்ப்‌ பல விளைவுகள்‌.  உபநிஷத்துக்களில்‌ வருகிற ஒரு விஷயத்திற்கும்‌, இதற்கும்‌ குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கிறது. பிப்பல என்கிற ஒரு மரம்‌; அதில்‌ இரண்டு பறவைகள்‌; ஒன்று பிப்பல மரத்தின்‌ பழத்தைச்‌ சாப்பிடுகிறது; மற்றொன்று பார்த்துக்‌ கொண்டிருக்கிறது. இதில்‌ உபநிஷத்துக்‌ கூறுகிற தத்துவம்‌ இது :

மனித உடல்தான்‌ – பிப்பல மரம்‌; ஜீவாத்மா – பழத்தைத்‌ தின்கிற பறவை; பரமாத்மா – பார்த்துக்‌ கொண்டிருக்கிற பறவை; அனுபவ ககம்‌ – என்பது பழம்‌; இதை ஜீவன்‌ ரஸிக்கிறது; சரீரத்திலேயே எல்லாவற்றிற்கும்‌ சாட்சியாக இருக்கிற பரமாத்மா, சரீரத்தில்‌ இருந்து கொண்டே, இதையும்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறான்‌. விஷய அனுபவங்களை ஏற்று ரஸித்து இன்புறுவதாக நினைக்கிற ஜீவன்‌ – பழத்தைச்‌ சாப்பிடுகிற பறவை; பரம்பொருளை உணர்ந்த பரமாத்மா, சாட்சியாக மட்டும்‌ இருந்து, பழத்தைச்‌ சாப்பிடாமல்‌ இருக்கிற பறவை. இந்த உபநிஷத்துத்‌ தத்துவம்‌, ‘ஆதாம்‌; ஏவாள்‌; மரத்தின்‌ பழம்‌! என்று உருப்பெற்று, சில மதங்களில்‌ காணப்படுகிறது. அதில்‌ தத்துவம்‌ மறைந்துவிட்டது, நிகழ்ச்சி மட்டும்‌ மீதமிருந்தது. இப்படிப்‌ பல ஆதாரங்களைக்‌ காட்டி, நமது மதம்தான்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவியிருந்திருக்க வேண்டும்‌ என்று மஹாஸ்வாமி களால்‌ முடிவு கூறப்படுகிறது. இதையே வைத்துக்‌ கொண்டு, சிலர்‌ ‘ஆஹா, இதிலிருந்தே தெரியவில்லையா? ஹிந்து மதம்‌, வேதம்‌ எல்லாமே வேறு ஏதோ நாட்டிலிருந்து இங்கே வந்தவை!” என்று கூற நினைக்கலாம்‌. அதற்கு முன்‌ அவர்கள்‌ கொஞ்சம்‌ யோசிக்க வேண்டும்‌.

தாய்லாந்தில்‌ இன்றும்‌ கூட, மார்கழி மாதத்தில்‌ ஓர்‌ உற்சவம்‌ நடக்கிறது; அந்த உற்சவத்திற்கு, ‘ட்ரியம்பாவை, ட்ரிபாவை’ என்று பெயர்‌; அதாவது ‘இிருவெம்பாவை, இருப்பாவை’! இது இவன்‌ வேடம்‌ தரித்து, நடனம்‌ ஆடுகிற ஒருவரை ஊஞ்சலில்‌ வைத்து ஆட்டி செய்யப்படுகிற உற்சவம்‌. திருப்பாவையோ, தஇருவெம்‌ பாவையோ அவர்களுக்குத்‌ தெரிந்திருக்கவில்லை. ஆனால்‌ அந்தப்‌ -.. பெயர்‌ இருக்கிறது. அப்படியானால்‌, தமிழே கூட, தாய்லாந்தி லிருந்துதான்‌ இங்கு வந்திருக்க வேண்டும்‌ – என்று சொல்வதா? வேதங்களை ஓட்டி வந்த வழக்கங்களின்‌, சடங்குகளின்‌ மிச்சம்‌ மீதியாக திருப்பாவை, திருவெம்பாவை உற்சவம்‌ அங்கே நடக்கிறது. மெக்ஸிகோ ஒரு பக்கம்‌; தாய்லாந்து ஒரு பக்கம்‌; மடகாஸ்கர்‌ ஒரு பக்கம்‌; எகிப்து ஒரு பக்கம்‌. இவற்றிலிருந்து எல்லாம்‌ விஷயங்களைத்‌ திரட்டிக்‌ கொண்டு வந்து, இங்கே போட்‌ டார்கள்‌ என்று சொன்னால்‌, அதை எப்படி ஏற்பது? இங்கிருந்து இதெல்லாம்‌ அங்குச்‌ சென்றிருக்கும்‌ என்று கூற வாய்ப்புண்டு. ஆனால்‌, போக்குவரத்துச்‌ சாதனங்களோ, தகவல்‌ தொடர்புச்‌ சாதனங்களோ பெரிதாகத்‌ தோன்றியிராத காலத்தில்‌, பாரதத்திலிருந்து பல விஷயங்கள்‌ அங்கெல்லாம்‌ கொண்டு செல்லப்பட்டது என்று கூறுவதைவிட – உலகெங்கும்‌ இந்த நம்பிக்கைகள்தாம்‌ பரவியிருந்தன என்று கூறுவது, ஏற்கத்தக்கதாக இருக்கிறதல்லவா?  “இதெல்லாம்‌ மேலெழுந்தவாரியாகப்‌ பார்த்தால்‌ சுவாரஸ்ய மாக இருக்கக்‌ கூடிய ஒரு சில உதாரணங்கள்‌; இவற்றை வைத்துக்‌ கொண்டு, ஹிந்து மதம்தான்‌ ஆரம்பத்தில்‌ இருந்தது என்றோ, அது உலகம்‌ தழுவியதாக இருந்தது என்றோ சொல்ல முடியாது! என்று பகுத்தறிவுவாதிகளும்‌, சரித்திர ஆசிரியர்கள்‌ சிலரும்‌ கூறலாம்‌. அவர்கள்‌ கூற்றுக்கும்‌ ஆதாரம்‌ கிடையாது. இருக்கிற ஹளவு ஆதா ரத்தை அவர்கள்‌ ஏற்க மறுக்கிறார்கள்‌; ஏனென்றால்‌, அவர்கள்‌ வாதத்திற்கு அதுதான்‌ வசதி.  அதே போல, நம்பிக்கை உள்ளவர்களுக்கு, இந்த ஆதாரங்‌ களை ஏற்பது வசதி. நிராகரிப்பது, நம்பிக்கையற்றவர்களுக்கு வசதி என்பதால்‌, அவர்கள்‌ நிராகரிக்கிறார்கள்‌ எனும்போது – நம்பிக்கை உடையவர்கள்‌, தங்களுக்கு வசதி என்பதால்‌ ஏன்‌. இவற்றை ஏற்கக்‌ கூடாது? ஏற்பவர்களில்‌ நானும்‌ ஒருவன்‌.