108 உபநிஷத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற் நில் பல, குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை அல்லது தத்துவத்தைப் போற்றுவதையே நோக்கமாகக் கொண்டவை. பொதுவாக உபநி ஷத்துகள் என்று பேசப்படுகிறபோது, இந்த வகையானவை முக் இயமானவையாகக் கருதப்படுவதில்லை. எவைதாம் முக்கியமா னவை? அதற்கு என்ன அளவுகோல்? இதை நிர்ணயிக்க பரம் பரை பரம்பரையாக ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.
முதன் முதலில் உபநிஷத்துக்களுக்கு விளக்கங்களையும், விரி வுரைகளையும் இயற்றியவர் ஆதிசங்கரர். அவர் பதினொரு உப: நிஷத்துக்களுக்குத்தான் விளக்க உரை எழுதியிருக்கிறார். அவையே முக்கியமானவை என்று ஏற்கப்பட்டுள்ளன. ஈசா வாஸ்ய, கேன, கட, பிரசன, முண்டக, மாண்டுக்ய, தைத்திரீய, ஐதரேய, சாந்தோக்ய, ப்ருஹதாரண்யக, ச்வேதஸ்வதர உபநிஷத் துக்கள். இதில் கடைசியாகக் கூறப்பட்டதற்கு ஆதிசங்கரர் பெய ரில் வந்துள்ள விளக்கவுரை, அவரால் இயற்றப்பட்டது அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். முதல் பத்து உபநிஷத்துக்களைப் பற்றி இந்த மாதிரி பிரச்னை இல்லை. ராமானுஜரும் தமது நூல் களில் கிட்டத்தட்ட பத்து உபநிஷத்துக்களில் இருந்துதான் மேற் கோள் காட்டுகிறார். அவற்றில் சில ஆதிசங்கரரால் விளக்கவுரை எழுதப்படாதவை என்றும் சொல்கிறார்கள். மத்வாச்சாரியார் உப நிஷத்துக்களுக்கு விளக்கவுரை இயற்றி இருக்கிறார்.
உபநிஷத்துக்களின் தத்துவ விசாரணை வழிமுறையும், அவற் றின் நடையும் பலரைக் கவர்ந்தன. அதன் விளைவாக அவரவர் கள் துதித்த தெய்வத்தின் மீதே உபநிஷத்துக்களை இயற்றி விட் டார்கள். ஸ்கந்த உபநிஷத், ராமரகஸ்ய உபநிஷத், வராஹ உப நிஷத், கருட உபநிஷத், வாசுதேவ உபநிஷத்… என்றெல்லாம் உபநிஷத்துக்கள் தோன்ற, இவற்றின் எண்ணிக்கை 108 ஆயிற்று. (இது எந்த அளவிற்குப் போய்விட்டது என்றால், அக்பர் காலத் தில் ‘அல்லா மீது கூட ஓர் உபநிஷத் இருந்தால், நன்றாக இருக் குமே! என்று யாருக்கோ தோன்ற, ‘அல்லோபநிஷத்’ என்ற ஓர் உபநிஷத் கூட வந்தது.
ஹிந்து மதம் ஒரு குறிப்பிட்ட மைய அதிகாரத்திற்கு உட்பட்ட தல்ல என்பதால், இந்த மாதிரி நிகழ்ந்தது வியப்புக்குரியது அல்ல. அதே சமயத்தில், எது ஆதாரபூர்வமானது என்று பார்ப் பதற்கு வேதத்தைத்தான் நாட வேண்டும். நான்கு வேதங்களின் இறுதியில் வந்துள்ளவற்றையும், முதலில் விளக்கவுரை இயற்ற ஆதிசங்கரர் எடுத்துக் கொண்டவற்றையும், வைத்து மேற்கூறப் பட்ட பத்து அல்லது பதினொரு உபநிஷத்துக்களே முக்கியமான வையாகக் கருதப்படுகின்றன.
உபநிஷத்துக்கள் பற்றி மறக்கக் கூடாத ஓர் அம்சம், அவை யும் வேதங்களின் ஒரு பகுதியே என்பது. ஆகையால் அவையும் வேதங்களின் மற்ற பகுதிகள் போலவே. ரிஷிகளால் உணரப்பட் டவை. மேலைநாடுகளில் ‘ஃபிலாஸஃபர்கள்’ என்று அழைக்கப் படுகிற தத்துவஞானிகள், வாதங்களைச் செய்து, தத்துவங்களை முன் வைத்தனர். உபநிஷத்துகளும், பல வாதங்களைப் புரிந்து, பல கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்கு விடை காண முயன்று, தர்க்க ரீதியாக தத்துவங்களை முன் வைக்கின்றன. ஆனால் மேலைநாட்டுத் தத்துவஞானிகள் கூறியவற்றுக்கும், உபநிஷத்துக் கள் கூறுவதற்கும் ஓர் முக்கிய வித்தியாசம் உண்டு. வேதங்களின் ஓர் அங்கமாகிய உபநிஷத்துக்கள் கூறுகிறவை தர்க்க ரீதியாக வந்தாலும், அவை ரிஷிகளால் உணரப்பட்டவை. அதாவது இன்ட்யூஷன், இன்ஸ்பிரேஷன் என்றெல்லாம் சொல்லப்படுகிற உள்ளுணர்வின் அடிப்படையில், தாங்கள் கண்ட உண்மைகளை ரிஷிகள் முன் வைத்து, அவற்றை தர்க்க ரீதியாகவும் விளக்க முற் பட்டிருக்கின்றனர். அவைதாம் உபநிஷத்துக்கள்.
வேதங்களின் முந்தைய பகுதிகளில் காணப்படுகிற மந்த்ரங் கள் முதலியவை, ரிஷிகள் தாங்கள் உணர்ந்ததை அப்படியே சொல்லி இருப்பவை. உபநிஷத்துக்களோ, குருமார்களினால் சடர்களுக்கு போதிக்கப்பட்டவை. ஆகையால் தாம் உணர்ந்ததை சடனுக்கு உணர்த்த முற்பட்ட ரிஷி, அதற்கு சில வழிமுறை களைக் கையாண்டார். கற்பனை உதாரணங்கள் கூறப்பட்டன. ஓர் உண்மையை விளக்க பல வினாக்களை எழுப்பி, ‘அது இல்லை… அது இல்லை… அது இல்லை! என்று பலவற்றை நிராகரித்து, இறுதியில் அது நின்றதே உண்மை என்று நிலை நாட்டப்பட்டது.
இதற்கு ‘நேதி நியாயம்! என்று பெயர். அதாவது அது இல்லை… அது இல்லை… என்று ஒவ்வொன்றாக நிராகரித்துச் செல்கிற வழிமுறை.
வேறொரு வழிமுறை – ‘அருந்ததி தரிசன நியாயம்’ என்பது. இருமணங்களில் மணப்பெண் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப் பது, இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம். ஆகாயத்தைப் பார்த்தாலே அருந்ததி நட்சத்திரத்தைப் பார்த்துவிட்ட மாதிரி ஒரு கற்பனை, அத்துடன் அருந்ததி தரிசனம் முடிந்து விடுகிறது.
ஆனால் முன்பெல்லாம் ஒரு வழிமுறை கையாளப்பட்டது. அருந்ததி ஒரு மிகச் சிறிய நட்சத்திரம். எளிதில் கண்ணில் பட்டு விடாது. ஆகையால் முதலில் ஒரு பெரிய நட்சத்திரத்தைக் காட்ட வேண்டியது. அதையடுத்து ‘அதுவல்ல அருந்ததி. அதற்குப் பக் கத்திலே பார்! என்று சொல்ல வேண்டியது; சற்றுத் தள்ளியுள்ள சுலபத்தில் பார்க்கக்கூடிய இன்னொரு நட்சத்திரத்தைக் காட்ட வேண்டியது. அதை மணப்பெண் பார்த்த பிறகு, ‘அதுவல்ல அருந்ததி. அதற்குப் பக்கத்திலே பார்! என்று எளிதில் பார்க்கக் கூடிய மற்றொரு நட்சத்திரத்தைக் காட்ட வேண்டியது. இப் படியே போய் அந்தப் பெண்ணின் பார்வையை அருந்ததி நட்சத் இரத்திற்கே இட்டுச் சென்று, ‘இதுதான் அருந்ததி” என்று காட்ட வேண்டியது. இந்த வழிமுறைதான், ‘அருந்ததி தரிசன நியாயம்”. இதையும் உபநிஷத்துக்கள் கையாளுகின்றன.
இப்படிச் சுற்றி வளைக்கிற பல வழிமுறைகளைக் கையாள் வானேன்? சொல்லப்படுகிற விஷயம் அவ்வளவு சூட்சமமானது. ஒண்ணோன் ஒண்ணு.. ரெண்டோன் ரெண்டு… என்று கூறி முடித்து விடுகிற விஷயம் அல்ல இறுதித் தத்துவம். அதை உணர் வது மட்டும் அல்ல, உணரச் செய்வதும் கூட கடினம்தான். அதற் காகத்தான் இப்படிப்பட்ட வழிமுறைகளைக் கொண்டு சட னுக்குத் தமது உபதேசத்தைக் குரு செய்தார்.
உபநிஷத்துக்களிலேயே வருகிற ஓர் உதாரணத்தைப் பார்ப் போம். இதை இரு. சங்கர நாராயணன் தமது பிரசங்கத்தில் குறிப் பிட்டிருந்தார். இறைவனால் உலகம் எப்படிப் படைக்கப்பட் டது?’ என்ற கேள்வி எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த விவா தத்தைப் பார்ப்போம். ‘மண் பாண்டங்களைச் செய்யும் ஒரு குய வன், பானையைச் செய்யும் ஒரு குயவன், போல இறைவன் இந்த உலகைச் சிருஷ்டி செய்தான்’.
‘குயவன் பானைக்கு வெளியே இருக்கிறானே? இறைவனும் உலகத்திற்கு வெளியேதான் இருக்கிறானா?”
‘இல்லை. இதிலேயே இன்னொரு விஷயத்தைப் பார். களி மண்தான் பானையாக உருவெடுத்துவிட்டது. அதே போல இறை வன்தான் இந்த உலகமாக உருவெடுத்தான்.’
‘களிமண் பானையில் இருக்கிறதே? பானையின் வெளியே அது இல்லையே? உலகை சிருஷ்டி செய்த இறைவன், அதி லேயே இருக்க தீர்மானித்து, உலகிற்கு வெளியே இல்லாமல் உள்ளேயே இருக்கிறானா?”
‘இல்லை. இறைவனுக்குக் களிமண்ணும் உதாரணம். குயவ னும் உதாரணம். எதற்குமே உபாதான காரணம், நிமித்த காரணம் என்று உண்டு. அதாவது ஒரு வஸ்துவை எடுத்துக் கொண்டால், அதற்கு இரண்டு காரணங்கள் : ஒன்று – கச்சாப் பொருள். மற் றொன்று – அதை வைத்து வஸ்துவை உண்டாக்குகிறவன். இங்கு, களிமண்ணும், குயவனும் அந்த இரண்டு காரணங்களான்றன. இறைவனைப் பொறுத்த வரையில் அவன் இரண்டுமாகவே இருக்கிறான்.
‘ஆனால் இப்போது சொல்லப்பட்ட உதாரணத்தில் களிமண் வேறு, குயவன் வேறு.. வெவ்வேறான அவை, எப்படி ஒன்றாக இருக்க முடியும்?”
‘உண்மை. ஆகையால் இந்த உதாரணத்தை வைத்து, சிருஷ்டியை முழுமையாக விளக்கிவிட முடியாது. மேலும் ஊக்கத்தோடு முனைந்து பொருள் காண வேண்டும். அதைச் செய்வோம். ஒரு காலிப் பானையை மனதில் நினைத்துக்கொள். அதன் உள்ளே காற்று இருக்கிறது. அந்தக் காற்று அந்தப் பானைக்கு வெளியேயும் இருக்கிறது. எப்படிப் பானையைச் சுற்றிலும் இருக்கிற காற்று, அதன் உள்ளேயும் இருக்கிறதோ, அது போல இறைவன்உலகைச் சூழ்ந்து கொண்டு, அதன் வெளியேயும் இருக்கிறான். அதன் உள்ளேயும் இருக்கிறான்.
‘ ‘இதுவும் போதாது. இன்னமும் யோசிப்போம். ஒரு துணி நெய்யப்படுகிறது. அதன் குறுக்கேயும், நெடுக்கேயும் நூல் செல்கிறது. அந்தத் துணியைக் கிழித்துவிட்டால் மிஞ்சுவது நூல்தான். ஆனால், அந்த நூலை இணைத்துப் பிணைக்கும்போது அது துணியாகி விடுகிறது. அந்த நிலையில் அது நூல் அல்ல. நூல்தான் துணியாகவிட்டது என்றாலும், துணியை நூல் என்று சொல்வதில்லை. அது போல உலகம் துணி என்றால், இறைவன் நூல் என்று சொல்லலாமா? அல்லது பால் தயிராகி விடுவது போல, இறைவன் உலகமாக விட்டான் என்று சொல்லலாமா?”
‘பால் தரிந்துதானே தயிராகிறது? அதே போல இறைவனிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு அவன் உலகமாகி விடுகிறான் என்று
சொல்வதா? அப்படியானால் அவனுடைய உண்மை சொரூபம்
என்ன? பாலில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால் அல்லவோ தயிர்
வருகிறது? அது போல் இறைவனிடமும் மாற்றம் ஏற்பட்டதா?”
‘ஆகையால் இந்த உதாரணமும் இதற்கு மேல் செல்லாது.
ஏனென்றால் இறைவனிடம் எந்த மாற்றமோ, வக்ரமோ ஏற்பட்டு
விடவில்லை. உலகம் அவனுடைய ஒரு அம்சம். அவனுடைய ஒரு பகுதி. தீயில் இருந்து பொறி பறக்கிறது. ஒவ்வொரு இப் பொறியும் நெருப்பின் குணத்தைக் கொண்டவைதாம். இறைவன் தீ என்றால், அவன் சிருஷ்டித்த உலகமும், அதில் உள்ள மனி தர்களும், தீப்பொறிகள்.
இப்படியே போகிற விவாதத்தின் இடையே, சிலந்தி உதா ரணம் ஒன்று சொல்லப்படுகிறது. சிலந்தி வலையைப் பின்னு கிறது. ஆனால் அந்த வலையின் உள்ளேயே அதுவும் இருக்கிறது. இறைவனின் நிலைக்கு இந்த உவமையும் கூறப்படுகிறது.
வேறொரு கட்டத்தில் மேலும் ஓர் உதாரணம். ‘தங்கம் வெவ் வேறு ஆபரணங்களாக உருவெடுக்கிறது. அதே போல, இறை வன் வெவ்வேறு ஜீவன்களாக உருவெடுக்கிறான். ஆபரணங் களை உருக்கினால் அது தங்கமே. மனிதனும் அவ்வாறே இறை வனில் ஐக்கியம்.
இப்படிக் கூறப்படுகிற விளக்கங்களுக்கு எல்லாம் அடிப்படை ரிஷியின் உள்ளுணர்வு, அவர் கண்டறிந்த உண்மை. அது மிகவும் சூட்சுமமானது; தவத்தினாலும், மேன்மையினாலும், தன்னுடைய உள்ளுணர்வின் மூலம் தத்துவத்தைக் கண்டறிந்த ரிஷி – அதைத் தர்க்க ரீதியாகச் சீடனுக்கு உபதேசிக்க முற்படுகிறார். ‘இதனால் விளக்கம் ஏற்பட்டு விடுமா?’ என்று கேட்டால், விளக்கத்தைப் பெற இது பாதைதானே தவிர, முழு விளக்கம் அல்ல‘ என்பதுதான் பதில்.