அக்னி தேவனும், வாயு தேவனும் யக்ஷன் முன்பாகத் தங்கள் ஆற்றலை இழந்து நிற்க, பின்னர் இந்திரன் அந்த யக்ஷன் யார் என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தான்; அப்பொழுது யக்ஷன் மறைந்துவிட, உமா தேவி அங்குப் பிரசன்னமானாள்; அந்த யக்ஷன், ப்ரம்மமே என்பதை அவள் இந்திரனுக்கு எடுத்துச் சொன்னாள்… இந்த விவரங்களைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
அக்னி எதையுமே எரித்துவிடக்கூடிய வல்லமை படைத்தவன். வாயுவோ எதையும் சுமந்து சென்றுவிடக்கூடிய வலு படைத்தவன். ஆனால், அந்த அக்னி தேவனால் யக்ஷன் எடுத்துப் போட்ட ஒரு புல்லை எரிக்க முடியவில்லை; வாயு தேவனால் அந்தப் புல்லை அசைக்கக்கூட முடியவில்லை. இவ்வாறு அவர்கள் ஆற்றல் இழந்ததற்குக் காரணம், இறைவன் அவர்களுடைய வல்ல மையை, அவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டதுதான். நமது கண் கள் பார்க்கும் சக்தி படைத்தவை; காதுகள் கேட்கும் வல்லமை படைத்தவை; கால்கள் நடக்கக் கூடியவை. இவ்வாறு ஒவ்வொரு புலனும் ஓர் ஆற்றல் படைத்ததுதான். ஆனால் அந்த ஆற்றல் எங் இருந்து வருகிறது? ஒருவன் மரணம் அடைகிறபொழுது அந்த ஆற் றல் என்னவாகிறது? கண்கள் பார்க்கின்றனவா? காதுகள் கேட்கின் ஐனவா? கால்கள் நடக்கின்றனவா? அந்த ஆற்றல் எங்கே போயிற்று? புலன்களிடமிருந்து பிராணன் பிரிந்து விட்டதால், புலன்கள் தங்களு டைய இயக்கத்தை இழந்து விடுகின்றன. அந்தப் பிராணன் ஏன் புலன்களிலிருந்து பிரிக்கப்பட்டது? ஆன்ம உணர்வு ஆதாரமாக இல்லை என்றால், புலன்களோ, மனமோ, பிராணனோ எதுவுமே இயங்காது. எல்லா இயக்கங்களும் நடைபெறுவது ஆன்மாவினால் தான். அந்த ஆன்மாதான் ப்ரம்மம்.
யக்ஷன் மறைந்தபொழுது, அவன் யார் என்பதைத் தனது மன இன் மூலமாக அறிந்து கொள்ள இந்திரன் முயலவில்லை. அங்கே தோன்றிய உமா தேவியிடம் ‘யார் அந்த யக்ஷன் என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டான். மனதினால் இறைவனை அறிந்துவிட முடியாது. அந்த மனம் தன்னுடைய ஆற்றல் இதற்குப் போதுமானது அல்ல என்பதை உணர்ந்து, தெய்வத்திடம் தன்னை அர்ப்பணித்து, வேண்டிக் கொண்டால், அப்பொழுது தெய்வத்தின் அருளால், இறுதி உண்மை உணர்த்தப்படும். தெய்வத்திடம் பரி பூரணமான பக்தியும், நம்பிக்கையும் கொண்டு, அவரை அண்டி நின்றால், ஆன்ம உணர்வு முழுமையாக ஏற்படும். இதைத்தான் அக்னி, வாயு, இந்திரன் ஆஐியோரின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.
இதை விளக்கிய பிறகு, கேன உபநிஷதம் ‘ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது. அது அவ்வாறே அறியப்படுகிறது. எல்லா உயிர்களிலும் நிறைந்ததாகவே அதைத் தியானிக்க வேண்டும். ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிற உண்மையை யார் அறிகிறானோ, அவனை எல்லா ஜீவராசிகளும் நேசிக்கின்றன’ என்று கூறுகிறது. இதே கருத்து ஈசாவாஸ்ய உபநிஷதத் இலும் வலியுறுத்தப்படுவதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
இறுதியாக கேன உபநிஷதம் ஆன்ம அறிவை அடைவதற்கு, தவமும், புலக் கட்டுப்பாடும் அடிப்படையாக இருக்கின்றன என் றும், வேதங்கள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றன என்றும் கூறுகிறது. ‘யார் இதை இவ்வாறு உறுதியாக அறிகின்றானோ, அவ னுடைய பாவங்கள் அகன்று விடுகின்றன. எல்லையற்றதும், மேலானது. மான ஆன்ம உணர்வில் அவன் நிலை பெறுகிறான்’ என்று கூறி முடிகிறது கேன உபநிஷத்.
அடுத்து நாம். பார்க்க இருப்பது கட உபநிஷதம். மரணத் இற்குப் பிறகு மனிதனுக்கு என்ன நடக்கிறது? அவன் என்ன ஆகி றான்? என்ற கேள்விகளுக்குச் சாத்திரங்கள் பல்வேறு கோணங் களிலிருந்து விடைகளை அளிக்கின்றன. ஆனாலும்கூட ‘மரணத்திற்குப் பின் என்ன?! என்பது ஒரு விடை இல்லாத கேள்வியாகவே இருந்து வருநெது. கட உபநிஷதம் ஒரு கோணத்திலிருந்து மரணத் இன் தன்மையையும், அதன் பிறகு மனிதனுக்கு என்ன ஆகிறது என்பதையும் ஆராய்கிறது.
அத்துடன்கூட, மரணத்தை வென்று விட்டோம் என்ற நிலை யைத் தரக்கூடிய, இறுதி உண்மையைப் பற்றிய அறிவைப் பெறுவதே முக்கியம் என்றும் கூறுகிறது. நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதேகூட, அதற்கு ஒரு பாதை என்றும் சுட்டிக்காட்டுகிறது கட உபநிஷதம்.
இறுதி உண்மையாகிய இறைவனை அடைவதே வாழ்க்கை யின் லட்சியம். இந்த உலகம் தருகிற பாடங்களை அனுபவமாக ஏற்றுக் கொண்டு, இந்த வாழ்க்கையை நடத்திக் கொண்டே, அந்த உயர்ந்த லட்சியத்தை அடையலாம் என்று உபநிஷதங்கள் கூறு இன்றன. இதற்கு வெவ்வேறு உபநிஷதங்களும், சில வழிகளையும் காட்டுகின்றன; இந்த வழிமுறைகள் வித்யைகள் எனப்படுகின்றன. முக்கியமான உபநிஷதங்களில் மொத்தம் 48 வித்யைகள் கூறப் பட்டுள்ளதாகவும், இன்று இந்த வித்யைகளின் செயல்முறையைப் பற்றிய சரியான விளக்கம் நமக்குக் கிடைக்காமற் போய்விட்டது என்றும் பண்டிதர்கள் கூறுகிறார்கள். கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று – நசிகேத வித்யை. அடுத்தது – அங்குஷ்டமாத்ர வித்யை. ‘இவை படிகள் போல அமைந்து, இறைவனை உணர்வதற்கான ஒரு பாதையாக அன்று விளங்கி இருக்க வேண்டும்” என்று ஸ்வாமி ஆசுதோஷானந்தர் கூறுகிறார்.
தொடக்கத்திலேயே ஒரு நிகழ்ச்சியை கட உபநிஷதம் வர்ணிக் இறது. ‘முன்னொரு காலத்தில் வாஜச்ரவஸ் என்பவர் பலன்களின் மீது ஆசை கொண்டு, தம்மிடமிருந்த பொருட்களைத் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதஸ் என்ற ஒரு மகன் இருந்தான்! என்று தொடங்குகிறது இந்த உபநிஷதம். வெவ்வேறு பலன்களை வேண்டி, பல யாகங்களை நடத்தும் வழிமுறைகள் வேதங்களில் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றில் தரப்பட்டிருக்கெ மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரித்து, குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் சமர்ப்பித்து, தானங்களைச் செய்து, யாகத்தை நடத்துக போது அதற்குரிய பலன் இட்டும். அந்த மாதிரி ஒரு யாகம் விச்வஜித் என்ற பெயரைக் கொண்டது. பெரும் செல்வத்தை அளித்து, உலகையே ஆளும் வல்லமை தரக்கூடியது. இப்படிப் பட்ட யாகத்தை வாஜச்ரவஸ் நடத்தியபோது, என்ன நடந்தது என்பதைக் கட உபநிஷதம் வர்ணிக்கிறது.
‘தட்சணைகள் தரப்படுவதையும், எடுத்துச் செல்லப்படுவதை யும் நசிகேதஸ் பார்த்தான். அவன் சிந்தனை செய்யத் தொடங்கி னான். ‘இனி பால் கறக்காது என்ற நிலையை அடைந்துவிட்ட, கன்று போடும் சக்தியை இழந்துவிட்ட, பசுக்களைத் தானம் செய் பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைஇறான். அப்படிப் . பட்ட பசுக்களைத்தாம் தனது தந்தை தானமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்’ என்பதை நசிகேதஸ் பார்த்தான்.
தானத்தைச் செய்கிற முறை ஒன்று உண்டு. அதை அகங்காரத் துடன் செய்யக்கூடாது – அடக்கத்துடன் செய்ய வேண்டும்; பெரிய காரியம் செய்கிறோம் என்ற மமதை இருக்கக்கூடாது – ஓர் அச்சத்துடன் செய்ய வேண்டும்; அலட்சியமாகச் செய்யக் கூடாது – மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும்… இப்படி யெல்லாம் தானத்தைப் பற்றி, சாத்திரங்களிலும், உபநிஷதங்களி லும் கூறப்பட்டிருக்கின்றன.
ஆனால் வாஜச்ரவஸோ தன்னைத்தானே ஏமாற்றிக் கொள் கிறோம் என்பதுகூட புரியாமல், இழட்டுப் பசுக்களைத் தானமாக அளித்துக் கொண்டிருந்த .*். இதனால் நசிகேதஸ் அவரிடம்போய், ‘என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போ௫றீர்கள்?” என்று கேட்டான்,
ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை அவன் இப்படிக் கேட்ட பிறகு, வாஜச்ரவஸிற்குக் கோபம் வந்தது. தன் னுடைய தவறை மகன் சுட்டிக்காட்டியதாலும், அவருக்கு அந்த கோபம் ஏற்பட்டிருக்கலாம். தொல்லை பொறுக்க மாட்டாமல், ‘உன்னை எமனுக்குத் தந்தேன், போ’ என்றார் அவர்.
தந்தை கோபத்தில்தான் பேசினார் என்றாலும், சொன்ன வார்த்தை சொன்னதுதான் என்பதால், தான் எமனிடம் சென்றேயாக வேண்டும் என்ற நிச்சயத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்டான் நசிகேதஸ். அதற்கு முன்பாக தந்தையிடம் அவன் பேசிய சில வார்த்தை களைக் கட உபநிஷதம் கூறுகிறது.
‘நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நினைத் துப் பாருங்கள். இப்போது உள்ளவர்களைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். செடி, கொடிகளைப் போல மனிதன் பிறக்கவும், அழியவும் செய்கிறான்’ என்றான் நசிகேதஸ்.
என்ன பொருவில் நசிகேதஸ் அப்படிச் சொன்னான்? ‘நமது முன் னோர்கள் எல்லாம் தானத்தை இப்படிச் செய்தது கிடையாது. உண்மையாக தானம் செய்தவர்கள் நல்ல உலகங்களை அடைந் தார்கள்; தானத்தில் நாட்டம் இல்லாமல் தானம் செய்தவர்கள், நல்ல உலகங்களை அடையவில்லை” என்பதையே அவன் தந் தைக்கு எடுத்துக் கூறினான். அதனால்தான் முன்னோர்கள் வாழ்ந்த வகையையும், இப்போது உள்ளவர்கள் வாழ்கின்ற வகையையும் ் அவன் உதாரணமாக எடுத்துக் காட்டினான். அது மட்டுமல்லாமல், கோபத்தில் தான் செய்ததை எண்ணி பின்னர் வருந்தக்கூடிய வாஜச்ரவஸிற்கு, உலக வாழ்க்கையின் உண்மையையும் அவன் விளக்கினான்.
‘மனித வாழ்க்கை சாஸ்வதமானது அல்ல; அழியக்கூடியது. செடி, கொடிகளைப் போல மனிதன் பிறக்கவும், இறக்கவும் செய் இறான்? என்று கூறி, தன்னுடைய பிரிவைத் தந்தை பெரிதாகக் கருதி கவலையுறக்கூடாது என்பதைச் சூசகமாக எடுத்துக் காட்டி னான் நசிகேதஸ்.
பின்னர் அவன் எமன் உலகை அடைந்தான். அப்போது எம தர்மன் அங்கே இல்லை. ஆகையால் எமனின் மாளிகையின் முன் னால் நசிகேதஸ் மூன்று இனங்கள் காத்திருந்தான். அதன் பிறகுதான் எமதர்மன் வந்தான். எமதர்மனுடைய மந்திரிகள் எமனிடம் சென்று, ஒரு விருந்தாளி காத்திருப்பதைத் தெரிவித்து, ‘எமதர்மனே! தூயவனான ஒருவன் விருந்தாளியாக வரும்போது, அவன் அக்னி போலவே உள்ளே நுழைகிறான். நல்லவர்கள், அவனுக்குத் தண் ணீர் முதலானவற்றைக் கொடுத்து, உபசரித்து, விருந்தோம்பல் செய்து, அவனை அமைதிப்படுத்துகிறார்கள். ஆகையால், நீயும் அந்தச் சிறுவனுக்குத் தண்ணீர் முதலியவற்றைக் கொடுத்து உபசரிப் பாயாக!” என்று கூறினார்கள்.