ஒரு விவாதம்!

குலாரிலபட்டருடன்வாதிட்டு, பிடிவாதமான மீமாம்ஸைப்பாதையிலிருந்து அவரைத்இருப்ப வேண்டும்என்ற நோக்கத்துடன்வந்திருந்த ஆஇசங்கரர்‌, குமாரிலபட்டரின்நிலை கண்டு இகைத்து நின்றார்‌. குமாரிலபட்டர்நடந்த விவரங்களைக்கூறி, ‘என்தவறுக்குப்பிராயச்சித்தம்செய்வதற்காகவே, இந்தத்தண்டனையை நானே விதித்துக்கொண்டேன்‌. சில இனங்களுக்கு முன்பாக நீங்கள்வந்திருந்தால்‌, உங்களைத்தரிசித்திருப்பேன்‌ – அந்த புண்ணியமே, என்னுடைய பாபத்தைப்போக்கியிருக்கும்‌. இப்போது காலம்கடந்துவிட்டது; இன்னும்கொஞ்ச நேரத்தில்இந்தத்தீ என்னை விழுங்கி விடும்‌. நீங்கள்‌, மாஹிஷ்மதியில்வசிக்கிற மண்டனமிச்ரரைப்போய்ப்பாருங்கள்‌. அவருடன்வாதிட்டு, அவரை உங்கள்பாதைக்குத்இருப்பிவிட்டால்‌, அதன்பிறகு மீமாம்ஸகர்கள்அனைவருமே உங்கள்வழியை ஏற்றவர்களாக விடுவார்கள்‌! என்று கூறினார்‌. 

ஆதிசங்கரர்‌, அங்கிருந்து புறப்பட்டு, மாஹிஷ்மதி போய்ச்சேர்ந்தார்‌. இது இப்போதைய பாட்னாவிற்கு அருகில்உள்ள இடம்என்று கூறப்படுகிறது. அந்த ஊரில்மண்டனமிச்ரரின்வீடு எங்கே இருக்கிறது என்று ஆதிசங்கரர்விசாரித்த போது, இலர்‌ ‘எந்த வீட்டு வாசலில்உள்ள கிளிகள்‌, வேத சம்பந்தமான கேள்விகளை அலசப்பேசுகின்றதனவோஅதுவே மண்டனமிச்ரரின்வீடு! என்று கூறினர்‌. அதாவது கிளிகளும்கற்றுக்கொள்ளும்அளவிற்கு, வேத சம்பந்தமான விஷயங்கள்பேசப்படுகிற இல்லம்அது.

யாகங்கள்‌, சடங்குகள்‌ – இவையே ஒரு மனிதனின்கடமை யென்றும்‌, இவற்றிற்கு இறைவன்குறுக்கீடு தேவையில்லாதவை, இறை சிந்தனை அநாவசியமானது என்பது போலவும்வாதிட்ட மீமாம்ஸகர்களில்‌, மிகவும்கற்றறிந்தவர்மண்டனமிச்ரர்‌. ஸந்யா கள்‌, கர்மங்களை விட்டவர்கள்என்பதால்‌, அவர்கள்மட்ட மானவர்கள்என்பது அவருடைய கருத்து. அப்படிப்பட்டவர்விட்டில்ஒரு சிராத்தம்நடந்து கொண்டிருந்தபோது, அங்கே ஆதி சங்கரர்போய்ச்சேர, சராத்தத்தின்புனிதத்தன்மையே பாழாகிவிட்டது போல மண்டனமிச்ரருக்குக்கோபம்வந்தது

இத்தனைக்கும்‌, ‘ஒரு வீட்டில்சிராத்தம்நடக்கிறபோது, அந்த ஊரில்ஒரு ஸந்யாசி இருந்தால்‌, அவரிடம்போய்ச்சிராத்தம்நடக்க இருப்பதாகக்கூறி, அவருடைய உத்திரவைப்பெற்று வருவது, ரொம்பவும்விசேஷம்‌; முறையாக வேதம்ஒதிய அந்தணர்கள்இடைக்கவில்லை என்றால்‌, ஒரு ஸந்யாசியைச்சிராத்தத்தில்அமரச்செய்யலாம்‌’ என்று பெரியவர்கள்சொல்லியிருக்கிறார்கள்‌. ஆனால்மண்டனமிச்ரருக்கோ, ‘ஸந்யாசிகள்கர்ம ப்ரஷ்டர்கள்‌! – அதாவது, செய்ய வேண்டிய கர்மங்களை விட்ட வர்கள்‌! என்ற எண்ணம்உறுதியாக இருந்தது. அதனால்தான்‌  _ அவர்ஆதிசங்கரரைக்கோபித்துக்கொண்டார்‌. 

பின்னர்அவருடன்வாதிட்டு, அவரை வேதாந்த தத்துவங்களின்பாதையில்இருப்புவதற்காகவே தாம்வந்திருப்பதாக ஆதி சங்கரர்கூறினார்‌. மீமாம்ஸை பாதையின்மேன்மையை நிலை நாட்ட நல்ல சந்தர்ப்பம்கட்டியதாக நினைத்த மண்டனமிச்ரர்‌, விவாதத்திற்கு சம்மதித்தார்‌. 

மண்டனமிச்ரரின்மனைவியாகிய உதயபாரதியே நடுவராக இருந்து, வாதத்தில்வென்றது யார்என்ற தீர்ப்பை அளிப்பார்என்றும்‌, வென்றவருக்குத்தோற்றவர்சிஷ்யர்ஆவார்என்றும்முடிவு செய்து கொண்டு விவாதம்தொடங்கப்பட்டது. விவாதம்நாட்கணக்கில்நடந்தது. இடையில்உதய பாரதி தீர்ப்புக்கு ஒரு வழி கண்டாள்‌. மண்டன மிச்ரர்‌, ஆதிசங்கரர்இருவரையும்பூ மாலைகள்அணியச்செய்தார்‌; யார்கழுத்தில்உள்ள மாலை

முதலில்வாடுகிறதோ, அவரே தோற்றவர்‌ – என்று அவர்கூற, வாதிட்டுக்கொண்டிருந்த இருவரும்அதை ஏற்றனர்‌. உதய பாரதி, சாட்சாத்சரஸ்வதியின்அம்சம்கொண்டவள்என்று ஆதி சங்கரரின்சரித்திரம்கூறுகிறது என்பது நினைவில்கொள்ளத்தக்கது

விவாதம்பல தினங்கள்தொடர்ந்து நடந்தது. மண்டனமிச்ரர்கழுத்தில்இருந்த மாலை வாடியது; ஆதிசங்கரர்அணிந்திருந்த மாலையோ, அப்போது பறித்த பூக்களினால்கோர்க்கப்பட்டது போல்வாடாமல்இருந்தது. மண்டனமிச்ரர்தோல்வியை ஒப்புக்கொண்டார்‌. ஆதிசங்கரரின்சீடரானார்‌. ஸுரேச்வரர்என்ற புதிய பெயரையும்பெற்று, அவரும்ஸந்யாசம்மேற்கொண்டார்‌. 

உபநிஷத்துக்கள்கூறுகிற தத்துவங்களையே ஆதிசங்கரர்தமது வாதங்களாக முன்வைத்து மண்டனமிச்ரரை வென்றார்‌. ‘கர்ம மார்க்கமே சிறந்தது; அதுவே போதும்‌” என்று நினைத்துச்செயல்படுபவன்தேவர்களைத்திருப்தி செய்யலாம்‌. ஆனால்ஞானத்தை அடைவதையே லட்சியமாகக்கொண்டு, அதற்காக முனைபவன்‌, தன்னையே வேள்வியில்அர்ப்பணிக்கிறவன்‌; அவன்மோக்ஷத்தை அடைந்து பிறப்பற்ற நிலையை எய்துவான்‌. கர்ம மார்க்கத்தில்செல்பவனோ, ஸ்வர்க்கத்தை அடைந்து, மீண்டும்பிறப்பெய்துவான்‌. 

ஸ்வர்க்கத்திற்கும்‌, மோக்ஷத்திற்கும்உள்ள வித்தியாசம்இது. ஸ்வர்க்கம்மேன்மையான நிலைதான்‌. ஆனால்அவன்செய்த புண்ணியங்கள்நிர்ணயிக்கிற காலம்தீர்ந்த பிறகு, ஸ்வர்க்க நிலையை அடைந்த மனிதன்மீண்டும்பிறப்பெய்துவான்‌. இடை யில்ஒரு மேன்மை கிட்டினாலும்‌, அவனுடைய கணக்கு முடி வதில்லை. ஆனால்மோக்ஷத்தை அடைபவனோ, மீண்டும்பிறப்பு, மீண்டும்இறப்பு என்கிற சம்ஸாரக்கடலிலிருந்து கரை யேறி, பிறப்பற்ற நிலையை அடைகிறான்‌. மீமாம்ஸகர்களோ ஸ்வர்க்க நிலையை அடைவதையே உயர்ந்த லட்சியமாகப்பேசுவார்கள்‌. 

புத்தர்போன்றவர்கள்‌, சடங்குகளை முழுமையாக நிராகரித்தது போல ஆதிசங்கரர்செய்யவில்லை. அதுவேதாந்த உணர்வை அடைவதற்கு முன்கடக்க வேண்டிய பாதை என்று அவர்ஏற்றார்‌. ஆகையால்‌, யாகங்கள்‌, சடங்குகள்‌, பூஜைகள்காலப்போக்கில்இவற்றிலே புகுந்துவிட்ட வேண்டாத அம்சங்களை அவர்கண்டித்தார்‌. 

யாகங்களில்‌, மிருக பலி உண்டா இல்லையா என்பது பற்றி, முந்தைய அத்தியாயம்ஒன்றில்பார்த்தோம்‌. உயிர்பலி போன்ற விஷயங்கள்யாகங்களில்புகுந்தன என்பதும்தெரிகிறது; அவை முறையல்ல என்பதும்தெரிகிறது; வேதங்கள்அவற்றை நிர்ண யிக்கவில்லை என்றும்‌, ஒரு சொல்லிற்குரிய பல்வேறு அர்த்தங்களில்‌, ஓர்அர்த்தத்தை, பொருத்தமில்லாத இடத்தில்சேர்த்துப்பார்ப்பதால்ஏற்படுகிற விளைவு இது என்பதும்தெளிவாகிறது

ஆனால்‌, இதை எதிர்த்தது புத்தர்தாம்என்று நினைப்பது தவறு. வேதத்திலேயே

அஹிம்ஸா பரமோ தர்மஅஹிம்சையே மிகவும்மேலான தர்மம்‌.

என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகையால்அஹிம்சை என்ற சிந்தனையே புத்தர்போதனையினால்பிறந்ததுதான்என்று நினைப்பது தவறு. வேதமே இதைக்கூறியிருக்கிறது. அதற்குப்பின்பல இடங்களில்அஹிம்சையின்மேன்மை வற்புறுத்தப்பட்டிருக்கி றது. புத்தருக்குச்சில ஆயிரம்வருடங்களுக்கு முன்பாக இயற்றப்பட்ட மஹாபாரதத்தில்கூட, அஹிம்ஸை வற்புறுத்தப்படுகிறது

அஹிம்ஸார்த்தாய பூதானாம்‌ 

தர்ம ப்ரவசனம்க்ருதம்‌ 

யஸ்யாத்அஹிம்ஸாஸம்யுக்த

தர்ம இதி நிச்சய

ஸகல ஜீவராசிகளின்பாலும்காட்டப்பட வேண்டிய அஹிம்சையின்பொருட்டே தர்மம்பற்றிய தத்துவங்கள்பிறப்பிக்கப்பட்டுள்ளன. அஹிம்சையை ஆதாரமாகக்கொள்கிற விஷயம்எதுவோ, அது தர்மம்என்பது உறுதி

ஆகையால்அஹிம்ஸை என்பது ஹிந்து மதத்திலேயே மீண்டும்போதிக்கப்படுவதுதான்‌. துரதிருஷ்டவசமாக, சில தவறான வழக்கங்களின்காரணமாக உயிர்பலியும்நடை முறைக்கு வந்தது. இதற்கும்நியாயங்கள்சொல்லப்பட்டன

எது தனக்கு மிகவும்ப்ரியமான பொருளோ, அதை யாகத்இல்தேவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்‌. காய்கறி உண வையே விரும்புகிறவன்‌, அதைப்படைத்து அர்ப்பணிப்பான்‌. மாமிசத்தை விரும்பி உண்கிறவன்‌, அதை விரும்பிப்படைப்பான்‌. இதில்என்ன தவறு? என்று ஒரு விளக்கம்‌, வேதங்களை  ஏற்பவர்களாலேயேகூட அளிக்கப்படுகிறது. வேதங்களை மிகவும்தீவிரமாக ஆராய்ந்து, பல சிறப்பான விளக்கங்களைத்தந்த அர விந்தர்போன்றவர்களின்சிந்தனையை ஏற்பவர்கள்கூட, இந்த மாதிரியான விளக்கத்தை ஏற்கிறார்கள்‌. 

ஆனால்‌, வேதங்களில்மிருகங்களைக்காப்பாற்ற வேண்டும்என்றும்‌, ஜீவஹிம்ஸை கூடாது என்றும்வலியுறுத்தப்பட்டிருக்இறது; மிருக பலி என்று பொருள்தரக்கூடிய வாக்கியங்களுக்கு வேறு அர்த்தங்களும்உள்ளனஎன்பதை மனதில்கொள்ளும்போது, மிருகபலிக்கு வேதங்களில்இடமில்லை என்பதே ஏற்ப தற்குரிய விளக்கமாக இருக்கிறது

யாகங்களையும்‌, சடங்குகளையுமே போதுமானவையாக வற்புறுத்திய மீமாம்ஸகர்களின்பாதையை ஆதிசங்கரர்முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதைப்பார்த்தோம்‌; பகவத்இதையில்கிருஷ்ண பரமாத்மாகூட இந்த வழிமுறைக்கு ஒரு சிறப்பிடம்அளிக்கிறார்‌. 

காரியங்களில்வெற்றிகளை வேண்டுகிறவர்கள்இங்குத்தேவர்களை வேண்டி யாகங்கள்செய்கிறார்கள்‌; மனித உலகில்கர்மங்களினால்வெற்றி விரைவில்கிட்டுகிறது அல்லவா!… யார்என்னை எங்ஙனம்வேண்டுகிறார்களோ, அவர்களை நான்அங்ஙனமே சார்கிறேன்‌.’ 

ஸோமம்உண்டோர்‌, பாவம்அகன்றோர்‌, வேதங்களை அறிந்தோர்‌, என்னை யாகங்களினால்வேண்டி, வானுலகு தரு மாறு பிரார்த்தனை செய்கின்றனர்‌. அவர்கள்புண்ணிய ஸ்தலமாகிய தேவேந்திர உலகை அடைந்து, வானுலகில்தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்‌. 

விரிவாகிய வானுலகில்இன்புற்று, புண்ணியம்தீர்ந்தவுடன்‌, அழிவுடைய மனித உலகிற்கு அவர்கள்மீண்டும்இரும்புகிறார்கள்‌. இப்படிக்கர்மங்களை மட்டுமே பின்பற்றுவோர்‌, விருப்பங்களில்வீழ்ந்து உழல்வார்கள்‌’. 

அதாவது, கர்மங்கள்‌, யாகங்கள்‌, சடங்குகள்போன்றவற்றிற்கு பலன்உண்டு, அவற்றைச்செய்தால்‌, வேண்டுகிற பலன்கட்டும்என்ற மீமாம்ஸகர்களின்சித்தாந்தம்தவறானது அல்ல. ஆனால்அதுவே போதும்என்ற அவர்களுடைய வாதம்ஏற்புக்குரியது அல்ல. இதுவும்கீதையில்கூறப்பட்டிருக்கிறது

ச்ரேயான்த்ரவ்யமயாத்யஞா 

ஞானயனா: பரந்தப

ஸர்வம்கர்மாகலம்பார்த்த 

ஞானே பரிஸமாப்யதே 

எதிரிகளை வாட்டுவோனே! பொருளைக்கொண்டு செய்யப்படுகிற யாகத்தைக்காட்டிலும்‌, ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா! கர்மம்அனைத்தும்முழுமையாக ஞானத்தில்முடிவு பெறுகிறது

இதையேதான்‌, ஆதிசங்கரரும்வற்புறுத்திப்பேசி வாதிட்டு, ‘பலனை வேண்டுகிற யாகங்களே போதுமானவைஎன்று வாதிட்ட மீமாம்ஸை பாதையின்பண்டிதரான மண்டனமிச்ரரை வென்று, பின்னர்அவரைத்தமது சீடராக ஏற்றார்‌. 

இப்படி ஞானமே சிறந்தது என்று கூறுவதால்‌, அதையே ஒரு வழியாகப்பயன்படுத்திக்கொண்டு, ‘நான்ஞானப்பாதையில்செல்கிறேன்‌; ஆகையால்எனக்குப்பூஜை, புனஸ்காரம்‌, சடங்கு, சம்பிரதாயம்எல்லாம்தேவையில்லைஎன்று கூறி அலட்சியம்காட்டுவது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற வழி. ஞானத்தைத்தேடுவதும்‌, அதை அடைவதும்அனைவருக்கும்கிட்டுகிற பாக்கியம்அல்ல (இது பற்றிப்பிறகு பார்ப்போம்‌). ஆனால்கர்மாக்களைஅதாவது, மனிதனுக்கு விதிக்கப்பட்ட வேத தொடர்பான, சாத்திர ரீதியான சடங்குகளைசெய்வது, எல்லோராலும்முடிகிற விஷயம்‌. ஞானத்தை எய்துவதற்கு முன்னால்‌, செல்ல வேண்டிய பாதை அது. ‘எனக்கு இதெல்லாம்வேண்டாம்‌. நேரே ஞானத்தை எய்துவேன்‌! என்பது, சில அபூர்வ பிறவிகளுக்குச்சாத்தியமாகலாம்‌. நம்மைப்போன்றவர்கள்இப்படிச்சொல்வதுஎனக்கு னா, வனா, னா, யன்னாஎல்லாம்தேவை யில்லை; நேராகத்தமிழ்ப்புலவனாகி விடுவேன்‌! என்று சொல்வது போலத்தான்‌. புலமையை அடைய முயற்சிப்பதற்கு முன்எழுத்தறிவு பெறுவது அவசியம்‌; ஞானத்தை அடைய முயற்சிப்பதற்கு முன்‌, விதிக்கப்பட்ட கர்மாக்களைக்கடைப்பிடிப்பது அவசியம்‌.