ஆறு தத்துவங்கள்

பூர்வ மீமாம்ஸையைப்பற்றிப்பார்த்தோம்‌. இது, ஆறு தரி சனங்களில்அதாவது ஆறு பார்வைகளில்ஒன்று, பார்ப்பது என்றால்‌, கண்டறிவதுஉணர்வது என்ற பொருள்கொள்ள வேண்டும்‌. இவை ஷட்தர்சனங்கள்என்று சொல்லப்படுகின்றன. ஷண்முகன்என்றால்ஆறுமுகன்‌; ஷட்தர்சனம்‌ – என்றால்ஆறு தரிசனங்கள்‌. 

இவற்றை, ஆங்கிலத்தில்‌ ‘பிலாஸஃபிஎன்று சொல்லலாம்‌. இந்த ஆங்கிலச்சொல்லை, ‘அறிவைப்பெறுகிற முயற்சிஎன்று! வர்ணிக்கலாம்‌. இறுதி உண்மையை அறிகிற முயற்சி என்றும்ஆங்கில அகராதி இதற்கு அர்த்தம்சொல்கிறது. ‘மனிதனின்இயல்பு என்ன? இந்த வாழ்க்கையின்முடிவு என்ன? நாம்வாழ்கிற இந்த உலகின்இயல்பு என்ன? இந்த உலகைப்படைத்த வன்ஒருவன்உண்டா? தான்‌, கடவுள்‌, தான்வாழ்கிற உலகம்‌ – போன்றவற்றைப்பற்றி அறிந்து கொண்டு, மனிதன்எப்படி வாழ வேண்டும்‌…?’ என்பன போன்ற கேள்விகளை ஆராய்வது பிலாஸஃபிதத்துவம்‌. 

இந்தத்தத்துவம்என்ற சொல்லே கூட, ஒரு சுவாரஸ்யம்உடைய சொல்‌, ‘தத்த்வம்‌! என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு, ‘அது நீயே! என்று பொருள்‌. இதுதான்இறுதி உண்மை. இதை விளக்குவது தத்வம்‌; தத்துவம்‌. தற்காலத்தில்‌, இந்தச்சொல்எல்லாவிதமான போதனைகளுக்கும்பொருத்தப்பட்டு, கம்யூனிஸ தத்துவம்‌, சோஷலிஸ தத்துவம்‌… என்றெல்லாம்வார்த்தைகள்வழக்கில்வந்துவிட்டன

தத்த்வம்‌” – அது நீயே, என்று உபநிஷத்துக்கள்கூறுகின்றன. ஆனாலும்‌, இது உட்பட, வேதங்களில்கூறப்பட்டுள்ள பல விஷயங்களை உணர்ந்தனர்‌. ஒவ்வொருவருடைய உணர்வு ஒவ்வொரு வகை. இவைதாம்ஆறு தரிசனங்கள்என்ற பெய ரைப்பெற்றன

உணர்ந்தார்கள்என்றால்‌ – அத்துடன்விட்டுவிடவில்லை. ஆராய்ந்தார்கள்‌. அந்த ஆய்வுக்கு இலக்கணங்களையும்வகுத்துக்கொண்டனர்‌. இந்த இலக்கண வழிமுறைகளின்பெயர்களைப்பார்த்தாலே, பல ஆயிர வருடங்களுக்கும்முன்பாகக்கையாளப்பட்ட இந்தப்பெயர்கள்‌, அதே பொருளுடன்இன்றும்வழங்கு வதை உணரலாம்‌. அப்படி வேதங்கள்தொடங்கி, நமது கலாச்சாரம்‌, ஒரு சங்கிலிப்பிணைப்புப்போல இன்று வரை தொடர்இறது

அந்த ஆய்வு முறைகள்சிலவற்றைப்பார்ப்போம்‌. ‘ப்ரத்ய க்ஷம்‌’ என்பது நமது இந்திரியங்களினால்‌, உடனடியாக உணரப்படுவது. ஒரு மேஜையைப்பார்க்கிறோம்‌; அது ப்ரத்யக்ஷம்‌. 

அனுமானம்‌’ என்பது நேரிடையாக இல்லாவிட்டாலும்‌, தொடர்பின்காரணமாக நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துவது. ஒரு குன்றில்‌, ஒரு இடத்திலிருந்து புகை வருகிறது; அதைப்பார்த்தவுடன்அங்கே நெருப்புப்பற்றியிருக்கிறது என்பதை நாம்உணர்கிறோம்‌; நெருப்பைப்பார்க்கா விட்டாலும்‌, அந்தக்குன்றில்இப்பற்றியிருப்பதைத்தெரிந்து கொள்ளலாம்‌. இது அனுமானம்‌. 

உபமானம்‌! என்பது, ஒப்பீட்டின்மூலம்புரிந்து கொள்வது. முன்பு பார்த்த ஒரு பொருளுடன்‌, இப்போது பார்ப்பதை ஒப்பிட்டு, அது போல இது என்று உணர்கிற இந்த வழிமுறை, உபமானம்‌. ‘சப்தம்‌’ என்பது தத்துவ விசாரணையின்அடுத்த வழி. ஒருவர்விஷயமறிந்தவர்‌; அவர்வார்த்தை (சப்தம்‌) ஏற்கத்தக்கது என்றால்‌, அதன்மூலம்ஒரு பொருளை உணர்வதுசப்தம்என்ற வழிமுறை.

அர்த்தபத்திஎன்பது யூகம்‌. ஒரு மனிதன்சாப்பிடுவதில்லை; ஆனால்குண்டாக இருக்கிறான்‌. இவன்யாரும்பார்க்காத வேளையில்நன்றாகச்சாப்பிடுகிறான்என்பது யூகம்‌.

அனுபலப்தி! என்பது இல்லாததை உணர்வது. ஒரு இடத்இல்ஒரு பொருள்இருந்தது; இப்போது அது அங்குக்காணப்படவில்லை என்றால்‌, அது இப்போது இல்லாமற்போய்விட்டது என்பதை உணர்கிறோம்‌. இது அனுபலப்தி

இப்படிச்சில வழிமுறைகளை வகுத்துக்கொண்டு, அவற்றை உபயோஙித்து, தத்துவ ஆராய்ச்சியில்இறங்கி, தாங்கள்உணர்ந்ததையும்சேர்த்து, சில ரிஷிகள்அறிந்தவைதான்‌, ஆறு தரிசனங்கள்‌. இவற்றில்சில தத்துவங்கள்‌, சில வழிமுறைகளை ஏற்கவில்லை.

மீமாம்ஸை எல்லாவற்றையுமே ஏற்றதுமீமாம்ஸை, நியாயம்‌, வைஸேஷிகம்‌, ஸாங்க்யம்‌, யோகம்‌, வேதாந்தம்என்ற பெயர்கொண்ட இந்த ஆறு தரிசனங்கள்‌, ஹிந்து தத்துவத்தின்‌ – பிலாஸஃபியின்பல்வேறு கோணங்கள்‌. ஒரு கோணத்தில்பார்த்தவர்‌, மற்றவற்றை நிராகரித்தார்‌. 

ஆறு தரிசனங்கள்என்கிற இந்தத்தத்துவங்கள்‌, முக்கியமாகபிரம்மம்அல்லது இறைவன்பற்றியும்‌, உலக சிருஷ்டி பற்றி யும்‌, ஜீவாத்மா பற்றியும்‌, உலக வாழ்விலிருந்து விடுதலை பெறு  இற மார்க்கம்பற்றியும்ஆராய்ந்து கருத்துக்களைக்கூறின. வேதங்களை இவை யாவுமே ஏற்றன. கர்ம பலன்‌ – முன்வினைப்பயன்உண்டு என்பதையும்இவை ஏற்றன. ஆகையால்‌, இவை ஆஸ்இக தத்துவங்கள்‌. வேதங்களையும்‌, கர்ம பலனில்நம்பிக்கையை யும்நிராகரிப்பதுதான்நாஸ்திகம்‌. 

கடவுள்தான்இவ்வுலகை சிருஷ்டி செய்தான்என்பதை நியா யம்‌, வைஸேஷிகம்‌, யோகம்‌, வேதாந்தம்ஆகிய பாதைகள்ஏற்றன. ஸாங்க்யம்இதை ஏற்கவில்லை. உலக சிருஷ்டியை ஸாங்க்யம்வேறு விதமாக விளக்குகிறது

(ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்என்ற மூன்று குணங்களின்சேர்க்கை, ஆத்மாவுடன்தொடர்பு கொண்டு வெவ்வேறு வகையில்இயங்குகிற போது, உலக சிருஷ்டி உண்டாகிறது. இது என்று தொடங்இயது என்பதை நிர்ணயிக்க முடியாது; இது ஆரம்பம்காண முடி யாததுஎன்பது சிருஷ்டி பற்றி ஸாங்க்யம்கூறுவதன்சுருக்கம்‌.)

ஞானம்என்ற பொருள்உடையஸாங்க்யம்‌’ என்ற பாதை யின்வாதங்களை முறியடிப்பதை, ஆதிசங்கரர்கூட மிக முக்கிய மாகக்கருதினார்‌. பிரம்மஸுத்ரத்திற்கு உரை எழுத முனைந்த போது அவர்‌, முதலில்ஸாங்க்ய தரிசனத்தை எதிர்கொள்வதே முக்கியம்என்று பிரகடனம்செய்திருக்கிறார்‌. 

ப்ரதான மல்ல நிபர்ஹண ந்யாயேன… 

முதன்மையான மல்யுத்த வீரனை (முதலில்‌) முறியடிக்கிற வழி முறையின்படி… 

மல்யுத்தத்தில்தனது முதன்மையை நிலை நாட்ட முற்படு இறவன்‌, தன்னை எதிர்க்க இருப்பவர்களில்‌, எவன்முதன்மை யான மல்யுத்த வீரனோ, அவனை முதலில்வென்றுவிட வேண்டும்‌; அப்போதே அவனுடைய முதன்மை உணரப்படும்‌’ என்பது இதன்பொருள்‌. இந்த அடிப்படையில்‌, மற்ற தத்துவங்களை எதிர்கொண்டு, அத்வைதத்தை நிலைநாட்ட முற்பட்ட ஆதி சங்கரர்‌, முதலில்‌ ‘ஸாங்க்யம்‌’ என்ற வழிமுறையில்‌, தாம்கண்ட குறைகளை விளக்க முற்பட்டார்‌. அந்த அளவிற்கு ஸாங்க்யம்செல்வாக்குப்பெற்றிருந்திருக்க வேண்டும்‌. 

யோகம்‌’ பதஞ்ஜலி என்கிற முனிவர்வகுத்த வழிமுறை, அதற்கும்முன்பாக ஸனத்குமாரர்இது பற்றி விவரித்திருக்கிறார்என்றும்சில பண்டிதர்கள்கூறுகிறார்கள்‌. யோகம்என்றாலே ஒருமுகப்படுத்துவது. மனதை அடக்குகிறபோது, யோகம்சாத்தி யமாகிறது என்று பதஞ்ஜலி கூறியிருக்கிறார்‌. திட சித்தியும்‌, இடை விடாத முயற்சியும்இதற்குத்தேவை என்றும்அவர்வலியுறுத்துகிறார்‌. இது தவிர, துன்புறுபவர்களின்பால்கருணை, மகழ்ச்சி யுடன்இருப்பவர்களைப்பார்த்துப்பொறாமை கொள்ளாமல்நட்பு காட்டுவது, மூச்சை ஒழுங்குபடுத்துவது, புண்யலர்களைப்பற்றிய நினைவை வளர்த்துக்கொள்வது, இறைவனைப்பற்றி நினைவை வளர்த்துக்கொள்வது, இறைவனைப்பற்றிச்சந்திப்பது.. போன்றவையும்அவர்கூறுகிற யோக வழிமுறைகள்‌. 

பதஞ்ஜலியின்யோக முறையின்படி, அஷ்டமா ஸித்திகள்எனப்படும்அற்புதங்களைச்செய்வதும்கூட, யோகத்தைக்கடைப்பிடிப்பதால்சாத்தியமாகும்‌. அணு போன்று சிறுத்து விடுவதுமிகப்பெரிய உருவம்எடுப்பது; மற்றவர்மனதில்இருப்பதை அறிவது; மிருகங்கள்பேசுவதைப்புரிந்து கொள்வது; மற்றவர்பார்வையிலிருந்து மறைவதுபோன்ற சாகஸங்கள்‌, யோகத்தால்இட்டும்‌; இவ்வாறு கூறுகிற பதஞ்ஜலியே, யோகத்தைப்பயில விரும்புகிறவர்கள்‌, இந்த மாதிரி சக்திகளைப்பெற முனையக்கூடாது என்று எச்சரிக்கையும்செய்கிறார்‌. இவை மனிதனைத்தாழ்த்தி, உயர்ந்த நிலையை எட்ட விடாமல்செய்து விடும்என்பது அவர்விடுக்கிற எச்சரிக்கை. யோக வழி முறையை மேற்கொண்டு, அது விவரிக்கிற படிகளைக்கடப்பவன்‌, தன்னைத்தானே உணர்ந்தவனாஇி, சம்சாரக்கட்டிலிருந்து விடுபடுவான்என்பது இந்தத்தத்துவம்வகுக்கிற பாதை. ‘வேதாந்தம்‌’ என்கிற பாதை பிரம்ம ஸுத்ரத்தை அடிப்படையாகக்கொண்டது. வியா சர்இயற்றிய பிரம்மஸூத்ரமோ, உபநிஷத்துக்களை விளக்குவது. இதற்கு சங்கரர்‌, ராமானுஜர்‌, மத்வாச்சார்யார்ஆகியோரும்‌, வேறு சிலரும்அவரவர்பார்வையின்படி விளக்க உரைகள்எழுதியிருக்கிறார்கள்‌. 

வெவ்வேறு வாதங்களினால்தோற்கடிக்கப்படக்கூடிய தர்க்க வாதங்களைவிட, வேத விளக்கங்களே முக்கியமானவை, என்றும்இருப்பவை என்று பிரம்மஸூத்ரம்அடித்துக்கூறுகிறது. இந்த உலகத்திற்குக்காரணம்இறைவனேஅதாவது பிரம்மமே. பிரம்மத்திடமிருந்தே தோன்றியதால்‌, இந்த உலகம்வேறு, பிரம்மம்வேறு அல்ல. தான்செய்யும்கர்மாக்களின்பலனை ஒரு ஜீவன்அடைவது என்பது, ஈச்வரனின்‌ – பிரம்மத்தின்‌ – கருணை யினால்தான்‌. பிரம்மத்தை உணர்கிற ஜீவனுக்கு, முந்தைய கர்ம பலன்கள்பலவும்அற்றுப்போகும்‌. ‘இப்படிச்சொல்கிற பிரம்ம ஸலித்ரம்‌ – பிரம்மம்‌, ஜீவன்ஆகியவை வேறானவை அல்ல என்று கூறுகிற அத்வைதம்என்ற நிலையைப்போதிக்கிறதா இல்லையா?! என்ற கேள்வி இன்று வரை அலசப்படுகிறது

பிரம்மஸுூத்ரத்திற்கு விளக்கவுரை எழுதிய ஆச்சார்யர்களில்‌, ஆதிசங்கரரின்உரையின்படிஇது இரண்டற்ற நிலைஅத்வை தம்‌ – என்பதையே போதிக்கிறது; மத்வாச்சார்யாரின்உரையின்படி இது பிரம்மம்வேறுஜீவன்வேறு என்ற த்வைதம்இரண்டான நிலையையே போதிக்கிறது; ராமானுஜரின்உரையின்படி, இது இரண்டாக இருந்தாலும்‌, இறுதியில்ஒன்றாகிறதுஎன்கிற விசிஷ்டாத்வைதம்‌; ஒரு விசேஷமுடைய அத்வைதம்‌. 

பெரியவர்களே இப்படி மாறுபட்டால்என்ன செய்வது? என்று கேட்கலாம்‌. அவர்கள்பார்வையில்இருக்கிற வேறுபாடு, பாதையைப்பற்றியதே தவிர, இலக்கைப்பற்றியது அல்ல என்பதால்‌, யாருடைய பாதையை ஏற்றாலும்‌, சென்றடையும்இடம்ஒன்றேஎன்பதைப்புரிந்து கொண்டால்‌, இந்த வேறுபாடுகள்நம்மைக்குழப்பாது

இப்போது, அரசியல்சாஸனத்தைப்பற்றி மாறுபட்ட பார்வைகள்இல்லையா? ”இது மத்தியில்அதிகாரங்களைக்குவிக்கிறயூனிட்டரி ஸிஸ்டம்‌’ என்று சில சட்ட நிபுணர்கள்சொல்கிறார்கள்‌; இல்லை இது மாநிலங்களின்அதிகாரங்களைக்குவிக்கிறஉறுதியிட்டுச்சொல்கிற சமஷ்டி முறை – ‘ஃபெடரல்ஸிஸ்டம்‌’ என்று வேறு சில வல்லுனர்கள்சொல்கிறார்கள்‌; ‘ஃபெடரல்ஸிஸ்டம்தான்‌. ஆனால்அதில்சில முக்கியமான யூனிட்டரி அம்சங்களும்உள்ளன! என்று மூன்றாவது பிரிவினர்சொல்கிறார்கள்‌. அரசியல்சாஸனத்தை இவர்கள்யாரும்நிராகரிக்கவில்லை. அதன்ஒவ்வொரு தாக்கத்தையும்அளவிடுகிறபோது, சிலர்ஓர்‌  அம்சத்திற்கு முக்கியத்துவம்அளிக்கிறார்கள்‌; வேறு சிலர்மற்றோர்அம்சத்திற்கு முக்கியத்துவம்அளிக்கிறார்கள்‌; ஆனால்எல்லோருமே சாஸனத்தை ஏற்கிறார்கள்‌. இது போல்தான்நாம்மேலே பார்த்த தத்துவ பேதங்களும்‌. 

சரி, சிலர்இந்த அரசியல்சாஸனமே மோசம்‌’ என்று நினைக்இறார்களே? அந்த மாதிரி, இந்தத்தத்துவ விஷயத்தில்நிராக ரிப்பு உண்டா?” என்று கேட்டால்‌ – உண்டு?” அதுதான்‌ ‘சார்வா கம்‌!. அதுகூட ஒரு பிலாஸஃபி என்ற அந்தஸ்தைப்பெற்றிருக்கிறது. சார்வாகம்என்ற பெயரைப்பெற்றது. இது நாத்திக வாதம்‌. பிரஹஸ்பதிதான்‌, சார்வாகர்என்ற பெயரில்குறிப்பிடப்படு இறார்என்று சிலரும்‌, பிரஹஸ்பதியின்சீடர்களில்ஒருவர்சார்வாகருக்கும்பிரகஸ்பதிக்கும்சம்பந்தம்எதுவும்இல்லை என்றும்இன்னும்சிலரும்கூறுகிறார்கள்‌.

அனுமானம்‌, சப்தம்போன்ற வழிமுறைகளை சார்வாகம்நிரா கரிக்கிறது. வேதங்களை நம்பிவிட முடியாது என்பது சார்வாகத்இன்நிலை. நமக்குத்தெரிவதை மட்டுமே ஏற்க வேண்டும்என்பதை இந்தத்தத்துவம்வலியுறுத்தியது. இறைவன்‌, ஆத்மா, ஸ்வர்க்கம்‌, முன்பிறப்பு, மறுபிறப்புபோன்ற விஷயங்களை எல்லாம்இந்தப்பாதை மறுத்தது. இவை நம்பார்வைக்கு உட்படாத விஷயங்கள்என்பதால்‌, இவற்றைச்சார்வாகம்ஏற்க வில்லை. இயற்கையின்பல்வேறு அம்சங்களானநீர்‌, நெருப்பு, காற்று, பூமிஇவற்றின்வெவ்வேறு வகையான சேர்க்கையில்உலகம்உண்டாயிற்று என்று கூறுகிற சார்வாகம்‌, இந்த நீர்‌, நெருப்பு, காற்று, பூமிஇவை எப்படி உண்டாயின என்பதை விளக்கியதாகத்தெரியவில்லை

யாகங்கள்‌, சடங்குகள்போன்றவற்றையும்சார்வாகம்நிரா கரித்தது. அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு என்கிற மோட்சம்‌, ஆகிய நான்கு தர்மங்களில்‌ – பொருள்‌, இன்பம்ஆகியவற்றை மட்டுமே அந்தக்கொள்கை ஏற்றது. செல்வம்‌, இன்பம்இவையே மனிதனுக்கு முக்கியமானவை என்று சார்வாகம்கூறி யது: முன்னோர்களுக்குச்சிராத்தம்செய்வதை ஏளனம்செய்தது. இன்பத்தை நுகர்வதையே மனித வாழ்வின்குறிக்கோளாகக்காட்டிய இந்தப்பாதை, மிக மிகப்பெரும்பாலோரால்நிராகரிக்கப்பட்டதில்வியப்பில்லை

ஆக, நாத்திக வாதத்திற்கும்கூட அன்றே ஓர்இடம்‌ – சிறிய இடம்‌ – இருந்திருக்கிறது. அதுவும்கூட புதிதல்ல என்பதால்‌ – இன்றைய நாத்திகவாதிகள்தாங்கள்தாம்ஏதோ அறிவு பூர்வமாகச்சந்தித்து, ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு விட்டது போல்பேசுவது நகைப்புக்குரியது. நாத்திக வாதம்பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதுதான்‌. பழமையை எதிர்க்கிறோம்என்ற பெயரில்நாத்திக வாதம்பேசுவது அபத்தம்‌; ஏனென்றால்அதுவும்பழையதே

சமுத்திரத்தில்யாருக்கும்பயன்இல்லாத, எதற்கும்உதவாதசலபொருட்கள்மிதக்கும்‌. தூக்கிஎறியப்பட்டஇவற்றை76 – 8817, 264 – 881) என்றுசொல்வார்கள்‌. ஹிந்துமஹாசமுத்இரத்தில்‌, அப்படிஃப்ளோட்‌ – ஸாம்‌, ஜெட்‌ – ஸாம்ஆக மிதப்பது நாத்திகவாதம்‌.