ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து – இறைவனின் சுவாசக் காற் றாக, அவனுடன் சேர்ந்தே வேதங்களும் இருந்தன என்பதால், வேதங்களின் தொடக்கத்தை யாராலும் அறுதியிட்டுக் கூற முடி யாது என்பதையும் கவனித்தோம். அவற்றை வரிசைப்படுத்தி, வகுத்து, இன்று காணக் கிடைக்கிற அமைப்பில் தந்தவர் வியாசர் என்பதையும், இது வாய்மொழியாகவே வந்திருக்கிறது என்ப தையும் பார்த்தோம்…
மேலும், வேத மந்த்ரங்களின் அர்த்தத்திற்கு மட்டுமல்லாமல், ஒலிக்கும் உள்ள சக்தி; மந்த்ரங்களின் அர்த்தங்கள் பல இடங் களில் மறைபொருளாக அமைந்திருக்கும் விவரம்; மந்திரங்களின் தொகுப்பாகிய ‘சம்ஹிதை‘, சடங்குகள் விவரிக்கப்படுகிற ‘ப்ராம்மணம்’, இவற்றை விளக்கிச் சொல்கிற ‘ஆரண்யகம்’ – என்று மூன்று பகுதிகளாகவும் – அதைத் தொடர்ந்து இறுதிப் பகுதியாக உபநிஷத்துகளும், வேதங்களில் அடங்கி இருக்கின்றன – ஏன்ற விவரம்…
ஸோமபானம் அமிர்தத்திற்கு நிகரானது என்று கூறப்பட்டு இருப்பதையும், சுராபானம்தான் மதுவே தவிர, ஸோமபானம் அல்ல என்ற விளக்கமும்; இரு பொருளுடைய வேத வாக்கியங் கள் பல உண்டு என்பதற்குச் சில உதாரணங்கள்; யாகங்களில் உயிர் பலி இல்லை என்ற விளக்கம்; வேதங்களில் கூறப்பட்டு இருக்கிற பல நன்மொழிகளும், அவற்றில் வலியுறுத்தப்பட்டி. ௬க்கிற அனைவரும் சமமே என்ற கருத்தும்…
யாகங்கள் போன்ற கர்மங்களைச் செய்வதே போதும் என்று வலியுறுத்திய பூர்வமீமாம்ஸை பற்றிய தகவல்கள்; இதைப் பெரிதும் பரப்பிய குமாரிலபட்டர் வரலாறு; குமாரிலபட்டர் உயிர்த் தியாகம் செய்ய இருந்த நிலையில் அவரைச் சந்தித்த ஆதிசங்க ரர், பின்னர் மண்டனமிச்ரர் என்ற பூர்வமீமாம்ஸகரைச் சந்தித்தது; அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தின் இறுதி யில், ஆதிசங்கரர் முன் வைத்த வாதங்களால் கவரப்பட்டு, மண் டனமிச்ரர் ஞானமார்க்கத்தை ஏற்றது…
ஆறு தத்துவங்கள் பற்றிய விவரங்கள்; சிருஷ்டியைப் பற்றிக் கூறுகிற புருஷ ஸூக்தம்; அனைவருக்குமே யாகங்களைச் செய்ய அதிகாரம் உண்டு என்பதற்கான ஆதாரம்…
வேதங்களில் கூறப்படுகிற தெய்வங்கள்; இன்று வணங்கப் படுகிற தெய்வங்களின் குணாதிசயங்களுக்கும், வேதத்தில் கூறப் படுகிற தெய்வங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள்; மும்மூர்த்திகள் பற்றி வேதங்கள் சொல்வது… _
– ஆகியவற்றை இதுவரை பார்த்தோம்.
இனி, வேதங்களின் இறுதிப் பகுதியாகிய, உபநிஷத்துக்கள் பற்றிய ஓர் அறிமுகத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, வேதங்களில் காணப்படுகிற வேறு சில விஷயங்களைப் பார்ப்போம்.
உலக அமைதிக்காக வேண்டிக் கொள்கிற மந்த்ரங்களை வேதங்கள் கூறுகின்றன. அதே சமயத்தில், ஒரு மக்களுக்கு விரோதி கள் வளரக்கூடும் என்பதையும் உணர்ந்து, எதிரிகளை அழிப்ப தற்கான மந்த்ரங்களையும் வேதங்கள் சொல்கின்றன. கல்வி அறிவு பெறுவதற்காக, அறவழி மேலோங்குவதற்காக, நியாய மான ஆசைகள் நிறைவேறுவதற்காக, நீண்ட ஆயுளுக்காக, வியாதி நீங்குவதற்காக, பாம்புக் கடியின் விஷம் அகலுவதற் காக, ஓதப்பட வேண்டிய வெவ்வேறு மந்த்ரங்களும் வேதங் களில் உள்ளன. இவற்றில் பலவற்றுக்குத் தேவைப்படுகிற மூலிகைகள் பற்றியும் வேதங்கள் பேசுகின்றன. இறக்கும் தருவாயில் இருக்கிற மனிதனைக் காப்பாற்றி, நல்ல ஆரோக்கியத்துடன் வைப்பதற்கான மந்த்ரமும் இருக்கிறது. பாதுகாப்பிற்காகவும், பல நன்மைகளைப் பெறுவதற்காகவும் அணிய வேண்டிய மணிகள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.
ஆட்சி முறை பற்றி வேதம் விரிவாகக் கூறுகிறது. அரசனுக்கு முடிசூட்டும் விழா நடக்கிற போது, அவனைப் பார்த்து, ‘இந்த ராஜ்யத்திற்கு அதிபதியாக நீ முடி சூட்டப்படுகிறாய். நீயே எங் கள் அரசன்; எப்போதும் நெறி தவறாமலும், உறுதி குன்றாமலும் இருப்பாயாக! மக்களில் அனைவரும் உன்னை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வாயாக! இந்த மாபெரும் ராஜ்யத்திற்கு உன்னால் எந்தத் இங்கும் நேரிடாமல் இருக்கட்டும்! – என்று மந்த்ரங்கள் ஓதப்படுகின்றன. மேலும் அரசனுக்குக் கூறப்படுகிற வாழ்த்துக்களில், வேதகால சிந்தனை வெளிப்படுகிறது.
‘உண்மையின் பாதையிலேயே செல்வாயாக; செயல்திறனும், _ அறிவுத்திறனும் கொண்டுசெயல் படுவாயாக; உன்னுடைய பட் டாபிஷேக நேரத்தில் உன்னைத் தெய்வங்கள் ஆசர்வதக்கட்டும்; ராஜ்யத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி மேலோங்கட்டும்; உன்னால் ஆளப்படுகிற மக்கள் எல்லா செழிப்பையும், புகழை யும் பெற்று விளங்கட்டும்; மகிழ்ச்சியின் ஊற்றாக நீ விளங்கு வாயாக! மனிதர்களிலேயே சிறந்தவனாக நீ திகழ்வாயாக! மக் களை நீ ஹிம்சிக்காதே; அவர்கள் உனக்குத் தீங்கு நினைக்கமாட் டார்கள். உன்னால் எல்லா நன்மைகளும் விளையட்டும்’ – இப் படி முடிசூட்டப்படுகிற அரசன், பதவிப் பிரமாணம் ஏற்பது போல சில வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.
இந்நாட்டின் அரசனாக நான் பொறுப்பேற்கிறேன். இந்த நாட் டுனுடைய நிர்வாக அம்சங்கள் பலவும் என்னுடைய உடலின் அங்கங்களாகத் இகழும். ராஜ்யத்தின் செழிப்பு – என்னுடைய முகம் ஆகும். ராஜ்யத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை – என்னு டைய உயிர் மூச்சு ஆகும். இந்தச் சிம்மாசனம் – என்னுடைய கண்கள். அறிவுசான்ற மக்களின் சபைகள் – என்னுடைய காதுகள். தர்ம நெறிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் பெயராலேயே என் ஆட்சி நடக்கும்” – இவ்வாறு பதவிப் பிர மாணம் ஏற்கிற அரசன், சில வாக்குறுதிகளைக் கூறுகிறான்.
‘அன்பான வார்த்தைகளையே என் நாக்கு பேசும். என் சொற் கள் ராஜ்யத்திற்கு மேன்மை தரும். தீயவர்களின்பால் பெரும் கோபத்தை, என் மனம் விளைவிக்கும். என்னுடைய தோள்கள் ராஜ்யத்தைத் தாங்கும். என்னுடைய கைகள் பலம் பெற்றுத் திக மும். என்னையே நான் கவனித்துக் கொள்வது போல, என் மக்களை நான் கவனித்துக் கொள்வேன். இந்த ராஜ்யத்தின் மேன்மை யும், செழிப்பும் ஒங்கி நிற்பதற்கு நான் உழைப்பேன். மேலோர் கள் வாழ்த்துகிற வகையில் என் ஆட்சி அமையும். இந்தப் பணி யில், தெய்வங்கள் என்னைக் காக்கட்டும்”.
இதைத் தொடர்ந்து, ராஜ்யத்திற்கே மேன்மை தருகிற வகை யிலும், மக்களுக்கு நன்மை புரிகிற வகையிலும், தான் ஆட்சி செய்வதற்காகத் தெய்வங்களை எல்லாம் அரசன் வேண்டிக் கொள் கிறான்.
ஆட்சியைப் பற்றி வேதங்கள் கூறுகிறபோது, ‘ராஜ்யம் மனித உடலைப் போன்றது. பாசறைகள் – அந்த உடலின் தோள்கள்; அறநெறி வகுக்கிற பாதை – அந்த ராஜ்யத்தின் ஆன்மா; கற்றறிந் தவர்கள் – அந்த ராஜ்யத்தின் கால்கள். எந்த உடலிலுமே கால் கள் அதிதியினுடையவை. அதுவே ஒரு ராஜ்யத்தின் அரசனுக்கு ரிய இடமாகிறது‘ என்று சொல்கிறது.
இந்த இடத்தில் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். புருஷ ஸூக்தத்தில், ‘ப்ராமணன் வாயிலிருந்தும், க்ஷத்ரியன் தோள்களி விருந்தும், வைசியன் தொடையிலிருந்தும், சூத்ரன் கால்களி லிருந்தும் தோன்றினார்கள்! என்று கூறப்பட்டிருப்பதை வைத்து, பல விமர்சனங்கள் எழுந்துள்ளதை முன்பே கவனித்தோம். கால் கள் இழிவுடையவை அல்ல என்பதை, இங்கே அரசனே கால் களோடு ஒப்பிடப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, கால்களுக்குரியவள் அதிதி என்றும் கூறப்படுகிறது. அதிதிதான் தேவர்களின் தாய். ஆகையால் கால்கள் என்று சொன் னாலே ஏதோ இழிவு என்று நினைத்துக் கொள்வது தவறு. உட லைத் தாங்கி நிற்பவை கால்கள்; ராஜ்யத்தைத் தாங்கி நிற்பவன் அரசன்; தேவர்களைத் தாங்கி நிற்பவள் அதிதி; சமூகத்தைத் தாங்கி நிற்பவன் சூத்ரன். அதனால்தான் அரசனும், அதிதியும், சூத்ரனும் கால்களோடு ஒப்பிடப்படுகிறார்கள். சூத்ரன் என்ற வார்த்தையின் வேரைப் பார்த்தால், ‘தாங்குவது‘ என்பதே மூலச் சொல். தாங்கி நிற்பவன் சூத்ரன். ஆகையால் அதில் இழிவு கிடையாது.
வருடத்திற்கு மூன்று முறை அரசன் தன்னுடைய ராஜ்யத்தைச் சுற்றிலும் பயணம் செய்து, மக்களை நேரில் சந்தித்து, அவர்களு டைய குறைகளைக் கேட்டறியும் வழக்கமும் வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. எந்தெந்த பணிக்கு என்ன என்ன தகுதியும், அனு பவமும் உடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் விவ ரிக்கப்படுகிறது. ‘எல்லாவற்றையும் பற்றிக் கேள்வி கேட்பவனை நியமித்தால், அவன் மூலமாகச் சிந்தனை தூண்டப்பட்டு அரச னின் அறிவு வளர்ச்சி பெறும் என்றுகூட வேதம் கூறுகிறது.
உளவாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்; எதிரிகளிடையே பிளவைத் தோற்றுவிக்க எத்தகையவர்களை நிய மிக்க வேண்டும் என்பதெல்லாமும் விவரிக்கப்படுகின்றன. குளங்களைச் சுத்தப்படுத்தி தூர் வாருவது முதல், ராணுவத்தைச் சீராக வைப்பது வரை பல்வேறு பணிகளும் விவரிக்கப்படுகின் ஐன. ‘அரசனே! உன்னுடைய பிரதம நிர்வாகி நன்கு கற்றறிந்தவ னாக இருக்க வேண்டும். உன்னுடைய செயல்களில் உள்ள குறை களைத் தயங்காமல் எடுத்துச் சொல்பவனை இந்தப் பணியில் அமர்த்தினால், அரசு காரியங்கள் செவ்வனே நடக்கும்! என்றும் வேதம் அரசனுக்கு அறிவுரை கூறுகிறது.
வேதங்கள் தோன்றிய காலம் எது என்பதே தெரியாது. அவை அவ்வளவு பழமையானவை. அப்போது, ஆட்சி முறை என்று ஒன்று உலகில் எங்கும் அமைந்ததே கிடையாது. அரசன் என் றும், நிர்வாகிகள் என்றும், ராணுவ வீரர்கள் என்றும், வெவ் வேறு பணிகளுக்கான தனித்தனி அதிகாரிகள் என்றும், உலகில் வேறு எந்தப் பகுதியும் கேள்விப்பட்டதும் கிடையாது. அப்ப டிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இங்கே இவையெல்லாம் தெளி வாகக் கூறப்பட்டிருக்கின்றன. அறநெறி சார்ந்த ஆட்சி முறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் மக் கள் அனைவரையும் பாதுகாப்பது அரசனின் கடமை என்பதும் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும்விட அதிசயிக்கத்தக்க ஓர் அம்சமும் உண்டும். பாராளுமன்ற ஆட்சி முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியது பிரிட்டிஷார்தான் என்பது தற்கால சரித்திரம். ஆனால் வேதங்களிலேயே இதற்கான தொடக்கம் இருக்கிறது. அடுத்த அத்தியாயத்தில் அதைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.