உயர்ந்த ஸத்யம் எது?

அத்வைத சாஸ்திரங்களில்சொல்லியிருக்கிற வேறு சில உதாரணங்களை மஹாஸ்வாமிகள்சுட்டிக்காட்டியிருக்கிறார்‌. 

கிணற்றில்தண்ணீர்இருக்கிறது; அதில்ஒரு பாத்திரத்தை இறக்குகிறோம்‌. அதில்நீர்நிரம்புகிறது. கிணற்றுத்தண்ணீர்வேறு, பாத்திரத்தில்இருக்கும்தண்ணீர்வேறு அல்ல. ஆனால்அந்தப்பாத்திரத்தைக்கிணற்றினுள்இறக்கும்போதும்சரி, இழுக்கும்போதும்சரி, அதில்உள்ள தண்ணீர்‌, கிணற்றுத்தண்ணீரி லிருந்து மாறுபட்டுத்தனியாகத்தெரிவது போன்ற தோற்றம்இருக்இறது. ஆனால்‌, இரண்டிற்கும்வித்தியாசம்இல்லை; இரண்டுமே ஒன்றுதான்‌. ப்ரம்மம்வேறு, ஆத்மா வேறு என்ற தோற்றமும்இப்படிப்பட்டதுதான்‌. 

கிணற்றில்இறக்கப்பட்ட பாத்திரம்‌, பெரியதாக இருந்தால்‌, அதில்உள்ள நீரும்பெரிய அளவில்இருக்கிறது. பாத்திரம்சிறியதாக இருந்தால்நீரின்அளவும்சிறியதாக இருக்கிறது. அந்தப்பாத்திரத்தை உடைத்துவிட்டால்‌, கிணற்றுத்தண்ணீர்‌, பாத்திரத்தண்ணீர்என்ற வித்தியாசம்எல்லாம்மறைந்து போய்விடுகிறது. பரமாத்மாதான்ஜீவாத்மாஇரண்டும்ஒன்றுதான்என்பதை விளக்க இந்த உதாரணம்காட்டப்பட்டிருக்கிறது.

பாத்திரம்உடைக்கப்பட்டால்எப்படித்தண்ணீரில்தோன்றிய வித்தியாசம்மறைகிறதோ, அதே போல அஞ்ஞானம்உடைத்தெறியப்பட்டால்‌, பரமாத்மாவும்‌, ஜீவாத்மாவும்வெவ்வேறானவை என்கிற நினைப்பும்போய்விடும்‌. 

ஈசாவாஸ்ய உபநிஷத்தில்ஆரம்பத்தில்வருகிற சாந்தி மந்திரம்இப்படிக்கூறுகிறது

ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத்பூர்ணமுதச்யதே 

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே 

(அது) இறைவன்முழுமையானவன்‌; (இது) இந்த உலகம்முழுமையானது; முழுமையான இறைவனிலிருந்து முழுமையான உலகம்தோன்றியுள்ளது. முழுமைமிலிருந்து, முழுமையை எடுத்த பின்பும்முழுமையே எஞ்சியுள்ளது

ஈசாவாஸ்ய உபநிஷத்தில்ஆரம்பத்தில்வருகிற மேற்கண்ட மந்திரம்‌, ப்ருஹதாரண்யக உபநிஷத்தின்முடிவில்வருகிறது

இந்த உபநிஷத்வாக்கியத்தில்‌ ‘அதுஎன்பது ப்ரம்மத்தைஅதாவது இறைவனைக்குறிக்கிறது. ‘இதுஎன்பது இந்த உலகைக்குறிக்கிறது. உலகம்‌, பார்வைக்கு முழுமையாகவே தோன்றுவதால்‌, அதுவும்‌ ‘பூர்ணம்‌’ – முழுமையானது என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால்இந்த உலகம்‌ ‘ஸத்யம்‌” என்று உபநிஷத்துக்கள்கூறு வதாக மேற்கண்ட வாக்கியத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடி யாது. ஏன்என்று பார்ப்போம்‌. 

முழுமையிலிருந்து (அதாவது ப்ரம்மத்திலிருந்து), முழுமையை (அதாவது இந்த உலகை) எடுத்த பின்பும்‌, முழுமையே மிஞ்சி யிருக்கிறது. உலகம்உண்மையிலேயே முழுமையானது என்று எடுத்துக்கொண்டால்‌, அந்த முழுமை எடுக்கப்பட்ட பிறகு, ப்ரம்மம்என்கிற முழுமையில்ஒன்றுமே மிச்சம்இருக்கக்கூடாது.

அதாவது முழுமைமுழுமை – 0 என்றுதான்ஆக வேண்டும்‌. ஆனால்உபநிஷத்தோ அப்படிச்சொல்லவில்லை. இந்த உலகம்என்கிற முழுமையை எடுத்த பின்பும்‌, ப்ரம்மத்தின்முழுமை, முழுமையாகவே மீதமிருக்கிறது. அதாவது எடுக்கப்பட்டது பூஜ்யம்தான்‌. முழுமைபூஜ்யம்‌ – முழுமை. இதைத்தான்மந்திரம்கூறுகிறதுஅதாவது, இந்த உலகம்என்பது இல்லாதது. அதுதான்மாயை. பார்வைக்கு உண்மை போல தெரிந்தாலும்‌, இது கானல்நீர்போன்றது. சுட்டெரிக்கும்வெயிலில்‌, தார்போட்ட தெருவில்தொலைவில்நீர்இருப்பது போல்தெரிகிறது. சற்று நெருங்கி னால்அது இல்லை; அது வெறும்தோற்றமே என்பது அப்போது புரிகிறது. இந்த உலகமும்அப்படிப்பட்டதே என்பது அத்வைதம்‌. அதற்கு மேற்கண்ட உபநிஷத்வாக்கியம்ஒரு சான்று

தந்திர சாஸ்திரத்தில்பலமுத்திரைகள்‌! பயன்படுத்தப்படு இன்றன. விரல்களைக்கொண்டு செய்யப்படுகிற இந்த அபிநயங்களில்ஒன்று சுவாரஸ்யமானது. ஆள்காட்டி விரலை ஒரு நபரைக்காட்டுகிற மாதிரி நீட்டி, கட்டை விரலை தன்னை நோக்கி வைத்துக்கொண்டு, காட்டப்படுகிற முத்திரை இது. ஆள்காட்டி விரல்‌ ‘அதுஎன்ற ப்ரம்மத்தைக்காட்டுகிறது; கட்டை விரல்தன்னையே காட்டுகிறது. ‘ப்ரம்மம்‌” என்கிற அது வேறு எங்கேயோ இருப்பது அல்ல; தனக்குள்ளே இருக்கும்பரமாத்மாதான்அது. அதுதான்இது

நான்யார்‌? என்கிற விசாரணையை முனைப்போடு செய்தால்என்ன நடக்கும்‌? என்னுடைய கண்‌, என்னுடைய காது என்றெல்லாம்சொல்நெபோது, கண்ணோ, காதோ மற்ற இந்திரியங்களோ நான்அல்ல என்பது தெளிவாகி விடுகிறது. என்மனம்என்பதும்நானாக இருக்க முடியாது. பிறகு அந்த நான்யார்‌? ஒவ்வொன்றாகஅது நான்இல்லை, அது நான்இல்லைஎன்று கழித்துக்கொண்டே வந்தால்‌, இறுதியில்நிற்பது ப்ரம்மம்தான்‌. அதுதான்நான்‌. இப்படி புரிந்து கொள்பவன்உண்மையை உணர்ந்தவன்ஆகிறான்‌. 

ஒவ்வொரு வேதத்தைச்சார்ந்த உபநிஷத்துக்களிலும்ஒரு முக்கியமான வாக்கியம்வரும்‌. இப்படி நான்கு வேதங்களைச்சார்ந்த உபநிஷத்துக்களில்கூறப்பட்டுள்ள நான்கு வாக்கியங்கள்‌ ‘மஹா வாக்கியங்கள்‌! என்று கூறப்படுகின்றன.

உயர்ந்த அனுபவஞானம்தான்ப்ரம்மம்‌” என்ற மஹா வாக்கியம்ரிக்வேதத்தைச்சார்ந்த ஐதரேய உபநிஷத்தில்வருகிறது

நானே ப்ரம்மம்‌” என்பது யஜூர்வேதத்தைச்சார்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தைச்சார்ந்தது

நீயும்பரமாத்மாவும்ஒன்றுதான்‌” என்ற மஹா வாக்கியம்ஸாம வேதத்தைச்சார்ந்த சாந்தோக்ய உபநிஷத்தில்வருகிறது

இந்த ஆத்மா என்பது ப்ரம்மமேதான்‌’ என்ற மஹா வாக்கியம்அதர்வ வேதத்தைச்சார்ந்த, மாண்டூக்ய உபநிஷத்தில்வருகிறது

இந்த நான்கு மஹா வாக்கியங்களும்அத்வைத சித்தாந்தத்தையே உறுதி செய்கின்றன என்பது அத்வைஇதிகளின்வாதம்‌. அத்வைத சித்தாந்தத்தைத்தான்உபநிஷத்துக்கள்வலியுறுத்துகின்றன என்பதைக்காட்டுவதற்கு, மஹாஸ்வாமிகள்வேறு ஒரு விஷயத்தை யும்சொல்கிறார்‌. த்வைதத்தால்பயமும்‌, துக்கமும்‌, உபத்திரவமும்உண்டாகின்றன என்று பல இடங்களில்உபநிஷத்துக்கள்கூறுகின்றன: இங்கே த்வைதம்என்பதை, ஒரு சித்தாந்தமாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. மத்வாச்சாரியார்கூறிய, அந்த சித்தாந்தம்பற்றி இங்குப்பேசப்படவில்லை. இரண்டு வித்தியாசமான விஷயங்கள்இருந்தால்தான்ஆசை, பயம்‌, துக்கம்போன்றவை உண்டாகின்றன. ஒரு வீடு இருக்கிறது; நாம்இருக்கிறோம்‌; அது வேறு, நாம்வேறு என்ற நினைப்பினால்தான்அதன்மேல்ஆசை உண்டாகிறது. மிகவும்நெருக்கமானவன்ஒருவன்இறந்து போகிறான்‌; அவன்வேறு, நான்வேறு என்ற நினைப்பினால்தான்அவனுடைய மர ணம்பற்றிய துக்கம்உண்டாகிறது. நமக்கு வேறுபட்டு இன்னொன்றாக நாம்எதை நினைக்கிறோமோ, அதன்மீதுதான்நமக்குப்பற்று, அதை நினைத்துத்தான்நமக்குப்பயம்‌, அதைப்பற்றித்தான்நமக்கு வருத்தம்‌. அதன்மேல்தான்நமக்கு ஆசைஎல்லாமே உண்டாகின்றன

இறைவனே வேறொருவர்‌, என்று நினைத்தாலும்இதே கதிதான்‌. அந்த நினைப்பு நீங்கினால்அது மோட்சம்‌. அதை இந்த உடல்இருக்கும்போதே ஒருவன்அனுபவிக்க முடியும்‌. அப்படிப்பட்ட நிலையை எய்துகிறவன்ஜீவன்முக்தன்‌. அதாவது இந்த உடலில்இருக்கும்போதே அவன்மோட்ச நிலையை எய்துகிறான்‌; முக்தி அடைகிறான்‌. இதைக்கூறுவது அத்வைதம்‌. 

இந்த அத்வைதம்கவிகளால்எப்படிப்பார்க்கப்பட்டது என்ப தற்கு ஒரு சுவையான உதாரணம்‌. நள சரித்திரத்தை எழுதியவர்ஹர்ஷர்‌. அந்த நள சரித்திரத்தில்ஒரு கட்டத்தில்தமயந்திக்கு ஸ்வயம்வரம்நடக்கிறது. அவள்நளனிடம்மனதைப்பறி கொடுத்துவிட்டாள்‌. அவனையே மணக்க வேண்டுமென்ற விருப்பத்தில்இருக்கிறாள்‌. ஆனால்இந்திரன்‌, வருணன்‌, அக்னி, யமன்ஆகிய நான்கு தேவர்களும்கூட, தமயந்தியின்மேல்விருப்பம்கொண்டுள்ளனர்‌. தன்னையே அவள்மணக்க வேண்டும்என்று அவர்கள்ஒவ்வொருவரும்விரும்புகின்றனர்‌. ஸ்வயம்வரத்திற்கு அவர்களும்வந்திருக்கிறார்கள்‌. அதுவும்எப்படி? அவர்கள்ஒவ்வொருவரும்நளனைப்போலவே ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, நளனுடன்கூடவே நிற்கிறார்கள்‌. உண்மையான நளன்யார்என்பதைத்தமயந்தி புரிந்து கொள்ள வேண்டும்‌. இந்த இடத்தில்ஹர்ஷர்வர்ணிக்கிறார்‌ : 

பஞ்சம கோடி மாத்ரேமதானாம்‌ 

அத்வைததத்வ இவ ஸத்யதரேபி லோகஇந்து மதங்களுக்கு நடுவே ஸத்யதரமான அத்வைதம்இருக்கிற மாதிரி,

ஐந்து நளன்களுக்கிடையே இருந்த ஸத்யமான நளனை புரிந்து கொள்ள முடியாமல்‌… 

இதில்முதலில்ஒன்றைப்பார்த்துவிட வேண்டும்‌. ஐந்து மதங்கள்என்பவை எவை? ‘ஆதித்யம்‌ – அம்பிகாம்‌ – விஷ்ணும்‌ – கணநாதம்‌ – மஹேச்வரம்‌’. அதாவது சூரியன்‌, அம்பிகை, மஹா விஷ்ணு, விநாயகர்‌, பரமேச்வரன்என்ற ஐந்து தெய்வங்களைப்பூஜை செய்பவர்கள்உண்டு. இவர்கள்ஸ்மார்த்தர்கள்‌. ஸ்மார்த்தன்என்றால்ஸ்மிருதியைப்பின்பற்றுகிறவன்என்று அர்த்தம்‌. ஸ்மிருதி என்பது தர்மசாஸ்திரமே.

இந்த ஐந்தில்சுப்ரமண்யரைக்காணோமே என்ற கேள்வி தேவையில்லை. அக்னி தொடர்பான எல்லா வைக செயல்பாடு களும்சுப்ரமண்யருக்குப்போய்ச்சேருகின்றன. இதைத்தெளிவு படுத்துகிற வகையில்‌, ஷண்மத ஸ்தாபகர்‌ (ஆறுமத ஸ்தாபகர்‌) என்ற பெயர்பெற்ற ஆதிசங்கரர்‌, விநாயகரை வழிபடும்காணபத்யம்‌, சுப்ரமண்யரை வழிபடுகிற கெளமாரம்‌, அம்பிகையை வழிபடும்சாக்தம்‌, ஈச்வரனை வழிபடும்சைவம்‌, விஷ்ணுவை வழி படுகிற வைஷ்ணவம்‌, சூரியனை வழிபடுகிற ஸெளரம்‌ – என்று நம்பிக்கைகளின்அடிப்படையில்‌, வழிபாடுகளைச்சர்படுத்திக்கொடுத்தார்‌. 

இப்படி ஐந்து மதத்தின்நடுவில்அத்வைதம்மாதிரிஸத்யதரமாக நின்ற நளன்யார்‌?” என்று காண வேண்டியது தமயந்தியின்பொறுப்பாகியது. உயர்ந்த ஸத்யம்எது? அதுவே ஸத்யதரம்‌. இந்த உதாரணம்‌, வாதங்களுக்கு இடமளிக்கலாம்‌. ஆனால்ஒன்று நிச்சயம்‌! ஹர்ஷர்அத்வைதியாக இருந்திருக்க வேண்டும்‌! அதனால்இந்த சித்தாந்தத்தை இப்படி வர்ணித்திருக்கிறார்‌! 

உபநிஷத்துக்களின்அடிப்படையில்அமையப்பெற்ற அத்வைதம்உலகத்தையும்‌, மனிதர்களையும்அஸத்தியம்என்று சொல்ல வில்லை. அத்வைத சித்தாந்தத்தை எடுத்துக்கூறியவர்களில்மிகவும்முக்கியமானவராகிய ஆதிசங்கரர்‌, ஸத்தியத்தை மூன்று விதமாகப்பிரித்தார்‌. இந்த மூன்றிலும்சேராதது மட்டுமே அஸத்தியம்‌. அது என்ன ஸத்தியத்தில்மூன்று விதம்‌? பரமார்த்திக ஸத்தியம்என்பது எக்காலத்திலும்மாறாமலிருப்பது; அது ப்ரம்மம்‌. வியாவஹாரிக ஸத்தியம்என்றால்‌, நிஜம்போல நாம்பார்ப்பது; உலக வாழ்க்கை நிஜம்என்று நாம்நினைப்பது இந்த வகையைச்சார்ந்தது. ப்ராதிபாஸிக ஸத்யம்என்பது, சிறிது நேரமே இருக்கிற ஒரு தோற்றம்போன்றது; ஒரு சிறிய தகர டப்பியின்மூடி வெயிலில்இடக்கிறது. அது வெள்ளி நாணயம்போல தோன்றுகிறது. அந்த தோற்றம்இருப்பது உண்மைதான்‌; ஆனால்உண்மையில்அது நாணயம்அல்ல. இது ப்ராதிபாஸிக ஸத்யம்‌. 

அஸத்தியம்என்பது எந்த விதத்திலும்இல்லாதது. இதற்கு குதிரைக்கொம்பு உதாரணமாகக்கூறப்பட்டிருக்கிறது

ஒரு கயிற்றை அரை இருட்டில்பார்த்தால்‌, அது ஒரு பாம்பாகத்தோற்றமளிக்றெது. அது பாம்பு என்பது பொய்‌; ஆனால்பாம்பு மாதிரி ஒரு தோற்றம்தெரிகிறது என்பது மெய்‌. இது ப்ராதிபாஸிக ஸத்யம்‌. 

இவற்றில்ப்ராதிபாஸிக ஸத்யமும்‌, வியாவஹாரிக ஸத்யமும்உண்மையைத்தேடுகிறபோது இல்லாமற்போய்விடுகின்றன. இதற்குமித்யைஎன்று பெயரே தவிர, இதை யாரும்அஸத்தியம்என்று சொல்வதில்லை. எப்பொழுதுமே மெய்யாகத்தெரியாதது! தான்அஸத்தியம்‌. இந்த உலகம்மித்யை என்று உபநிஷத்துகள்காட்டுவதாக வாதிடுவது, அத்வைதம்‌. 

விசிஷ்டாத்வைதம்என்ன சொல்கிறது?