சென்ற அத்தியாயத்தில், வேதங்களில் யாகங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் பார்த்தோம்; அதுவே இறுதி நிலை அல்ல என்பதையும் கவனித்தோம். ‘யாகங்கள் போன்ற, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கர் மங்களைச் செய்வதுதான், மனிதனுக்குரிய கடமை; அதுவே தர்மம்; தெய்வம் என்பதைப் பற்றிய சிந்தனைகூட தேவை யில்லை…” என்ற வாதம் ஹிந்து மதத்தில் உண்டு. இதைக் கூறுவது பூர்வ மீமாம்ஸை. இது பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
சிருஷ்டியின் ரகசியம்; மனிதனின் கடமை; இவ்வுலக வாழ்க்கையில் பயன்களைப் பெறுகிற வழி; மரணத்தின் தன்மை; ஸ்வர்க்கம் கட்டுகிற பாதை; ஞானம் பெறுவதன் மேன்மை; இறைத் தத்துவம்… என்ற விஷயங்களில் பலவற்றைப் பல மதங் களும் பேசுகின்றன. இதில் ஒவ்வொரு மதத்தின் அணுகுமுறை ஒவ்வொரு மாதிரியானது. ஆனால் பொதுவாகப் பல மதங்களும் ‘இதுதான் விஷயம்; இதற்கு மேல் விளக்கங்கள் தேவையில்லை; இதுவே இர்ப்பு‘ என்ற வகையில், சித்தாந்தங்களைப் போதிக் இன்றன.
ஆனால் ஹிந்து மதமோ, ‘இதுவே தீர்ப்பு” என்று கூறினாலும், அதன் கூடவே ‘ஏனென்றால்…” என்று ஆரம்பித்து, காரண காரியங்களை விளக்குகிறது; அதனால் அந்தத் இீர்ப்புகளே கூட வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகின்றன. சட்டத்தில் நீதிபதியின் உத்திரவுகளை ‘ஸ்பீக்கிங் ஆர்டர்; நான் ஸ்பீக்கிங் ஆர்டர்! என்று இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்வார்கள். ‘நான் ஸ்பீக்கிங் ஆர்டர்” என்றால், காரண காரியங்களை எல்லாம் அலசாமல், உத்திரவை மட்டும் சொல்லிவிடுகிற ‘பேசாத ஆணை; பெரும்பாலும் இடைக் கால உத்திரவுகளுக்குப் பொருந்துகிற இது, சர்ச்சைகளுக்கு அவ் வளவாக இடமளிக்காது. ‘ஸ்பீக்கிங் ஆர்டர்” என்றால், ஏன் அந்த உத்திரவு இடப்படுகிறது என்பதற்கான காரணங்களை விளக்கிச் சொல்கிற ‘பேசுகற ஆணை; இது, அந்தக் காரணங்கள் சரியா, தவறா என்பதில் ஆரம்பித்துப் பல சர்ச்சைகளுக்கு இடமளிக்கும். விவாத மில்லாமல், தெளிவான நியாயம் இல்லை என்பதால், ஸ்பீக்கிங் ஆர்டர்தான், சட்டத்தில் பிற்காலத்துக்கு முன்னோடியாகத் இகழக் கூடியது.
ஹிந்து மத நூல்களில் காணப்படுகிற உபதேசங்கள் எல்லாமே, அநேகமாக ஸ்பீக்கிங் ஆர்டர்கள்தாம். இதனால் பலவித வியாக் யானங்கள், பலவகைக் கேள்விகள், பல்வேறுபட்ட வாதப் பிரதி வாதங்கள் தோன்றுவதற்கு வழி உண்டாகி விடுகிறது. இம்மாதிரி _ வாதப் பிரதிவாதங்களில், இரு தரப்பினருமே ஆஸ்திகர்களாகவே இருப்பார்கள். ஆனால் ‘இந்த வழியில் போவதா, அந்த வழியை நாடுவதா‘ என்பதில் பெரிய கருத்து வேறுபாடு இருக்கும்.
சரி; அப்படியென்றால், இதில் எதை ஏற்பது? அது நமது மனதைப் பொறுத்தது. மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி யானவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் அவரவர்களை ஈர்க்கிற வழி முறையை ஏற்க வேண்டியதுதான். பாதைகள் வேறுபடலாம்; லட்சியம் ஒன்றே என்பதால், இதில் தவறு விளையாது.
இதை நினைவில் கொண்டு, ஆரம்பத்தில் கூறிய பூர்வ மீமாம்ஸைக்கு வருவோம். வேதங்களின் நான்கு உப அங்கங் களில் மீமாம்ஸையும் ஒன்று; மீமாம்ஸை என்றால் ஆராய்ந்து அறிதல் என்று அர்த்தம் கொள்ளலாம். பூர்வ மீமாம்ஸை என்பது முதலாவது மீமாம்ஸை; இது வேதத்தின் கர்ம காண்டம் அதாவது வேள்விகள், அதற்கான வழிமுறைகள் போன்றவற்றை விளக்குறெ பகுதிகளைப் பற்றியது. இரண்டாவதாக வந்தது உத்திர மீமாம்ஸை; இது வேதங்களின் இறுதி பகுதியான உபநிஷத்துக்கள் கூறுகிற தத்துவங்களைப் பற்றியது.
இப்போது நாம் கவனிப்பது, பூர்வ மீமாம்ஸை. இதை இயற் றநியவர் ஜைமினி. இவருடைய காலம் பற்றிப் பலவித குறிப்புகள் பேசப்படுகின்றன. இ.மு. 200-லிருந்து, இ.பி. 200 வரை – என ஆராய்ச்சியாளர்கள் இவருடைய காலத்தை நிர்ணயிக்கின்றனர். ஆனால் வேதங்களிலேயே இவர் பெயர் வருவதாலும், வியாசரும் கூட இவரைப் பற்றிக் குறிப்பிடுவதாலும், இவர் இதற்கெல்லாம் முந்தைய காலத்தவர் என்பதும், குறைந்தபட்சம் மஹாபாரத கால மாகிய 5000 ஆண்டுகளுக்கு முந்தையவர் என்பதும் பொதுவான நம்பிக்கை.
இவரால் இயற்றப்பட்ட பூர்வ மீமாம்ஸை, வேதங்களின் கர்ம காண்டம் – அதாவது யாகங்கள், அவற்றிற்கான மந்த்ரங்கள், போன்றவை அடங்கிய பகுதி – பற்றி ஆராய்ந்து விளக்குகிறது. இதையே ஆதாரமாக ஏற்ற சிலர், இந்த சிந்தனைக்கு மேலும் விளக்கங்கள் அளித்தனர். இந்த வழிமுறைகள் கூறுவது என்ன? வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கர்மாக்கள்தாம் முக்கியம். அவற்றைச் செய்தால் பலன் உண்டு. இதைச் செய்ய வேண்டும் – என்று வேதம் கூறுகிறபோது, அதைச் செய்தாலே போதும். நிலத்தை உழுது பயிரிட்டால், விளைச்சல் கட்டுகிறது; அது போல வேதத் இல் குறிப்பிடப்பட்டுள்ள கர்மாவை – யாகம் போன்றவற்றை – செய்தால், அதற்குரிய பலன் இட்டும்.
“இந்தப் பலனை அடைவதற்கு தெய்வத்தின் அருள் தேவை யில்லை; செயலின் காரணமாக, அதன் விளைவாகவே பலன் இட்டி விடும். இதில் தெய்வத்தின் குறுக்கீடு எதற்காக? சொல்லப் போனால், தெய்வத்தைப் பற்றிய சிந்தனையே அநாவசியமானது. ‘யார் இந்த உலகத்தைச் சிருஷ்டித்தது?’ என்று கேட்டால், ‘இந்த உலகம் இல் லாத காலம் ஒன்று இருந்தது என்றால்தானே இதை ஒருவர் சிருஷ்டிக்க வேண்டும்? இந்த உலகமோ எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இன்னமும், எப்போதும் இருக்கும். ஆகையால், ச்ருஷ்டி கர்த்தா யார்? அவர்தானே தெய்வம்? என்பன போன்ற கேள்விகள் அவசியம் இல்லாதவை. உன் கடமையை, அதாவது வேதத்தில் விஇிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்; பலன் இட்டும்.
இப்படிக் கூறிய பூர்வ மீமாம்ஸையின் நோக்கம் நாத்திக வாதம் அல்ல. பூர்வ மீமாம்ஸையினர் வேதங்களை ஏற்றனர். ஸ்வர்க்கத்தையும் நம்பினார்கள்; கர்மாவைச் செய்தால் ஸ்வர்க்கம் இட்டும் என்று வாதிட்ட அவர்கள், கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை. ‘அது பற்றி நமக்கு என்? அது அநாவசியமான விஷ யம்! என்பது அவர்கள் மேற்கொண்ட நிலை.
பூர்வ மீமாம்ஸை, மற்றவர்களால் நிராகரிக்கப்படவில்லை. அதற்கு உரை – பாஷ்யம் எழுதிய சபரஸ்வாமி என்பவரின் நூல், மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ‘பதஞ்சலியின் மஹா பாஷ்யத்திற்கு அடுத்த சிறப்பு, இதற்கு உண்டு” என்று சபரஸ்வாமி, மீமாம்ஸைக்கு இயற்றிய விளக்கம் கொண்டாடப்படுகிறது. வேதங் களின் அங்கங்களில் ஒன்றாக, வேதாங்கமாகக் கூறப்படுகிற ‘வியாகரணம்” என்கிற இலக்கண சாத்திரத்திற்கு, பதஞ்சலி எழுதிய உரை தான் (பாஷ்யம்) மஹாபாஷ்யம்.
பதஞ்சலியின், மஹாபாஷ்யத்தின் மேன்மையை எடுத்துக் காட்ட – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் உண்டு.
மஹாபாஷ்யம் வா படனீயம் மஹாராஜ்யம் வா சாஸனீயம்
‘ஒன்று மஹாபாஷ்யத்தைப் படித்திருக்க வேண்டும்; அல்லது ஒரு பெரிய ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய வேண்டும் – இதுவே மனிதனுக்கு மேன்மை தருகிற இரு விஷயங்கள். அதாவது ஒரு சக்ரவர்த்திக்கு நிகரான இடம், பதஞ்சலியின் நூலைப் படித்தவருக்குத் தரப்படுகிறது. அவ்வளவு தெளிவு; அத்துடன் கூடிய கம்பீரம் கொண்டது அந்த நூல் என்று கூறப்படுகிறது.
அதற்கு அடுத்த இடத்தில் வைத்து, பூர்வ மீமாம்ஸையின் விளக்க நூல் பேசப்படுகிறது என்பதிலிருந்தே, அதற்கு அளிக்கப் பட்ட அந்தஸ்தைப் புரிந்து கொள்ளலாம்.
இப்படி ஒரு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், கர்மா என்பதற்கே முதலிடமும், முழு இடமும் அளித்துவிட்ட மீமாம் ஸகர்களின் வலியுறுத்தல்கள் ஒரு விபரீதத்திற்கு வழி செய்துவிட் டன. ‘சடங்கு ஒன்றே முக்கியம்; அதுவே கடமை; அதுவே தர்மம்; தவிர்க்கக் கூடாத சடங்குகளைத் தவிர்த்தால் கேடு விளையும்; செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தால் பலன் கட்டும்; ஸ்வர்க் கத்திற்குப் பாதை அளிப்பது சடங்குகளே; முதல், இடை, முடிவு எல்லாமே சடங்குகள்தாம்!’ என்ற எண்ணம் பரவிவிட்டது.
இந்த நிலையை எதிர்த்துத்தான், புத்தர் பிரச்சாரம் செய்தார். ஆனால் இதை முதலில் எதிர்த்தவரோ, இதில் உள்ள குறைகளை முதலில் சுட்டிக் காட்டியவரோ புத்தர் அல்ல. வேதங்களின் ஞான: காண்டமே, இதற்கு வழிவகுத்தது. பகவத் கதையும் இந்த நிலை யில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியது. ஆக, புத்தர் பிறப்ப தற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, ‘சடங்கு மட் டுமே சர்வமும்! என்ற நிலை விமர்சனத்திற்கும், நிராகரிப்புக்கும் உள்ளாகியது. ஆனால் ஒன்று – புத்தரின் போதனைகள் இறைவ னையே நிராகரித்தன; உபநிஷத்துக்களோ, பகவத் கதையோ அவ் வாறு செய்யவில்லை. மாறாக தெய்வத்தின் வலிமையை அவை வலியுறுத்தின. புத்தரின் உபதேசங்களைப் போல், அவை, சடங்கு 8 களை முழுமையாக நிராகரித்து விடவும் இல்லை; அதுவே லட் சியம் அல்ல என்பதையே உபநிஷத்துக்களும், கீதையும் மிகவும் வலியுறுத்தின. இதைப் பார்ப்பதற்கு முன்பாக, மீமாம்ஸகர்களின் செல்வாக்குப் பரவியிருந்த நிலை பற்றிச் சிறிது பார்ப்போம்.
புத்தர், சடங்குகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தபோது, மீமாம் ஸையை முழுமையாக ஏற்றுப் பின்பற்றியவர்கள், புத்தரைக் கடுமையாகக் கண்டித்தனர். புத்த மதக் கொள்கைகளை எதிர்த்த மீமாம்ஸகர்களில் குமாரிலபட்டர் பிரஸித்தமானவர். பெளத்த மத வாதங்களை எதிர்கொள்ள, குமாரிலபட்டர் ஒரு காரியம் செய்தார். பெளத்த மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர், அவர்களுடைய விஹாரத்தில் சேர்ந்து, அவர்களைப் போலவே இருந்து கொண்டு, ஒரு பெளத்த குருவிடம், அந்த மதத்தின் கோட்பாடுகளையும் வாதங்களையும் கற்றறிந்தார்.
ஒருநாள், அந்தப் பெளத்த குரு, வேதங்களை மிகக் கடுமையாக இகழ்ந்து பேசியபோது, குமாரிலபட்டரின் கண்கள் அவரையும் அறியாமல் கண்ணீரை உகுத்தன. வேத நிந்தனையை அவரால் சகிக்க முடியவில்லை என்பதைப் பார்த்த புத்த பிட்சுக்கள், தந்திர மாகத் தங்கள் தத்துவத்தைக் குமாரிலபட்டர் கற்றறிந்துவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டனர். குமாரிலபட்டரும் உண்மையை ஒப்புக் கொண்டார். பிட்சுக்கள் இவரைக் கொன்றுவிடத் தீர்மானித் தனர். ‘வேதமே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று நம்புகிற நீ, இப்படி வேடதாரியாக இருந்து எங்களை மோசம் செய்தாய்; நீ நம்புகிற வேதம் உன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உனக் இருந்தால், இந்த மலையிலிருந்து குதி! உன் வேதம் உன்னைக் காப்பாற்றட்டும்’ என்று கட்டளை இட்டனர்.
குமாரிலபட்டர் ‘வேதமே அனைத்திற்கும் ஆதாரம்” என்று உரக்கக் கூறியபடியே மலையிலிருந்து குதித்தார். அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடவில்லை. ஒன்றுமே நடக்காததுபோல எழுந்து வந்தார். அவருடைய நம்பிக்கையின் காரணமாக, வேதம் அவரைக் காப்பாற்றியது.
பெளத்த மத போதனைகள் – குறிப்பாக வேதங்களைப் பற் நிய பெளத்த மத விமர்சனங்கள் – பற்றிக் குமாரிலபட்டர் செய்த ் விமர்சனங்களும், முன் வைத்த வாதங்களும் பிரபலம் அடைந்தன. இதன் காரணமாக, பெளத்த மத போதனைகளை மீறி, வேதங்களின் மேன்மை – குறிப்பாக, மீமாம்ஸகர்கள் ஏற்ற ‘கர்மங்களின் முக்கியத்துவம்! பலராலும் பின்பற்றப்பட்டது. யாகங்கள் போன்ற கர்மாக்கள் பெளத்த மத போதனைகளினால் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட, குமாரிலபட்டர் போன்ற மீமாம்ஸகர்களின் பணி உதவியது.
ஆனால், இப்படிச் செயலாற்றிய குமாரிலபட்டர் மனதில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே வந்தது. புத்த மத கொள்கை களை அறிவதற்காக, தாம் கடைப்பிடித்த வழிமுறை தவறு – என்ற எண்ணம் அவரை உறுத்தி வந்தது. இறுதியில் அவர், “பெளத்த மத நம்பிக்கையை ஏற்பவர் போல நடித்து, அம்மத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முனைந்தது, தாம் செய்த பெரும் தவறு; தமக்குப் பௌத்தமதக் கொள்கைகளை கற்பித்த குருவை ஏமாற்றியது குரு துரோகச் செயல்’ என்று நினைத்தார். தம்மைத் தாமே தண் டித்துக் கொள்ளத் தீர்மானித்து, மெதுவாக நின்று, நீண்ட நேரம் எரியக் கூடிய உமியைக் குவித்து, தீ மூட்டி அந்தத் தீயில் பிரவேசம் செய்தார்.
சிறிய குன்று போல் குவிக்கப்பட்ட உமியில் பிடித்த தீ எரியத் தொடங்கி, கால், துடை, இடுப்பு… என்று பொசுக்கிக் கொண்டே மேலேறிக் கொண்டிருந்தது.
அப்போது, ‘குமாரிலபட்டருடன் வாதிட்டு, கர்மாவே எல்லாம் என்ற தீர்மானத்தை விடுத்து, வேதாந்தக் கொள்கைகளை அவர் ஏற்குமாறு செய்ய வேண்டும்” என்ற நோக்கத்துடன் புறப் பட்டிருந்த ஆதிசங்கரர் அங்கே வந்து சேர்ந்தார். ‘யாகங்கள் போன்ற கர்மாக்களே முதலும், முடிவும்! என்ற மீமாம்ஸகர்களின் கொள்கை, வெற்றுச் சடங்குகளையே பரப்புவதாக இருந்ததால், அவர்களுடைய சிந்தனையை மாற்றி, இறை தத்துவத்தை அவர் கள் ஏற்குமாறு செய்ய வேண்டும் என்பது ஆதிசங்கரரின் எண் ணம். அதனால்தான் மீமாம்ஸகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கிய குமாரிலபட்டரைச் சந்திப்பதற்காக, அவர் அங்கு வந்தார்.
அவர் அங்கு வந்தபோது, தீ, குமாரிலபட்டரின் நெஞ்சுப் பகுதிக்கு அருகே வந்துவிட்டது.