யாகங்களில் உயிர் பலி கிடையாது

*யாகங்களில்‌ உயிர்‌ பலி இருந்தது என்ற விமர்சனம்‌, தற்கால ஆராய்ச்சியாளர்களால்‌ கூறப்படுகிறது என்பதையும்‌; பல சொற்களுக்கு இருக்கிற சில வேறு அர்த்தங்களில்‌, விகாரமானதை மட்டும்‌ எடுத்துக்‌ கொண்டு, அந்த அடிப்படையில்‌ இந்த மாதிரி விமர்சனங்கள்‌ செய்யப்படுகின்றன என்பதையும்‌ – சென்ற அத்தியாயத்தில்‌ பார்த்தோம்‌.  இம்மாதிரி விமர்சனங்கள்‌, வேதங்களையும்‌, ஹிந்து மத நம்பிக்கைகளையும்‌ இழிவுபடுத்திப்‌ பேச வேண்டும்‌ என்ற நோக்க முடையவர்கள்‌ செய்வது. அதனால்‌, அவர்களுடைய விமர்சனம்‌ உள்நோக்கம்‌ உடையது; அதன்‌ காரணமாகவே அவர்கள்‌ சரியான பொருள்‌ இருக்கும்போதுகூட, அதைப்‌ பார்க்க மறுத்து விடு கிறார்கள்‌. 

வேறு சிலர்‌, இம்மாதிரியான உள்நோக்கம்‌ எதுவும்‌ இல்லா மலேயே, வேதங்களின்‌ சிறப்புகளை ஏற்றுக்‌ கொண்டே, ‘யாகங்‌ களில்‌ மாமிசம்‌ பயன்படுத்தப்பட்டது’ என்று கூறுகிறார்கள்‌. அவர்‌ களுடைய வாதம்‌ கவனிக்கத்தக்கது. அதைச்‌ சற்றுப்‌ பார்ப்போம்‌.  ”இயற்கையில்‌ ஒன்று, மற்றொன்றிற்கு உணவாகிறது. நிலத்‌ இன்‌ சத்தை உண்டு – செடி, கொடிகள்‌ வளர்கின்றன. செடி, கொடிகள்‌ தரும்‌ காய்கறிகளும்‌, பழங்களும்‌, பயிர்கள்‌ தரும்‌ தான்யங்களும்‌ – பறவைகளுக்கும்‌, மிருகங்களுக்கும்‌ உணவு; அந்த பறவைகளும்‌, மிருகங்களும்‌ – மனிதனுக்கு உணவு ஆகின்றன. சிறிய மீன்‌, பெரிய மீனுக்கு உணவு; பெரிய மீனோ முதலைக்கு உணவாகிறது. ஒரு சிறிய மிருகம்‌, ஒரு பெரிய மிருகத்திற்கு உணவு; அதன்உடல்‌, பிணம்தின்னி மிருகங்களுக்கும்‌, பறவைகளுக்கும்உணவாஙிறது.  ”இது இயற்கை விதி; படைப்பின்நியதி. படைப்புக்கு வழி செய்த சக்தி, அழிவுக்கும்வழி செய்திருக்கிறது. இல்லாவிட்டால்பூமி தாங்காது. இது இவ்வாறென்றால்‌, மனிதன்யாருக்கு உணவு? அவன்யமனுக்குகாலதேவனுக்குஅதாவது காலத்திற்கு உணவாகிறான்‌.

இதை வைத்தே, தேவர்களுக்கு மனிதன்அன்னமாகிறான்என்று கூறப்பட்டுள்ளது. இப்படி உணவாகிற மனிதன்‌, காலத்தின்நியதிப்படி இரையாகி விடுவதற்கு முன்பாக, தானாகவே முன்வந்து, தன்னையே இயாகம்செய்ய வேண்டும்‌. தன்னையே தியாகம்செய்வது என்றால்‌ – தற்கொலை செய்து கொள்ள வேண்டும்என்பது அல்ல பொருள்‌. ‘தான்‌’ என்கிற அகந்தையை, அந்த அகங்காரத்தை, அந்தஈகோவைத்தியாகம்செய்ய வேண்டும்‌.

 ”அகங்காரத்தினால்‌ – தான்என்கிற எண்ணத்தினால்நிரப்பப்பட்டவனிடம்‌, எந்த நல்ல விஷயத்திற்கும்இடம்இருக்காது. ஒருவன்‌, ஒரு குருவிடம்சென்று தத்துவ போதனை செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொண்டான்‌. அந்த குரு, அவனுக்குப்பதில்எதுவும்கூறாமல்‌, ஒரு கோப்பையில்பழ ரஸத்தை ஊற்றிக்கொண்டேயிருந்தார்‌. கோப்பை நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. வந்தவன்‌, குரு கவனமாக இல்லை என்று நினைத்து, ‘நிறுத்துங்கள்‌; கோப்பை வழிகிறது; அதில்இடமில்லைஎன்று கூறி னான்‌. குருஉன்நிலையும்அதுதான்‌. தான்என்கிற எண்ணத்தை வெளியே கொட்டி, நல்ல விஷயங்களைக்கேட்டுக்கொள்ள இடம்ஏற்படுத்திக்கொள்‌. அதன்பிறகு, உபதேசத்தை ஆரம்பிக்கிறேன்‌’ என்று அவனிடம்கூறி அனுப்பினார்‌.  ”இப்படி அகங்காரத்தினால்நிரப்பப்பட்ட மனிதன்‌, தியாகம்செய்யும்வழிமுறைதான்யாகம்‌. அதில்‌, தனக்கு மிகவும்பிரிய மான பொருட்களை அவன்தெய்வத்திற்கு அளிக்கிறான்‌. காய்கறி உண்பவன்‌ – அதைத்தெய்வத்திற்கு தருவான்‌. அதே போல மாமிசம்உண்பவன்‌, அதைத்தெய்வத்திற்கு தருகிறான்‌. இதில்எந்தத்தவறும்இல்லை. அதைத்தருகிறபோது, தன்னுடையது என்கிற எண்ணமில்லாமல்தர வேண்டும்‌. இதனால்தான்இன்னும்கூட, சாதாரணமான ஹோமங்களில்கூட, ஒரு சமர்ப்பணம்முடிந்த வுடனேயே, ‘ மம! – இது என்னுடையது அல்லஎன்று கூறப்படுகிறது.

அதாவது, ‘இந்த்ராய ஸ்வாஹாஇந்த்ராய இதம் மம! – என்று ஹோமம்நடக்கிறது. ‘இந்திரனுக்குச்சமர்ப்பணம்‌; இது இந்திரனுடையது; என்னுடையது அல்லஎன்று கூறப்படுகிறது.  ‘இதனால்தான்‌, மாமிசம்இடம்பெறாமலும்யாகங்கள்நடந்தன. மாமிசம்தீயிலிடப்பட்ட யாகங்களும்நடந்தன. அவரவர்களுக்கு எது விருப்பமான உணவோ, அதைத்தெய்வத்திற்கு படைத்தனர்‌”,  இவ்வாறு யாகங்களுக்கு விளக்கம்தருகிறவர்கள்உண்டு; இவர்களுடைய விளக்கம்முழுமையாக ஏற்கக்கூடியது அல்ல என்பதைக்கீழே பார்ப்போம்‌.

அதே சமயத்தில்‌ – யாகங்களில்மாமிசம்பயன்படுத்தப்படுகிற வழக்கம்‌, காலப்போக்கில்எப்படித்‌  _ தோன்றியது என்பதற்கு இந்த அணுகுமுறை, சரியான விளக்கமாக இருக்கும்‌.  யாகங்களில்உயிர்பலி கிடையாது என்று கூறுகிற பெரியவர்களின்வாதங்கள்மிகவும்வலு உள்ளனவாக இருக்கின்றன. அவற்றைச்சிறிது பார்ப்போம்‌.  வேதத்தில்‌ ‘பசுக்களைக்காப்பாற்றுவாயாக; பசுக்களையும்‌, ஆடுகளையும்‌, குதிரைகளையும்‌, எந்தப்பிராணிகளையுமே கொல்லாதே; மனிதனை மனிதன்கொல்லாதே; எந்த ஜீவராசியையும்ஹிம்சை செய்யாதே! என்று தெளிவாகக்கூறப்பட்டிருக்கிறது. ஒரு முறை, ஓர்இடம்அல்ல; பல இடங்களில்பல முறைகள்இது மீண்டும்மீண்டும்வற்புறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, யாகத்தில்மிருகத்தையோ, மனிதனையோ கொல்ல வேண்டும்என்று அதே வேதம்எப்படிக்கூறும்‌?

கோஅக்னோ அதிதி:’ என்று ஒரு வாக்யம்‌. ‘விருந்தாளிக்காகப்பசுவைக்கொல்‌! என்றும்இதை எடுத்துக்கொள்ளலாம்‌; அதே சமயத்தில்இதற்குவிருந்தாளிக்குப்பசுவைத்தானம்செய்‌! என்றும்அர்த்தம்வருகிறது. இரண்டாவது அர்த்தத்தை எடுத்துக்கொள்வதுதானே முறை? விருந்தாளிக்கு, அதிதிக்கு, பசுவை தானம்கொடுப்பதால்அவனுக்குகோக்னன்‌’ என்றும்பெயர்உண்டு என்று விளக்கப்பட்டிருக்கிறதுஇதே போல்‌ ‘அஜஎன்ற வார்த்தைக்குஆடுஎன்றும்அர்த்தம்உண்டு; ‘அன்னம்‌’ என்றும்பொருள்உண்டு. அன்னத்இனால்யாகம்செய்ய வேண்டும்என்பதை விட்டு விட்டு – ‘ஆட்டைப்பலி கொடுத்து யாகம்செய்ய வேண்டும்‌! என்று அர்த்தம்செய்து, ‘ஐயைய்யோ! மிருக பலி! என்று கண்டனம்செய்வது என்ன நியாயம்‌?  இதோடு மட்டுமல்ல. இந்த விஷயம்வேதங்களில்நன்றா கவே விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பெரியவர்கள்சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்‌. அதர்வண வேதம்இதை விளக்குகிறது; யஜுர்வேதத்திலும்இந்த விவரம்வருகிறது.

அரிசிதான்பசு; அரிசியில்உள்ள கருமை, மாமிசம்‌; அதில்உள்ள சிவப்புத்தன்மை ரத்தம்‌… என்றெல்லாம்அதர்வண வேதம்கூறுகிறதுமாவினால்செய்யப்படுகிற படையலை, ரிக்வேதம்பசுவாக உருவகப்படுத்திக்கூறுகிறது. அந்த மாவினால்செய்யப்பட்ட படையலில்‌, தவிடுபசுவின்இந்த அங்கம்‌, நொய்‌ – இந்த அங்கம்‌… என்றெல்லாம்கூறப்பட்டுள்ளது.  ‘ஆலபனம்‌’ என்ற சொல்லிற்குகொல்வதுஎன்ற அர்த்தமும்உண்டு, ‘தொடுவதுஎன்ற பொருளும்உண்டு. உபநயனத்தில்குரு சிஷ்யனைத்தொடுகிறபோது, ‘ஹ்ருதயம்ஆலபதேஎன்றே மந்திரப்பிரயோகம்உள்ளது. ஆகையால்கவாலம்பம்என்றால்‌, பசுவைக்கொல்வதோ, அச்வாலம்பம்என்றால்குதிரையைக்கொல்வதோ அல்ல. பசு தொடப்பட்டு, தானம்செய்யப்படு கிறது: குதிரை தொடப்பட்டுத்தானம்செய்யப்படுகிறதுமீமாம்ஸை என்ற விளக்க நூலை இயற்றிய ஜைமினிபசுவைக்காணிக்கையாகதட்சிணையாகக்கொடுப்பது போல்‌, குதிரையும்தானம்செய்யப்படுவதாகக்குறிப்பிடுகிறார்‌.

 இது தவிர, மாமிசம்விழாத அக்னியே புனிதமானது என்று ரிக்வேதம்கூறுகிறது. இதை விளக்க ஒரு கதை, ரிக்வேதத்தில்கூறப்படுகிறது. ஒருமுறை யாரை அல்லது எதை ஒரு பசுவாகப்பாவித்து யாகம்செய்வது என்று முடிவு செய்ய முடியாத தேவர்கள்‌, மனிதனைப்பசுவாகப்பாவிக்கத்தீர்மானித்தனர்‌. அப்போது அவனுடைய ஆவி, ஒரு குதிரையிடம்சென்றதைப்பார்த்து, அந்தக்குதிரை யையே பசுவாகப்பாவிக்க அவர்கள்நினைத்தபோது, அந்த ஆவி ஒரு பசு மாட்டினிடம்செல்லவே, அதையே பசுவாகப்பாவிக்கத்இர்மானித்தனர்‌. ஆனால்அந்த ஆவியோ பசு மாட்டினிடம்இருந்து, செம்மறியாடு, செம்மறியாட்டிடமிருந்து, வெள்ளாடு என்று மாறி மாறி, இறுதியாக வெள்ளாட்டிலிருந்து பூமியினுள்பிரவேசித்து, தானியமாகவிட்டது.

ஆகையால்தானியமே உயர்ந்தது என்றும்‌, அதுவே பசுவாகப்பாவிக்கப்படத்தகுந்தது என்றும்அந்த தேவர்கள்முடிவு செய்தனர்‌. இந்தக்கதை மூலம்‌, மாமிசம்யாகத்தில்பயன்படுத்தப்படத்தகாதது என்பது விளக்கப்பட்டிருக்கிது. மிக உயர்ந்த தகுதிகளைப்பெற்று, மேல்உலகிற்கும்செல்லத்தக்க வன்மை படைத்தவனாகத்திகழ்ந்த உபரிசரவஸு என்கிற மன்னனைப்பற்றிய ஒரு நிகழ்ச்சியில்‌, யாகங்களைப்பற்றிய இந்த விஷயம்விவாதிக்கப்படுகிறது.

சில தேவதைகள்‌, யாகத்தில்ஆடு களைப்படைக்க வேண்டும்என்று கூற, அங்கிருந்த ரிஷிகள்‌ ‘இது மிகவும்தவறு. ‘அஜஎன்ற சொல்ஆட்டை மட்டுமல்லாமல்‌, தானங்களையும்குறிப்பிடுகிறது. உயர்ந்த கொள்கைகளை எடுத்துச்சொல்கிற போதனைகள்‌, மிருக பலியை நிர்ணயிக்காது. ஆகையால்நீங்கள்கூறுவது தவறு. மிருக பலி கூடாதுஎன்று கூறினார்கள்‌. இந்தச்சர்ச்சை நடந்து கொண்டிருந்தபோது, அங்கே உபரிசர வஸு வந்தான்‌. கற்றறிந்தவன்‌, உண்மையே பேசுபவன்என்ப தால்‌, அவனிடம்இது பற்றிக்கருத்துக்கேட்கப்பட்டது. அவனோ, தேவர்களைத்திருப்தி செய்வதற்காகமிருக பலியில்தவறில்லை என்றான்‌. இப்படிக்கூறியதால்‌, அவன்உடனே சபிக்கப்பட்டு. பறக்கும்சக்தி படைத்த தனது விமானத்திலிருந்து தள்ளப்பட்டு, கழே விழுந்தான்‌.

தன்னுடைய புண்ணியத்தினால்காப்பாற்றப்பட்ட அவன்‌, நாராயணனைத்துதித்து, தனது உயர்ந்த நிலையை மீண்டும்அடைந்தான்‌. மஹாபாரதத்தில்‌, சாந்தி பர்வத்தில்இந்த நிகழ்ச்சி பீஷ்மரால்வர்ணிக்கப்படுகிறதுஇப்படிப்பல இடங்களில்பல விவரங்கள்கூறப்பட்டிருப்ப தால்‌, மிருக பலி என்பது, சொற்களையும்‌, வாக்கியங்களையும்தவறாகப்புரிந்து கொண்டதால்வந்த வினை என்பதுதான்ஏற்புக்குரிய விளக்கமாக இருக்கிறது. யாகத்திற்கெல்லாம்முன்னோடி யாகிய, படைப்பு யாகத்தை வேதம்புருஷஸுக்தத்தில்வர்ணிக்கிறது. அதில்எல்லாமே உருவகங்களாகவே கூறப்படுகின்றன. இளவேனிற்காலம்‌ – நெய்‌; கோடைகாலம்‌ – நெருப்பில்இடப்படுகிற சுள்ளிகள்‌; பனிக்காலம்‌ – படையல்‌… என்றெல்லாம்அந்தப்படைப்பு யாகம்வர்ணிக்கப்படுகிறது.

இதில்உலகைப்படைத்தவனே யாகப்பசு. ‘பசுஎன்பது பசு மாட்டை மட்டுமல்லாமல்‌, பல்வேறு மிருகங்களை மட்டுமல்லாமல்‌, தேவர்களுக்குக்கொடுக்கத்தகுதியுள்ள எந்தப்பொருளையும்கூட குறிக்கும்‌. சருஷ்டிக்காக நடந்த யாகத்தில்விராட புருஷனே பசு. அதாவதுப்ரும்மா தன்னைத்தானே யாகத்தில்அர்ப்பணித்து, சிருஷ்டியைச்‌  செய்தான்‌.  இதிலிருந்தேயாகத்தைப்பற்றிய வேத விதிமுறைகளும்‌, விளக்கங்களும்‌, ‘அஜஎன்றால்ஆடு, ‘அச்வஎன்றால்குதிரை. பசுஎன்றால்பசு மாடுஎன்ற அடிப்படையில்புரிந்து கொள்ளத்தக்கவை அல்ல என்பது விளங்கும்‌. இன்றும்கூட புரோகிதர்கள்‌, ஒரு ஹோமத்தை நடத்துகிறபோது, ‘ச்ரத்தா பத்னி, சரீரம்இத்ம:’ என்று ஓதுகிறார்கள்‌. முனைப்பே உன்மனைவி: உன்சரீரமே நெருப்பில்இடப்படுகிற சுள்ளிஎன்பது இதன்பொருள்‌. அதாவது, அப்படிப்பாவிக்கப்படுகிறது, உருவகம்செய்யப்படுகிறதுமுன்பே கூறியபடி வேதம்‌, மறைபொருள்உடையது. அதை உணர்ந்து கொண்ட பெரியவர்கள்கூறியுள்ள விளக்கங்களைக்கேட்டுப்புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான்‌, வேதங்களைப்பற்றிய ஓர்அறிமுகம்கிட்டுவதற்கு உதவும்‌. 

சரி, யாகங்களில்எந்த வேதம்ஓதப்பட்டது? நான்கு வேதங்களுக்குமே யாகங்களில்முக்கியமான பங்கு உண்டு. ரிக்வேத மந்திரங்கள்ஒருபுறம்ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்‌; இதன்பொறுப்பை ஏற்பவர்ஹோதா. யஜுர்வேதத்தில்கூறப்பட்டுள்ளபடி யாகம்செய்விக்கப்படும்‌; இந்தப்பொறுப்பைக்கவனிப்பவர்அத்வர்யு; ஸாம வேத கானங்கள்இசைக்கப்படும்‌; இந்தப்பொறுப்புஉத்காதாவைச்சார்ந்தது. இவை எல்லாவற்றையும்அதர்வண வேத முறையில்கவனித்து, ஏற்பவர்‌ – ‘ப்ரும்மன்‌’. இப்படி நான்கு வேதங்களுக்கும்யாகத்தில்சிறப்பு உண்டு. யாகங்கள்ராக நடத்தப்பட்டால்‌, நாட்டில்மழை பொழியும்‌, பயிர்கள்செழிக்கும்‌, மக்கள்மேன்மையுறுவார்கள்‌ – என்பது நம்பிக்கை.