ஆதாரமாக எதைச் சொல்வது?

கிறிஸ்தவ மதத்தின்‌ கோட்பாடுகள்‌, பைபிள்‌ என்ற நூலை அடிப்படையாகக்‌ கொண்டவை என்று கூறலாம்‌; இஸ்லாமிய மதத்தின்‌ கொள்கைகள்‌, குர்‌-ஆனில்‌ வகுக்கப்பட்டுள்ள தத்துவங்‌ களை அடிப்படையாகக்‌ கொண்டவை என்று சொல்லலாம்‌. இப்‌ படியே ஒவ்வொரு மதத்திற்கும்‌ ஓர்‌ ஆதார நூலைக்‌ காட்ட முடியும்‌. ஹிந்து மதத்திற்கு இப்படி எதைச்‌ சொல்வது? மதத்தின்‌ குறிக்கோளே தர்மத்தை நிலைநாட்டுவதுதான்‌. இது … ஏதோ ஒரு ஜாதிக்குரியதல்ல. அவை, மனித குலத்திற்கே கூறப்‌ பட்ட விஷயங்கள்தாம்‌ என்பதைப்‌ பற்றிய விவரங்களைப்‌ பிறகு பார்ப்போம்‌.

‘தன்னைக்‌ காப்பவர்களை தர்மம்‌ காக்கும்‌; தன்னை அழிக்க நினைப்பவர்களைத்‌ தர்மம்‌ அழிக்கும்‌ – என்று கூறப்படு இறது. தர்மம்‌, உண்மையான இருப்தியைத்‌ தருவது; மகிழ்ச்சியைப்‌ பரப்புவது. தர்மத்தின்‌ பல பரிமாணங்களை அறிவதற்கு, 18 வித்யை களைக்‌ கற்க வேண்டும்‌. அதாவது அறிவைத்‌ தருகிற – பதினான்கு விஷயங்களைப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌. இந்த பதினான்கு விஷயங்கள்‌ : ரிக்‌, யஜூர்‌, ஸாம, அதர்வண – ஆகிய நான்கு வேதங்கள்‌; இது தவிர, வேதத்தின்‌ அங்கங்கள்‌ – அதாவது வேதாங்‌ கங்கள்‌ ஆறு : எழுத்துக்களின்‌ தன்மையையும்‌, உச்சரிப்பையும்‌ விளக்குகிற ‘சிட்சை’; இலக்கணத்தை விளக்குகிற ‘வியாகரணம்‌’; செய்யுள்‌ விதிகளை காட்டுகிற ‘சந்தஸ்‌’; எந்த வேர்களிலிருந்து எந்தெந்த வார்த்தைகள்‌ உருவாகின்றன என்பதைக்‌ கூறுகிற நிருக்தம்‌) 

வான சாத்திரத்தை விளக்குகிற ‘ஜோதிஷம்‌’; யாகங்களுக்கான வழி முறைகளை வகுத்துத்‌ தருகிற ‘கல்பம்‌’; ஆக நான்கு வேதங்களும்‌, ஆறு வேத அங்கங்களும்‌ சேர்ந்து பத்து. இந்த ஆறு அங்கங்களைக்‌ கொண்டு, வேதத்தை முறையாக ஓத வேண்டும்‌. ஆறு அங்கங்கள்‌ என்றால்‌ – ஷடங்கம்‌; இதுவே ‘சடங்கு! என்றாகிவிட்டது.  இவை போக, வேதங்களை ஆராய்ந்து விளக்குகிற – ஆழ்ந்த விசாரணை என்று பொருள்‌ கொள்ளக்‌ கூடிய – ‘மீமாம்ஸை’; தர்க்க சாத்திரமாகிய ‘நியாயம்‌’; புராணங்கள்‌; வாழும்‌ வழியை வரையறுக்கிற தர்ம சாத்திரங்கள்‌. ஆக மொத்தம்‌ 18 வித்யைகள்‌ அல்லது கல்விகள்‌ அல்லது பாடங்கள்‌.  இந்தப்‌ பதினான்கு வித்யைகளையும்‌ கற்றவர்களாகத்‌ இகழ்ந்து, தர்மத்தை அறிந்தவர்களாக வாழ்ந்த பெரியவர்கள்‌ சிலர்‌; நம்மைப்‌ போன்றவர்களுக்கு இந்தச்‌ சாதனை மிக மிகக்‌ கடினமானது என்ப தால்‌, அந்தப்‌ பெரியவர்கள்‌ கூறிய வழிமுறைகளை நாம்‌ ஏற்‌ இறோம்‌ (இவை தவிர, துணை வேதங்கள்‌ என்று நான்கு கூறப்படு இன்றன. அவை – மருத்துவ சாத்திரமாகிய ஆயுர்வேதம்‌; பொருள்‌ மற்றும்‌ நிர்வாகம்‌ பற்றியதான அர்த்தசாஸ்திரம்‌; ஆயுத சாத்திரமாயை தனுர்‌ வேதம்‌; மற்றும்‌ கலைகளைப்‌ பற்றிக்‌ கூறுகிற காந்தர்வ வேதம்‌).  பதினான்கு வித்யைகள்‌ என்று பட்டியலிடப்பட்டிருக்கிற இந்தத்‌ தர்ம அறிவுக்‌ கல்விக்கு – ஆதாரமும்‌, மூலமும்‌ வேதங்களே. வேதங்களை

அடிப்படையாக ஏற்று அமைந்த மதம்‌ வைதிக மதம்‌; அதுவே ஹிந்து மதம்‌.  வேதங்கள்‌ நான்கு என்று கூறப்பட்டாலும்‌; நமக்குக்‌ கிடைத்‌ தவை நான்கு – என்றுதான்‌ பொருள்‌. வேதங்கள்‌ முடிவற்றவை; அதாவது கணக்கில்லாதவை… என்று வேதங்களே கூறுகின்றன. அவற்றில்‌ சிலவற்றை ரிஷிகள்‌ உணர்ந்து, உலகிற்கு தந்தார்கள்‌. அவைதாம்‌ – ரிக்‌, யஜூர்‌, ஸாம, அதர்வண வேதங்கள்‌,  வேதங்கள்‌ முடிவற்றவையாக இருப்பது பற்றி, வேதங்களிலேயே ஒரு நிகழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது.

பரத்வாஜர்‌ என்ற மாமுனிவர்‌ முந்நூறு ஆண்டுகள்‌ வாழ்கிற அருள்‌ பெற்று, வேதங்களை முழுமை யாக அறிந்துவிட முனைந்தார்‌. தேவேந்திரன்‌ அவர்‌ முன்‌ தோன்றி, இன்னமும்‌ நூறு ஆண்டுகள்‌ வாழும்‌ வாய்ப்புக்‌ கிடைத்தால்‌, அந்தக்‌ காலத்தை அவர்‌ எப்படிப்‌ பயன்படுத்துவார்‌ – என்று அவரிடமே கேட்டார்‌. பரத்வாஜ முனிவர்‌, ‘அந்த நூறு ஆண்டுகளையும்‌ கூட வேதங்களைக்‌ கற்பதிலேயே கழிப்பேன்‌’ என்று கூறினார்‌. தேவேந்திரன்‌, பரத்வாஜர்‌ மீது தயை கொண்டார்‌. இயலாத காரியத்தைச்‌ செய்து முடித்துவிட நினைக்கிற அவருக்கு, வேதங்‌ கள்‌ முடிவற்றவை என்பதை உணர்த்த விரும்பி – மூன்று பெரிய மலைகளைத்‌ தோன்றச்‌ செய்தார்‌. பிறகு ஒரு கைப்பிடி மண்ணை கையில்‌ எடுத்து, பரத்வாஜரைப்‌ பார்த்து “நீ கற்றது இந்தக்‌ கைப்‌ பிடி மண்‌ அளவு: நீ கற்க வேண்டியதோ இந்த மலைகள்‌ மாதிரி பிரம்மாண்டமானது! என்று கூறினார்‌. வேதங்கள்‌ முடிவற்றவை என்பதை வேதங்களே இப்படி விளக்குகின்றன.

(கற்றது கைம்‌ மண்‌ அளவு, கல்லாதது உலகளவு – என்ற ஒளவையாரின்‌ வாக்கு இச்சமயத்தில்‌ நினைவுகூரத்‌ தக்கது.) இப்படிப்பட்ட முடிவற்ற வேதங்களை ரிஷிகள்‌ உணர்ந்தனர்‌ என்றும்‌, அவை சப்த அலைகளாக அவர்களுக்கு வந்து சேர்ந்தன என்றும்‌ கூறினால்‌ – அதற்கு முன்‌ இவை எப்படி இருந்தன? இறைவன்‌ படைத்தானா? அதுகூட இல்லை என்றும்‌, இறை வனுடன்‌ சேர்ந்தே வேதங்களும்‌ இருந்தன என்றும்‌ ஹிந்து மத நூல்கள்‌ கூறுகின்றன. அது எப்படி என்று கேட்டால்‌, வேதங்கள்‌ இறைவனின்‌ சுவாசக்‌ காற்றாக இருந்தன என்று விளக்கப்படுகிறது. இந்தச்‌ சுவாசக்‌ காற்று, உண்டாக்யெ அதிர்வுகளால்‌ தோன்றிய சப்த அலைகளை ரிஷிகள்‌ உணர்ந்தனர்‌; ஒரு ரேடியோ பெட்டி சப்த அலைகளை வானிலிருந்து பெற்று, நமக்கு ஒலி வடிவமாகத்‌ தரவில்லையா? அதுபோலத்தான்‌. அது இயந்திரத்தினால்‌ முடியும்‌; மனிதனால்‌ முடியாது – என்று ஏன்‌ நினைக்க வேண்டும்‌? இன்று நம்மால்‌ முடியாது; ஏனென்றால்‌ அதற்கு வேண்டிய பயிற்சி நம்‌ மிடம்‌ இல்லை. அந்தப்‌ பயிற்சிதான்‌ தவம்‌.

இன்று இயானம்‌ – மெடிடேஷன்‌, உலகெங்கும்‌ போற்றிக்‌ கொண்டாடப்படுகிறது. இயானம்‌ என்பது என்ன? மனதை ஒரு நிலையில்‌ நிறுத்தி, சுவாஸத்தை ஒரு கட்டுக்குள்‌ கொண்டு

வருவதுதானே, இயானத்தின்‌ அடிப்படை! உணர்ச்சிகள்‌ கொந்த ளித்தால்‌, சுவாஸம்‌ தாறுமாறாகப்‌ போறது: நாடித்‌ துடிப்பு அதி கரித்து விடுகிறது; அதே சுவாஸத்தைக்‌ கட்டுப்படுத்தும்போது, சாந்தி ஏற்படுகிறது. இது மன வலிமையைக்‌ கூட்டவும்‌, உடல்‌ நலத்தைப்‌ பேணவும்‌ மிகவும்‌ உதவுகிறது என்பதை, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகளே ஏற்கின்றன. 

நம்மைப்‌ போன்ற சாதாரணமான மனிதர்கள்‌ செய்தாலே இப்‌ படிப்‌ பலன்‌ அளிக்கக்‌ கூடிய சுவாஸப்‌ பயிற்சி – ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு, மனதை ஒரு நிலையில்‌ ஸ்திரமாக நிறுத்தி, பெரும்‌ தவ நிலையில்‌ ஈடுபடுகிற ரிஷிகளுக்கு, சப்த அலைகளை உணரக்‌ கூடிய சாதனை புரிய வழி செய்யலாம்‌ அல்லவா? வேறொன்றையும்‌ நினைத்துப்‌ பார்ப்போம்‌. மோசஸுக்குப்‌ பத்துக்‌ கட்டளைகள்‌ கிடைத்தன. அவற்றை அவர்‌ புதைபொருள்‌ ஆராய்ச்சி செய்து, பூமியைத்‌ தோண்டி எடுக்கவில்லை; ஆண்ட வன்‌ புரிந்த அருள்‌ அது. அதேபோல, நபிகள்‌ நாயகத்திற்கு குர்‌- ஆன்‌ இட்டியது. அவர்‌ உட்கார்ந்து யோசித்து, ஒரு கட்டுரை எழுதுகிற மாதிரியோ, ஒரு காவியம்‌ படைக்க மாதிரியோ, குர்‌- ஆனை இயற்றவில்லை. இறைவன்‌ அவருக்கு அதை அருளினார்‌. * இவை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்‌ நிகழ்ந்த அற்புதங்கள்‌. இதையெல்லாம்‌ இன்றைய உலகமும்‌ ஏற்கிறது. அப்படியிருக்க, என்று நடந்தது என்று இன்று வரை கூற முடி யாத காலத்தில்‌ – ரிஷிகள்‌ வேதங்களை ஏன்‌ பெற்றிருக்க முடி யாது?

சில வாயில்லா ஜீவன்கள்‌ – பறவைகள்‌, மிருகங்கள்‌ – வரப்‌ போகிற இயற்கையின்‌ மாற்றங்களை அல்லது சீற்றங்களை எப்படியோ முன்கூட்டியே உணர்ந்து விடுகின்றன என்பதை விஞ்ஞானிகள்‌ ஏற்கிறார்கள்‌; இன்றைய விஞ்ஞானம்‌ எவ்வளவோ முயற்சித்தும்‌ இவ்விஷயத்தில்‌ அடைய முடியாத நிபுணத்துவத்தை, இந்த வாயில்லா ஜீவன்கள்‌ பெற்று விடுகின்றன. எப்படி? ஏதோ சல அதிர்வுகளை – மனிதர்களால்‌ உணர முடியாத அதிர்வுகளை, அவை உணர்கின்றன என்பதுதானே காரணம்‌? ஒரு இறு குழந்தை, இருக்குறளில்‌ உள்ள அத்தனை குறள்களையும்‌, கலைகீழாக ஒப்பிக்கிறது; பெரியவர்கள்‌ பெரும்‌ முயற்சி செய்தாலும்‌ இதைச்‌ செய்து காட்ட முடிவதில்லை. அந்தக்‌ குழந்‌ தைக்கு இந்தத்‌ திறமை எப்படி வந்தது?  இன்ஸ்பிரேஷன்‌! என்கிற உள்ளுணர்வினால்‌ தோன்றுகிற உண்மை அல்லது தீர்வு – பல விஞ்ஞான சாதனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. இதை விஞ்ஞானிகளே ஏற்கிறார்கள்‌. 

சப்த அலைகளை செடிகள்‌ உணர்கின்றன; அதனால்தான்‌ செடியின்‌ வளர்ச்சிக்குச்‌ சங்கீதத்தினால்‌ உதவ முடிகிறது என்று ஆராய்ச்சிகள்‌ கூறுகின்றன. இதெல்லாம்‌ சாத்தியம்‌ என்கிறபோது, ரிஷிகள்‌ சப்த அலைகளை உணர்ந்தார்கள்‌ என்று பல பெரியோர்‌ கள்‌ கூறியிருப்பதும்‌ ஏற்கக்‌ கூடியதுதானே!  இப்படி முடிவற்றதாகிய வேதங்களில்‌ தாங்கள்‌ உணர்ந்த வற்றை ரிஷிகள்‌ தந்தாலும்‌, அவற்றை வரிசைப்படுத்தி, வகுத்து, பிரித்து, இன்று காணக்‌ கிடைக்கிற அமைப்பில்‌ அவற்றைத்‌ தந்தவர்‌ வியாசர்‌. வியாசர்‌, பராசர முனிவரின்‌ மகன்‌. ஒரு மீனவப்‌ பெண்‌ இவருடைய தாயார்‌. வியாசர்‌ தெய்வத்திற்கு நிகராக வணங்கப்படு இறார்‌. அறிவுக்கே ஆதாரமானவர்‌ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.

இப்படி வந்துள்ள நான்கு வேதங்களில்‌, ஒன்று முதலில்‌ தோன்றி யது, அடுத்து வந்தது இது… என்ற பிறப்பு வரிசை எதுவும்‌ கிடையாது.  வேதங்களுக்கு ‘ச்ருதி’ என்றும்‌ ஒரு பெயர்‌ உண்டு. அதாவது கேட்பது, கேட்கப்படுவது. ஏனென்றால்‌ வேதங்கள்‌ எழுதப்பட வில்லை. ரிஷிகள்‌ கேட்டனர்‌; அவர்கள்‌ உபதேசித்தது பல குரு மார்களால்‌ பின்னர்ச்‌ சடர்களுக்கு வாய்மொழியாகவே உபதேசிக்கப்‌ பட்டது. இப்படி எழுதப்படாமலேயேதான்‌ இவை இருந்து வந்தன.  ஏன்‌ எழுதப்படவில்லை என்றால்‌ – எழுதும்போது, சிதைவு ஏற்படக்கூடிய தன்மை பெற்றவை இவை. உச்சரிப்பில்‌ ஏற்ற இறக்கங்களும்‌, சொல்‌ சுத்தமும்‌ மிகவும்‌ சரியாக இருக்க வேண்டும்‌ என்கிறபோது, எழுத்தில்‌ அதை எப்படிக்‌ கொண்டு வருவது? என்னதான்‌ அழுத்தமான எழுத்து, அடையாளக்‌ குறிகள்‌ போன்ற வற்றைப்‌ பயன்படுத்தினால்‌ கூட, உச்சரிப்பு மாறுபடும்‌. அதன்‌ விளைவு விபரீதமாகிவிடும்‌.

இதற்கு ஒரு நிகழ்ச்சி உதாரணமாகக்‌ கூறப்படுகிறது.  த்வஷ்டா என்பவர்‌, ‘தேவதச்சன்‌’ என்று வர்ணிக்கப்படுகிற வர்‌. இவர்‌ இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனைப்‌ பெற வேண்டும்‌ என்று விரும்பினார்‌. அதற்காக வேள்வி புரிந்தார்‌. ‘ஸ்வா ஹேந்த்ரசத்ருர்வர்தஸ்வ’ என்று ஓதிய மந்திரத்தின்‌ உச்சரிப்பு மாறியது – எழுத்து மாறவில்லை; ஏற்ற இறக்கம்‌ மாறியது. ‘இந்திரனைக்‌ கொல்லக்‌ கூடிய மகன்‌ வேண்டும்‌’ என்பது, இந்த மாறுதலினால்‌, ‘இந்திரன்‌ கொல்லக்‌ கூடிய மகன்‌ வேண்டும்‌” என்று உருமாறிவிட்டது. மகன்‌ பிறந்தான்‌; இந்திரன்‌ அவனைக்‌ கொன்றான்‌.  அப்படிக்‌ கடுமையான சொல்‌ சுத்தம்‌ தேவை; எழுப்புகிற ஒலி யில்‌ ஒரு சிறிய பிசகும்‌ ஏற்பட்டு விடக்‌ கூடாது. அதனால்தான்‌ வேதங்கள்‌ எழுதப்படாமலே இருந்து வந்தன. பிறகு அயல்நாட்டி னர்‌ இங்கு வந்து ஆராய்ச்சிகளைச்‌ செய்ய முனைந்தபோது, இந்த மரபு அடிபட்டுப்‌ போனது. வேதம்‌ அச்சில்‌ ஏறியது. அதுவரை பல்லாயிரம்‌ வருடங்களாக, வாய்‌ மொழியிலேயே தொடர்ந்து வந்து, இது எப்படி மாறிவிடாமல்‌ இருந்தது? பார்ப்போம்‌.