யாகங்களைப் பற்றிய அறிமுகத்தை முடிப்பதற்கு முன்பாக, முதன் முதலாக நடந்த யாகத்தைப் பற்றிய விவரங்களைச் சிறிது பார்ப்போம். இதை விவரிப்பது ‘புருஷ ஸுக்தம்’. இது உலக சருஷ்டியைப் பற்றிக் கூறுகிறது.
உலக இருஷ்டியைப் பற்றிப் பல்வேறு மதங்கள், பல்வேறு விதமாக வர்ணிக்கின்றன. அந்தந்த மதத்தினர், அந்தந்த கார ணத்தை நம்புகின்றனர். ஹிந்து மத நூல்களிலோ சிருஷ்டி பற்றி பல்வேறு வர்ணனைகள் இருந்தாலும், எல்லா வர்ணனைகளுமே, பரம புருஷனாகிய இறைவனிடமிருந்து உலகமும், ஜீவராசி களும் தோன்றின என்பதை ஏற்கின்றன. ஆகையால் நம்பிக்கை உடையவர்கள் இதை ஏற்று,திருப்தியுறலாம்…
இதையெல்லாம் எப்படி நம்புவது என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. விஞ்ஞானிகள் உலகம் தோன்றியதற்கான கார ணத்தைக் கூறுகிறபோது, அதைப் புரிந்து கொண்டா எல்லோரும் ஏற்கிறார்கள்? படித்தவர்கள், சொல்கிறார்கள் – என்பதால் அனை: வரும் ஏற்கிறார்கள்; அவ்வளவுதானே? அணுவும் அணுவும் மோதியது எப்படி என்றோ, பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் என்ன நடந்தது என்றோ, ‘பிக் பேங்க் – 89 8௦ாஏ‘ எனப்படுகிற மாபெரும் மோதல் எப்படி நடந்தது என்றோ – புரிந்து கொண்டா அந்த விளக்கங்கள் ஏற்கப்படுகின்றன? அவற் றைப் புரிந்து கொண்டவர்களேகூட, ஒருவரிலிருந்து ஒருவர் மாறு பட்ட கருத்தைக் கொண்டவர்களாக, இன்று வரை வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, அதில் மட்டும் எப்படி நம்பிக்கை வருகிறது?
அறிந்தவர்கள் கூறுவதால் நம்பிக்கை வருகிறது என்றால், வேதங்களையும் இதிஹாசங்களையும் ஏற்றவர்களும் அறிந்தவர் களே என்பதால், அவர்கள் கூறுவதை ஏன் ஏற்கக் கூடாது?
தன்னிடத்திலிருந்தே உலகை இறைவன் படைத்தான் என் பதைச் சிருஷ்டி வர்ணனைகள் எல்லாமே ஏற்கிற மாதிரி, புருஷ ஸூக்தமும் ஏற்றுப் படைப்பை வர்ணிக்கிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, புருஷ ஸூக் தம் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்:
புருஷன்! என்பதற்கு கணவன், ஆண் என்ற அர்த்தங்கள் வழக்கில் உள்ளன. ஆனால் வேதங்களில் பல இடங்களிலும், ஆதி புருஷனை – இறைவனையே குறிக்க, ‘புருஷன்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஸூக்தம் என்றால் சரியாகச் சொல்லப்பட்டது – உண்மையான வர்ணனை என்று அர்த்தம் ் கூறப்பட்டுள்ளது. நான்கு வேதங்களிலுமே இடம் பெற்றுள்ள இந்த புருஷ ஸூக்தம் என்பது பல மந்த்ரங்களைக் கொண்டது. (மந்த்ரம் என்று சொல்லாமல் ‘பாரா” என்றோ, ஸ்லோகம் என்றோ சொல்வதும் உண்டு.)
முதல் யாகத்தை வர்ணித்து, சிருஷ்டியைச் சுருக்கமாக விவ ரிக்கிற புருஷ ஸூக்தம், ஆதிபுருஷனை – பரம புருஷனை – இறைவனை – பிரம்மத்தை – மிகப் பெரிய வடிவில் காட்டு கிறது. பிரம்மம் பெரியதற்கெல்லாம் பெரியது: சிறியதற்கெல்லாம் சிறியது என்பதால், பிரம்மத்தைப் பெரியதாக வர்ணிக்கிற மந்த் ரங்கள் அல்லது ஸ்லோகங்களும் உண்டு; மிகவும் சிறிதாக, அணு வைக் காட்டிலும் சிறியதாகக் கூறுகிற ஸ்லோகங்களும் உண்டு. புருஷஸூக்தம், கணக்கற்ற கைகளும், கால்களும், தலைகளும் உள்ள பிரம்மாண்டமான உருவமாகப் பரம புருஷனை வர்ணிக்கிறது.
‘அந்தப் பரம புருஷனை அறிவதைத் தவிர, முக்தி பெறுவதற்கு வேறு ஒரு வழி இல்லை‘ என்பது புருஷஸூக்தம் கூறு கிற அறிவுரை. ஆரம்பத்திலேயே ஒன்றைப் புரிந்து கொண்டு விடுவது நல் லது. புருஷ ஸூக்தம் என்கிற இந்தத் தொகுப்பில், ‘உருவகப் படுத்துதல்! மற்றும் ராம! என்கிற வழிமுறைகள் தாராள மாகவே கையாளப்பட்டிருக்கின்றன. ஆகையால், பரமபுருஷன் – பிரம்மம் – பெரியவற்றுக்கெல்லாம் பெரியது என்பதைக் காட்டு வதற்காக, ‘ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள்”… என்று வர்ணனை போகிறது. அவன் எங்கும் வியாபித்து நிற்கிறான். கணித நூல் இலக்கணத்தில் அவனுடைய மகிமையை, அளந்து அடக்க முடியாது. இதுவரை இருந்ததும், இனி வரப் போவதும், இப்போது இருப் பதும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனும் அவனே. அவனிட மிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன; அவனிடமே நிலை பெறு இன்றன. அவனே அனைத்திற்கும் ஆத்மா. இவ்வுலகம் அவனு டைய மஹிமையில் – கால் பகுதியானது. மீதமுள்ள முக்கால் பகுதியோ காணப்படாமல் மறைந்திருக்கிறது. இப்படிப் புருஷ ஸுக்தத்தில் பரம புருஷன் வர்ணிக்கப்படுகிறான்.
இந்தப் பரம புருஷன், தன்னிலிருந்து விராட புருஷனைத் தோற்றுவித்தான். விராட புருஷன் என்றால் மகத்தான புருஷன். அவனே, ஆதி ஜீவனும், படைப்புக் கடவுளுமாகிய ப்ரம்மதேவன். அவனிட மிருந்து தேவர்கள் தோன்றினர். இப்படித் தோன்றிய தேவர்கள், அந்த விராட புருஷனாகிய பிரம்மதேவனையே வேள்விப் பொருளாக்கி ஒரு மானஸ யக் ஞம் – மனதினால் செய்யப்படுகிற, மானஸ யாகம் – நடத்தினார் கள். பகவத் சிதையிலும் கூட, பொருளைக் கொண்டு செய்யப் படுகிற யாகத்தைவிட, ஞான வேள்வியே மேம்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீிய உபநிஷதத்திலும் கூட முடிவில் மானஸ யாகமே குறிப்பிடப்படுகிறது. மானஸ யாகத்தின் மேன் மையைப் புரிந்து கொண்ட ஞானிக்கு, அவனுடைய ஆத்மாவே யாகம் நடத்துகிற எஜமானன்; அவன் மனதில் அவன் காட்டுகிற கிறது. ‘அந்தப் பரம புருஷனை அறிவதைத் தவிர, முக்தி பெறு வதற்கு வேறு ஒரு வழி இல்லை’ என்பது புருஷஸூக்தம் கூறு கிற அறிவுரை.
ஆரம்பத்திலேயே ஒன்றைப் புரிந்து கொண்டு விடுவது நல் லது. புருஷ ஸூக்தம் என்கிற இந்தத் தொகுப்பில், ‘உருவகப் படுத்துதல்! மற்றும் ராம! என்கிற வழிமுறைகள் தாராள மாகவே கையாளப்பட்டிருக்கின்றன. ஆகையால், பரமபுருஷன் – பிரம்மம் – பெரியவற்றுக்கெல்லாம் பெரியது என்பதைக் காட்டு வதற்காக, ‘ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள்”… என்று வர்ணனை போகிறது. அவன் எங்கும் வியாபித்து நிற்கிறான். கணித நூல் இலக்க ணத்தில் அவனுடைய மகிமையை, அளந்து அடக்க முடியாது. இதுவரை இருந்ததும், இனி வரப் போவதும், இப்போது இருப் பதும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனும் அவனே. அவனிட மிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன; அவனிடமே நிலை பெறு இன்றன. அவனே அனைத்திற்கும் ஆத்மா. இவ்வுலகம் அவனு டைய மஹிமையில் – கால் பகுதியானது. மீதமுள்ள முக்கால் பகுதியோ காணப்படாமல் மறைந்திருக்கிறது. இப்படிப் புருஷ ஸுக்தத்தில் பரம புருஷன் வர்ணிக்கப்படுகிறான். இந்தப் பரம புருஷன், தன்னிலிருந்து விராட புருஷனைத் தோற்றுவித்தான்.
விராட புருஷன் என்றால் மகத்தான புருஷன். அவனே, ஆதி ஜீவனும், படைப்புக் கடவுளுமாகிய ப்ரம்மதேவன். அவனிட மிருந்து தேவர்கள் தோன்றினர். இப்படித் தோன்றிய தேவர்கள், அந்த விராட புருஷனாகிய பிரம்மதேவனையே வேள்விப் பொருளாக்கி ஒரு மானஸ யக் ஞம் – மனதினால் செய்யப்படுகிற, மானஸ யாகம் – நடத்தினார் கள். பகவத் சிதையிலும் கூட, பொருளைக் கொண்டு செய்யப் படுகிற யாகத்தைவிட, ஞான வேள்வியே மேம்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீிய உபநிஷதத்திலும் கூட முடிவில் மானஸ யாகமே குறிப்பிடப்படுகிறது. மானஸ யாகத்தின் மேன் மையைப் புரிந்து கொண்ட ஞானிக்கு, அவனுடைய ஆத்மாவே யாகம் நடத்துகிற எஜமானன்; அவன் மனதில் அவன் காட்டுகிற ஊக்கமே, அவனுடைய மனைவி; அவனுடைய சரீரமே அக்னி யில் இடப்படுந சுள்ளிக்கட்டைகளின் கட்டு… என்பது உபநிஷத்து வாக்யம். இப்படிப்பட்ட உயர்ந்த மானஸ யக்ஞத்தைத் தேவர்கள் செய் தனர். அதில் விராட புருஷனாயெ ப்ரம்மதேவனே யாகப் பொருளானான். வஸந்த காலம், நெய் ஆயது; கோடைக் காலம், விறகுக் கட்டையாகயது; இலையுதிர் காலம், அக்னி யில் இடுகிற பொருளாகியது. பரம புருஷனே அக்னியானான். இப்படிப்பட்ட மானஸ யாகத்தில், விராட புருஷனாகிய ப்ரம்ம தேவன் தன்னையே அர்ப்பணித்தான். இதன் பயனாக உலக சிருஷ்டி ஏற்பட்டது ஸகல ஜீவராசிகளும், இசைகளும், சூரியனும், சந்திரனும், அப்போது விராட புருஷனிடமிருந்து தோன்றினர். காற்றும், அக் னியும், இந்திரனும் தோன்றினர்… இறைவனாகிய பரம புருஷன், ப்ரம்மதேவன் மூலமாக உல கையும், சகல ஜீவராசிகளையும் படைத்தான் – என்பது இப்படி வர்ணிக்கப்பட்டு, ப்ரம்மதேவனின் உடலில் ஒவ்வொரு அங்கத் இலிருந்து, ஒவ்வொன்று உண்டாகியதாகக் கூறப்படுகிறது.
‘விராட புருஷனின் மனதிலிருந்து இந்திரன் தோன்றினான். மூச்சிலிருந்து காற்று உண்டாயிற்று; காதுகளிலிருந்து திசைகள் தோன்றின… என்றெல்லாம் இதில் கூறப்படுவதிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. எல்லாமே உருவகப்படுத்திக் கூறப்படு கிற விஷயங்கள். இந்த வர்ணனை வகையை ஒட்டியே, மனிதர்கள் படைக்கப் பட்டதும் இவ்வாறு விவரிக்கப்படுகிறது: ப்ராஹ்மணோஸ்ய முகமாஸூத் பாஹூராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத் வைச்ய: பத்ப்யா(கு)ம் சூத்ரோ அஜாயத இவருடைய வாய் பிராமணன் ஆயிற்று; கைகள் க்ஷத்ரியன் | ஆயின; இவருடைய தொடைகள்: வைசியனாயிற்று; பாதங்களிலி ருந்து சூத்ரன் தோன்றினான்.
இப்படிக் கூறப்பட்டிருப்பது, தொடர்ந்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. ‘முகத்திலிருந்து பிராமணன்: உண்டானான் – என்றால், அவன் அவ்வளவு விசேஷமா?! என் பது முதல் கேள்வி. இதில் ஒரு திரிபுவாதம் இருக்கிறது. ‘முகம்’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு ‘வாய்’ என்றும் பொருள் உண்டு. அந்த அர்த்தத்தை எடுத்துக் கொள்ள மறுத்து, முகம் என்றால் முகமே – என்ற வாதம் ஏற்கத் தகாதது. பல உரைகளில், முகம் என்பது வாயைக் குறிப்பதாகத்தான் பொருள் கூறப்படுகிறது. அப் படிப் பார்க்கும்போது, அது ஒன்றும் அவ்வளவு விசேஷமானது அல்ல என்று ஆகிறது.
‘சரி, சூத்ரன், பாதங்களிலிருந்து தோன்றினான் என்றால், அன்றே சூத்ர ஜாதி தாழ்த்தப்பட்டது ஆகிவிட்டது அல்லவா?’ என்றும் கேட்கப்படுகிறது. முதலில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதில் ஜாதி விஷயமே வரவில்லை. வர்ணம் பற்றித் தான் இங்கு பேசப்படுகிறது. வர்ணம் வேறு; ஜாதி வேறு. வ்ரி என்பதே வர்ணம் என்பதற்கு வேர்; இதற்கு விரும்பித் தேர்ந் தெடுப்பது – ௦ 60௦058 – என்பதே பொருள். அதாவது ஒருவன் ஒரு வாழும் வகையை விரும்பித் தேர்ந்தெடுப்பதால், அவன் அந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் ஆகிறான். ஜாதி என்ற சொல் லைப் பார்த்தாலோ, அது ‘ஜன்’ என்ற வேரிலிருந்து வருகிறது. இதற்கு பிறப்பு என்று பொருள். அதாவது, ஜாதி பிறப்பை அடிப் படையாகக் கொண்டது. வேதத்தில் ஜாதி என்ற சொல் பயன் படுத்தப்படவில்லை; அது காலப்போக்கில் வழக்கில் வந்துவிட் டது. ஒரு ஜாஇயிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற வழி யில்லை; ஆனால், ஒரு வர்ணத்திலிருந்து மற்றொரு வர்ணத்திற்கு | மாறலாம்.
குணத்தையும், வாழும் வகையையும் ஒட்டி, மனிதர்கள் ள் நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டனர் – என்று பகவத் கதையே ் சொல்கிறது. புருஷ ஸுக்தத்தையே எடுத்துக் கொண்டால் –
பத்ப்யாம் பூமி:
பாதங்களிலிருந்து பூமி உண்டாயிற்று – என்று கூறப்படு கிறது. அப்படியானால் பூமியே கேவலமானதா? பூமா தேவி பெரிதும் போற்றப்படுகிறாள்; வணங்கப்படுகிறாள்; விஷ்ணுவின் மனைவியாகக் கருதப்படுகிறாள். அப்படிப்பட்ட பூமி தோன்றிய இடத்திலிருந்து, ஒரு வர்ணம் தோன்றியது என்றால் அது எப்ப டிக் கேவலமானதாக விடும்?
அதுவுமின்றி நான்கு வர்ணங்களுமே இறைவனிடமிருந்து தோன்றியவையே என்பதைத்தானே இது வலியுறுத்துகிறது?
இது பற்றியெல்லாம், ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன். ‘எங்கே பிராமணன்?’, ‘வெறுக்கத்தக்கதா பிராமணியம்?! – ஆகிய இரு புத்தகங்களில் பல விளக்கங்களைத் தொகுத்து அளித்திருக் இறேன்; ‘ஹிந்து மஹா சமுத்திரம்! என்ற விரிந்து கிடக்கும் இம் மதத்தின் பல பார்வைகளைப் புரிந்து கொள்ள முனைகிறபோது, இந்த வர்ணப் பிரிவுகள் பற்றி விவரமாக மீண்டும் ஒருமுறை பார்ப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதைச் செய்வதற்கு, இதைவிட பொருத்தமான கட்டம் வேறு ஒன்று வரும் என்ப தால், இவ்விஷயத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு மேலே செல்கிறேன்.
அப்படிச் செவ்வதற்கு முன்பாக ஓரிரு வார்த்தைகள். யாகங் களைச் செய்வதிலும், தர்மத்தினால் விதிக்கப்பட்ட கர்மங்களைச் ் செய்வதிலும், எந்த வர்ணத்தாருக்கும் தடை இருக்கவில்லை. அதனால்தான் சூத்ரனுக்கு வேதம் கற்பிக்கப்பட்ட நிகழ்ச்சியும், வேதத்திலேயே வர்ணிக்கப்படுகிறது. ப்ருகு முனிவர், பரத்வாஜ முனிவரிடம் நான்கு வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்குமே யாகங். களையும், தர்மத்தின்படியான மற்ற கர்மங்களையும் செய்யும் அதிகாரம் உண்டு என்று கூறுகிறார் :
இத்யேதி: கர்மபிர் வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞய க்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே
பிராமணர்கள் தங்களுடைய நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற் கொண்டு, மற்ற மூன்று வர் ணங்களைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள். ஆகையால், தர்ம காரியங்களைச் செய்வதிலும், யாகங்களை நடத்துவதிலும் யாருக்கும் தடை கிடையாது.
சூத்ரன் வேதம் பயிலக் கூடாது என்றெல்லாம் பிற்காலத்தில் வந்தது; ஆனால் இதைப் பிரதிபலிக்கிற மனு தர்மமே கூட இப் படிக் கூறுகிறது :
அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே:
அனுவ்ரஜ்யா ச சுச்ருஷா யாவத் அத்யயனம் குரோ:
தவிர்க்க முடியாத நேரங்களில், பிராமணர்கள் அல்லாத குரு விடமிருந்து போதனை பெறலாம்; அப்படி போதனை பெறுகிற காலத்தில், அந்த குருவுக்கு அந்த மாணவன் பணிவிடை செய்ய வேண்டும்.
அதாவது, வர்ணங்கள் பிறப்பை ஒட்டியவை அல்ல – என்ற நிலையிலிருந்து, மாற்றங்கள் தோன்றி அவை பிறப்பால் அடை யப்படுகிறவை என்ற வழக்குமுறை வந்துவிட்ட காலகட்டத்தில்கூட – மேற்கண்டவாறு வற்புறுத்தப்படுகிறது. (இவற்றை யெல்லாம், மேலே கூறியது போல பிறகு விவரமாகப் பார்ப்போம்.)
இதிலிருந்தே வேதங்கள் பயிலவோ, யாகங்களை நடத்தவோ யாருக்கும் தடை இருக்கவில்லை என்பது புரிகிறது. விதிக்கப் பட்ட நியமங்களை ஏற்று நடப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இதற்கெல்லாம் அதிகாரம் கொண்டவர்களே.
அதனால் ரிக் வேதமே இவ்வாறு கூறுகிறது:
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸெளபாகாய
“உங்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. அனைவரும் சகோதரர்களே! ஒன்றுபட்டு வாழ்ந்து, மேன்மையைப் பெறுவீர்களாக!”
ஆக, எல்லோரும் சேர்ந்து, ஹிந்து மத சிந்தனைகளை ஓரளவாவது புரிந்து கொள்ள முயல்வோம்.