சிருஷ்டிக்கப்பட்ட உலகம் எத்தகையது – அதில் இருக்கிற ஜீவன்களின் தன்மை என்ன? – இவற்றிற்குக் காரணமான இறைத் தத்துவம் என்பது என்ன? – என்ற விஷயங்களை ஆராய்வதில் தான் உபநிஷத்துக்கள் பெரும் கவனம் செலுத்துகின்றன. இவை எல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொண்டு விடலாம். உபநிஷத்துக்களுக்கு இவற்றில் கிடைக்கிற பதில்களோ சுருக்கமானவை; அவற்றைப் பற்றிய பெரியவர்களின் விளக்கங்களோ பல மாறுபாடுகளை உள்ளடக்கியவை. ஆகையால், நான் எழுதுகிற இந்த அறிமுகத்தில், இறுதித் தீர்ப்பு எதுவும் கிடையாது. அதைத் தருகிற தகுதியும் என்னிடம் துளியும் இல்லை. நான் எழுத இருப்பது ஒரு மனிதனின் கருத்து. அந்த அளவிலேயே இதைப் பார்க்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜீவன் என்றால் என்ன? ஜீவராசிகளுக்கு இருக்கிற உடலா? ‘எனக்குக் கால் வலிக்கிறது! என்கிறோம். அந்த ‘எனக்கு‘ யார்? “என்னுடைய கண்ணில் தூசி விழுந்துவிட்டது‘. என்னுடையது என்றால் யாருடையது? ‘என் மனம் படாதபாடு படுகிறது. அந்த “என்! யார்? ‘என் கண்ணில் – என் காவில் – என் கையில் – என் மனதில்…” என்றெல்லாம் சொல்லும்போதே கண், காது, உடம்பு, மனம் என்பதெல்லாம் வேறு – நான் என்பது வேறு என்றாகிறது.
‘அவனுக்கு இதயமே இல்லை‘ என்று சொல்லும் பொழுதும் அப்படித்தான். அவன் என்ற ஒருவன்; அவனுக்கு இதயம் என்று ஒன்று. ‘அவன் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்கிறான்” எனும்போது, அவன் வேறு, அவன் உடல் வேறு என்று ஆகிறது.
ஒருவன் இறந்த பிறகும்கூட இப்படித்தான். பேசுகிறோம், ” அவனுடைய ‘பாடியை இன்றைக்கு அடக்கம் பண்ணுகிறார் கள்”. அவனுடைய பாடியை ஐஸில் வைத்திருக்கிறார்கள்!. இங்கு ‘பாடி‘ அதாவது சரீரம் அடக்கமாகிவிட்டது அல்லது ஐஸில் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ‘அவன்’ விஷயம் வேறு.
இந்த நான்! அல்லது ‘அவன்* என்பதுதான் ஆத்மா. அது பிறப்பதும் இல்லை; அழிவதும் இல்லை. அது சாஸ்வதமானது. உடலுடன் சேர்ந்து அது மறைவதில்லை. இதை உபநிஷத்துக் கள் விளக்குகின்றன.
‘ஆத்மா நிரந்தரமானவன்; அழிவற்றவன்; அளவிடத் தகாத வன். எனினும் அவன் கொள்ளும் வடிவங்கள் இறுதித்தன்மை உடையவை… இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பது: மில்லை. இவன் ஒருமுறை இருந்து, பின்னர் இல்லாமற் போவது மில்லை. இவன் பிறப்பற்றவன்; சாஸ்வதமானன்; உடம்பு கொல்லப் படுகையில், இவன் கொல்லப்படமாட்டான்! – என்கிறது பகவத் கீதை. இவையும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டவைதாம்.
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவானி கிருஹ்ணாதி நரோபரானி
ததா சரீராணி விஹாய ஜிர்ணான்
அந்யானி ஸம்யாதி நவாநி தேஹி,
நைந்த துணிகளைக் சுழற்றி எறிந்துவிட்டு, மனிதன் புதிய துணிகளைக் கொள்ளுவது போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து விட்டு புதியனவற்றை எய்துகிறான்.
– என்று பகவத் இதை சொல்கிறது. சரி. ஆத்மா ஏன் இவ்வாறு வேறு உடல்களை அடைய வேண்டும்? பாவம் தருகிற வரையில் இது தொடர்ந்து கொண்டிருக்கும்.
ஆத்மாவால் புண்ணிய பாவங்களின் பலன்களை அனுபவிக்க நேடியாது. ஆகையால் செய்த கர்மத்தின் பலனை அனுபவிப்பதற்கு உடம்பு தேவைப்படுகிறது. நாம் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப கடவுள் நமக்கு ஓர் உடம்பைக் கொடுத்து, அதையே நான்! என்று நினைக்கச் செய்து தண்டிக்கிறான். இந்த உடம்பு போனதோடு நமது பாவம் தீர்ந்து போகாவிட்டால், மறுபடியும் ஓர் உடம்பைக் கொடுத்துத் தண்டிக்கிறான். நாம் செய்கிற பாவம்தான் இந்த உடம்புக்குக் காரணம். பாவம் செய்யாமல் இருந்தால், மற்றொரு உடம்பு வராது!” என்று பரமாச்சார்யார் விளக்கி. இருக்கிறார். அதாவது பாவம் தீர்ந்துவிட்டது என்ற நிலையை அடைந்துவிட்டால் அதுதான் மோட்சம்.
ஆத்மாவிற்கும், பிரம்மத்திற்கும் – அதாவது இறுதித் தத்துவமான இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உபநிஷத்துக்களைக் கொண்டும், வெவ்வேறு பெரியவர்கள் அளித் துள்ள விளக்கங்களைக் கொண்டும் இந்தக் கேள்விக்கு விடை காண முயலும்போது சிக்கல் வருகிறது. இந்தச் சிக்கல்களுக்கு உபநிஷத்துக்களும் இடம் அளிக்கின்றன. ஆனால் இவை தீராத சிக்கல்கள் அல்ல. முயற்சி பலன் அளிக்கும்.
‘ஆத்மா என்பது இறைவனிலிருந்து மாறுபட்டது; இறைவன் எல்லாம் அறிந்தவன் – ஆத்மாவின் சக்தி இப்படி அளவிட முடி யாதது அல்ல; இறைவனோ எங்கும் இருக்கிறான் – ஆனால் ஆத்மாவோ ஓர் உடம்பில் உறைகிறது; இறைவன் லட்சியம் – அதை அடைய முயற்சிப்பது ஆத்மா…’ இது ஒரு வகை த் தாந்தம். இப்படிச் சொல்வதற்கும், உபநிஷத்துக்களில் சில பகுதி களே ஆதாரமாக முடியும். இது த்வைதம் – அதாவது ‘இரண் டானது‘. இதைப் பிரகடனம் செய்தவர்களில் முக்கியமானவர் மத்வாச்சாரியார்.
ஆத்மாவும் பிரம்மனும் ஒன்றே – என்று கூறுகிற பகுதிகளும் உபநிஷத்துக்களில் உண்டு. இதை அடிப்படையாக வைத்து ‘இவை இரண்டல்ல ஒன்றுதான்’ – என்று கூறுவது ஒரு சித்தாந்தம். இது அத்வைதம். ‘இரண்டானது அல்ல‘ என்ற இந்த தத்துவ விளக்கம் அளித்தவர்களுள் முதன்மையானவர் ஆதிசங்கரர்.
இவை இரண்டுக்கும் இடையே உள்ளது, ராமானுஜர் பிரபலப் படுத்திய ‘விசிஷ்டாத்வைதம்’ என்கிற சித்தாந்தம். ‘இரண்டானது அல்லதான் – ஆனால் சில விசேஷங்களுடன்’. இதன்படி ஆத்மா, ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. இது பரமாத்மாவிலிருந்து மாறுபட்டது. ஆனால் இறுதியில் ஒன்றாவது.
இந்த மூன்று சித்தாந்தங்களிடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் கூறப்படுவது உண்டு. ஆகாயத் இல் சந்திரன் தெரிகிறான். அந்தச் சந்திரனின் பிரதி பிம்பம் கழே பூமியில் உள்ள ஒரு நீர் நிலையில் தெரிவது. ‘வானில் உள்ள சந்திரன் இல்லை என்றால், பூமியில் தண்ணீரில் தெரிகிற சந்திர னும் இல்லை. அது இருப்பதால்தான், இது. அது இல்லாமல் இது இல்லை. இதற்கென்று ஒரு தனித்தன்மை கிடையாது. இரண்டுமே ஒன்றுதான்!” என்று கூறுவது அத்வைதம் – இரண்டானது அல்ல என்பது.
‘அசல் வேறு; பிம்பம் வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. பிம்பமாக நீரில் தெரியும் சந்திரனைத் தொட்டுப் பார்க்கலாம். அசல் சந்திரனைத் தொட்டுப் பார்க்க முடியுமா? அசல் சந்திர னுடைய குணங்கள் நீரில் தெரிகிற பிம்பத்திற்கு உண்டா? அது வேறு, இது வேறு. இது இரண்டான விஷயம்தான்’ என்று கூறுவது த்வைதம்.
‘வானில் உள்ள சந்திரனின்றி, நீரில் தெரியும் பிம்பம் கிடை யாது. ஆனால் இரண்டிற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. வானில் உள்ள சந்திரனின் குணங்கள் முழுவதும் அப்படியே இந்தப் பிம்பத்திடம் இல்லை. ஆகையால் அவை வேறானவை யாகவும் இருக்கின்றன” என்று கூறுவது – வித்தியாசத்தை உள். எடக்கிய இரண்டாக இல்லாதது என்ற விசிஷ்டாத்வைதம்.
இந்த மூன்று தத்துவங்கள் பற்றிப் பேசுகிறபோது, தனது விளக்கவுரையில் ஸ்வாமி மாதவானந்தா, ‘ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மூன்று தத்துவங்களை ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோர் பிரபலப் படுத்தினாலும், இவற்றை ஸ்தாபிதம் செய்தவர்கள் அவர்கள்தான் என்று நினைத்துவிடக்கூடாது. எப்போது வந்தது என்று தெரி யாத அளவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து, பரம்பரை பரம்பரை யாக வந்து கொண்டிருக்கிற தத்துவங்கள் இவை. இவற்றை எடுத்துச் சொன்னவர்களில் மேற்கண்ட மூவரும் பெரும் சிறப்புடையவர் களாக விளங்கினார்கள்” என்று கூறுகிறார்.
இவற்றில் எந்த வழியை ஏற்பது? எதை ஏற்றாலும் தவ றில்லை. ஏனென்றால், மூன்று தத்துவங்களுமே இறைவனை உணர்வதற்கு வழி வகுப்பவைதான். பாதைகள்தாம் வெவ்வேறா னவையே தவிர, அடையும் இடம் ஒன்றுதான். மிகவும் ஆழ மான தத்துவங்களை ஸ்தாபிக்கிறபோது விவாதம் எழத்தான் செய்யும். ஆனால் முரண்பாடு இல்லை. ‘இறைவன் என்று எதுவும் கிடையாது. மனிதனுக்கு ஆத்மா என்று ஒன்று இல்லை. அது இறைவனுடன் சேரும் என்பதும் கிடையாது. கண், காது, மூக்கு என்று வெவ்வேறு அவயவங்களை உடைய உடல்தான் எல்லாமே‘ என்றெல்லாம் ஏதாவது ஒரு தத்துவம் வாதிட்டால், அப்போது முரண்பாடு எழும். ஆனால் இந்தத் தத்துவங்களிடையே அம்மாதிரி வாதங்கள் கிடையாது. ஆகையால் இவை முரண் பாடானவை அல்ல. மேலே சொன்ன மாதிரி பாதைகள்தாம் வெவ்வேறானவையே தவிர, லட்சியம் ஒன்றுதான்.
ஸ்வாமி மாதவானந்தா மேலும் சொல்கிறார்: ‘வெவ்வேறு ரிஷிகள் தாங்கள் கண்டதை (உணர்ந்ததை) கூறியிருப்பவை உப நிஷத்துக்களாக வந்திருக்கின்றன. மனித சமூகத்தில், வெவ்வேறு பக்குவ நிலையில் உள்ளவர்களுக்கு, வெவ்வேறு வகைகளில் உண்மை விளக்கப்பட்டிருக்கிறது. ஒரு தாயார் ஒரே உணவை எல்லோருக்கும் படைத்து விடுவதில்லை; அவரவர்களுக்கு ஏற்ற உணவைத் தருகிறார். அதே போல, வெவ்வேறு வகையானவர் களுக்கு வெவ்வேறு பாதைகளை உபநிஷத்துக்கள் காட்டு கின்றன. இதனால்தான் ‘உண்மை ஒன்றுதான் – அது அறிந்தவர் களால் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது! – என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது‘.
இனி ஆத்மா பற்றி உபநிஷத்துக்களை மேற்கோள் காட்டி, இந்த மூன்று தத்துவங்கள் கூறுவதைச் சற்றுப் பார்ப்போம். இது பற்றிப் பரமாச்சார்யார் எளிமையாக விளக்கி இருக்கிறார்.
ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு கிடையாது. பரமாத்மாவை அறிந்து கொள்ளலாம் என்று சொன்னால், அது அறியப் படுகிற பொருளாகிறது. அப்படி எடுத்துக் கொண்டால், ‘அறிபவன் என்று ஒருவன் இருக்கிறான்; அவன் பரமாத்மாவை அறிந்து கொள்கிறான் என்று அர்த்தமாகி விடும். அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவை அறிந்து கொள்கிறது. இது த்வைதம். ஆனால் அத்வைதம் ‘அறிகிறவன், அறியப்படுகிறவன் இரண்டுமே ஒன்றுதான்’ என்று அடித்துக் கூறுகிறது. இதை உறுதிப்படுத்துகிற வகையில் கேனோபநிஷத் என்னும் உபநிஷத் இப்படிச் சொல்கிறது :
யஸ்ய அமதம் தஸ்ய மதம்
மதம் யஸ்ய ந வேத ஸ:
பரமாத்மாவை] எனக்குத் தெரியும் என்பவனுக்குத் தெரி யாது; தெரியவில்லை என்பவன் தெரிந்தவன்.
இங்கே ‘தெரியவில்லை‘ என்றால் என்ன அர்த்தம்ர பரமாத்மா வேறாக இருந்து, ஒருவனால் அறியப்படுவதில்லை – என்பதே அர்த்தம். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்ப் பதற்கு மற்றொரு விளக்க தேவையில்லை.
சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது கையில் தண்ணீரை எடுத்துத் தெளிக்கிறோம். நூற்றுக்கணக்கில் நீர்த் துளிகள் விழுகின்றன. அவை ஒவ்வொன்றிலும் சூரியன் தெரி இன்றான். ஒரே சூரியன், இப்படி நூற்றுக்கணக்கில் தெரிவதால், அது வேறு, இது வேறு ஆகி விடாது.
இப்படிச் சொல்லப்படுகிற உதாரணத்தை ஒட்டியும், மேலே கூறிய சந்திரன் அதனுடைய பிரதி பிம்பம் – என்கிற உதார ணத்தை ஒட்டியும் ஒரு கேள்வி வருகிறது. ‘சந்திரன் தெரிகிற நீர் நிலை வற்றினாலோ, கையினால் தெளிக்கப்பட்ட நீர்த் துளிகள் வற்றிவிட்டாலோ, சந்திரனும், சூரியனும் அவற்றில் காணப் படுவதில்லை. அப்போது, அந்த நீர் நிலைகள் சந்திரனாகவோ, அந்தத் தண்ணீர் துளிகள் சூரியனாகவோ ஆகி விட்டனவா?”
அத்வைத தத்துவம் பற்றிய இந்தக் கேள்வியில், நியாயம் இருக்கிறது. ஆனால் அத்வைதம் இந்த உதாரணங்களுடன் நின்று விடவில்லை. இவை ஆரம்ப உதாரணங்கள் – அவ்வளவுதாம். உபநிஷத்துக்களின் அடிப்படையில் அத்வைதம் மேலும் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.