வேதங்கள் கூறுகிற முக்கியமான தெய்வங்களில் சூரியன் ஒருவன். ஒளியைத் தருபவன்; இருளுக்குக் காரணமாகிறவன்; ஜிீவராசிகளுக்குச் சக்தியை அளித்து, சோம்பலையும் நோயையும் விரட்டி அவற்றை இயங்க வைப்பவன். விடியலுக்குச் சற்று முன்பாகக் காணப்படுவது இவனுடைய அம்சமாகிய ஸவித்ரு; அந்நிலையில் அவன் மனிதர்களைச் சரியான வழியில் நடத்து கிறான். காயத்ரி மந்திரம் இவனை நோக்கியே ஓதப்படுகிறது. புஷ்டி அளிக்கிற இவனுடைய குணத்தினால், இவன் ‘பூஷன்’ ஆகிறான். இந்தக் கோணத்தில், இவனுடைய அம்சம் எல்லோ ரையும் சமப்பார்வையுடன் நோக்கி, தீமையை விரட்டி, நன் மையை தாராளமாக அளிக்கிற தன்மை உடையதாகிறது. வேதங் களில் குறிப்பிடப்படுகிற தெய்வங்களில், சூரியனே முதன்மை யானவன் என்று கருதுபவர்கள் உண்டு.
வருணன், உலகம் முழுவதும் வியாபித்திருப்பவன். வானமே, வருணனாக சில சமயங்களில் உருவகப்படுத்தப்பட் டாலும், நதிகள், சமுத்திரம் ஆகியவற்றுடன் இவன் சேர்த்துப் பேசப்படுகிறான். இவனுடைய அறிவும், சக்தியும் அளவற் றவை. மிகவும் விரிந்த பார்வையுடைய இவன், உலஇன் தர்மத் இன்பாற்பட்ட விதிமுறைகளை நிர்வகிக்கிறான். இந்தப் பாதையிலிருந்து தவறுபவர்களை வருணன், அப்படித் தவறு செய்ப
வர்கள் வருந்தி, துதித்து, இருந்தி விடுகிறபோது, அவர்களை மன்னிக்கும் கருணை உள்ளம் கொண்டவனாகவும் இருக்கிறான். பொதுவாக உலக வாழ்வின் சட்டதிட்டங்கள் இவனுடைய அதி காரத்திற்குட்பட்டவை என்று சொல்லலாம்.
உயிர் மூச்சின் உருவம் வாயு. இவன் இந்திரனுடன் சேர்ந்து, விண்ணுலகிற்கும் இடைப்பட்ட வானுலகில் அதிகாரம் செலுத்து பவன். மனிதர்கள் உடலின் உள்ளே, ஐந்து முக்கிய மூச்சுக் காற் றுகளாக இவன் விளங்குகிறான். இவன் மருத்துவனும்கூட என் பதால், நோய்களைத் நீர்ப்பவனும் ஆகிறான். உயிர்களுக்கு ஆதார மானவன் என்று இவன் வர்ணிக்கப்படுகிறான்.
அடக்குவது, கட்டுப்படுத்துவது, நிர்வகிப்பது – போன்ற வற்றைச் செய்பவன் யமன். இறந்தவர்களின் ஆன்மா இவனி டம் வசிக்கின்றன. இறந்தவர்களின் உலகை ஆள்வதால், இவன் அரசன் என்றும் வர்ணிக்கப்படுகிறான். உலகில் வாழ்பவர்களின் முன்னோர்களை எல்லாம் இவன் கருணையுடன் ஆதரிக்கிறான். இறந்தவர்களில் முதன்மையானவன் என்றும் அவனைப் பற்றி கூறப்படுகிறது. ஆந்தை, புறா ஆகியவை யமதூதர்களாக வர் ணிக்கப்படுகின்றன. ஆகையால் இவற்றின் வருகை, சாவைக் குறிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
புயல் காற்றின் தெய்வங்களான மருத்துக்கள் இந்திரனுக்கு உதவுகிறவர்கள். நோய்கள் குணமாவதற்கும் இவர்கள் வேண் டப்படுகிறார்கள். கோபம் கொண்டு, தீமையை அழிக்கிறபோது, இவர்களைக் கண்டு வானவர்களே நடுங்குவார்கள். இவர்கள் பன் மையிலேயே குறிப்பிடப்படுகிறார்கள்.
பூமி, பெண் தெய்வமாக வணங்கப்படுகிறது. தாயாகக் ௧௬ தப்படுகிறது. இறந்தவன் முதலில் தாயான பூமியின் மடிக்குப் போய்ச் சேருகிறான் என்று வேதம் கூறுகிறது.
‘ப்ருஹத்’ என்பது பெரிது; ‘பதி! என்றால், பாதுகாப்பவன். ப்ருஹஸ்பதி பெரிதாகிய உலகங்களைக் காப்பவன். ப்ருஹஸ் பதி, ப்ரும்மணஸ்பதி ஆகிய இரண்டு பெயர்களும் சில இடங் களில் வேதங்களில் சேர்ந்தே கூறப்படுவதால், இரண்டும் ஒன்றே என்று விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ப்ருஹஸ்பதி, அறிவாளி களில் மேம்பட்டவன்; துதிகளுக்கெல்லாம் அவனே அதிபதி; சொல்லின் தலைவன்; துஇப்பவர்களுக்குச் செல்வத்தை அளித்து, அவர்களை அனைத்து அபாயங்களிலிருந்தும் ப்ருஹஸ்பதி காப் பாற்றுகிறான்.
இந்த ப்ருஹஸ்பதியே, ப்ரும்மணஸ்பதி என்றும் குறிப்பிடப் படுவதைப் பார்த்தோம். இப்படி ஓதுகிற மந்த்ரத்தில், ‘கணபதி‘ என்ற வர்ணனையும் வருகிறது. அதாவது கணங்களின் தலை வன். இதுதான் பிற்காலத்தில் ‘விநாயகர்’ என்று புராணங்களில் பேசப்படுதநற தெய்வம். ஆக, ப்ருஹஸ்பதியே, விநாயகர். அவன் ஒரு கருமானைப் போல் செயல்பட்டு, உலகைப் படைத் தான் என்று வேதம் கூறுகிறது.
கர்மார இவ…
கருமானைப் போல…
என்று வேதம் கூறுகிறது. ஸம்ஸ்க்ருதத்தில் கர்மார, தமிழில் கருமான். கருமானைப் போல செயல்பட்டு, தனது மூச்சுக் காற் நினால், உலகைப் படைத்தான் ப்ருஹஸ்பதி. அப்படியானால், பிரம்மன் உலகைப் படைக்கவில்லையா? ஆம், பிரம்மன் படைத் தான். ப்ருஹஸ்பதியே பிரம்மனாகவும் வர்ணிக்கப்படுகிறான்.
.வேதங்களில், கிட்டத்தட்ட இந்திரனுக்கும் அக்கினிக்கும் நிகராக ஸோமன் போற்றப்படுகிறான். ஸோமன் குறிப்பாக உருவம் கொண்டவனாக வர்ணிக்கப்படாமல், ஸோமக் கொடியுடன் தொடர்புபடுத்தியே துதிக்கப்படுகிறான். ஸோம பானம், மது பானம் அல்ல; ஸுரா பானம் என்பதுதான் மது. ஸோம ரஸமோ, அமிர்தத்திற்கு நிகராகப் பேசப்பட்டு துதிக்கப்படுவது; இதனால்தான் யாகங்களில் ஸோம ரஸத்திற்கு முக்கியமான இடம் தரப்பட் டது. ஸோமன், நீர் நிலைகளின் சகோதரன்; ரிஷிகளில் உயர்ந்த ரிஷி என்றும் ஸோமன் போற்றப்படுகிறான்; அவன் நல்ல போர் வீரனும் கூட. உலகிலுள்ள ஜீவராசிகளுக்கு, உருவத்தைச் சமைத்து அளிப்பவன் பதவதச்சனாகிய த்வஷ்டா.
விச்வகர்மா சிறந்த அறிவாளி. சிருஷ்டியில் இவனுடைய செயல்பாடு இருப்பதால், இவன் ப்ரஜாபதியுடன் சேர்த்துப் பேசப்படுகிறான். ப்ரஜாபதி என்றால் ஜனங்களின் தலைவன்.
அவனே முதலில் உண்டானவன். ஜீவராசிகளுக்கு அதிபதி. ஜீவராசிகளின் அரசன் அவன். இவனே ப்ரம்மன் என்று கூறப் படுவதும் உண்டு. வேதத்தின் ஒரு பகுதியில் ஒரு கேள்வி எழுப் பப்படுகிறது.
கஸ்மை தேவாய ஹவிஷா விதேம
எந்த தெய்வத்திற்கு நமது சமர்ப்பணங்களை அளிப்போம்?
இப்படி எழுப்பப்படுகிற கேள்விக்கு, வேதமே அளிக்கிற பதில் – ‘ப்ரஜாபதி”.
இந்த மாதிரி சில முக்கியமான தெய்வங்கள் தவிர கடலிலி ருந்து தோன்றிய அப்ஸரஸ்கள், தெய்வத்தின் அம்சம் உடைய கந்தர்வர்கள், வீட்டைக் காக்கிற தெய்வமான வாஸ்தோஷ்பதி… போன்றவர்களைப் பற்றியும் வேதங்கள் பேசுகின்றன.
ஸரஸ்வதியை, ஒரு நதியாகவும், பெண் தெய்வமாகவும் வேதம் குறிப்பிடுகிறது. சொல்லுக்குத் தெய்வமாகவும் ஸரஸ் வதி போற்றப்படுகிறாள்.
பர்ஜன்யன் மேகங்களின் தேவன். மழையைத் தருபவன்.
‘சரி ப்ரும்மா, விஷ்ணு, சிவன் – ஆகிய மும்மூர்த்திகள் பற்றி வேதம் கூறவே இல்லையா?! இந்த மூவருமே வேதங்களில் பேசப்படுகின்றனர். ஆனால் இந்திரனுக்கோ, அக்னிக்கோ, சூரிய னுக்கோ உள்ளது போல அவ்வளவு பகுதிகள் இவர்களுக்கு ஒதுக் கப்படவில்லை. இதனால் வேதங்களில் இவர்கள் முக்கியமாகக் கருதப்படவில்லை என்ற ஒரு கருத்து, சில விரிவுரையாளர்களால் கூறப்படுகிறது. இதில் ஒரு படைப்பாளியாக வேதம் கூறுகிறது; மூவுலகையும் தமது இதிருவடிகளினால் அளந்தவர் என்று வர்ணிக்கப்படுகிற விஷ்ணு, பெரிதும் போற்றப்படுகிறார். சிவ னுக்கு ஸ்ரீ ருத்ரம் என்ற பகுதியே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் இவர்களுக்கெல்லாம் வேதங்களில் முக்கியத்து வம் இல்லை என்ற – வேதப் பகுதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துக் கூறப்படுகிற வாதம், ஏற்கத்தக்கது: அல்ல. எத்தனை முறை ஒருவன் போற்றப்படுகிறான் என்பதை விட, அவன் எவ்வாறு போற்றப்படுகிறான், அவனுக்குரிய குணாதிசயங்கள் என்ன, என்பவைதாம் முக்கியம். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இப்போது முறையே ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமை படைத்தவர்களாக துஇக்கப்பட் டாலும், வேதங்களில் மூவருக்குமே இந்தக் குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
உலகளந்த பெருமாள் என்ற பெயரில் விஷ்ணு வர்ணிக்கப் படுவதற்கு, ‘மூவடியால் மூவுலகை அளந்தவர்’ என்று கூறுகிற வேதமே ஆதாரம்; மையை அழித்து, பக்தர்களைக் காப்பாற்று இறவராக சிவன் இன்று வர்ணிக்கப்படுவதற்கு, வேதத்தில் வரு இற ஸ்ரீ ருத்ரம் ஆதாரம்; அதைப் போல படைக்கும் கடவுளாக பிரம்மன் கருதப்படுவதற்கும் வேத வாக்கியங்களே ஆதாரம்.
ஆகையால், மும்மூர்த்திகளுக்கு, வேதத்தில் முக்கியத்துவம் இல்லை என்று கூறுவது, வார்த்தைகளைத் தராசில் வைத்து, எடை போட்டுப் பார்த்து ‘இது கடினமானது, இது லேசானது என்று சொல்கிற வேலை. மகத்துவத்தைப் புரிந்து கொள்ள, வழி இதுவல்ல. சொல்லப்பட்ட விஷயத்தின் உன்னதத் தன்மையை உணர்வதற்கு வழி, வாக்கியத்தில் உள்ள கருத்தைப் பார்ப்பதே தவிர, அதன் நீளத்தை அளப்பது அல்ல.
ப்ரும்மா, விஷ்ணு, சிவன் – ஆகியோர் பற்றி வேதம் கூறு வதை அடுத்துப் பார்ப்போம்.