வேதம் கூறும் நன்மொழிகள்

யாகங்களைப்‌ பற்றிய சில விவரங்களைச்‌ சென்ற அத்தி யாயத்தில்‌ பார்த்தோம்‌. வேதங்களில்‌, யாகங்களுக்குச்‌ சிறப்பிடம்‌ அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும்‌ கவனித்தோம்‌.  பகவத்‌ கீதையில்‌ யாகத்தின்‌, அதாவது வேள்வியின்‌ மேன்மை பற்றி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு இப்படி விளக்கு கிறார்‌ :  ‘ “அன்னத்தால்‌ உயிர்கள்‌ சமைகின்றன; மழையினால்‌ உணவு தோன்றுகிறது; மழை வேள்வியினால்‌ இட்டுகிறது; வேள்வி செய்கையிலிருந்து பிறக்கிறது;  ‘ செய்கை பிரம்மத்திடமிருந்து கிடைக்கிறது; பிரம்மம்‌ அமிர்தத்தில்‌ தோன்றுகிறது; ஆகையால்‌, எங்கும்‌ நிறைந்த பிரம்மம்‌, வேள்வியில்‌ நிலை பெற்றது”.  இப்படிக்‌ கூறிய கிருஷ்ண பகவான்‌, ”முன்பு பிரம்ம தேவன்‌, யாகத்துடன்‌ சேர்ந்தே, உயிர்களை ஒருமிக்கப்‌ படைத்து ‘இதைப்‌ பருகுங்கள்‌; உங்கள்‌ விருப்பங்களை இது உங்களுக்குப்‌ பெற்றுத்‌ தரும்‌! என்று கூறினான்‌” என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌.  இப்படி யாகத்தின்‌ பெருமையைப்‌ பற்றிப்‌ பேசுகிற பரமாத்மா, அதே பகவத்‌ கீதையில்‌ மற்றோர்‌ இடத்தில்‌, இப்படிச்‌ சொல்கிறார்‌:

வேதங்களின்வெளியுரையில்மகழ்வோர்கள்சிலர்‌, மலர்களை அடுக்குவது போல சொற்களைப்பேசுகிறார்கள்‌. தாங்கள்சொல்வதைத்தவிர, வேறு எதற்கும்இடமில்லை என்று அடித்துக்கூறுகிறவேத வாத ப்ரியர்கள்‌’ ஆன இவர்கள்‌, சுகத்தில்பற்று கொண்டு, செய்கைக்குப்பயன்வேண்டுபவர்கள்‌; பல வகை யான சடங்குகளை வலியுறுத்திப்பேசுகிற இவர்கள்சொல்வதை அப்படியே ஏற்பவனின்மனம்‌, பயனில்விருப்பம்கொண்டு, பிரம்மத்திடம்நிலை பெறாமற்போகும்‌’. 

இதைப்படிக்கும்போது, ‘யாகத்தின்மேன்மையை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணரே, அவற்றை இடித்தும்பேசுகிறாரோ?’ – என்ற கேள்வி சிலர்மனதில்எழலாம்‌. வேத வாத ப்ரியர்கள்‌ – என்று யாரைக்குறிப்பிட்டு, இங்கு ஸ்ரீ கிருஷ்ணர்பேசுகிறார்என்பதைக்கவனித்தால்‌, இந்தக்கேள்விக்கு இடமிராது. பயனை விரும்பிஅந்தப்பயன்‌ ‘ஸ்வர்க்கம்கிட்ட வேண்டும்‌! என்பதாக இருந்தாலும்சரிவேள்விகளை நடத்தி, அதற்கு ஈடு எதுவுமில்லை என்று வாதிடுகிறவர்களைத்தான்‌, இங்கே வேத வாத ப்ரியர்கள்என்று பகவான்சொல்கிறார்‌.  யாகங்களின்இறுதி லட்சியம்‌, தன்னைத்தானே உணர்வது; தான்என்ற எண்ணத்தையே அழிப்பது. வேதத்தின்அகராதி எனக்கருதத்தக்க நிருக்தம்‌ ‘யாகத்தைப்பற்றிய அறிவு, தெய்வத்தைப்பற்றிய அறிவு, தன்னைப்பற்றிய அறிவுஎன்ற மூன்றையும்வலி யுறுத்துகிறது.

வேத மந்த்ரங்களிலிருந்து இந்த மூன்றையுமே உணர வேண்டும்என்று நிருக்தத்தை இயற்றிய யாஸ்கர்கூறுகிறார்‌. இதை மறந்து, தனக்கு இது வேண்டும்‌, அது வேண்டும்என்பதை மட்டுமே லட்சியமாகக்கொண்டு, யாகம்செய்வதை வலியுறுத்து பவர்கள்பற்றித்தான்கிருஷ்ணர்வேத வாத ப்ரியர்கள்என்று இடித்துச்சொல்கிறார்‌.  யாகங்களின்உண்மைப்பொருளைப்புரிந்து கொள்ள வேண்டும்என்பது, பிற்காலத்தில்முன்வைக்கப்பட்ட கருத்து என்றும்‌, இவற்றில்சில உட்கருத்துக்கள்இருப்பதாகக்கூறியதும்கூட, பிற்கால விளக்க உரையாளர்களே என்றும்சிலர்வாதிடுகிறார்கள்‌. இது தவறு. வேதங்களிலேயே, இதற்கான ஆதாரங்கள்இருக்கின்றன என்பது, பல பண்டிதர்களால்சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதை மேலும்விளக்குவதற்கு மஹாபாரதம்போன்ற இதி ஹாசங்கள்பயன்படுகின்றனஉதாரணத்திற்கு, ‘வ்ருத்ரன்என்ற அசுரனைக்கொன்று, அவ னிடம்பிடிபட்டிருந்த மேகத்தை விடுவித்து, மழையைப்பொழி வித்தான்இந்திரன்என்பதை விளக்க, வேதமே வழி செய்கிறது. வ்ருத்ரன்இருளைக்குறிப்பதாகவும்‌, இந்திரன்அந்த இருளை நீக்கி, ஞானம்என்கிற மழை பொழிவதற்கு வழி செய்வதாகவும்அர்த்தம்கொள்ள வேதத்தில்இடமிருக்கிறதுஇது போதாது என்றால்‌, மஹாபாரதத்தில்‌, அனுசாஸன பர்வத்இல்இது மேலும்விளக்கப்படுகிறது. வ்ருத்ரன்‌, நம்மிடமே இருக்இறான்‌; அதுதான்நம்மிடம்உள்ள இருள்‌. அதைப்போக்கத்தான்நாம்வழி தேட வேண்டும்‌. அதுதான்வேதம்கூறுகிற துதி

இப்போது ஒரு சந்தேகம்வரலாம்‌. உள்அர்த்தத்தைப்புரிந்து கொண்டு, வேத மந்திரங்களை ஓதுவதுதான்சரி என்றால்‌ – பல பயன்களை வேண்டி நடத்தப்படுகிற யாகங்கள்அர்த்தமற்ற காரி யங்களா? அதனால்ஒரு பயனும்கிட்டாதா? இன்று யாகங்கள்பெரிய அளவில்நடக்காவிட்டாலும்‌, ஹோமங்கள்நடக்கின்றன. அவையெல்லாம்வீணாஇல்லை. வேண்டிய பலன்கிட்டுவது என்று பார்த்தால்‌, அவை வீண்அல்ல; ஆனால்இறுதி உண்மையை உணர்வது என்று பார்த்தால்‌, இவை வீணே. இறுதி உண்மையைப்பொறுத்த வரையில்‌, பயன்வேண்டப்பட்டுச்செல்கிற பாதை, பயனற்ற பாதையேஇதையே ஓர்உதாரணத்தின்மூலம்பார்ப்போம்‌. ஒரு மாண வன்கல்லூரியில்ஃபிசிக்ஸ்படிக்கிறான்‌. பெரிய விஞ்ஞானியாக வேண்டும்என்ற ஆர்வம்அவனுக்கு இருக்கிறது. நன்றாகப்படித்துப்பிரமாதமாக மார்க்வாங்கி பாஸ்செய்கிறான்‌. இதை வைத்துக்கொண்டு, அவன்விஞ்ஞானி ஆகிவிட முடியாது. அப்படியானால்அந்தப்படிப்பு வீணா? ஆம்‌; விஞ்ஞானி ஆவது என்ற வகையில்வீண்தான்‌. ஆனால்பரீட்சையில்பாஸ்ஆவது  என்ற பயனை அந்தப்படிப்புத்தரத்தான்செய்யும்‌; அந்த வகையில்அது வீண்அல்லவிஞ்ஞானி ஆவதற்கு, ஒருவன்பல வருடங்கள்பிரயாசைப்பட வேண்டியிருக்கும்‌. பலப்பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்‌. பல நிபுணர்களின்கழ்பணிபுரிய வேண்டியிருக்கும்‌. ஃபிசிக்ஸ்பாடத்தில்வாங்கிய மார்க்இதற்கு பயன்படாது.

அதே போல பயனை வேண்டி செய்யப்படுகிற யாகம்‌, ஒரு மனி தனுக்கு, தன்னை உணர்ந்தவன்என்ற நிலையைத்தந்து விடாது. எப்படி ஃபிசிக்ஸ்பாடத்தேர்ச்சி, ஒருவன்விஞ்ஞானியாவதற்கு முதற்படியோ, அதே போல ஒருவன்தன்னை உணர்கிற நிலையை அடைவதற்கு யாகம்ஓர்ஆரம்ப நிலைஅவ்வளவுதான்‌. அதுவே இறுதி சாதனை அல்லசல விஞ்ஞான மேதைகள்‌, முறையான கல்வி அறிவு பெறா மலேயே, சில கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துள்ளார்கள்‌. அதே போல, யாகம்‌, பூஜைபோன்றவை எதுவும்செய்யா மலே இறுதி உண்மையை உணர்ந்த ஞானிகள்உண்டு. இவர்கள்தெய்வத்தின்அருளைப்பெற்றவர்கள்‌. ஆக, வேதங்களில்யாகத்இற்கு சிறப்பிடம்உண்டு, அவற்றிற்கு பலன்உண்டு; ஆனால்அவையேதான்வேதம்உணர்த்துகிற தர்மம்என்று நினைத்து விடக்கூடாதுவேதங்களில்உள்ள மந்த்ரங்கள்‌, யாகங்களைத்தவிர வேறு பல உயர்வான விஷயங்களை எடுத்துச்சொல்கின்றன. சத்யம்‌, நன்னடத்தை, தீய எண்ணம்இல்லாமை, மற்றவர்களுக்கு உதவு கிற தன்மை போன்றவை வேதங்களில்போற்றப்படுகின்றன

கெட்ட நடத்தை உடையவனுக்கும்‌, மனதை அலைபாய விடுகிறவனுக்கும்‌, கோபக்காரனுக்கும்‌, பொய்பேசுபவனுக்கும்‌, கபடு உள்ளவனுக்கும்பரமாத்மா புலப்படமாட்டான்‌; எவர்களிடம்நல்ல தவமும்‌, ஸத்யமும்நிலைத்து இருக்கிறதோ அவர்களுக்கே அவன்தெளிவாவான்‌’ என்று வேதம்கூறுகிறது. மேலும்வேதம்கூறுகிற சில நன்மொழிகளைப்பார்ப்போம்‌.  யாவரும்ஒற்றுமையாக இருங்கள்‌; ஒற்றுமையாகப்பேசுங்கள்‌; உங்கள்யாவருடைய இதயத்திலும்ஒற்றுமையுணர்வு இருக்க வேண்டும்‌.  ‘மனசாட்சிக்கு விரோதம்இல்லாத வழியே இன்பத்தைத்தருவது‘.  ‘விழித்திருப்பவனுக்குத்தான்கல்வி இட்டும்‌”.  சூரியனால்ஆகாசம்ஒளி விட்டுப்பிரகாசிக்கிறது; ஸத்யத்தினால்பூமி பிரகாசிக்கிறது ‘.  ‘புத்திமான்களே! உங்கள்அறிவை வளர்த்துக்கொள்ள, மக்க ளிடம்பழகுங்கள்‌”.  “யாவரையும்நட்புணர்வோடு பார்ப்போமாக.  ‘உண்மையே பேசு; தர்மம்செய்‌; தாயாரைத்தெய்வமாய்நினைப்பாயாக; தந்தையைத்தெய்வமாக நினைப்பாயாக; குருவைத்தெய்வமாக நினைப்பாயாக; வீடு தேடி வந்தவனைத்தெய்வமாக நினைப்பாயாக.  ‘நூறு கைகளால்பணத்தைச்சம்பாதிப்பாயாக; ஆயிரம்கை களால்அதை மற்றவர்களுக்குப்பயன்உள்ள வகையில்செல விடுவாயாக.  ‘கொடுப்பதைச்சிரத்தையுடன்கொடு; அசிரத்தையாகக்கொடுக்காதே; முகமலர்ச்சியுடன்கொடு; அடக்கத்துடன்கொடு“.

 “கடவுள்ஒருவரே; இரண்டாவதாக ஒரு கடவுள்இல்லைஇப்படிப்பல நன்மொழிகள்வேதங்களில்ஆங்காங்கே, ஸம்ஹிதை பகுதிகளிலிருந்து உபநிஷத்பகுதிகள்வரை கொட்டிக்இடக்கின்றன. அதனால்தான்வேதமே, தர்மத்தின்மூலம்என்று கூறப்படுகிறது. தர்மம்என்று சொல்வதற்கு, ஒரே வார்த்தையில்பொருள்கூற முடியாது. அதைப்பற்றிய விளக்கங்களைப்பின்னர்ப்பார்ப்போம்‌. வேதங்களில்உள்ள மந்த்ரங்கள்பல்வகைப்பட்டவை என்பதை எடுத்துக்காட்டவே, சில உதாரணங்களைக்கவனித்தோம்‌.  அரசர்களைப்பற்றிக்கூட வேதம்பேசுகிறது. பின்னர்இதிகாசங்களிலும்‌, புராணங்களிலும்‌ வர்ணிக்கப்படுகிற அரச பரம்பரை களின்‌ தோற்ற காலத்தில்‌ இருந்தவர்களைப்‌ பற்றி வேதம்‌ குறிப்‌ பிடுகிறது. 

பொன்‌, பவழங்கள்‌, முத்து போன்றவை பயன்படுத்தப்பட்ட விவரம்‌; சமுத்திரங்களைப்‌ பற்றிய குறிப்புகள்‌; நதிகளைப்‌ பற்‌ நிய வர்ணனைகள்‌; மனம்‌, வாக்கு, உடல்‌ ஆகிய மூன்றுக்குமான தூய்மைகள்‌; உழவர்களின்‌ மேன்மை… என்று ஒரு சிறு பட்டியலில்‌ அடங்காத அளவு விஷயங்கள்‌ வேதத்தில்‌ பேசப்படுகின்றன.  இப்படிப்பட்ட வேதங்களை முழுமையாக உணர்ந்தவர்கள்‌ யாரும்‌ இல்லை என்று அந்தக்‌ காலத்திலேயே கூறப்பட்டது என்‌ றால்‌, இப்போதுள்ள நிலை பற்றிப்‌ பேச வேண்டிய அவசியமே இல்லை. அப்படியிருக்க, இங்கொன்றும்‌ அங்கொன்றுமாகச்‌ சில குறிப்புகளை மட்டுமே படிக்கக்‌ கூடிய நம்மைப்‌ போன்றவர்கள்‌, வேதங்களையே கரைத்துக்‌ குடித்து விட்டவர்கள்‌ போல, அதில்‌ குறை கண்டு பேசுவது, அறியாமையைத்‌ தவிர வேறொன்று மில்லை. 

“வேத மந்த்ரங்கள்‌ பல இடங்களில்‌ புரியாமல்‌ இருப்பதால்‌ தானே, இந்த மாதிரி விமர்சனங்களே பிறக்கின்றன?! என்ற கேள்வி நியாயமானதாகத்‌ தோற்றமளிக்கலாம்‌. ஆனால்‌ நமக்குப்‌ புரிய வில்லை என்பதற்காக, ஒரு விஷயத்தைப்‌ பழிப்பது என்ன நியாயம்‌?  மந்த்ரங்களின்‌ அர்த்தம்‌ புரிவது கஷ்டமாக இருக்கிறது என்‌ றும்‌, தெளிவாக இல்லை என்றும்‌ கூறுபவர்களுக்கு யாஸ்கரே பதில்‌ அளித்திருக்கிறார்‌.  ந ஸ்தாணோரயம்‌ அபராத:  யதேந மந்தோ ந ஜானாதி  கண்‌ பார்வையற்றவர்‌, தூண்‌ இருப்பதறியாமல்‌ அதில்‌ முட்டிக்‌ கொண்டால்‌, அது தூணின்‌ குற்றமன்று.  ஆகையால்‌, நமது பார்வையைச்‌ சரி செய்து கொள்வோம்‌; தூணைப்‌ பழிக்க வேண்டாம்‌.