வேதங்களை ஒதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். பற்றி, தைத்திரீய உபநிஷத்தில் இப்படிக் கூறப்படுகிறது:
“சீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம:
வர்ண: ஸ்வர:
மாத்ரா பலம்
ஸாம ஸந்தான:
இத்யுக்த: சஷாத்யாய:’
உச்சரிப்புப் பற்றி விளக்குவோம்:
ஒலி, ஏற்ற இறக்கம்?
நீட்டல் – குறுக்கல், உச்சரிப்பதற்கான முயற்சி;
நிறுத்தும் விவரம், தெளிவான உச்சரிப்பு –
உச்சரிப்புப் பற்றிய பாடம் இவ்வாறு கூறப்பட்டது.
இதை வைத்துக் கொண்டு, சகைஷ எனும் உச்சரிப்புக்காவ பயிற்சி பற்றி என்ன அறிந்து கொள்வது?
‘அரசியல் சட்டம் பற்றி அறிந்து கொள்வோம்’ என்று கூறிவிட்டு, விளக்கம் தொடங்கப்படுவிறது : ‘நிலப்பரப்பு, குடியுரிமை, அடிப் படை உரிமைகள், மத்திய – மாநில அமைப்புகள், நீதித்துறை, பாராளுமன்றமும் – சட்டசபைகளும், நெருக்கடி காலம், எஞ்சிய விஷயங்கள். அரசியல் சட்டம் பற்றிய பாடம் இவ்வாறு விளக்கப்பட்டது என்று சொன்னால் என்ன புரிந்து கொள்வது? அதைப் போல அல்லவா இருக்கிறது மேலே கூறப்பட்ட உபநிஷத் வாக்கியம்!
இப்படி ஓர் எண்ணம் பலர் மனதில் எழக்கூடும். இதுபற்றி ஸ்வாமி அரவிந்தர் வழியைப் பின்பற்றுகிற சங்கரநாராயணன், தமது உரைகளில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். ‘வேதங்களில் முதலில் வருகிற ஸம்ஹிதை, பிராம்மணம் போன்றவை ரிஷிகள் தாங்கள் உணர்ந்ததை அப்படியே கூறியவை. ஆனால் உபநிவத்துக் களோ, குருமார்களால் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கப்பட்டவை. அந்தச் சீடர்கள், அந்த உபதேசங்களைக் குறிப்புகளாக எடுத்துக் கொண்டார்கள். அவைதாம் நமக்குக் இிடைத்திருக்கின்றன.
அதாவது – இந்தக் கருத்தைக் கொண்டவர்கள், ‘நமக்குக் இடைத்திருக்கும் உபநிஷத்துக்கள், ரிஷிகளின் உபதேசங்களை முழுமையாகத் தந்து விடவில்லை‘ என்றும், ‘அந்த உபதேசங்கள் பற்றிய சுருக்கமான குறிப்புகள்தாம் நமக்குக் கிட்டியிருக்கின்றன‘ என்றும் கூறுகிறார்கள்.
இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். அணு சக்தி பற்றி ஒரு விஞ்ஞானி மற்றொரு விஞ்ஞானியிடம் பேசினால், எல்லா விவரங்களையும் தந்து கொண்டிருக்கமாட்டார். அணு ஆராய்ச்சி யில் அடங்கி இருக்கக்கூடிய ஓர் அம்சம் பற்றி, ஒரு விஞ்ஞானி பேச ஆரம்பிக்கும்போதே மற்ற விஞ்ஞானி புரிந்து கொண்டு விடுவார். இது முதல் வகை விளக்கம். இது மிக சுருக்கமாகத்தான் இருக்கும்.
பல பரீட்சைகளுக்குப் பிறகு, அணு ஆராய்ச்சி பற்றிக் கல்வி பெற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவனுக்குச் சில விளக்கங் களைத் தர முற்படுகிற விஞ்ஞானி, ஓரளவிற்கு விரிவாகச் சொல்வார். இது இரண்டாவது வகை.
நம்மைப் (அல்லது என்னை) போன்றவர்களுக்கு அணு சக்தியைப் பற்றி விளக்க ஒரு விஞ்ஞானி முற்பட்டால் என்ன நடக்கும்? விஞ்ஞானப் பயிற்சியே சற்றும் இல்லாதவனுக்கு என்ன. சொல்வது? ‘நீ போய் முதலில் விஞ்ஞான ஆரம்பப் பாடத்திலிருந்து, முழுமையான பயிற்சி பெற்று, பிறகு என்னிடம் வா என்று சொல்லலாம். அல்லது ‘அணுசக்தி பயங்கரமானது, உப யோகமானதும் கூட. பேரழிவுக்கும் அதைப் பயன்படுத்தலாம். பெரும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தலாம். அதுதான் அணுசக்தி” என்றும் சொல்லலாம்.
உபநிஷத்துக்களைப் பொறுத்தவரையில் அவை மேலே சொன்ன இரண்டாவது வகையைச் சார்ந்தவை; தகுதி அடைந் துள்ள மாணவனுக்குக் கூறப்பட்டவை. என்னைப் போன்றவர்கள், ‘என்ன இது? ஒன்றுமே புரியவில்லையே? விளக்கமாகவேஇல் லையே?” என்று கேட்பதில் பயனில்லை. ஏனென்றால், உப நிஷத்துக்களின் உபதேசங்கள் என்னைப் போன்றவனுக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. கடுமையான பரீட்சைக்குப் பிறகு, தகுதி யும், ஞானமும், முயற்சியும், சிரத்தையும், முனைப்பும் உள்ளவன் இவன் என்று அறிந்து கொள்ளப்பட்ட பிறகு – அத்தகைய சீட னுக்கு உபதேசிக்கப்பட்டவை இந்த உபநிஷத்துக்கள்.
இவை வாய்மொழியாகவே வந்தவை. அச்சு முதலியவை வந்த பிறகு, கற்பதற்கான நிபந்தனைகள் எல்லாம் தளர்ந்து போன நிலையில், மேலை நாட்டவர் இவற்றை அறிந்து கொள்ள முயற்சிகளை எடுத்தபோது, இவை நூல்களாக வெளியாகவிட்டன. (அதற்கு முன்பாகவே பல ஆச்சார்யார்கள், தங்களுடைய சீடர்களுக்கு இவற்றை எல்லாம் விளக்கினார்கள். ஆதிசங்கரர் ஓர் உதாரணம்.)
இப்படி நமக்கு இந்த உபநிஷத்துக்கள் இடைத்திருக்கின்றன. பத்திரிகை செய்திகளை வைத்தும், சில கட்டுரைகளைப் படித்தும், சில பிரசங்கங்களைக் கேட்டும், அணுசக்தி பற்றி ஓரள வாவது அறிந்து கொள்ள நாம் முயற்சிப்பது போல – வெளியாகி யுள்ள நூல்களைப் படித்தும், பண்டிதர்களின் உரைகளை அறிந்து கொண்டும், சில பெரியவர்களின் விளக்கங்களைக் கேட்டும், உபநிஷத்துக்களைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்ள முயற் இக்கலாம். அவ்வளவுதான். இதையெல்லாம் முழுமையாக உணர வேண்டும் என்றால், தகுதி வேண்டும். அந்தத் தகுதி தவத்தின் மூலமே கட்டும். தவம் என்பது முனைப்பு; தளராத ஒருமுகப் படுத்தப்பட்ட முயற்சி.
இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. எளிமையான விஷயங் களை மிகவும் விவரமாக எடுத்துச் சொல்கிற சில பண்டிதர்கள், கடுமையான விஷயங்கள் வருகிறபோது, மூலத்தை அப்படியே சொல்லி, அத்துடன் விட்டு விடுவதும் உண்டு. இந்த மாதிரி பண்டிதர்களின் வழிமுறையைக் கண்டு, பொறுமை இழந்த நீலகண்ட இக்ஷிதர் இதைப் பற்றி, கிண்டலாக ஒன்று சொன்னார் : விளக்கம் சொல்ல முன் வருகறவர்களுக்கே ஒரு விஷயம் விளங்கவில்லை என்றால், அவர் ஒன்று செய்துவிட வேண்டும். ‘மேலே போகப் போக அர்த்தம் புரிந்து விடும்” என்று சொல்லி விட வேண்டும். ஸ்பஷ்டம், அக்ரே, பவிஷ்யதி”. இப்படி மேலே போகப் போக அர்த்தம் புரியும் என்கிற வகை விளக்கங்களும் சில நூல்களிலாவது இருக்கின்றன. விளக்கங்களோ இப்படிப் பட்டவை; நமக்கோ தகுதி குறைவு; விஷயமோ மிகவும் ஆழ மானது! அதுவும் உபநிஷத்துக்கள் விளக்குகிற இறுதி உண்மை என்பது எளிதில் பிடிபடக்கூடியது அல்ல.
யதோ வாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மனஸா ஸஹ
மனதுடன் வார்த்தைகளும் எங்கிருந்து திகைத்துத் இரும்பு கின்றனவோ…
ந தத்ர சக்ஷ£ர் கச்சதி
ந வாக் கச்சதி
அங்கே பார்வை செல்லாது.
வாக்கும் செல்லாது.
அதாவது புலன்களைப் பயன்படுத்தி உணர்ந்து கொண்டு விடுகிற விஷயம் அல்ல இறுதி உண்மை. முனைப்புத் தேவை. எப்படிப்பட்ட முனைப்பு? அதற்கு ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
ஒரு ரிஷியிடம் பயிற்சி பெற்று வந்த சீடர்களில் ஜகை மன்னனும் ஒருவன். ஒருமுறை அந்த ரிஷி தமது உபதேசத்தைத் தொடங்காமல், மிதிலை மன்னன் ஜனைனின் வருகைக்காகக் காத் இருந்தார். மற்ற சடர்களுக்குப் பொறாமை வந்தது. ‘என்ன இருந்தாலும், ஜனகன் ஓர் அரசன் அல்லவா? அதனால்தான் குரு அவனுக்காகக் காத்திருக்கிறார்’ என்று பேசிக் கொண்டார்கள்.
அப்போது மிதிலை நகர் பற்றி எரிந்தது.
ரிஷியின் ஆச்ரமமோ நகருக்குச் சற்றே தள்ளி இருந்தது. நகரில் பிடித்த தீ, வானில் பாய்ந்து, புகை மண்டலத்தை எழுப்ப, டர்கள் பதறிப் போய், தங்களுடைய மிகவும் எளிமையான உடமைகள் சிலவற்றை நகரத்தில் இருந்து மீட்டுக் கொள்வதற் காக ஓட முற்பட்டார்கள். அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த ஜனக மன்னனோ, சற்றும் கவலைப்படாமல் அமர்ந்திருந்தான். ‘நகரம் பற்றி எரிகறது. அரண்மனையும், உன்னுடைய உடமைகளும், உறவினர்களும் என்ன ஆவது?’ என்று மற்றவர்கள் கேட்க, ஜனக மன்னன், ‘மிதிலை எரிவதால் என்னுடையது என்பது எதுவும் எரியவில்லை. என்னுடையது என்று எதுவும் இல்லை‘ என்று சொல்லி, கலக்கமில்லாமல் அமர்ந்திருந்தான். அப்பொழுது மிதிலை எரிவது போல், குருவினால் ஏற்படுத்தப்பட்ட தோற்றம் மறைந்தது. மிதிலை எரியவில்லை. அது பற்றியும் ஜனகன் மகிழ்ச்சி அடைந்து விடவில்லை. தங்களிடையே, உண்மையை உணர்ந்தவன் அவன் ஒருவன்தான் என்பதை மற்ற 8டர்கள் புரிந்து கொண்டனர். குரு அவனுக்கு அளித்த முக்கியத்துவம் முறை யானது என்பதையும் உணர்ந்து கொண்டனர். இறுதி உண்மையை அறிய இந்த மாதிரி ஒரு தகுதி தேவை.
அதுவும் அகம்பாவத்தையும், தான் என்கிற எண்ணத்தையும் அழித்து விட்டு – உண்மையை அறிந்தவன் யாராக இருந்தாலும் சரி, அவனை அணுகி உபதேசம் பெற தயாராக இருக்க வேண்டும்.
ஜனச்ருதி என்ற மன்னனுக்கு அதே பெயருடைய ஒரு பேரன். இந்த ஜனச்ருதியும் சிம்மாசனம் ஏறினான். செய்யாத நல்ல காரியம் இல்லை. ‘நிலத்திலிருந்து நீரை ஆவியாக்கி எடுத்துக் கொள்கிற சூரியன், மீண்டும் அந்த நீரை அதே நிலத்திற்குப் பெரும் மழையாக்கித் தருவது போல – ஓர் அரசன் மக்களிடமிருந்து வசூலிக்கிற வரியைக் கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என்கிற வழிமுறையைப் பின்பற்றி அரசாண்டான் ஜனச்ருதி.
ஒருநாள் அவன் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருந்த போது, சில அன்னப் பறவைகள் பறந்து செல்வதைப் பார்த்தான். அதில் ஓர் அன்னப் பறவை மற்றொரு அன்னப் பறவையைப் பார்த்து, “என்ன காரியம் செய்கிறாய் நீர மன்னன் ஜனச்ருதி யிடம் இருந்து ஆன்மீக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அதை மறைப்பது போல, அவன் எதிரே குறுக்கிட்டு நீ செல்கிறாய். அவனுடைய ஆன்மீக சக்தி வானுலகை எட்டுவது என்பதை நீ அறிய மாட்டாய் போலும்” என்று கூறியது.
இதைக் கேட்ட அந்தப் பறவை, ”சரி இருக்கட்டும். ஆனால், இந்த மன்னன் ஜனச்ருதி, ரைக்வனுக்கு நிகராவானா? இவன் பேரறிவாளனாக இருக்கலாம். தார்மீகனாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் சாதாரணம்தான். ரைக்வனின் பிரம்ம ஞானத் இற்கு ஈடான ஒரு தகுதி, இந்த மன்னனிடம் இருக்கிறதா?” என்று கேட்டது.
அன்னப் பறவைகள் பறந்து சென்றுவிட்டன. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறியும் வேட்கையைத் தன் மனதில் வளர்ப்பதற்காக, தேவர்களே அன்னப் பறவைகளாக உருவெடுத்து இப்படிப் பேசி சென்றிருக்கின்றனர் என்பதை மன்னன் உணர்ந்தான். தனது தேரோட்டியை அழைத்து, ரைக்வன் என்ற பெயருடைய ஞானி எங்கிருக்கிறான் என்று அறிந்து வரும்படி அவனுக்கு உத்தரவிட்டான். நகரெங்கும் தேடியும், அந்தப் பெய ருடைய ஞானியின் இருப்பிடத்தைத் தேரோட்டியினால் கண்டு பிடிக்க முடியவில்லை. தனிமையான இடங்களில் தேடுமாறு மன்னன் உத்தரவிட்டான்.
இறுதியில் ரைக்வன் கிட்டினான். ‘மிகவும் அருவருக்கத்தக்க சூழ்நிலையில், தனது கட்டை வண்டியின் அருகே அமர்ந்திருந் தவன்தான் ரைக்வன்’ என்ற செய்தியை அரசனுக்குத் தேரோட்டி தெரிவித்தான். அந்தக் கட்டை வண்டிக்காரனை மிகவும் அடக்கத் துடன் அணுகி, வணங்கி நின்று தனக்கு உபதேசம் செய்யுமாறு ஜனச்ருதி வேண்டிக் கொண்டான்.
ஜனச்ருதி க்ஷத்ரியன். மிகப் பெரிய மன்னன். தர்மிஷ்டன். ரைக்வனோ அருவருக்கத்தக்க சூழ்நிலையில் வாழ்ந்து கொண் புருந்த ஒரு கட்டை வண்டிக்காரன். அவன் ‘உணர்ந்தவன்’ என்பதால், தன்னுடைய உயர்வை எல்லாம் உதறித் தள்ளி, ஜனச்ருதி அவனிடமிருந்து ஞானத்தைப் பெறுவதற்கு முற்பட்டான். இது சாந்தோக்ய உபநிஷத்தில் வருகிற ஒரு நிகழ்ச்சி.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால், இப்படிப்பட்ட எண்ணம் தானாக வரும்.