உருவங்கள், வாஹனங்கள் – சில விளக்கங்கள்

சிருஷ்டிபடைப்பு; ஸ்திதிஇருப்பதைக்காப்பது; ப்ரளயம்‌ – பேரழிவு. இந்த மூன்றிற்கும்உரிய தெய்வங்களாக முறையே ப்ரம்மதேவன்‌, விஷ்ணு, சிவன்ஆகியோரை ஹிந்து மதம்வழிபட்டு, மும்மூர்த்திகள்என்று கொண்டாடுகிறது. இதில்ஆஸ்திகர்கள்சிலருக்கே கொஞ்சம்மனக்குழப்பம்உண்டு. நாஸ்திகர்கள்‌ ‘எல்லாமே கற்பனை; பொய்‌; மோசடி! என்று கூறி நம்பிக்கையையே நிராகரிப்பதால்‌, அவர்களுக்குஇந்த மூவரில்யார்பெரியவர்‌?” என்ற கேள்வியே அநாவசியமானது. ஆனால்நம்பிக்கை உடையவர்கள்மனதில்சில நேரங்களிலாவது, ‘மும்மூர்த்திகளில்யார்பெரியவர்‌?! என்ற கேள்வி எழத்தான்செய்கிறது

இதில்ப்ரம்மதேவனைப்பற்றிக்கூட, அவ்வளவு சர்ச்சைகள்இல்லை; அவருக்குக்கோவில்கள்இல்லை என்பதாலோ என்னவோ, மற்ற இருவருடன்சேர்த்து வைத்துயார்பெரியவர்‌?” என்ற கேள்வியை ப்ரம்மதேவனைப்பற்றிப்பலரும்எழுப்புவ இல்லை. ஆனால்சிவனையும்‌, விஷ்ணுவையும்பற்றி அந்தக்கேள்வி இருக்கத்தான்செய்கிறது

இவர்கள்மூவருமே ஒன்றுதான்‌. அது மட்டுமல்ல, பல இடங்களில்ஒருவருக்குக்கூறப்படுகிற மேன்மைகளும்சிறப்புகளும், மற்றவர்களுக்கும் கூறப்படுகின்ரன. இறைவன் ஒருவர்தான் என்று வற்புறுத்துகிர அதே சமயத்தில் ஒவ்வொரு தனி மனிதனுடைய மனப்பக்குவமும் வெவ்வேறானது என்ற உண்மையை ஹிந்து மதம் உணர்ந்திருப்பதால், இறைவனை உணர்வதற்கு பல பாதைகளைக் காட்டுகிறது.

ஒரு மனிதன்காரியாலயத்தில்‌, மானேஜிங்க்டைரக்டராக, கெடுபிடியுடன்நடந்து கொண்டு, திறமை படைத்த நிர்வாகிஎன்ற பெயருடன்விளங்குகிறான்‌; அந்தத்துறையில்அவனை அறிந்தவர்கள்அவனை நிர்வாகியாகத்தான்பார்ப்பார்கள்‌. அதே மனிதன்‌, பெரிய டென்னிஸ்ஆட்டக்காரனாகவும்இருக்கிறான்‌; அந்தத்துறையில்அவனை அறிந்தவர்கள்அவனுடைய ஆட்டத்இறமையைத்தான்மதிப்பார்கள்‌. அவனே, ஒரு சமூக சேவை மையத்தின்செயல்பாடுகளில்தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, முனைந்து செயலாற்றுகிற போது, அதனுடன்தொடர்பு கொண்டவர்கள்அவனைச்சமூக சேவனாகத்தான்பார்ப்பார்கள்‌. நிர்வா தியாக அவனைப்பார்க்கிறவர்கள்‌, ‘ஆட்டக்காரனாவது ஒன்றா வது, இந்த நிர்வாகிக்கு நிகர்உண்டா?” என்று கேட்கலாம்‌. சமூக சேவகனாகப்பார்ப்பவர்கள்‌, ‘மகத்தான சேவை புரியும்இவ னுக்குச்சமம்யார்‌?” என்று நினைக்கலாம்‌. 

மூன்றுமே அவன்தான்‌. அவரவர்களுக்குப்பிடித்த வகையில்அவனைப்பார்க்கிறோம்‌. ஒரு மனிதனாலேயே இப்படிக்காட்சி யளிக்க முடியும்எனும்போது, இறைவனால்முடியாதா? ‘என்னை நீ முழுமையாக உணர்ந்து, என்தத்துவத்தை அறிந்து, என்னைத்தொழுதால்தான்‌, என்அருள்உனக்குக்இட்டும்‌!” என்று இறைவன்கூறுவதாக ஹிந்து மதம்நினைக்கவில்லை. இறைவன்கருணைமிக்கவன்‌. நாம்எல்லோருமே ஞானிகளாகி விட்டால்‌, அவனுக்குத்திருப்திதான்‌; ஆனால்‌ ‘அப்படி எல்லோ ரமே ஞானிகளாகி விடுவோம்என்று அவன்நினைக்கவுமில்வைஅப்படி ஞானம்பெறாதவர்களைக்கைவிடுவேன்‌’ – என்று அவன்கூறவும்இல்லை.

 ‘சரி. வா. உனக்கு எந்த ரூபம்பிடிக்கிறதோ, அந்த ரூபத்தில்நான்உனக்காக வருகிறேன்‌. நீ பக்தியுடன்ஓர்இலையைக்கொடுத்தாலும்‌, ஒரு துளிநீர்கொடுத்தாலும்அதை நான்ஏற்கறேன்‌! என்று கூறி, இறை உணர்வுக்கு இட்டுச்செல்லும்பாதை யில்‌, நம்மை அவன்அழைத்துச்செல்கிறான்‌. 

ஆகையால்‌, வெவ்வேறு வழிகளில்இறைவனை வழிபடு வது பற்றி நமக்கு எந்த மனக்குழப்பமும்தேவையில்லை. நாம்இன்று தீர்மானித்து, நாளை புரிந்து கொண்டு அதற்கு மறுதினம்ஞானம்பெற்று, இறைவனை உணர்ந்தவர்களாகவிட முடியாது. ‘இது படிப்பினால்பெறுவதல்ல; தவத்தினால்மட்டுமேதான்‌. இதைப்பெற முடியும்என்று வேதமே கூறுகிறது

தவம்என்பது, வெயில்‌, மழை பாராமல்ஒற்றைக்காலில்நின்றோ, முள்ளின்மீது அமர்ந்தோ செய்வது அல்ல. தவம்என்பது முயற்சி. சிரத்தையுடன்செய்யப்படுகிற முயற்சி. நம்பிக்கை யுடையவர்கள்இன்று செய்யக்கூடிய முயற்சி, இறைவழிபாடு தான்‌. அதற்குப்பலன்உண்டு என்று பகவத்கதை முதல்‌, பல புராணங்கள்உட்பட, வேதங்களில்ஆதாரத்துடன்கூறப்படுகின்றன

இந்தப்பின்னணியில்‌, மும்மூர்த்திகள்பற்றி வேதம்கூறுவ தைப்பார்ப்போம்‌. ப்ரம்மதேவன்‌, ஹிரண்யகர்பன்என்றும்வர்ணிக்கப்படுகிறான்‌. அதாவது தங்கம்போன்ற கர்ப்பம்‌. அந்த இப்பந்தத்திலிருந்துதான்‌, உலகம்உண்டாகியது என்று ஒரு வர்ணனை கூறுகிறது. சிருஷ்டியைப்பற்றிக்கூறப்படுகிற பல வர்ணனைகளில்இது ஒன்று. எல்லா ஜீவராசிகளும்அவனால்தோற்று விக்கப்பட்டவை என்பதால்‌ – அவன்பிரஜாபதி. தேவதச்சனா கிய விச்வகர்மாவும்அவனே என்றும்கூறப்படுகிறது. அவன்லோகங்களுக்கெல்லாம்அதிபதி என்பதால்லோகேசன்‌. காலம்அவனுக்குட்பட்டது. அறிவை அளிப்பவன்அவனே. நான்கு வேதங்கள்‌, நான்கு யுகங்கள்ஆகியவற்றிற்கு இருப்பிடம்என்ப தைக்குறிக்க அவன்நான்முகனாகக்காட்சியளிக்கின்றான்‌. 

ப்ரம்மதேவனே, ப்ரஹஸ்பதி என்றும்ப்ரஹ்மணஸ்பதி என்றும்கூறகிற விளக்கம்பற்றிச்சென்ற அத்தியாயத்தில்பார்த்தோம்‌. இந்த ப்ரஹ்மணஸ்பதி குறித்த வேத மந்த்ரம்இவ்வாறு அமைந்திருக்கிறது.

கணானாம்த்வா கணபதி(கும்‌) ஹவாமஹே 

கவிம்கவீனாம்உபமச்ரவஸ்தமம்‌. 

ஜ்யேஷ்டராஜம்ப்ரஹ்மணாம்‌ 

ப்ரஹ்மணஸ்பத : ச்ருவன்னூதிபி

ஸீத ஸாதனம்‌ 

மஹா கணபதையே நம

தேவ கணங்களுக்குத்தலைவனாக, அதன்காரணமாகக்கண பதி என்ற பெயரைப்பெற்ற உம்மைப்போற்றி அழைக்கின்றோம்‌. நீர்அறிவாளிகளுள்அறிவு மிக்கவர்‌. ஒப்பற்ற புகழ்படைத்தவர்‌. ஒளி படைத்தவர்களில்இறந்தவர்‌. வேதங்களுக்கு எல்லாம்நாயகர்‌. உமது பிடத்தில்எழுந்தருள்வீராக. மஹா கண பதியாகிய உமக்கு நமஸ்காரம்‌. 

இதில்கணபதி என்ற பெயர்வந்தாலும்‌, இந்தத்துதி ப்ரஹ்மணஸ்பதியைக்குறித்ததே. வேதங்களுக்கும்நாயகன்ப்ரம்ம தேவன்‌: அந்தச்சிறப்புடன்ப்ரஹ்மணஸ்பதி இதில்வர்ணிக்கப்படுகிறார்‌. இருவரும்ஒருவரே என்று கூறப்படுவதற்கு இதுவும்ஒரு சான்று

இந்த மந்த்ரத்தின்அடிப்படையில்‌, பிற்காலத்தில்விநாயகர்போற்றப்படுகிறார்‌. அதாவது ப்ரம்மதேவனாகிய, ப்ரஹ்மணஸ்பதியின்சிறப்புக்கள்விநாயகரிடம்அமைந்துள்ளன. அவ்வகை யில்பார்த்தால்‌, பிள்ளையார்கோவில்கள்எல்லாம்ப்ரம்ம தேவன்ஆலயங்களே! இவ்வாறு வாசிஷ்ட கணபதி என்பவரும்‌, கபாலி சாஸ்திரிகள்என்பவரும்தங்களது உரைகளில்கூறுவதாக, பல ஆண்டுகளுக்கு முன்சங்கர நாராயணன்என்ற வேத விற்பன்னர்நிகழ்த்திய உரைகளில்எடுத்துச்சொன்னார்‌. 

இதே போல, வேதங்களில்சூரியனுக்குக்கூறப்படுகிற இறப்புகளில்பல, விஷ்ணுவின்மேன்மைகளாக வர்ணிக்கப்படுவதையும்அவர்சுட்டிக்காட்டினார்‌. மஹா விஷ்ணு வாமன அவதாரத்தில்தனது காலடிகளால்மூவுலகையும்அளந்த நிகழ்ச்சி வருகிறது. இதற்கும்கூட வேதங்களே ஆதாரம்‌. மூவடிகளால்‌, மூன்று உலகங்களையும்விஷ்ணு அளந்ததாக வேதம்கூறுகிறது

வேதத்தில்‌, அதிதி, காச்யபன்ஆகியோருக்கு இந்திரனும்‌, விஷ்ணுவும்மகன்கள்என்றும்கூறப்படுகிறது. இந்திரனே, விஷ்ணுவைவிட வேதத்தில்அதிகம்போற்றப்படுகிறான்என்று கூறப்பட்டாலும்‌, விஷ்ணுவின்மகிமைகள்சிறப்பாகவே பேசப்படு இன்றன. புருஷ ஸுக்தத்தில்வர்ணிக்கப்படுகிற பரம புருஷன்விஷ்ணுவே என்ற கருத்துடையவர்களும்உண்டு

விஷ்ணுவின்பெருமைகளும்‌, மேன்மைகளும்எவராலும்அடைய முடியாதது! என்று ரிக்வேதம்கூறுகிறது. விஷ்ணுவின்அவதாரங்களில்சிலவற்றைப்பற்றியும்வேதமே சொல்இிறது. அவர்ஆதிசேஷன்மீது உறங்குகிறவர்‌. உறங்குகிறவர்என்றால்நம்மைப்போன்று தூக்கத்தில்ஆழ்ந்து விடவில்லை; அது யோகம்‌. சேஷம்என்றால்மீதி இருப்பது. ப்ரளயத்தில்எல்லாம்அழிந்து, அதன்பின்தொடக்கத்தில்‌ – ‘ஆதியில்‌ – இருந்தது அந்த மீதி (சேஷம்‌) தான்‌. அதுவே ஆதிசேஷன்‌. அனந்தன்என்றால்முடிவற்றது. அதுவும்அவனே. எங்கும்நுழைகிற சூரி யனே, எங்கும்வியாபித்திருக்கும்விஷ்ணுஎன்றும்விளக்கங்கள்கூறுகின்றன

சிவனைப்பற்றி வேதம்கூறுவதைப்பார்க்க, ருத்ரம்என்ற வேதப்பகுதியே முக்கியமானது. இதில்ருத்ரனைப்பற்றிக்கூறப்படுகிற வர்ணனைகளும்‌, துதிகளும்‌, பெயர்களும்கூட சிவனுக்கு அப்படியே பொருந்துகின்றன

நம : சிவாயஎன்கிற மந்திரமும்வேதம்கூறுவதே. திரு டர்களுக்கும்அதிபதி என ருத்ரன்வர்ணிக்கப்படுகிறான்‌. பக்தர்களின்உள்ளத்தைக்கவர்வதால்அவன்இப்படிப்போற்றப்படு வதாக விளக்கங்கள்கூறுகின்றன. ‘உள்ளம்கவர்கள்வன்‌” என்று ஞானசம்பந்தர்சிவனைப்பாடியதும்இதனால்தான்‌. மருத்துவர்களுள்சிறந்தவனாகவும்‌, யோகிகளின்தலைவனாகவும்ருத்ரன்வேதத்தில்போற்றப்படுகிறான்‌. இதைத்தவிர இந்திரனுக்குச்சொல்லப்படுகிற பல வர்ணனைகளும்‌, சிவனுக்குக்கூறப்படு இன்றன என்பது கவனிக்கத்தக்கது

லிங்க வடிவத்தில்சிவன்வழிபடப்படுவதில்‌, ஒரு தத்துவம்அடங்கி உள்ளது. லிங்கத்தின்நடுவில்உள்ள தண்டுருத்ர பாகம்‌; அதன்அடிப்பகுதிப்ருமம்பாகம்‌; மையத்தில்உள்ள பகுதிவிஷ்ணு பாகம்‌. ஆக ப்ரம்மா, விஷ்ணு, சிவன்எல்லாமே ஓர்உருவமாக, சிவலிங்கமாக வழிபடப்படுகிறது. சிவன்‌ – என்பதற்கு, ‘பேரழிவின்போது சகல படைப்புகளும்உறைகிற இடம்‌! என்ற ஒரு பொருள்கூறப்படுகிறது. இதே பொருள்லிங்கம்என்ற சொல்லிற்கும்உண்டு. பொதுவாகச்சிவம்என்றால்மங்களம்‌; அதற்கு சின்னம்லிங்கம்அதாவது சுபத்தின்சின்னம்சிவலிங்கம்‌. 

சங்கரநாரயணன்பிரசங்கங்கள்பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன்‌. அவர்சுட்டிக்காட்டிய, கபாலி சாஸ்திரிகளின்ஆராய்ச்சி விளக்கம்பற்றியும்கூறியிருந்தேன்‌. அதே விளக்கத்தில்முருக னுக்கும்‌, வேதத்திற்கும்உள்ள தொடர்பு பற்றியும்கூறப்பட்டிருக்கிறது

வேதத்தில்அக்னி, சேனைத்தலைவனாக வர்ணிக்கப்படு இறாொன்‌; சுப்ரமண்யர்என்கிற முருகனும்தேவசேனாபதி. வேதத்இல்மண்ணுலகையும்விண்ணுலகையும்தொடர்புபடுத்துகிறவன்அக்னி; விண்ணுலக தேவசேனையையும்‌, மண்ணுலக வள்ளி யையும்மணந்து, இந்தத்தொடர்பை ஏற்படுத்தியவர்முருகன்‌; அக்னி, சொல்லை ஏற்படுத்தியவர்‌; முருகன்‌, ஞானத்தை உணர்த்து பவன்‌. அக்னிக்குப்பிறப்பிடம்நீர்‌; சுப்ரமண்யரும்நீரில்தான்உதித்தவர்‌. அக்னிக்கு ஏழு தாய்மார்கள்என்று வேதம்கூறுகிறது. ஆறு கன்னிகளும்‌, பார்வதியுமாக ஏழு தாய்மார்கள்முருகனுக்கும்கூறப்படுகின்றது. இது மட்டுமல்ல. சுப்ரமண்யருக்கு உரிய கிரஹம்செவ்வாய்‌; அக்னிஅங்காரகன்‌. 

நவக்ரஹங்களைப்பூஜிக்கும்போதுகூட, வேத மந்த்ரங்கள்ஓதப்பட்டு, வேதத்திலிருந்து வருகிற தொடர்பு வலியுறுத்தப்படு இறது. வாஹனங்களுக்கும்கூட வேதத்தொடர்பு எத்தகையது என்பது விளக்கப்பட்டிருக்கிறது

ஆதிசேஷனைப்பற்றி மேலே பார்த்தோம்‌. கருத்மா என்ப வன்இறவாமையை அளிப்பவனாக வேதங்களில்வர்ணிக்கப்படுகிறான்‌; இவனே இறப்பின்மையைத்தருகிற அமிர்தத்தைக்கொண்டு வந்த கருடனாக, புராணங்களில்வணங்கப்படுகிறான்‌; வேதங்களில்‌, கருத்மா இரட்டை நாக்குடைய நேர்மையற்ற மனி தர்களைத்தண்டிப்பான்‌; இதைக்குறிக்கிற வகையில்‌, கருடன் இரட்டை நாக்குடைய பாம்பைக்கொத்திக்கொல்கிறான்‌. ஹம்ஸம்அறிவுக்குச்சின்னமாக வேதத்தில்வர்ணிக்கப்படுகிறது; அதுவே ப்ரம்மதேவனின்வாகனமாக புராணத்தில்கூறப்படுகிறது. வேதத்தில்அக்னிக்குச்சிகை உண்டு; சிகை என்றால்முடி (கிரீடம்என்பது போல); சிகி என்றால்மயில்‌; அதுவே முருகனின்வாகனம்என்று புராணங்களில்குறிக்கப்படுகிறது.

இப்படி இன்று வணங்கப்படும்தெய்வங்கள்‌, வெவ்வேறு உருவங்கள்கொண்டதாக இருந்தாலும்‌, அனைத்துமே வேதத்துடன்தொடர்பு கொண்டவையே. ஆகையால்வேதங்களில்கூறப்பட்ட தெய்வங்களை மறந்துவிட்டு, இன்று வேறு ஏதேதோ கற்பனை தெய்வங்கள்வணங்கப்படுகின்றனஎன்ற கூற்று ஏற்கத்தக்க தல்ல. வேதங்களின்தொடர்பு இன்றும்உள்ளது என்பதைத்இரு மணம்‌, உபநயனம்போன்றவற்றில்ஓதப்படுகிற மந்திரங்களில்இருந்தும்‌, ஹோமங்கள்‌, பூஜைகள்ஆகியவற்றில்கூறப்படுகிற மந்திரங்களிலிருந்தும்உணர்ந்து கொள்ளலாம்‌. அவையெல்லாம்வேத மந்திரங்களே. அவை இடம்பெறாத சுப நிகழ்ச்சிகளும்கிடையாது; இறுதிச்சடங்கும்கூட கிடையாது

இப்படி, இதுதான்தொடக்க காலம்‌ – என்று அறுதியிட்டு கூற முடியாத காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வருகிற சாஸ்வதமான விஷயமாக இருப்பதால்தான்‌, இது சனாதன தர்மம்என்று அழைக்கப்படுகிறது

இவையெல்லாம்அனாவசியம்என்று கருதுகிறவர்களுக்கும்‌, ‘இவற்றையெல்லாம்தெரிந்து கொண்டு, என்ன செய்யப்போகி றோம்‌” என்று நினைப்பவர்களுக்கும்‌ – ஒரு சம்ஸ்க்ருத வழக்குச்சொல்லில்ஆதரவு கிடைக்கிறது

தக்ரம்சக்ரஸ்ய துர்லபம்‌ 

மேலுலகில்மோர்கிடைக்காதே

மோரின்சுவை பெரிது, மேலுலகில்அது இல்லைஎன்பது போன்ற பொறுப்பற்ற எண்ணத்தை விடுத்து, இந்தச்சுவை என்ன என்பதை அறிய முயல்வோம்‌.