மரணத்திற்குப் பின்…

உலக நடைமுறையிலேயே முழுமையாக ஈடுபட்டுள்ள மனிதர்கள்கூறுகின்ற வழிகளாலும்‌, உபாயங்களாலும்ஆன்மாவை அறிந்து கொள்ள முடியாது. உண்மையை உணர்ந்தவனுடைய உபதேசங்களைப்பின்பற்றினால்குழப்பம்இருக்காது. ஆன்மா என்பது அணுவையும்விட நுட்பமானது. ஆகையால்அது வாதங்களுக்கு அப்பாற்பட்டது. உண்மையை அறிந்து கொள்‌: வதில்முழுமையான ஈடுபாடும்‌, ஆர்வமும்உடைய உன்னைப்போன்ற மாணவர்கள்இடைப்பது அரிது. நசிகேதா! ஸ்வர்க்க லோகம்ஆசைகள்நிறைவேறுகிற இடம்‌; யாகங்களின்பலனாகக்‌ , இடைக்கிற பயன்களின்இருப்பிடம்‌; அந்த : இடத்தில்பயம்இடையாது;: அது போற்றத்தகுந்தது; மிகவும்பெருமை வாய்ந்தது. ஆனால்இத்தனை இருந்தும்கூட ஒரு மனிதனுக்கு அது கிட்டும்போது, அது நிலையற்றதே. இந்த உண்மையைப்புரிந்து கொண்ட நீ, அதை அடைவதை ஒரு வரமாக ஏற்க மறுத்து விட்டாய்‌! – இவ்வாறு சொல்லி எமதர்மன்நசிகேதஸைப்பாராட்டினான்‌. 

ஸ்வர்க்க லோகம்பற்றி முன்பே ஒருஅத்தியாயத்தில்நாம்பார்த்தோம்‌. அது நிலையற்றது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. பெரும்புண்ணியங்கள்செய்திருந்தால்அவற்றின்பலனாக ஒரு மனிதன்ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான்‌. அவனுடைய புண்ணியங்களின்பலன்தீர்ந்த பிறகு, அவன்மீண்டும்பிறப்பெய்துகறொன்‌. ஆகையால்‌, ஸ்வர்க்க லோகம்ஒருவனுக்குக் கிட்டினால்‌, அது அவனுக்கு நிரந்தரமானது அல்ல. மோட்சம்இதிலிருந்து மாறுபட்டது. எல்லா ஜீவராசிகளிடத்திலும்உறைவது ப்ரம்மமே என்கிற உண்மையை உணர்ந்து, தன்னிலிருந்து மாறு: பட்டதாக வேறு எந்த ஜீவராசியையும்பார்க்காமல்‌, சமப்பார்வை உடையவர்களாகத்இகழ்ந்து, ஆன்ம உணர்வைப்பெற்று, ஞான நிலையை அடைந்து, அதன்மூலம்ஒருவன்பெறுவது மோட்சம்‌. அது நிலையானது. அதன்பிறகு பிறப்பு கிடையாது

ஸ்வர்க்க லோகம்இப்படி நிலையானது அல்ல என்பதால்‌ – அதை அடைவதற்கான வாய்ப்பைத்தருவதாக எமன்கூறியபோதும்‌, நசிகேதஸ்அதை ஏற்க மறுத்து விட்டான்‌. இந்தப்பக்குவ நிலையை நசிகேதஸ்அடைந்து விட்ட காரணத்தால்‌, அவன்எமனிடம்பாராட்டுப்பெறுகிறான்‌. 

ஆன்மாவின்மேன்மையைப்பற்றி விவரித்து விட்டு எம தர்மன்‌, அத்யாத்ம யோகம்செய்து ஆன்மாவை நினைத்து தியா னித்து, ஒருவன்இன்ப துன்பங்களைக்கடக்க வேண்டும்என்று கூறுகிறான்‌. யோகம்என்றால்‌, பொருந்துதல்‌, இணைந்து விடுதல்என்றெல்லாம்அர்த்தம்கொள்ளலாம்‌. அத்யாத்ம யோகம்என்றால்ஆன்மாவுடனேயே இணைந்து விடுவது. அதாவது புறத்திலே இருக்கும்பொருட்களை எல்லாம்‌, சிந்தனையில்இருந்து அகற்றிவிட்டு, அகத்தையே நினைத்து, மேலும்மேலும்அதிலேயே முனைவது. புறத்திலே இருப்பவற்றை எல்லாம்ஒதுக்க ஒதுக்க, அகத்திலே இறைவன்இருப்பதை உணர்ந்து கொள்ளும்தன்மையை ஒருவன்எய்துவான்‌. அதற்கான முயற்சியே, அதற்கான முனைப்பே, அதற்கான தவமே, அத்யாத்ம யோகம்‌. 

இதையடுத்து எமதர்மன்‌, ‘எல்லா வேதங்களும்எந்த லட்சியத்தைக்கூறுகின்றனவோ, எந்த லட்சியத்திற்காக எல்லா தவங்களும்செய்யப்படுகின்றனவோ, எதற்காக பிரம்மச்சரியம்முதலான விரதங்கள்கடைப்பிடிக்கப்படுகின்றனவோ, அந்த லட்சியத்தை எட்டுவதற்கான மந்திரத்தை சுருக்கமாகச்சொல்வ தென்றால்அதுஓம்‌. இந்த மந்த்ரமே மிகவும்மேலானது.  .. இந்த மந்த்ரத்தை யார்உண்மையிலேயே அறிந்து கொள்கிறானோ அவன்சிறப்பெய்துகிறான்‌’ என்று கூறினான்‌.

ஓம்‌! என்பதுப்ரணவ மந்த்ரம்‌” என்று பெயர்பெற்றது. மஹாஸ்வாமிகள்இது பற்றி கூறுகையில்‌, இப்படிச்சொல்கிறார்‌: ‘ம்‌! என்ற மூன்றும்சேர்ந்து ஓங்காரமான ப்ரணவமாகிறது. என்பது சிருஷ்டி; ப்ரம்மா. ‘! என்பது பரிபாலனம்‌; விஷ்ணு. ம்என்பது ஸம்ஹாரம்‌; ஈச்வரன்‌. ஆக, படைப்பு, காத்தல்‌, அழித்தல்என்ற மூன்றையும்உள்ளடக்கி ப்ரம்ம ஸ்வரூபமாக நிற்பது, இந்தஓம்‌! என்கிற மந்த்ரம்‌. இதுவே ப்ரம்மம்என்று கட உபநிஷதம்குறிப்பிடுகிறது.

மரணம்பற்றி நகேதஸ்கேட்டானல்லவா? எமன்சொல்கிறான்‌. ‘ஆன்மா பிறப்பதும்இல்லை; இறப்பதும்இல்லை. இது எதி லிருந்தும்உண்டாவதுமில்லை; இதிலிருந்து எதுவும்உண்டாவதும்இடையாது. இது பிறப்பற்றது. என்றென்றும்நிலைத்திருப்பது. பழமையானது. உடல்அழிக்கப்பட்டாலும்அழியாதது*.

அதாவது மரணம்‌ – அழிவு என்பது உடலுக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல. அதனால்தான்கட உபநிஷதம்‌ ‘நம்முடைய உடலிலிருந்து ஆன்மாவைப்பிரித்துப்பார்க்க வேண்டும்‌” என்று வற்புறுத்துகிறது. ‘நாம்ஆன்மாஎன்று உணர்ந்தால்நமக்கு மரண மில்லை. ‘இந்த உடல்தான்நாம்‌? என்று நினைத்தால்‌, மரணம்உண்டு. அதுதான்அழிவு.

சொற்பொழிவுகளைக்கேட்பதாலும்‌, படிப்பதாலும்ஆன்மாவை அறிந்து விட முடியாது என்பதை, மீண்டும்ஒருமுறை வற்புறுத்தி விட்டு எமதர்மன்சொல்கிறான்‌. ‘தீய ஒழுக்கம்உடையவன்‌, இந்திரியங்களை அடக்காதவன்‌, மன ஒருமைப்பாடு இல்லாதவன்‌, மன அமைதியற்றவன்‌… போன்றவர்கள்தங்களுடைய அறிவினால்இந்த ஆன்மாவை உணர்ந்து விடுவதில்லை‘.

தனது உபதேசத்தைத்தொடர்ந்த எமதர்மன்ஒரு உவமையைக்கூறி, நசிகேதஸுக்கு விளக்கம்அளிக்கிறான்‌. ‘உடம்புஒரு தேர்‌; புத்திதேரோட்டி; மனம்‌ – கடிவாளம்‌; இந்திரியங்கள்‌ – குதிரைகள்‌; நடைமுறை உலக விஷயங்கள்‌ – இந்தத்தேர்செல்வ தற்கான பாதைகள்‌; ஆன்மாபயணம்செய்பவன்‌.

தெளிவு பெறாதவனும்‌, ஒரு கட்டுப்பாட்டுக்குள்இயங்காத வனுமாக இருக்கிற மனிதனுடைய புலன்கள்‌, தேரோட்டிக்கு அடங்காத குதிரைகளாக திகழ்கின்றன. தெளிவு பெறாதவனாக, அடங்காத மனதை உடையவனாக, தூய்மை இல்லாதவனாக இருப்பவன்‌, இறைவனை அடைய மாட்டான்‌. எவன்தெளிவு பெற்றவனாக, அடங்கிய மனதை உடையவனாக இருக்கிறானோ, எவன்எப்போதும்தூயவனாக வாழ்கிறானோ அவன்‌ – எங்கே சென்றால்‌, மீண்டும்பிறப்பு கிடையாதோ, அந்த இறை நிலையை அடைகிறான்‌”. 

தேரோட்டி என்கிற புத்தி தெளிவு பெற்றதாக இருக்க வேண்டும்‌. மனம்என்ற கடிவாளம்சரியாகப்பிடிக்கப்பட வேண்டும்‌. அப்பொழுதுதான்புலன்கள்என்ற குதிரைகள்சரியான பாதை யில்செல்லும்‌. பாதை என்பது உலக விஷயங்கள்தான்‌. அதி லிருந்து முற்றிலும்விலகி, வேறெங்கோ சென்று விடுமாறு எமதர்மன்கூறவில்லை. நாம்செய்ய வேண்டியவற்றை எல்லாம்‌, உலக விஷயங்களோடு வாழ்ந்தபடியேதான்செய்தாக வேண்டும்‌. ஆனால்அதைத்தெளிவு பெற்ற புத்தியுடன்செய்ய வேண்டும்‌. புலன்களாகிய குதிரைகளை மனமாகய கடிவாளம்ஒழுங்குப்படுத்துகிறது. ஆனால்அந்த மனமாகிற கடிவாளத்தின்செயல்பாடு, புத்தியாகிய தேரோட்டியைப்பொறுத்தது. ஆகையால்‌, பாதையை முறையாகக்கடக்கிறோமா இல்லையா என்பது புத்தி யாய தேரோட்டியின்செயல்பாட்டில்தான்இருக்கிறது. அதனால்தான்அதற்கு தெளிவு தேவை என்று வற்புறுத்தப்படுகிறது

எமதர்மன்‌, நசிகேதஸைப்பார்த்து தொடர்ந்து பேசினான்‌. எந்த மனிதனும்‌, உள்மூச்சின்இயக்கத்தினாலோ, வெளி மூச்சின்இயக்கத்தினாலோ வாழ்வதில்லை என்றும்‌; இவை எதை ஆதார மாகக்கொண்டு இயங்குகின்றதனவோ, அதை ஆதாரமாகக்கொண்டே, எல்லா உயிரினங்களும்வாழ்கின்றன என்றும்எடுத்துச்சொல்லி விட்டு, அப்படிப்பட்ட ஆதாரம்உடலிலிருந்து வெளியேறி விட்டால்‌, உடலில்வேறு என்ன மிஞ்சும்என்று கேட்டு, அதற்கு விடையும்அளிக்கிறான்‌. ‘நீ கேட்ட பொருள்அதுதான்‌! என்று கூறுகிறான்‌. அதாவது உடல்வெறும்சடலமாக விட்டபோது எஞ்சுவது என்ன? ஆன்மா. மரணத்துக்குப்பின்இருப்பது ஆன்மாதான்

மரணத்துக்குப்பிறகு சில உயிர்கள்மனித உடம்பைப்பெறு இன்றன என்றும்‌, வேறு சில உயிர்கள்‌. தாவரம்போன்ற நிலை களை அடைகின்றன என்பதையும்விளக்கி விட்டு, வினைப்பயனின்படி அடுத்த பிறவி அமையும்என்று எமதர்மன்கூறுகிறான்‌. நெருப்பு, எவ்வாறு வெவ்வேறு பொருட்களில்அந்தந்தப்பொருளுக்குத்தக்கவாறு வடிவம்கொள்கிறதோஅதே போல, ஆன்மா ஒன்றாக இருந்தாலும்‌, பல்வேறு ஜீவராசிகளில்வெவ்வேறு வடிவத்தில்விளங்குகிறது. எல்லோருடைய காட்சிக்கும்‌, ஆதாரமாக இருப்பவன்சூரியன்‌. தன்னிடமுள்ள குறைபாடுகள்காரணமாக ஒருவன்சூரியனைப்பார்க்கவில்லை என்றால்‌, அது சூரியனை பாதிக்காது. அதுபோல, ஒன்றே ஆன ஆன்மா எல்லோரிடத்தில்இருந்தாலும்‌, உலகின்துக்கங்களால்அது பாதிக்கப்படு வதில்லை. ஏனெனில்அது அனைத்தையும்கடந்தது.

பின்னர்எமதர்மன்‌, வாழ்க்கையை, தலைகீழாகக்காணப்படுகிற ஒரு அரச மரத்திற்கு ஓப்பிடுகிறான்‌. ‘இந்த அரச மரம்மிகவும்பழமையானது. இதற்கு வேர்மேலே இருக்கிறது. களைகள்இழே உள்ளன. இது தூய்மையானது. அதுவே இறைவன்‌. அது அழிவற்றது. எல்லா உலகங்களும்இதைச்சார்ந்திருக்கின்றன. இதை: யாரும்கடந்து செல்ல முடியாதுஎன்று எமதர்மன்சொல்இறான்‌. ஒரு நீர்த்தேக்கத்தின்அருகில்நின்று ஒரு மரத்தின்பிரதி பிம்பத்தைத்தண்ணீரில்கண்டால்‌, அது தலைகீழாகத்தெரியும்‌. அதே போல வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்தான்என்பதால்இந்த உவமை கூறப்பட்டது என்று பெரியவர்கள்சொல்கிறார்கள்‌.

எல்லாவற்றையும்விட மேலானவன்இறைவன்‌. அவர்எங்கும்நிறைந்தவர்‌. எந்த அங்க அடையாளமும்அவருக்குச்சொல்ல முடியாது. அவரை உணர்வதால்ஒரு மனிதன்எல்லா தளைகளில்இருந்தும்விடுபடுகிறான்‌. அவன்மரணம்இல்லா பெருநிலையை அடைகிறான்‌. தெளிவு பெற்ற புத்தியுடன்‌, ஆர்வ முள்ள மனதினால்தொடர்ந்து முயற்சித்தால்‌, இறைவன்உணரப்படுவான்‌. அவரை உணர்ந்தவர்கள்‌, மரணம்அற்றவர்களாகிறார்கள்‌. இந்திரியங்களை வசப்படுத்தி, நிலையாக நிற்கிற தன்மை தான்யோகம்என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன்‌, உணர்வு பெற்றவனாகிறான்‌. அந்த யோக நிலை கூட, நசி கேதா! வளர்ச்சிக்கும்‌, வீழ்ச்சிக்கும்உட்பட்டதே!” என்று எமதர்மன்கூறியுள்ளதலிருந்து, யோக நிலையை ஒருவன்அடைந்தால்கூட, அதை காப்பாற்றிக்கொள்ள முனைப்பு, சிரத்தை தேவை என்று ஆகிறது. எமதர்மன்இறுதியாக, ‘மனதைச்சார்ந்திருக்கும்எல்லா ஆசைகளும்விலகுகிறபோது, மனிதன்மரணம்அற்றவனாகிறான்‌. அவன்இறை நிலையை அங்கேயே அடைஇிறான்‌’ என்று கூறுகிறான்‌. 

நசிகேதஸுக்கு, எமன்செய்த உபதேசத்திவிருந்து நாம்அறி வது என்ன? மரணம்என்பது உடலுக்குத்தானே தவிர, ஆன்மாவுக்கு அல்ல) மரணம்எய்திய பின்மனிதனுக்கு என்ன நடக்கிறது என்று கேட்டால்‌ – அவனுடைய ஜீவன்அவன்செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப ஸ்வர்க்க லோகத்தில்பயன்களை அனுபவித்து விட்டு, மீண்டும்பிறப்பெய்துகிறது; அந்தப்பிறப்பும்கூட ஏற்கெனவே செய்த வினைப்பயன்களின்படி அமை கிறது; நல்ல குருவை அடைந்து ஆர்வத்துடன்முனைந்து, உபதேசம்பெற்று, தெளிவு படைத்த புத்தியுடன்இயங்கி, இந்திரியங்களை: கட்டுப்படுத்தி, ஆசைகளை விட்டு விலகி ஒருவன்வாழ்ந்தால்‌, அவன்தூயவனாகிறான்‌. அப்படிப்பட்டவன்இறைவனை எய்து கிறான்‌. 

இவை எல்லாம்சாத்தியம்தானா! என்ற கேள்வி எழலாம்‌. நம்மைப்போன்றவர்களுக்கு இவை மிகவும்கடினமான விஷயங்களே. ஆனாலும்உய்வதற்கு வழி இது என்று தெரிந்து கொண்டால்‌, தவறானவற்றைச்செய்வதிலிருந்து சில நேரங்களிலாவது நம்மை நாமே தடுத்து நிறுத்திக்கொள்ள முடியும்அல்லவா? அந்த அளவில்இந்த விஷயங்கள்நம்மை பாதித்தால்‌, அதுவே நம்மைப்போன்றவர்களுக்கு ஒரு உதவிதான்என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்‌. 

அடுத்து ப்ரச்ன உபநிஷத்‌.