*ப்ரச்னம்: என்றால் கேள்வி. சில கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கான பதில்களையும் தருகிற இந்த உபநிஷத், ப்ரச்ன உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடக்கத்தில் வரு இற சாந்தி மந்த்ரம் இவ்வாறு அமைந்திருக்கிறது.
“தேவர்களே! நாங்கள், நல்ல விஷயங்களையே எங்கள் காதுகளால் கேட்க. வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! நாங்கள், நல்ல விஷயங்களையே எங்கள் கண்களால் பார்க்க வேண்டும். உறுதி படைத்த அங்கங்கள் கொண்ட உடலுடன் வாழ்நாள் முழுவதும், உங்களை நாங்கள் துஇக்க வேண்டும். தேவர்களுக்குச் சம்மதமான விஷயங்களை செய்த வண்ணமே நாங்கள் வாழ வேண்டும். ற், பெரும் புகழ் பெற்ற இந்திரன் நன்மை செய்யட்டும். அனைத்தையும் அறிகின்ற சூரியன் நன்மை செய்யட்டும். இமையை அழிக்கின்ற கருடன் நன்மை செய்யட்டும். ப்ரஹஸ்பதி நன்மை செய்யட்டும்”
– இந்த வேண்டுகோளுடன் ப்ரச்ன உபநிஷதம் தொடங்குகிறது. சுகேசன், ஸத்யகாமன், கார்க்யன், கெளஸல்யன், பார்கவன், கபந்தி ஆகியோர், இறைவனாகிய ப்ரம்மத்தை நாடுபவர்கள். அந்த உணர்விலேயே நிலை பெற்றவர்கள். அவர்கள் ப்ரம்மத்தை முழுமை யாக அறிய விரும்பினார்கள். தெய்வத்திற்கு நிகராக வணங்கத் தக்க முனிவராகிய பிப்பலாதர் என்பவர், இறைவனைப் பற்றி முழுமையாக விளக்கக் கூடியவர் என்று அறிந்ததும், அவர்கள் அவரை அணுகினார்கள் – என்று ஆரம்பிக்கிறது இந்த உபநிஷதம்.
விளக்கங்களை நாடி பிப்பலாத முனிவரை அணுகிய ஆறு பேரும் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களே இறை உணர் வில் நிலை பெற்றவர்கள். அப்படி இருந்தும் கூட, தாங்கள்: பெற்ற ஞானம் முழுமையானது அல்ல என்று நினைத்து, அந்த ஞானத்தை முழுமையாக அடைவதற்கான பாதையில் இட்டுச் செல்பவரை நாடி, அவர்கள் பிப்பலாதரிடம் வந்து சேர்ந்தார்கள். அரைகுறையாக படித்து விட்டு, தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறவன், என்றுமே சரியான கல்வியைப் பெற முடியாது என்பதை தற்காலத்தில் பார்க்கிறோம். இந்த ஆறு பேரும் நாடியதோ, மிகவும் கடினமான இறுதி உண்மை. அதனால் தான் தங்களுக்கே மேன்மை இருந்தும் கூட, அவர்கள் தெய்வ முனிவர் என்று கருதப்பட்ட பிப்பலாதரை நாடிச் சென்றார்கள்.
இந்த ஆறு பேரும் வந்த காரணத்தைப் புரிந்து கொண்ட பிப்ப: லாதர், அவர்களிடம் ‘இங்கே ஒரு வருட காலம் உரிய முறையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருங்கள். தவம், ப்ரம்மச்சரியம், நம் பிக்கை, முனைப்பு – ஆகியவற்றோடு வாழுங்கள். அதன் பிறகு நீங்கள் விரும்பிய கேள்விகளைக் கேளுங்கள். நான் அவற்றிற் கான பதிலை அறிந்திருந்தால், நிச்சயமாக உங்களுக்குச் சொல் கிறேன்’ என்றார்.
பிப்பலாத முனிவர் காட்டிய அடக்க உணர்வு, குருமார்களிடம் இருக்க வேண்டும். ‘எனக்குத் தெரியுமானால் சொல்கிறேன்! என்று கூறினார் அவர். இதைக் கொண்டு, அவருக்குத் தெரியாது என்று அர்த்தம் செய்து கொள்ள இடமில்லை. அவர் இறுதி உண்மையை அறிந்தவர். இறைவனை உணர்ந்தவர். இருந்தாலும் கூட சற்றும் கர்வமில்லாமல், தன்னுடைய அறிவு பற்றி ஒரு மமதை இல்லா மல், ‘எனக்குத் தெரியுமானால், சொல்கிறேன்! என்று சொன்னார்.
வந்தவர்களோ ஏற்கெனவே தகுதி படைத்தவர்கள்தான். ஆனால், அவர்களையும் கூட ஒரு வருடம் தவம் இருக்கச் சொன்னார் பிப்பலாதர். அது மட்டுமல்லாமல், அவர்களை ப்ரம்மச்சரியத்தைக் கடைபிடிக்குமாறும் சொன்னார். விவேகானந்தரின் சாதனைகளுக்குக் காரணம், அவருடைய ப்ரம்மச்சரியமே என்று கூறுகிற ஸ்வாமி ஆசுதோஷானந்தர், விவேகானந்தரே இது பற்றி குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டுகிறார். “சிகாகோவில் என்னுடைய முதல் பிரசங்கத்தில் நான் எல்லோரையும் அமெரிக்க நாட்டின் சகோ தரர்களே! சகோதரிகளே! – என்று அழைத்தவுடன், அனைவரும் எழுந்து மகழ்ச்சி ஆரவாரம் செய்தது உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர்கள் அப்படி பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ ஒரு அதிசய ஆற்றல் என்னிடம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். என்னிடம் அத்தகைய ஒரு ஆற்றல் உள்ளது. அது இதுதான் – ஒருமுறை கூட காம எண்ணம், என் மனதில் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், என்னுடைய சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செல வழிக்கின்ற ஆற்றல்கள் அனைத்தையும் ஒரு உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு பெரும் ஆற்றலாக உருவெடுத்தது.”
அதாவது, ப்ரம்மச்சரியம் என்பது ஆற்றலை வளர்க்கக் கூடி யது. ஆகையால்தான் பிப்பலாதர் ஞானத்தைத் தேடி தன்னிடம் வந்தவர்களை, ஒரு ஆண்டு காலம் ப்ரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க மாறும், தவம் செய்யுமாறும் கூறினார். பிப்பலாதர் கூறியபடியே அந்த ஆறு பேரும், தவத்தையும், ப்ரம்மச்சரியத்தையும் கடைப் பிடித்து ஹாண்டு காலம் கழித்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒவ் வொருவரும், ஒவ்வொரு கேள்வியை பிப்பலாதர் முன் வைத்தனர். அந்த ஆறு கேள்விகளுக்கு பிப்பலாதர் அளித்த விளக்கங்களே ப்ரச்னோபநிஷதம்.
மனிதர்களின் தோற்றம்; மனிதர்களை தாங்குகிற தேவர்கள்; ப்ராணனின் இயக்கம்; விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய நிலைகள்; ஓம் என்கிற ப்ரணவ மந்த்ர த்யானம்; ஆன்மாவின் தன்மை – ஆகய ஆறு பொருள்கள் பற்றி வந்தவர்களின் கேள்விகள் அமைந்தன. அவற்றிற்கு ஒவ்வொன்றாக பிப்பலாதர் விளக்கங்களை அளித்தார். அந்த விளக்கங்களின் சாராம்சத்தைப் பார்ப்போம்.
” உயிரினங்களை இருஷ்டிக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆகாசத்தையும், ப்ராண சக்தியை யும் உருவாக்கினார். இவை இரண்டும் சேர்ந்து பல்வேறு உயிரினங் களையும் சிருஷ்டி செய்யும் என்று அவர் உணர்ந்திருந்தார். சூரியன் ஆகாசத்தில் உதித்து, தன்னுடைய கதிர்களால் ப்ராணனை வழங்கு கிறான். அந்த ப்ராண சக்தியின் மூலமாகத்தான் உயிரினங்கள் தோன்றின. யாகங்கள், நற்பணிகள் போன்ற நல்ல செயல்களில் ஈடு படுவதே வாழ்க்கை என கொள்ளும் மனிதர்கள் நற்கதியை அடைந் தாலும், மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். ஆனால் தவம், ப்ரம்மச்சரியம், முனைப்பு, தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு, ஆன்மாவைத் தேடுகிற மனிதர்கள் இப்படிப்பட்ட பாதையை அடைவதில்லை. அவர்களுக்கு இறை உலகம் வாய்க்கிறது. ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்பவர்களுக்கே புனித மான அந்த இறை உலகம் இட்டும். சூதும், பொய்யும், வஞ்சனை யும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடையாது.
மனிதர்களின் தோற்றம் பற்றி இவ்வாறு விளக்கிய பிப்பலாதர் முன் வைக்கப்பட்ட இரண்டாவது கேள்வி, மனிதர்களைத் தாங்குகிற தேவர்கள் பற்றியது. அதற்கு பிப்பலாதர் அளித்த விளக்கம் :
“ஆகாயம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவற்றிற்கான தலைவர்களே மனிதர் களைத் தாங்கும் தேவர்கள். அவர்கள்தான் மனிதனை இயக்குகிறார் கள். ஒரு சமயத்தில், தாங்கள்தான் மனிதர்களைத் தாங்குகிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு கர்வமாகத் தோன்றி விட்டது. அப்போது ப்ராணன் அவர்களிடம் ‘என்னையே நான் பலவாகப் பிரித்துக் கொண்டு, உங்கள் மூலமாக இந்த மனிதர்களை இயக்கு இறேன்’ என்று கூறியது. இவ்வாறு கூறிவிட்டு, உண்மையை அந்த தேவர்களுக்கு உணர்த்துவதற்காக ப்ராண சக்தி, வெளியேறுவது போல் காட்டியது. அப்போது புலன்கள் அனைத்தும் செயல்: இழந்தன. மீண்டும் ப்ராண சக்தி பிரவேசித்ததும் அவை செயல்படத் தொடங்கெ, அப்போது பேச்சு, மனம், கண், காது போன்ற புலன்கள் ப்ராணனை துதித்தன. ஆக, சூரியன், மேகம், இந்திரன், வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள்கள்… என்று அனைத்துமாக ப்ராணனே விளங்குகிறது. அந்தச் சக்திதான் எல்லாவற்றையும் இயக்குகிறது. மூன்று உல கங்களிலும் எவை எல்லாம் இருக்கின்னனவோ, அவையெல்லாம் ப்ராணனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
ப்ராணன், அதன் இயக்கம் – ஆகியவை பற்றிய கேள்வி, பிப்பலாதரிடம் மூன்றாவதாகக் கேட்கப்பட்டது. அவர் சொன்னார்
“ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. மனிதனும், அவ னுடைய நிழலும் போல, ஆன்மாவில் ப்ராணன் அடங்கி இருக் இறது. எப்படி ஒரு அரசன் பல அதிகாரிகளை நியமித்து, அவரவர் களுக்குரிய ஆளுகையில் சில கிராமங்களை விடுகிறானோ, அதே போல, ப்ராணன் சில சக்திகளிடம் தனித்தனியாக பொறுப்புகளை விடுகிறது. ப்ராணனின் தோற்றம், அதன் இருப்பிடம், அதன் செயல்பாடு – ஆகியவற்றை உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
(இங்கே ப்ராணன் என்பதை ஜீவசக்தி என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். இதுதான் விளக்கம் என்று சொல்ல முடியாவிட்டா லும், ப்ராணன் என்பதைப் புரிந்து கொள்ள அதை ஜீவசக்தியாகக் கருதுவது ஓரளவிற்காவது உதவும். கண்ணின் பார்க்கும் திறன், காதின் கேட்கும் திறன், ஒவ்வொரு அவயவத்தில் செயல்படும் இறன் எல்லாமே அந்த ஜீவ சக்தியினால் வருகிறவைதாம்… அந்த சக்தியைத் தருவதோ ஆன்மா. ஆன்மாவிலிருந்து வருகிற அந்த ஜீவசக்தியால்தான் உயிரினங்கள் தோன்றுகின்றன, இயங்குகின்றன. இதை உணர்பவன் மிகவும் உன்னதமான நிலையை அடைகிறான்.)
விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய நிலைகள் பற்றிய நான்காவது கேள்விக்கு, பிப்பலாதர் விளக்கம் கூறினார்:
சூரியன் உதிக்கும்போது எல்லா கிரணங்களும் பரவுகின்றன. சூரியன் அஸ்தமனமாகும்போது, அவை அனைத்தும் ஒடுங்குகின்றன. அதே போல, முதன்மைப் புலனாகிய மனம் என்பதில், மற்ற புலன்கள் எல்லாம் ஒடுங்குகின்றன. அந்த நிலையில் மனிதன் கேட்பது, பார்ப்பது, முகர்வது, சுவைப்பது, உணர்வது – என்று எதையும் செய்வதில்லை. இந்த நிலையே உறக்கம் என்று கூறப்படுகிறது.
”மற்ற புலன்கள் அனைத்தும், மனம் என்கிற புலனில் ஒடுங்கிய அந்த நிலையில், மனம் என்கிற தேவன், விழிப்பு நிலையில் கண்டவை, காணதவை, கேட்டவை, கேட்காதவை, அனுபவித்தவை, அனுபவிக்காதவை, நிகழ்ந்தவை, நிகழாதவை என்ற அனைத்தையுமே காண்கிறான், அனுபவிக்கிறான். இது கனவு நிலை.
இதை அடுத்தது ஆழ்ந்த உறக்கம். இதில் மனம் அமைதியை அனுபவிக்கிறது. இதில் கலக்கமோ, இன்பமோ, துன்பமோ எது வும் கிடையாது. (நேற்று நான் நன்றாகத் தூங்கினேன்’ என்று கூறும் பொழுது, அது எப்படி நமக்குத் தெரியும் என்ற கேள்வி எழுகிறது. தூக்கத்தில்தான் ஒன்றும் தெரியாதே! பிறகு நன்றாகத் தூங்கியது மட்டும் எப்படித் தெரியும்? அது எப்படித் தெரிகிறது என்றால் – மனம் என்கிற தலைமைப் புலன் அந்த அமைதியை அனுபவிக்கிறது. அந்த அனுபவத்தைத்தான் மனம் ஒரு மனிதனுடைய புலன்களுக்கு உணர்த்துகிறது. அதனால்தான் ‘நன்றாகத் தூங்கினேன்” என்று நாம் சொல்கிறோம்.)
புலன்கள், ப்ராண சக்தி, இயக்கங்கள் – ஆகியவையும், நான் என்ன உணர்வும், நிலை பெறுகிற இடம் ஆன்மா என்று அறிந்து, அந்த ஆன்மாவை உணர்பவன், உண்மையில் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறு முதல் நான்கு கேள்விகளுக்கு விளக்கம் அளித்த பிப்ப லாத முனிவர், அடுத்து ஐந்தாவது கேள்விக்கு விளக்கம் அளிக்கத் தொடங்கினார். இது ஓம் என்கிற ப்ரணவ மந்த்ரத்தைப் பற்றியது.