வேதங்களில் பல்வேறுபட்ட விஷயங்கள் அடங்கியிருக் இன்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் ஒன்று – ‘மணி‘களைப் பற்றியது. அஇர்ஷ்டம் தரக்கூடிய கல், ஆபத்தைப் போக்குகிற தாயத்து, தோஷத்தை நீக்குதிற கயிறு என்ற பலவித நம்பிக்கைகள் இன்றும் உள்ளன. இவை எல்லாவற்றையுமே ‘மணி! என்ற வார்த்தையில் அடக்கி விடலாம். புராணங்கள் கூட பல மணி கள் பற்றிப் பேசுகின்றன. ச்யமந்தக மணி என்ற ஒன்றைப் பற்றிய நிகழ்ச்சி மஹாபாரதத்திலும் வருகிறது. மணி என்பது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவதற்காக அந்த விவரத்தைப் பார்ப்போம். சத்ரஜித் என்ற மன்னன், சூரியனை நண்பனாகப் பெற்றிருந்தான். அவனுக்குத் தன்னுடைய பரிசாக ச்யமந்தக மணியைச் சூரியன் அளித்தான். அதை முறையாகப் பூஜித்து அணிய வேண்டும். இதைச் சத்ரஜித்தின் சகோதரன் ப்ராஸேனன் அணிந்து கொண்டான். அவன் அந்த மணியை முறையாகப் பெற்றவனும் அல்ல; முறை யாகப் பூஜித்து அணிந்தவனும் அல்ல. அதை அணிந்து காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது, அவன் ஒரு சங்கத்தினால் கொல்லப் பட்டான். எங்கத்திடமிருந்து ச்யமந்தக மணியைப் பெற்ற ஜாம்பவான், தன்னுடைய குகைக்கு அதை எடுத்துச் சென்றான்.
இதற்கிடையில், ப்ராஸேனனைக் கொன்று, ச்யமந்தக மணியை, கிருஷ்ணர் தாம் அபகரித்துச் சென்றுவிட்டார்! என்று ஓர் அபவாதம் பர வியது. இதை அறிந்த இருஷ்ணர், ச்யமந்தக மணியைத் தேடிப் புறப்பட்டு, ஜாம்பவானின் குகையில் நுழைந்து, அவனைத் தோற்கடித்து, மணியை மீட்டுச் சத்ரஜித்திடம் கொடுத்தார். இது பத்ம புராணம், ஹரிவம்சம் போன்ற நூல்களில் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. சத்ரஜித்தின் மகளான சத்யபாமாவை இருஷ்ணர் மணந்தார்.
ச்யமந்தக மணியைக் இருஷ்ணருக்குத் தர சத்ரஜித் முன் வந்தும், இருஷ்ணர் அதை ஏற்கவில்லை. இதன் பிறகு ஒரு யாதவ அரச னாகிய சததன்வன் என்பவன், சத்ரஜித்தைக் கொன்று, ச்யமந்தக மணியைக் கைப்பற்றினான். இருஷ்ணர் சததன்வனைப் போரிட்டுக் கொன்றார்; ஆனால் அதற்கு முன்னதாகவே அவன், ச்யமந்தக மணியை அக்ரூரன் என்ற மற்றொரு யாதவ அரசனிடம் கொடுத்து விட்டான். மணியைப் பெற்ற அக்ரூரன் கடும் தவம் செய்தான். பின்னர்த் துவாரகையில் கடுமையான பஞ்சம் நேரிட்டபோது, அக்ரூரனை வரவழைத்தால், பஞ்சம் விலகுமென்று நம்பி, யாதவர்கள் அவனைத் துவாரகைக்கு அழைத்து வந்தனர்.
ச்யமந்தக மணி அவனிடமே இருப்பதுதான் சரி என்று கிருஷ்ணர் முடிவு செய்தார். மணி, முறையற்று அதைப் பெற்ற ப்ராஸேனனிடம் தங்க வில்லை; அதை மீண்டும் பெற்றபோது, முறையான பூஜையைச் செய்யாததால் அது சத்ரஜித்தையும் காப்பாற்றவில்லை; முறை யாக அதைப் பூஜித்து வந்த அக்ரூரனிடமே அது தங்கியது. இப்படி மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய இந்த மணி! இப்போது, தபால் மூலம் தருவித்துப் பெறுகிற அளவிற்கு மலிவான விஷயமாகிவிட்டது; பலனும் அதற்குத் தகுந்தாற் போல்தான் இருக்கும். வேதங்களில் வருகிற குறிப்புகளின்படி பல மணிகள் இருக்கின்றன. தாமரை மணி, ருத்ராக்ஷ மணி, அத்தி மரத்தினால் ஆன மணி… என்று பல. புற்று நோயை நீக்குவதற்கும் கூட ஒரு மணி கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு குரு, இதை ஒரு வனுக்கு அணிவிக்க வேண்டும்; பின்னர் அதற்குரிய பூஜையை யும் செய்ய வேண்டும். இவை மந்த்ரம் சார்ந்த வழிமுறைகள். மணிகள் தவிர – புற்று நோய் நீங்க, சில சரும நோய்கள் நீங்க, சில கடுமையான காய்ச்சல்கள் நீங்க, மஞ்சள் காமாலை நீங்க, சுகப் பிரசவம் நேரிட, இருமிகளைப் போக்க, விஷ முறிவு செய்ய… என்று பல வியாதிகளை நீக்குவதற்கான மந்த்ரங்கள். வேதங்களில் கூறப்பட்டிருக்கின்றன. “இவற்றைப் படித்து, இன்று ஓதினால், கூறப்பட்டுள்ள பலன் இட்டுமா?’ என்ற கேள்வி எழலாம். சரியாகப் புரிந்து கொண்டு, முறையாக ஓதினால் பலன் கடைக்கும். நாம் இதை சரியாகச் செய்யாமல், வேதத்தின் மீது பழி போடுவதில் அர்த்தமில்லை.
டாக்டரிடம் போகிறோம். அவரிடம் நோய் குணமாகவில்லை என்றால், ‘இந்த டாக்டர் சரியில்லை” என்று இர்மானித்து, வேறு டாக்டரைப் பார்க்கிறோமே தவிர, மருத்துவமே பொய் என்ற முடிவிற்கு நாம் வருவதில்லை. அதுபோல, மந்த்ரத்தைப் பிரயோகம் செய்கிறவருடைய தவறுக்கு, மந்த்ரத்தைப் பழிப்பது என்ன நியாயம்? அந்தந்த மந்தீரங்களுக்கு, குறிப்பிட்ட மூலிகைகளும் உள்ளன என்பதையும் மறந்துவிடக்கூடாது. இப்படி, மருந்துகள் போன்ற மந்த்ரங்களைக் கூறுகிற வேதத் இல், குறிப்பிட்ட பவனை வேண்டி ஓதுவதற்கான மந்த்ரங்களும் உள்ளன. மழை பொழிவதற்கு, செல்வம் இட்டுவதற்கு, மக்கட் பேறு பெறுவதற்கு, பயிர் நன்றாக வளர்வதற்கு, குடும்பத்தினர் நலமுடன் வாழ்வதற்கு, நல்ல ஆயுள் கிட்டுவதற்கு, கடன் தொல்லை அறவே இல்லாமற் போவதற்கு, ஒரு பெண்ணிற்கு நல்ல கண: வன் இட்டுவதற்கு… என்று பல பலன்களைப் பெறுவதற்காக, வெவ்வேறு மந்த்ரங்கள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
இது தவிர, விரோதியை வீழ்த்துவதற்கும், யாவரையுமே உறக்கத்தில் ஆழ்த்துவதற்கும் கூட மந்த்ரங்கள் உள்ளன. எந்த மந்த்ரத்திற்குமே, அதற்கென்று விதிக்கப்பட்டுள்ள ‘செய் முறை! – சடங்கு – உண்டு. அதைப் புரிந்து கொண்டு, அதை முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால், மந்த்ரம் பயனைத் தராது. இவ்வாறான மந்த்ரங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, வேதங் களில் முக்கியமாகக் கூறப்படுவது யாகங்களே. வேதங்களில் 27 யாகங்கள் வர்ணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. கரண்டி எந்த மரத்தினால், என்ன நீளம் உடையதாகச் செய்யப் பட வேண்டும்; மண் பாத்திரங்கள் எந்த அளவில் இருக்க வேண் டும் போன்றவை கூட கூறப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு யாகத் இற்கு அதற்காகக் குறிப்பிடப்பட்ட பொருள்களைத்தாம் பயன் படுத்த வேண்டும். வேங்கை மரத்தினால் செய்யப்பட்டவை, கருங் காலி மரத்தினால் செய்யப்பட்டவை, மூங்கிலினால் செய்யப்பட் டவை… என்ற இப்பொருள்களின் விதிமுறைகள் மீறப்படத் தக்கவை அன்று. யாகங்கள் நடத்தப்படுவது, பொதுவாக உலக நன்மைக் காகவே. ‘யாகத்தில் அக்னியில் கொடுக்கப்பட்ட அர்ப்பணம், சூரி யனைச் சென்று அடைகிறது; சூரியனின் வெப்பத்தினால், சமுத்திர நீர் ஆவியாகி மழை பொழிகிறது; மழையினால் உணவு உற்பத்தி நடக்கிறது; அந்த உணவினால் மனிதர்கள் உயிர் வாழ்கின்றனர்’ என்று மனு கூறியிருக்கிறார்.
வேத மந்த்ரங்களின் ஒலியினால் எழுப் ் பப்படுகிற சப்த அலைகள் இதை சாதிக்கின்றன. உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் மட்டுமல்லாமல், சகல ஜிவராசிகளுக்கும் நன்மையை வேண்டி நடத்தப்படுகிறவையே யாகங்கள் என்பது, ஒரு வேத மந்த்ரத்திலிருந்தே தெளிவாகப் புரி கிற விஷயம். தச்சம்யோ – ராவ்ருண்மஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ: ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சந் நோ அஸ்து த்விபதே சஞ் சதுஷ்பதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
“நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டு கிறோம். யாகத்தைச் செய்பவனுக்கு நற்பயன் கிட்ட வேண்டு இன்றோம். “நமக்கு தேவதைகளின் அருள் இட்டட்டும். மனித சமூகத் இற்கு க்ஷேமம் உண்டாகட்டும். **செடி, கொடிகள் மேலோங்கி வளரட்டும். “இரண்டு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும்; “நான்கு கால் படைப்புகளிடம் சுபம் உண்டாகட்டும். “அமைதி நிலவட்டும்”. யாகத்தின்போது ஓத வேண்டிய இந்தத் துதியை வேதம் கூறு இறது. யாகங்கள் சகல ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாக வேண் டும் என்ற உயர்ந்த நோக்கமுடையவை என்பதை இந்த மந்த்ரம் நமக்கு உணர்த்துகிறது என்றால் – மற்றொரு வேத மந்த்ரம் மற்று மோர் உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
யதிஹ கோரம் யஇஹ க்ரூரம் யதிஹ பாபம் தச்சாந்தம் தச்சிவம் ஸர்வமேவ சமஸ்து ந: “இங்கே எவையெல்லாம் பயங்கர சக்திகளாக உள்ளனவோ, இங்கே எவையெல்லாம் கொடூரமான சக்திகளாக உள்ளனவோ, இங்கே எவையெல்லாம் பாவத்தினால் உந்தப்பட்டு இயங்குகின் றனவோ – அவை அனைத்தும் நிதானமடைந்து, அமைதி பெறட் டும். எல்லாமே நன்மையை நாடட்டும்”. அதாவது, இய சக்திகளையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சரிய நோக்கத்தைக் கொண்டது வேதம் என்பதைத்தானே இது காட்டுகிறது! இவ்வாறு உயர்ந்த விஷயங்களைச் சொல்கிற வேதங்களில், ஒலியின் முக்கியத்துவம் கருதியோ அல்லது மந்த் ரத்தின் மஹிமை கருதியோ பல விஷயங்கள் மறைபொருளாகக் கூறப்பட்டிருக்கின்றன. இதுவே, பல தவறான கருத்துகளுக்கும், விளக்கங்களுக்கும் இடம் வகுத்துவிட்டது – என்பதை ஏற்கெனவே பார்த்தோம். யாகங்கள் தொடர்பாகவும் இந்த மாதிரி தவறான விளக்கங் களும், அவற்றையொட்டிய விமர்சனங்களும் வந்துவிட்டன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.