எமன் பார்த்தான். ‘நசிகேதா! நூறாண்டு காலம் வாழக் கூடிய மகன்களையும், பேரன்களையும் கேள்; தருகிறேன். ஏராளமான பசுக்கள், யானைகள், பொற்குவியல்கள், குதிரைகள் போன்ற வற்றைக் கேள்; தருகிறேன். பூமியில் ஒரு விரிந்து பரந்த அரசை ஆளும் வாய்ப்பைக் கேள்; தருகிறேன். நீ எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ, அவ்வளவு காலம் உன்னை வாழ விடு இறேன். உன் ஆசைகளை எல்லாம் அனுபவிக்கக் கூடிய வாய்ப் பைத் தருகிறேன். மானிட உலகில் எவராலும் அடைய முடியாத ஆசைகள் என்னென்ன உண்டோ, அவை அனைத்தையும் நீ அடையலாம். மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே! நீ கேட்ட வரத்திற்கு இணையான வரமாக எதை நினைக்கிறாயோ, அதைக் கேள்; தருகிறேன். இதைக் கேட்காதே! என்று கூறினான்.
ஆனால் நசிகேதஸோ இதனால் எல்லாம் மயங்கவில்லை. “மாணதேவனே! நீ சொல்கிற சுகங்கள், இன்பங்கள் எல்லாமே நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்களின் ஆற்றல் களை எல்லாம் வீணாக்குபவை… வாழ்வோ மிகப் பெரியது. அந்த வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் அனைத் தையும் தருவதாக நீ சொல்கிறாய். அது உன்னிடமே இருக்கட் டும். பணத்தினால் ஒரு மனிதன் இருப்தி அடைந்துவிட முடியாது. உன்னை நான் பார்த்ததாலேயே, வேண்டிய செல்வத்தை நான் அடைவது. உறுதிதான். ஆயுளோ, செல்வமோ எனக்கு வேண் டாம். நான் கேட்ட வரம் எனக்கு வேண்டும். கிழ வயதும், மரணமும் வந்து சேர்கிற பூவுலகில் வசிப்பவன் நான். அப்படிப் பட்ட நான், மரணமற்றவரான உன்னை அடையும் வாய்ப்பைப் பெற்றேன். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற்ற நான், நீ எவ்வளவு நீண்ட ஆயுள் தருவதாக இருந்தாலும், அது தரக் கூடிய வாழ்க்கையில் ஆசை வைப்பேனா? மறு உலக விஷயத்தைப் பற்றிய எந்த விளக்கத்தை அறிந்து கொண்டால், நான் பலன் அடைவேனோ, அந்த விஷயத்தை நான் அறிந்து கொள்ள விரும்பு இறேன். எந்த உண்மை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ, அதைப் புரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். வேறு எந்த வர மும் எனக்கு வேண்டாம்.
இவ்வாறு நசிகேதஸ் தனது நிலையிலேயே பிடிவாதமாக நின்று விட்டான். ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டால் கூட, அவற்றை அனுபவிப்பதால் எந்த மனிதனும் இருப்தி அடை வதில்லை. அது பணமாக இருந்தாலும் சரி, வேறு எந்த வசதி யாக இருந்தாலும் சரி. அல்லது இன்பமாக இருந்தாலும் சரி –அதை அனுபவிக்க, அனுபவிக்க மனிதனுக்கு மேலும் மேலும் ஆசை தான் வளருகிறதே தவிர, இருப்தி ஏற்படுவதில்லை. அவை புலன்களை அழிக்கின்றன. இதை உணர்ந்த நிலையில் நசிகேதஸ் இருந்ததால்தான், தான் கேட்ட வரத்திற்கு பதிலாக எமன் அளித்த வரங்களை எல்லாம் அவன் நிராகரித்தான்.
நசிகேதஸ் கேட்ட மூன்று வரங்களும் கூட ஒரு விஷயத்தை நமக்குப் புகட்டுகின்றன. முதல் வரமாக ‘தந்தை தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று நசிகேதஸ் கேட்டான். குடும்பத்தில் நல்ல அமைதி நிலவ வேண்டும்; சுமுகமான உறவு இருக்க வேண் டும்; அதற்காக இந்த வரம். அடுத்ததாக நசிகேதஸ் கேட்டது ஒரு யாகம் பற்றிய வரம். கர்மங்களைக் கடைப்பிடித்து மனிதன் தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இது இரண்டாவது நிலை. மூன்றாவதாக நசிகேதஸ் கேட்டது – உயர்ந்த தத்துவம் பற்றியது. தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட நிலையில், இறை தத்துவத்தை உணர மனிதன் முயற்சிக்க வேண்டும். அதில் முழு சிரத்தையுடன் ஈடுபட வேண்டும். அதைக் காட்டும் வகையில் நசிகேதஸ் எமன் காட்டிய ஆசைகளை எல்லாம் நிராகரித்து, உண்மையை அறிய வேண்டும் என்பதிலேயே குறியாக நின்றான்
நசிகேதஸின் மன உறுதியைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன், அவனுக்குத் தன்னுடைய உபதேசத்தைச் செய்யத் தொடங்கினான்.
“மேலானது என்பது வேறு; சுகம் தருவது என்பது வேறு. இவை இரண்டும் மாறுபட்ட பலன்களைத் தருகின்றன; அவற் நின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக் கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதையே நாடு இறவன் வீழ்ச்சி அடைகிறான். அறிவுடையவன், சுகம் தருவதை விட்டு விட்டு மேலானதையே தேர்ந்தெடுக்கிறான். மூடனோ தனக்கு நலன் விளைவிக்கக் கூடியது என்று எண்ணி, சுகம் தரு பாதையையே நாடுகிறான்’.
மேலானது ‘ச்ரேயஸ்’ என்றும், சுகமானது என்பது ‘ப்ரேயஸ்’ என்றும் கட உபநிஷதத்தில் குறிப்பிடப்படுகின்றன. பணத்தி லிருந்து நாம் பெறுகிற பல வகை சுகங்கள் நிம்மதியைத் தருபவை அல்ல. அவை நம்மை அமைதிக்கு இட்டுச் செல்வதில்லை. பெரும் புகழ் படைத்தவன் கூட, பல நேரங்களில் அவதியுறு கிறான். புகழ் பறி போய்விடுமோ என்ற அச்சம்; அல்லது தன்னை விட வேறொருவன் புகழ் வாய்ந்தவனாக இருக்கிறானே என்ற பொறாமை. மேலும் புகழ் ஈட்டினால் அது பெருமையாக இருக்குமே என்ற ஆதங்கம் – போன்றவை அம்மனிதனை வாட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்தப் புகழ் நிலையானது அல்ல என் பதை உணர்ந்து, அதைப் பெரிதாக நினைக்காமல் இருக்க ஒருவன் கற்றுக் கொண்டால், அவன் நிம்மதி அடைகிறான். ஆனால் அந்தப் புகழே பெரிது என்று ஒருவன் கருதினால் அவனுக்கு என்ன நடக்கும்? கவலைதான் மிஞ்சும். அந்தப் புகழை தவற விட்டு விடக் கூடாது என்ற நோக்கமே மனதில் மேலோங்கி நிற்க, புகழைத் தக்க வைத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுக்கு அது கட்டாமல் பார்த்துக் கொள்ளவும் வழி களை ஆராய்ந்து, அதிலேயே நாட்டமுடையவனாக அவன் அலைவான். பணத்தாசை, பொருளாசை, புகழாசை – என்று எந்த ஆசையை எடுத்துக் கொண்டாலும் இதே கதிதான்.
பெரிய மனிதர்கள், பெரிய தலைவர்கள், புகழ் பெற்ற பல பிரபலஸ்தர்கள் – என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களுடைய நிலை இதுதான். அவர்களுக்கு நிம்மதி என்பது கிடை யாது. வெளித்தோற்றத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடனும், பெருமை யுடனும் திகழ்வது போல் காணப்பட்டாலும், மனதிற்குள் அவர் கள் படுகிற பாட்டை அவர்கள்தான் அறிவார்கள். ‘நமது பணி யைச் செய்தோம்; அதன் காரணமாக வந்து சேர்வது வரட்டும்; அல்லது வராமலே போகட்டும்; அது பற்றி கவலை இல்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் வளர்ந்தால், இந்த மாதிரி அச்சங்கள் அவர்களை வாட்டாது. ஆனால் அந்த நிலையை எய்துவது மனிதர்களுக்குக் கடினமாக இருக்கிறது.
ஆனால் நசிகேதஸோ, சர்வ சாதாரணமாக, இயல்பாகவே அந்த நிலையில் நின்றான். அதைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன், ‘நசிகேதா! நீ நன்றாக சிந்தனை செய்து, செல்வங்கள், பல வசதிகள் போன்ற வற்றை ஒதுக்கித் தள்ளி விட்டாய். எந்தப் பாதையில் பெரும் பாலான மனிதர்கள் உழன்று கொண்டிருக்கிறார்களோ, அது செல் வத்தையோ, வசதியையோ, குறிக்கோளாகக் கொண்டது. அதை நீ தேர்ந்தெடுக்கவில்லை.
‘இறை நெறியும், உலக நடைமுறையும் வேறுபட்டவை. இவை நேர்மாறானவை. இவை வேறு வேறான வழிகளில் செல்இன் றன. நீ இறை நெறியில் நாட்டமுடையவனாக விளங்குகிறாய். நசிகேதா! உலக நடைமுறையில் ஊறிக் கிடக்கின்ற அறிவற்றவர் கள், தங்களை பெரும் அறிவாளிகள் என்றும், கற்று உணர்ந்தவர் கள் என்றும் கருதிக் கொண்டு, குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். அவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல, மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறார்கள். எல் லாமே இந்த உலக இன்பம்தான் என்று நினைக்கிற அவர்கள், மீண்டும் மீண்டும் என்னைத்தான் (மரண தேவனைத்தான்) வந்தடையிறார்கள்’.
எமதர்மன் மேலும் தொடர்ந்தான் : ‘ஆன்மாவைப் பற்றி உப தேசம் பெற நினைக்கிறவர்களும் சரி, அதை உபதேசிக்கக் கூடிய வர்களும் சரி, மிகவும் அரிதானவர்களாகவே இருக்கிறார்கள் ‘.
இந்த உபநிஷதமும் சரி. இதை உள்ளடக்கிய வேதங்களும் சரி. எப்பொழுது தோன்றியவை என்பது யாருக்குமே தெரியாது. அவரவர் தங்கள் இஷ்டப்படி யூகிக்கிறார்களே தவிர, இது என்று தோன்றியது என்பது எவருக்கும் நிச்சயமில்லை. அப்படிப்பட்ட, பல பல பற்பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, ரிஷிகளால் கூறப்பட்டு உலகிற்குக் கிடைத்த இதிலேயே, ‘ஆன்மா பற்றி அறிய முயற்சிப்பவனும், அரிதானவன்; அதை உபதேசம் செய்யக் கூடியவனும் அரிதானவன்’ என்று கூறப்படுகிறது. அன்றே அந்த நிலைதான் இருந்தது என்றால், இன்றைய நிலை பற்றிக் கேட் கவே வேண்டாம். அன்று அது அரிதாக இருந்தது: இன்று அது காணக் கிடைப்பதே இல்லை.
‘ஆன்மா பற்றி அறிந்து கொள்வது! என்றால், சில புத்தகங் களைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ, அதைப் புரிந்து கொண்டு விடுகிற முயற்சி அல்ல. அது ஆன்ம அறிவைத் தந்து விடாது. பின் ஏன் பிரசங்கங்களைக் கேட்க வேண்டும்? ஏன் இது சம்பந்தமான நூல்களைப் படிக்க வேண்டும்? அதற்கு ஒரு பலன் இருக் இறது. இது பற்றிய ஒரு ௬சி நமது மனதில் ஏற்படும்; அதுதான் பலன். நாம் எல்லோருமே ‘ப்ரேயஸை‘ நாடுகிற மனிதர்கள்தான். நமக்கு சுகங்கள் வேண்டும். இன்பங்கள் வேண்டும். செல்வம் வேண்டும். பெருமை வேண்டும். புகழ் வேண்டும். ஆகையால் நாம் ச்ரேயஸை நாடுவதில்லை. ஆனால் ‘ச்ரேயஸ் அதாவது மேலானது என்பது ஒன்று இருக்கிறது – அதை உணர்ந்து கொள்ள முயற்சிப்பது நமக்கு உயர்வைத் தரும் – அதனால் நாம் மேன்மை யுறுவோம்! – என்றெல்லாம் சில சமயங்களிலாவது சிந்தித்துப் ் பார்க்க, இது பற்றிய நூல்களும் பிரசங்கங்களும் உதவும். இன்று நமக்கு இருக்கிற வழி அது ஒன்றுதான் என்பதால், அதை அலட்சியப் படுத்தி விடாமல் இருப்பதுதான் நல்லது.
அதே சமயத்தில், இந்த மாதிரி சில பண்டிதர்களினால் செய்யப் படுகிற பிரசங்கங்களிலிருந்தும், சிலரால் எழுதப்படுகிற நூல்களி லிருந்தும் ஆன்ம அறிவை நாம் பெற்று விடலாம் என்று கருதி விடக் கூடாது. அப்படிக் கருதினால், ஏதோ கொஞ்சம் படித்து விட்டு அல்லது கேட்டுவிட்டு, ‘இனி நாம் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை‘ என்று நினைக்கத் தூண்டு கிற அகங்காரம் மட்டுமே மிஞ்சும். ஆகையால் இவற்றினால் கிடைக்கக் கூடிய பலன் ஒரு கட்டுக்கு அடங்கியதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, இவற்றை நாம் நாட வேண்டும்.
எமதர்மன், நசிகேதஸுக்கு மேலும் சொல்கிற வார்த்தைகளி’ லிருந்தே இது நமக்குப் புரியும்.