எத்தனை தெய்வங்கள்?

முப்பத்து முக்கோடி தேவர்கள்இருப்பதாகக்கூறப்படுவது, புராணங்களின்அடிப்படையில்வளர்ந்துள்ள நம்பிக்கை. ஆனால்வேதங்களில்இத்தனை தெய்வங்கள்இருப்பதாகக்கூறப்பட வில்லை. முப்பத்து மூன்று தெய்வங்களே வேதங்களில்குறிப்பிடப்படுகின்றன; அதுவும்மிக முக்கியமாக இந்திரன்‌, அக்னி, வருணன்‌, சூரியன்‌, வாயு போன்றவர்களே துதிக்கப்படுகிறார்கள்‌. ருத்ரனாகிய சிவனுக்கும்‌, விஷ்ணுவிற்கும்வேதத்தில்இடம்இருந்தாலும்‌, அவர்களை விடவும்அதிகமாகப்போற்றப்படு பவர்கள்இந்திரன்‌, வருணன்‌, சூரியன்போன்றவர்களே

அப்படியானால்‌, இன்று நாம்வணங்குகிற தெய்வங்களுக்கும்‌, வேத கால தெய்வங்களுக்கும்தொடர்பே இல்லையா? விநாயகர்‌, முருகன்போன்ற தெய்வங்கள்எப்படித்திடீரென்று வந்தன? பிரம்மா, விஷ்ணு, சிவன்என்ற இருமூர்த்திகளுக்கே வேதங்களில்முக்கியத்துவம்இல்லையா? நவக்கிரஹங்களை வழிபடுகிறோமே, அதற்கும்கூட வேதங்களுடன்தொடர்பு இல்லையா?…’ என்ற கேள்விகள்பலர்மனதில்எழலாம்‌. இந்த மாதிரி மனக்குழப்பம்அனாவசியமானது என்பதற்கான விளக்கங்கள்பலரால்கூறப்பட்டிருக்கின்றன. அவற்றைப்பார்ப்பதற்கு முன்பாக, மற்றொரு அடிப்படையான கேள்வியைப்பார்ப்போம்‌.

 தெய்வங்கள்‌, பிரம்மா, விஷ்ணு, சிவன்என்ற மூன்றானா லும்சரிவேதங்களில்கூறப்பட்டுள்ள முப்பத்தி மூன்றானாலும்சரிபின்பு புராணங்களின்மூலம்வந்த முப்பத்து முக்கோடியானாலும்சரிஇத்தனை தெய்வங்கள்ஏன்‌? மற்ற பல மதங்களில்ஒரே ஒரு தெய்வம்குறிப்பிடப்படுகிற மாதிரி அல்லாமல்‌, ஹிந்து மதத்தில்மட்டும்மூன்று, முப்பத்தி மூன்று, முப்பத்து முக்கோடிஎன்று தெய்வங்கள்இருப்பானேன்‌?’ என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுவதை நாம்பார்க்கிறோம்‌. 

வேறு எந்த மதமும்தோன்றுவதற்கு முன்பாகத்தோன்றிய ஹிந்து மதத்தில்‌, வேறு எந்த மதமும்கூறுவதற்கு முன்பாகவே, தெய்வம்ஒன்றுதான்‌! என்பது வலியுறுத்தப்பட்டது. இதை வேதங்களே கூறுகின்றன

ஏகம்ஸத்‌: விப்ர: பஹுதா வதந்தி 

உண்மை ஒன்றுதான்‌. கற்றறிந்தவர்கள்அதைப்பலவாறாகக்கூறுகிறார்கள்‌. 

இது வேத வாக்கியம்‌. ‘இந்திரன்‌, மித்ரன்‌, வருணன்‌, அக்னி, வாயு, கருடன்எனப்பலவாறாகப்பேசினாலும்‌, உண்மை ஒன்று தான்‌; கற்றோர்கள்பலவாறாகக்கூறுகிறார்கள்‌! என்று வேதம்கூறுகிறது. இதில்உள்ளஏகம்ஸத்‌” – உண்மை ஒன்றுதான்என்‌: பது, ‘ஏகம்தத்‌! – ‘அது ஒன்றேதான்‌’ என்றும்கூறப்பட்டுள்ளது. அதாவது இறைவன்என்பதுஅதுவே உண்மை என்பதால்‌, உண்மை என்பதுஅது ஒன்றுதான்வேதங்கள்கூறுகின்றன. வேதங்களின்இறுதியில்வருகிற உபநிஷத்துக்கள்இதை மேலும்வலியுறுத்துகின்றன

*மஹத்தேவானாம்அஸுரத்வம்ஏகம்‌” 

பல தெய்வங்களுக்கும்உள்ள வலிமை (பெருமை) ஒன்றேஎன்றும்வேதம்கூறுகிறது

*யோ வேதாதெள ஸ்வார: ப்ரோக்த்‌: 

வேதாந்தேச ப்ரதிஷ்டித

தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய 

: பர: மஹேச்வர:* 

வேதத்தின்தொடக்கத்திலும்‌, முடிவிலும்வலியுறுத்தப்படு வது மஹோன்னத தத்துவமான ஒரே ஈச்வரன்தான்

இவ்வாறு மஹா நாராயண உபநிஷத்கூறுகிறதுஇப்படிப்பல உதாரணங்களைக்கூறலாம்‌. ‘இப்படித்தெய்வம்ஒன்றுதான்‌! என்று உணர்த்திவிட்டு, பல தெய்வங்களைக்கூறுவானேன்‌? இது அபத்தமான நம்பிக்கை அல்லவா? மற்ற பல மதங்களில்உள்ளது போல, தெய்வம்ஒன்றே என்று கூறி விட வேண்டியதுதானே? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்சிறிது யோசிக்க வேண்டும்‌. 

தெய்வம்ஒன்றே என்று கூறுகிற மதங்களில்கூட, அந்த தெய்வம்ஸர்வ வல்லமை படைத்த தெய்வம்‌, ஒரே உருவத்துடன்அல்லது உருவமே இல்லாத தன்மையுடன்‌, அப்படியே தான்இருக்குமா? நினைத்த உருவத்தை எடுக்கும்தன்மை இல்லை யென்றால்‌, அதற்குஸர்வ வல்லமை படைத்ததுஎன்கிற வர்ணனை எப்படிப்பொருந்தும்‌? 

ஹிந்து மத நம்பிக்கையின்படி, ‘அதுஎன்றும்‌, “ஸத்யம்‌” என்றும்‌, ‘ப்ரும்மம்‌” என்றும்கூறப்படுகிற தெய்வம்‌, ஸர்வ வல்லமை படைத்ததாக இருப்பதால்‌, நினைத்த உருவத்தில்காட்சி அளிக்கக்கூடிய தன்மையையும்பெற்றிருக்கிறது

அஜாயமானோ பஹுதா விஜாயதே 

பிறப்பே இல்லாத அவன்பல்வேறு வடிவங்களில்தோன்று கிறான்என்று வேதம்கூறுகிறது. வேதங்களின்சாரமாக வந்தி ௬க்கிற பகவத்கீதையில்‌, பரமாத்மா இவ்வாறு சொல்கிறார்‌: 

யே யதா மாம்ப்ரப்த்யந்தே 

தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்‌ 

யாவர்என்னை எங்ஙனம்வேண்டுகிறார்களோ, அவர்களை நான்அங்ஙனமே சார்கிறேன்‌. 

மீண்டும்கீதையில்இதே கருத்து கூறப்படுகிறது

யோ யோ யாம்யாம்தனும்பக்த

ச்ரத்தயார்சிதும்இச்சதி 

தஸ்ய தஸ்யாசலாம்ச்ரத்தாம்‌ 

தாமேவ விததாம்யஹம்‌ 

எந்த எந்த பக்தன்‌, நம்பிக்கையுடன்‌, எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனவனுடைய அசையாத நம்பிக்கைக்குத்தக்க வடிவத்தை நான்மேற்கொள்கிறேன்‌. 

வேதங்களிலும்சரி, புராணங்களிலும்சரி, இறைவனைத்துதிப்பவர்கள்‌, அவனை அழைக்க, அவன்வந்ததாகவே பல நிகழ்ச்சிகள்கூறப்படுகின்றன. பகவான்அவதாரம்எடுத்து வரு வது என்பது, ஹிந்து மதத்தில்மட்டும்காணப்படுகிற ஒரு விசே ஷம்‌. அவதாரம்என்றால்இறங்கி வருவது. இது இறைவன்‌, மனிதர்களுக்காகச்செய்யும்சேவை. நிர்குணம்‌, சற்குணம்என்ற இருவகைகள்இறைவனுக்கு உண்டு. அதாவது, ஒன்றுஎந்த ஒரு வர்ணனைக்கும்பிடிபடாமல்‌, உருவமற்ற ஒரு நிலை; இரண்டுஉருவம்எடுத்துக்காட்சி அளிக்கிற மற்றொரு நிலை

ஸர்வ வல்லமை படைத்தவன்என்பதால்‌, இது இறைவ னுக்குச்சாத்யமே

இப்படிப்பக்தர்கள்தன்னைத்துதிக்கிற வகையில்காட்சி அளிப்பதால்‌, இறைவனை நாம்பல வகைகளில்பார்க்கிறோம்‌. மற்ற மதங்கள்இறைவனை நெருங்க முடியாதவையாகப்பார்க்இன்றன; ஹிந்து மதத்திலோ, இறைவனை நண்பனாக, சேவக னாக, அரசனாக, தளபதியாக, குருவாக, தந்தையாக, தாயாக, தனயனாகஏன்‌, காதலனாகக்கூட பார்த்த பக்தர்கள்உண்டு. இப்படிப்பலவிதமாகக்காண்பவர்களின்பக்தி, உண்மையான தாக இருந்ததால்‌, அந்தந்த ரூபத்தில்இறைவன்காட்சி அளித்தான்‌. அவரவர்பெற்ற காட்சியே, அவரவருக்குப்பெரிதாகத்தோன்றியதால்‌, அதற்கு இணை எதுவுமில்லை என்று அவரவர்நம்பினர்‌. 

இது என்ன அவரவருக்கு ஒரு தனி தெய்வமா?! என்றால்‌, ஆம்‌! அது முடியும்‌. ஏனென்றால்‌, ஹிந்து மதம்ஒவ்வொரு தனி மனிதனையும்பார்த்துப்பேசுகிறது. மற்ற மதங்கள்‌, மனித சமூ கத்தைப்பார்த்துப்பேசுகின்றன; ஹிந்து மதம்அவ்வாறு சமூ கத்தைப்பார்த்துப்பேசுகிற இடங்களும்உண்டு என்றாலும்‌, பல நேரங்களில்இம்மதம்‌ , தனி மனிதனையே பார்த்துப்பேசுகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும்தன்னைத்தானே உயர்த்திக்கொண்டால்‌, சமூகம்தானாக உயர்ந்து விடும்‌. வேத காலத்திலிருந்து, இதிஹாஸ, புராண காலங்கள்தொடர்ச்சியாக, சரித்திர காலம்வரை இதுதான்ஹிந்து மத நம்பிக்கை, முயற்சி, முனைப்பு, எல்லாம்‌.

 இறை தத்துவம்ஒன்றே என்று உணரக்கூடிய ஞானத்தைப்பெறுகிற வரையில்‌, நம்மை அனாதைகளாக ஹிந்து மதம்விட்டு விடவில்லை. நம்மைக்கரை சேர்க்க, ஞானத்தின்பாதையில்நம்மை இட்டுச்செல்ல, சில அடிகளாவது எடுத்து வைத்து, ‘அது ஒன்றேஎன்ற நிலையை நோக்கி நாம்செல்ல, சற்குணம்பொருந்திய இறைவன்உருவெடுத்து வருகிறான்‌. அதுவும்‌, அவ ரவர்விரும்பியபடி

இந்தப்பின்னணியை மனதில்வைத்துக்கொண்டு, முப்பத்து மூன்று வேத கால தெய்வங்கள்எவை என்று பார்ப்போம்‌. இதைத்தவிரவும்தெய்வங்கள்குறிப்பிடப்படுகின்றன என்றா லும்‌, விரிவுரையாளர்கள்கருத்துப்படி இவையே வேதம்கூறும்முப்பத்து மூன்று தெய்வங்கள்‌. 

எட்டு வஸுக்கள்‌, பதினொரு ருத்ரர்கள்‌, பன்னிரண்டு ஆதித்யர்கள்‌, மற்றும்இந்திரன்‌, பிரஜாபதி, ஆக முப்பத்து மூன்று தெய்வங்கள்‌ – விண்ணுலக தெய்வங்கள்‌; மண்ணுலக தெய்வங்கள்‌: இடைப்பட்ட வானுலக தெய்வங்கள்என்று மூன்றாகப்பார்க்கப்படுகின்றன

இதில்ஆதித்யர்கள்‌, உலகத்தையும்மனிதர்களையும்கட்டுப்படுத்துகிற விதிமுறைகளின்இருப்பிடம்‌. மனிதர்கள்தங்களுக்குள்ளேயும்‌, இயற்கையின்சக்திகளுடனும்ஏற்படுத்திக்கொள்திற தொடர்புகள்அனைத்தும்‌, இந்த ஆதித்யர்களின்கட்டுக்குள்அடங்குபவை. இவர்கள்ஒளியைச்சார்ந்தவர்கள்‌. நண்பன்எனக்கூறப்படக்கூடிய மித்ரன்‌; பரந்து விரிந்து கட்டுப்படுத்துகிற வரு ணன்‌; எதிரிகளை அழிக்கும்அர்யமான்‌; திறமை படைத்த தக்ஷன்‌; வள்ளலாகிய பகன்‌; தாராள குணமுடைய அம்சன்‌; ௨௬ வமைக்கும்த்வஷ்டா; உயிரளிக்கும்ஸவித்ரு; புஷ்டியளிக்கும்பூஷன்‌; பெரும்சக்தி படைத்த சக்ரன்‌; பேரொளி வீசும்விவஸ்வான்‌; எங்கும்வியாபித்திருக்கும்விஷ்ணுஆகியோர்ஆதித்யர்கள்‌. 

எட்டு வஸுக்கள்‌, இயற்கையின்தன்மைகளைப்பிரதிபலிப்பவர்கள்‌. பூமியாகிய தரா; நெருப்பாகிய அனலன்‌; நீராகிய அபு; காற்றாகிய அனிலன்‌; நக்ஷ்த்திரமாகிய துருவன்‌; சந்திரனாகிய ஸோமன்‌; விடியலாகிய பிரபாஸன்‌; ஒளியாகிய ப்ரத்யூஷன்‌. 

ருத்ரர்கள்ஜீவராசிகளின்பிராணன்‌; பத்து சூக்ஷ்ம மூச்சுக்களும்‌, மனமும்சேர்ந்து பதினொரு ருத்ரர்கள்யார்யார்என்பதுபற்றி, வெவ்வேறு நூல்கள்வெவ்வேறாகக்கூறினாலும்‌ – பவன்‌, ஸர்வன்‌, ஈசானன்‌, பசுபதி, பிமன்‌, உக்ரன்‌, மஹா தேவன்‌, ருத்ரன்ஆகியேர்ருதீரர்கள்எண்வர்என்று பலராலும்கூறப்படுகிறது

இதெல்லாம்இவ்வாறிருக்க, வேதங்களில்மிகவும்முக்கிய மாக வர்ணிக்கப்படுகிற சில தெய்வங்களைப்பார்ப்போம்‌. இந்இரனைத்துதிக்கிற வேத மந்திரங்கள்அநேகம்‌. இவன்வஜ்ரா யுதத்தை உடையவனாகவும்‌, மனதைவிட வேகமாகச்செல்கிற ரதத்தில்செல்கிறவனாகவும்பார்க்கப்படுகிறான்‌. இருளை நீக்கி, ஒளியைத்தருபவனாகவும்இவன்கூறப்படுகிறான்‌. யுத்தகள தலைவனாக இவன்வர்ணிக்கப்படுவதால்‌, பின்னர்யுத்தங்களைச்சந்திக்கச்சென்ற போர்வீரர்கள்‌, முதலில்இந்திரனை வணங்கி விட்டுச்சென்றதாகப்புராணங்களில்கூறப்படுகிறது. இந்திர விழா விமரிசையாகக்கொண்டாடப்பட்டதாகத்தமிழ்நூல்கள்கூறுகின்றன

அக்னியும்வேதங்களில்முக்கியத்துவம்பெற்ற ஒரு தெய்வம்‌. பூமியில்நெருப்பிலும்‌, வானுலகில்மின்னலிலும்‌, விண்ணுலகில்சூரியனிலும்இவனுடைய அம்சமே காணப்படுவ தாகச்சொல்லப்படுகிறது. மனிதர்கள்படைப்பதை, தெய்வங்களுக்கு எடுத்துச்செல்கிற தேவதூதனாகவும்இவன்வர்ணிக்கப்படுகிறான்‌. மிகவும்சக்தி படைத்த இவன்‌, கருணை மிக்கவன்‌. இவன்இல்லாமல்பூவுலகு இல்லை என்று கூறப்படுகிறது

அஸ்வினி தேவர்கள்இருவர்‌. இவர்கள்பூமியும்‌ – வான மும்‌; இருளும்‌ – ஒளியும்என்றெல்லாம்வெவ்வேறாக வர்ணிக்கப்படுகின்றனர்‌. இந்த இரட்டையர்கள்இளமையும்அழகும்பொருந்தியவர்கள்‌. மருத்துவத்தில்நிபுணத்துவம்உடையவர்கள்‌. ஆரோக்கியம்‌, செல்வம்‌, உணவு ஆகியவற்றை அளிக்கிறவர்களாக இந்த இரட்டையர்கள்குறிப்பிடப்படுகின்றனர்‌. 

சூரியன்‌, வாயு என்று இன்னமும்கூறப்பட்டுள்ள சில தெய்வங்களைப்பார்ப்போம்‌. அதோடு, இது பற்றியெல்லாம்எழக்கூடிய கேள்விகளையும்‌, அவற்றுக்கான விளக்கங்களையும்பார்ப்போம்‌.