அன்றைய பாராளுமன்றம்

இன்றும்பாராளுமன்றத்தில்சபாநாயகரின்வருகையை சபைக்கு அறிவிக்கும்போது, மார்ஷல்உரக்கக்கூவிச்சொல்கிற வார்த்தைகள்கூட வேதத்தொடக்கம்உள்ளவைதான்‌. ஸபை அங்கத்தினர்களைப்பார்த்து, ‘மரியாதைக்குரிய ஸபாஸதயர்களே, மரி யாதைக்குரிய ஸபாபதி வருகிறார்‌! என்று கட்டியம்கூறப்படு கிறது. இதில்ஸபாஸதயர்கள்என்பதும்‌, ஸபாபதி என்பதும்வேதங்களில்வருகிற வார்த்தைகள்‌. ஆம்‌! அன்றேகூட, ஸபை இருந்திருக்கிறது. அங்கத்தினர்கள்இருந்திருக்கிறார்கள்‌. ஸபைத்தலைவரும்இருந்திருக்கிறார்‌. 

கிராமங்களில்இருந்த அமைப்புகளுக்குப்பெயர்ஸமிதி. ராஜ்யத்திற்குப்பொதுவாக இருந்தது ஸபை. ஸமிதிகளில்உறுப்பி னர்கள்அதிகம்‌. சபையில்அதை விடக்கொஞ்சம்குறைவு. இது பற்றிய சில வேத மந்த்ரங்களைப்பார்ப்போம்‌: 

ஸபையும்‌, ஸமிதிகளும்அரசனுக்கு முறையான விவரங்களைத்தெரிவிக்கட்டும்‌. ஹே! ஸபையே! நீ அழிக்க முடியாதது. உன்னுடைய அங்கத்தினர்கள்பாரபட்சமின்றியும்‌, நடுநிலையுட னும்அரசனுக்கு ஆலோசனை கூறட்டும்‌. உன்னுடைய அங்கத்இினர்களின்அறிவுடமையை அரசன்ஏற்கிறான்‌… 

லபையின்அங்கத்தினர்களே! ஸபை நடவடிக்கைகளில்நீங்கள்ஈடுபட்டிருக்கும்போது, மற்ற சிந்தனைகள்உங்கள்கவனத்தைத்இருப்பாமல்இருக்கட்டும்‌. அரசு காரியத்தில்உங்கள்மனங்கள்முழுமையாக ஈடுபடட்டும்‌. ‘

ஸபையினரிடையே ஓர்ஒற்றுமை நிலவ வேண்டும்என்ற விருப்பத்தைக்கீழ்க்கண்ட மந்த்ரம்தெரிவிக்கிறது

ஸமானீவ ஆகத

ஸமானா ஹ்ருதயானி

ஸமானமஸ்து வோ மன

யதா வா ஸுஸஹாஸதி.

 உங்கள்உணர்வுகளும்‌, இதயங்களும்ஒற்றுமையுடன்இருக்கட்டும்‌. உங்கள்மனங்கள்ஒருமையோடு இயங்கட்டும்‌. 

மற்றொரு வாக்கியம்இவ்வாறு கூறுகிறது

வித்ம தே ஸபே நாம நரிஷ்டா 

நாம வா அஸி 

சபை பிறரால்கலைக்கப்பட முடியாததாகவும்‌, அவமதிக்கப்படத்தகாததாகவும்இருக்க வேண்டும்‌. 

அரசனுக்கு ஆலோசனை சொல்ல ஒரு ஸபை; அதற்குட்பட்ட ஸமிதிகள்என்ற கிராம அமைப்புகள்‌; இவற்றின்அவ மதிக்கப்படாத தன்மை; ஒருமுகத்துடன்செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டிய கடமைபோன்ற விவரங்களைப்பார்க்கும்போது, இன்றைய பாராளுமன்ற முறைக்கு, அன்றே ஒரு தொடக்கம்இருந்தது என்பது தெளிவாகவே புரிகிறது

ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்எழுதியுள்ளவேத விஜ்ஞா னம்‌! என்ற நூலில்இது தொடர்பாக வேதங்களில்மேலும்கூறப்பட்டிருக்கும்சில விவரங்களைத்தந்திருக்கிறார்‌.

 ‘ஒரு விஷயத்தை ஸபையில்உள்ள பலர்சேர்ந்து ஏற்றுக்கொண்டால்‌, அது மீற முடியாததாகிறது. ஸயையை அவமதிப்பவன்கிராமத்தை விட்டும்‌, ராஜ்யத்தை விட்டும்விலக்கத்தக்கவன்‌. ஸமிதிகளின்மூலம்மக்கள்தங்கள்குறைகளை அரசனுக்குத்தெரிவிக்கலாம்‌. 

ஸபைக்கு அரசன்வந்ததும்‌, தனது அபிப்பிராயத்தைக்கூறி, அது பற்றி ஸபையின்கருத்து என்ன என்று கேட்க வேண்டும்‌. ஸ்பை என்ன தீர்மானிக்கிறதோ, அதை அரசன்ஏற்க வேண்டும்‌”

ஸபைக்கும்‌, ஸமிதிகளுக்கும்எவ்வளவு உயர்ந்த இடம்தரப்பட்டிருந்தது என்பதை வேதத்தில்வரும்ஒரு வாக்கியத்தில்இருந்து புரிந்து கொள்ளலாம்‌. 

ஸபா ஸமிதிஸ்சாவிதாம்

ப்ரஜாபதேர்துஹிதரெள ஸம்விதானே 

ஸபையும்‌, ஸமிதியும்ப்ரம்ம தேவனின்பெண்களாவார்கள்‌. 

அதாவது இந்த இரு அமைப்புகளையும்‌, மக்களின்நலனுக்காகவே ப்ரம்மன்சிருஷ்டி செய்தான்என்று வேதம்கூறுகிறது. ஆகையால்பலர்கூடி விவாதித்து அரசுக்கு உத்தரவிடுகிற காலத்இலேயே ஒரு முக்கியமான தொடக்கம்இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது

இது ஒருபுறம்இருக்க, வேதங்களில்உணவு உற்பத்திக்குப்பெரும்முக்கியத்துவம்அளிக்கப்படுகிறது. பயிர்தொழில்பெரி தும்போற்றப்படுகிறது. ‘கலப்பை பிடிக்கும்கலையை அறிந்த வர்கள்அறிஞர்கள்என்று வேதம்அவர்களைப்புகழ்கிறது. மேலும்பல தொழில்களும்‌, அவற்றைச்செய்தவர்களும்போற்றப்படுகிறார்கள்‌. சொல்லப்போனால்தொழிலாளிகள்துதிக்கப்படுகிறார்கள்‌. தச்சர்கள்‌, கருமான்கள்‌, அம்புகளைத்தயார்செய்பவர்கள்‌, வேட்டையாடுபவர்கள்‌, நாய்களைப்பழக்குகிறவர்கள்‌, சிற்ப வேலை செய்பவர்கள்‌, மண்பாண்டம்செய்பவர்கள்‌, தேர்களைச்செய்பவர்கள்‌… என்று ஒவ்வொரு வகைத்தொழிலாளிகளாகக்குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு நமஸ்காரம்என்று கூறி வேதம்துதிக்கிறது. ஆக, எந்தத்தொழிலுமே இழிவானதாகக்கருதப்படவில்லை

பலவிதமான இயந்திரங்கள்பற்றி வேதங்கள்பேசுகின்றன. “குதிரை பூட்டப்படாமல்‌, செல்லக்கூடிய ரதத்தில்போகின்றேன்‌! என்ற வாக்கியம்ரிக்வேதத்தில்வருகிறது. ‘காற்றை ரதத்தின்சக்கரத்தில்ஏற்றி, அந்த ரதத்தை ஓட்டுங்கள்‌! என்று இன்னொரு வேத வாக்கியம்கூறுகிறது

 “சமுத்திரத்தின்மேல்எங்கும்செல்லக்கூடியதும்‌, கடலின்அலையைத்தாங்கக்கூடியதுமான கப்பலை, சாமர்த்தியசாலி ஓட்டிச்செல்கிறான்‌” என்பதும்ஒரு வேத வாக்கியம்‌. வீடு கட்டும்கலை பேசப்படுகிறது. வணிகத்துறையைப்பெரிதும்முக்கிய மாகக்கருதி பல இடங்களில்வேதம்பேசுகிறது. கடல்கடந்து வியாபாரம்செய்யப்போனவர்கள்ஓர்ஆபத்தும்இல்லாமல்இரும்பி வந்து சேர வேண்டும்என்ற துதியை ஒரு வேத மந்த்ரம்கூறுகிறது

இப்படி, மேலை நாடுகளிலிருந்துதான்உலகமே பெற்றது என்று இன்று கருதப்படுகிற பல விஷயங்களைப்பற்றி, வேதங்கள்பேசுகின்றன. போர்முறை பேசப்படுகிறது. மருத்துவம்சொல்லப்படுகிறது. வான சாஸ்திரம்கூறப்படுகிறது. உலோகங்களைப்பற்றி விவரங்கள்இிடைக்கின்றன. வேதத்தில்தாய்நாடு விசேஷமாகப்போற்றப்படுகிறது என்பதும்குறிப்பிடத்தக்கது. இப்படி அரசியலிலிருந்து, ஆன்மீகம்வரை பல விஷயங்கள்‌! எவ்வளவு நுட்பங்கள்‌! எத்தனை விவரங்கள்‌! எவ்வளவு விமர்ச னங்கள்‌! எத்தனை கேள்விகள்‌! எத்தனை விளக்கங்கள்‌! 

இப்படிப்பட்ட ஒரு மாபெரும்சிந்தனை ஊற்று, நமது நாட்டில்இருந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்‌. உலகில்வேறு மதங்கள்தோன்றாத நிலையில்‌, வேறு இலக்கியங்கள்உருவாகாத நேரத்தில்‌, இங்கே வேதங்களைக்கண்டு, இவ்வளவு விஷயங்களை ரிஷிகள்அள்ளித்தந்திருக்கிறார்கள்‌. 

இப்படிப்பட்ட வேதங்களைப்பற்றிப்பலவிதமான விமர்சனங்களை நாம்சந்திக்கிறோம்‌. இரட்டை அர்த்தமுள்ள பல வாக்கியங்களுக்கும்‌, வார்த்தைகளுக்கும்இருக்கின்ற நல்ல பொருளை விட்டு விட்டு, வேண்டாத அர்த்தத்தை எடுத்துக்கொண்டு, விபரீதமான விளக்கங்களை பலர்அளித்துள்ளார்கள்‌. வேண்டாத பல வழக்கங்கள்தோன்றி, ஹிந்து மதத்தில்பல கொடுமைகள்நிகழ்கின்றனஎன்பதும்இவர்களுடைய குற்றச்சாட்டுகளில்ஒன்று. உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறுதல்‌ – ஸதி. இது ஏதோ வேத காலத்திலிருந்து கட்டாயமாக வந்து விட்ட பழக்கம்போல இன்று கண்டனம்செய்யப்படுகிறது

ஆனால்உண்மை என்ன? நாம்பேச வேண்டாம்‌. வேதத்தைப்பேச விடுவோம்‌. ‘கணவன்இறந்து விடுகிறான்‌; தன்குழந்தைகளைக்காப்பாற்றவோ, தான்ஜீவிக்கவோ கூட இனி வழி கிடையாது என்ற முடிவுக்கு வந்து, அவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி, அவனுடன்பரலோகம்சென்று விட தீர்மானிக்கிறாள்‌’. வேத வாக்கியம்அவளைத்தடுத்து நிறுத்துகிறது

பெண்ணே! இறந்து போய்விட்ட இவனுடள்நீ ஏன்சிதையில்படுக்க நினைக்கிறாய்‌? உலகில்மற்றவர்கள்வாழ்வதைப்பார்‌. கைபிடித்த உன்கணவனின்உடலை எரிப்பதற்கு அனுமதி அளித்து, விலகி நில்‌. இனி அவன்மேல்உலகம்சென்று, தேவ னாகத்திகழ்வான்‌. அதை நீ தடை செய்யாதே! உனக்குத்தேவைப்படுகிற பொருளை உனக்குத்தருகிற பொறுப்பையும்‌, உன்குழந்தைகளைக்காப்பாற்றும்பொறுப்பையும்உன்னுடைய உறவினர்களாகிய நாங்கள்ஏற்கிறோம்‌!” 

இதைச்சொல்லி உடன்கட்டை ஏற நினைக்கிற பெண்ணை, உறவினர்கள்தடுத்து நிறுத்த வேண்டும்என்று வேதம்கூறுகிறது. ஆனால்இன்றைய விமர்சகர்களோ, ‘இதெல்லாம்வேத காலத்தில்இருந்து வந்த கொடுமைகள்‌! என்று சுலபமாகச்சொல்லி விடுகிறார்கள்‌. 

இது ஒன்று தான்என்றில்லை. இது போன்ற பல விஷயங்களில்‌, வேதங்களில்கூறப்பட்டிருக்கிற உயர்ந்த எண்ணங்களைப்புரிந்து கொள்ளாபலேயே அவற்றை விமர்சனம்செய்கிறவர்களின்கூட்டம்பெருகி வருகிறது

அறியாமையுடன்‌, அகங்காரமும்சேர்ந்து கொள்வதால்வரு கிற வினை இது. வேண்டாத இந்தக்கலவையை விலக்கி வைத்து, வேதங்களின்இறுதிப்பகுதியான உபநிஷத்துக்கள்என்ன சொல்இன்றன என்று பார்ப்போம்‌.