உயர்நிலை, சாதாரண நிலை என்று இரு வகைகளில், இறைவனின் தன்மை நிலை பெற்றிருப்பது போல், இந்த ஓங் கார மந்த்ரமும் உயர் நிலை, சாதாரண நிலை என்று இரு வகை களில் இயானிக்கத்தக்கது. இந்த மந்த்ரத்தை இயானிக்கிற மேன்மை உடையவன், தனது தியானத்திற்கேற்ப இந்த இரு நிலைகளில் ஒன்றை அடைகிறான்! என்று கூறி தன்னுடைய விளக்கத்தைத் தொடங்கினார் பிப்பலாத முனிவர்.
இறைவனுக்கு உருவமற்ற நிலை, உருவமுள்ள நிலை என்று இரண்டு நிலைகள் இருப்பதாக ஏற்கெனவே நாம் பார்த்திருக்கி றோம். உருவமே இல்லாத, எந்த வர்ணனைக்கும் அடங்காத, சிந்தனைக் கெல்லாம் அப்பாற்பட்ட நிலை ஒன்று. இந்த நிலை யில் இறைவனை வழிபடும் வாய்ப்பு சிலருக்குத்தான் கிட்டுகி றது. ஞான நிலையை அடைந்து விட்டவர்களுக்கே இது சாத்தி யாமகிறது. அந்த நிலையை எட்ட முடியாத, போன்ற சாதாரண மனிதர்ளுக்காக, இறைவன் பல உருவங்களிலும் காட்சி அளிக் கிறான். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர், அம்பிகை, காளி… என்று பல்வேறு வடிவங்களில் அவன் தோற்றம் அளிக்கிறான். ஞானிகள் மட்டுமே உணரக் கூடிய எட்ட முடியாத ஒரு நிலை யில்தான் இறைவன் இருப்பான் என்றும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இறை உணர்வுடன் சிறிதும் தொடர்பு இன்றியேதான் காலத்தைக் கழித்தாக வேண்டும் என்றும் – நமது சாத்திரங்களும், பல்வேறு நூல்களும் கூறவில்லை. உருவமற்ற நிலையில் ப்ரம்மத்தை உணர்வது மிகவும் உன்னதமான ஒரு விஷ யம்: அதை சாதிக்க முடியாத பெரும்பாலானவர்களுக்கு இறைவனே உதவிக்கரம் நீட்டுகிறான்; பல வடிவங்களில் அவன் தோற் றம்அளிக்கிறான். அந்த முறையில் இறைவனை வழிபடுபவர்க ளுக்கும் மேன்மை இட்டும்.
இங்கே ஓங்கார மந்த்ரத்தின் இரண்டு நிலைகள் பற்றி முனி வர் குறிப்பிடுவதை பெரியவர்கள் விளக்கி இருக்கிறார்கள். அ, உ, ம் – என்ற மூன்று எழுத்துகளின் சேர்க்கையாகய ‘ஓம்’ எனப் படுகிற ஓங்கார மந்த்ரத்தில், இந்த மூன்று எழுத்துக்களும் ஒவ் வொரு மாத்திரை என்று கூறப்படுகிறது. இந்த காயத்ரி மந்த்ரமே கூட இதன் விரிவுதான் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அதையும் இவ்வாறே மூன்று பகுதிகளாக இயானம் செய்யும் வழிமுறை இருக்கிறது. ஓங்கார தியானத்தை எடுத்துக் கொண்டால், அதை மூன்று வகைகளில் செய்யலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பக்தி வழி முதல் வகை; அதனுடன் சேர்த்து யாகம் போன்ற கர் மங்களையும் செய்து, இதை இயானிப்பது இரண்டாவது வகை. மூன்று மாத்திரைகளையும் சேர்த்துத் தியானிப்பது மூன்றாவது வகை – அதாவது பக்தி, கர்ம, ஞானயோகங்களின் இணைப்பு.
இதையடுத்து பிப்பலாதர் ஒவ்வொரு வகையான தியானத்தின் பலனையும் விளக்குகிறார். பிரார்த்தனைகள், துதிகள் போன்ற பக்தி மார்க்க வழிமுறைகளில் ஈடுபடுகிறவன், உண் மைகளை உணரத் தொடங்குகிறான். இந்த உலகத்தைக் கடந்த வேறு உலகங்கள் உள்ளன என்பதை அவன் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். இது அறிவுபூர்வமாக அல்லாமல், உணர்வு பூர் வமாகவே அவனுக்குக் கிட்டுகிறது. இதைப் பற்றிச் சொல்கையில் பண்டிதர்கள், இம்மாதிரியானவன், மரணத்திற்குப் பிறகு நீண்ட காலம் காத்திருக்காமல், விரைவிலேயே அடுத்த பிறவி எடுக்கிறான் என்றும், அந்தப் பிறவியில் அவனுக்கு மேன்மை உறுவதற்கான பாதைகள் கிட்டுகின்றன என்றும், அவன் தவம், விரதங்கள் போன்றவற்றில் இயல்பாகவே ஈடுபடுகிறான் என்றும் கூறுகிறார்கள்.
பிப்பலாதர் அடுத்ததாக, பிரார்த்தனைகள், துதிகள் போன்ற வற்றோடு சேர்த்து, யாகங்கள் போன்ற கர்மாக்களை செய்பவ னுக்கு மனம் விரைவாக வசப்படுகறது என்று சொல்கிறார். இது ஓங்கார மந்த்ரத்தின் இரண்டாவது மாத்திரையை ஆழ்ந்து தியா னிப்பது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வழிமுறை பக்தி யோகத்தையும் கர்ம யோகத்தையும் இணைத்து தன்னுள் அடக் கியது. இதில் சிரத்தையுடன் ஈடுபடுகிறவன் மரணத்திற்குப் பிறகு ஸ்வர்க்கத்தை அடைந்தாலும் கூட, மீண்டும் பிறவி எடுக்கிறான்.
அடுத்த கட்டம் ஓங்கார மந்த்ரத்தின் மூன்று மாத்திரைகளை யும் இணைத்துத் தியானிப்பது. அதாவது பிரார்த்தனைகள், யாகங் கள் ஆகியவற்றுடன் ப்ரம்மத்தையும் நினைத்துத் தியானிப்பது. இப்படிப்பட்ட முனைப்பில் ஈடுபடுகிறவன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். ‘எப்படி ஒரு பாம்பானது, தன்னுடைய தோலைச் சர்வ சாதாரணமாகக் களைந்து விடுகிறதோ, அப்படி அந்த மனி தன் தனது பாவங்களைக் களைந்து விடுகிறான். மரணத்திற்குப் பிறகு, ப்ரம்ம லோகத்தை அடைந்து இறைவனைச் சார்கிறான். இவ்வாறு விளக்குகிற பிப்பலாதர், ஓங்கார மந்த்ரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டால், அதைச் செய்கிறவன் மேன்மை பெற்றாலும் கூட, மரணத்திற்கு உட்பட்ட வனாகவே இருப்பான் – அதாவது மறுபிறவி எடுப்பான் என் றும் சொல்கிறார். மூன்றையும் இணைத்துத் தியானிப்பவன் எந்த சஞ்சலத்தையும் அடையாமல் மரணமற்ற தன்மையை – அதாவது மீண்டும் பிறப்பற்ற நிலையை எய்துவான்.
மூன்று மாத்திரைகள், மூன்று நிலைகள் என்றெல்லாம் சொல் லும்பொழுது, பக்தி, கர்ம, ஞான மார்க்கங்களே இப்படி குறிப் பிடப்பட்டிருக்கின்றன என்பது பெரியவர்களின் விளக்கம். ஏனென்றால் ஓங்கார மந்த்ரத்திலிருந்து தோன்றிய காயத்ரி மந்த் ரமும் கூட, ஏற்கெனவே சொன்ன மாதிரி, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு மார்க்கத்திற்குச் சின்ன மாக விளங்குகின்றன. அதே வகையில்தான் ஓங்கார மந்த்ரமும் மூன்று மாத்திரைகளாகப் பிரிந்து, அந்த மூன்று மார்க்கங்களைக் காட்டுகிறது. அதை இணைக்கும் பொழுது, அது ஓங்கார மந்த்ரம். அப்படி இணைத்துத் தியானிப்பவன் பிறவா நிலையை எய்து இறான். இணைந்து தியானிப்பது என்றால், அ, உ, ம் – என்ற மூன்றையும் சேர்த்து ‘ஓம்” என்று சொல்லி விட்டால் போதாது. அதில் மனம் ஈடுபட வேண்டும். உணர்வுகள் எல்லாம் அதில் ஒடுங்க வேண்டும். இறைவனையே மனதில் எண்ண வேண் டும். கெட்ட சிந்தனைகளுக்கு இடம் இருக்கக் கூடாது. முனைப்பு இருக்க வேண்டும். இப்படி ஒரு தவம் இருப்பது போல இதைச் செய்தால்தான் பலன் கிட்டுமே தவிர, ஏதோ ஒரு பாட்டை முணுமுணுப்பது போல், ஓம் ஓம் ஓம் என்று சொல் லிக் கொண்டிருந்து விட்டால் பவன் இட்டிவிடும் என்று எங்கும் சொல்லப்படவில்லை.
பிப்பலாதரிடம் கேட்கப்பட்ட கடைசியும், ஆறாவதுமான கேள்வி ஆன்மா பற்றியது. ‘பதினாறு பகுதிகள் கொண்டது யார்?” என்பது கேள்வி. இதற்கு பிப்பலாதர் அளிக்கும் விளக் கம், ஆன்மாவைப் பற்றிய ஒரு சிறிய உரை. ஆன்மா பிராண னைப் படைத்தது என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. இந் தப் பிராணனிலிருந்து புத்தி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, உடல், புலன்கள், மனம், உணவு, ஆற்றல், தவம், மந்த்ரங்கள், கர்மங்கள், உலகங்கள் ஆகியவை தோன்றின. பிராணனையும் சேர்த்து ஆன்மாவிலிருந்து தோன்றியவை இந்த பதினாறு பகுதிகள். ஆக, பதினாறு பகுதிகளைக் கொண்டது ஆன்மாவே. இவை எல்லாமே ஆன்மாவில் அடக்கம். ‘
‘ஒரு மனிதன் ஆன்ம அறிவை முனைந்து நாடிப் பெறுகிற போது, இந்தப் பதினாறு பகுதிகளும் ஆன்மாவை அடைந்து, அதில் மறைந்து விடுகின்றன. சமுத்திரத்தை நோக்கி பல நதிகள் பாய்கின்றன. சமுத்திரத்தை அடைந்ததும் அவை அதில் கலந்து மறைந்து விடுகின்றன. அதன் பிறகு அவற்றுக்கென்று தனி அடை யாளம் இடையாது. அவற்றின் பெயர்கள் கிடையாது. அவை யும் சேர்ந்து சமுத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. அது போலவே பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும், ஆன்மாவை அடைந்து அதில் கலக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் அப்பொழுது தனி வடிவமோ பெயரோ கிடையாது. அனைத்தும் சேர்ந்து ஆன்மா என்றே அழைக்கப்படுகிறது!”
தன் முன்னே வைக்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு இவ்வாறு விடையளித்த பிப்பலாத முனிவர், இறுதியாகச் சொன்னார் : “தேர்ச் சக்கரத்தினுடைய அச்சில் ஆரக்கால்கள் (ஸ்போக்ஸ்) எல் லாம் கூடுகின்றன. அது போல பதினாறு பகுதிகள் யாரிடம் நிலை பெற்று உள்ளனவோ, அவர்கள் அந்த ஆன்மாவை அறிய முயற்சியுங்கள். அதன் மூலம் நீங்கள் மரணமில்லாத் தன்மையை அடைவீர்கள்”. மரணமற்ற தன்மை என்றால், மீண்டும் பிறப் பற்ற தன்மை என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
இவ்வாறு விளக்கங்களை அளித்த பிப்பலாத முனிவரை வணங்கி, அவரை நாடி வந்த ஆறுபேரும் விடைபெற்றுச் சென் றதுடன் ப்ரச்ன உபநிஷதம் நிறைவு பெறுகிறது. உபநிஷதங் களில் சில வித்யைகள் – பயிற்சிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது பற்றி முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம். ப்ரச்ன உபநிஷதம் ‘பரமபுருஷ வித்யை! என்ற தியான வழிமுறையைக் கூறுகிறது. ஓங்காரத்தைப் பற்றி பிப்பலாத முனிவர் அளித்த விளக்கங்கள், இந்தப் பயிற்சியை விளக்குவதாகச் சொல்லப்படுகிறது. ப்ரச்ன உபநிஷதத்தை அடுத்து முண்டக உபநிஷதத்தை கொஞ்சம் பார்ப்போம். நமது தேசத்தின் குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிற ‘ஸத்யமேவ ஐயதே‘ என்ற வாசகம், இந்த உபநிஷ தத்தில்தான் வருகிறது. முண்ட என்றால் மொட்டை அடிக்கப் பட்ட தலை. (நீக்கப்படுதல் என்றும் கொள்ளலாம்). சாதாரண மாக சந்நியாசிகள்தான் தலையை முழுமையாக மழித்துக் கொள்வார்கள். இந்த உபநிஷதம் முக்கியமாக சந்நியாசிகளுக்கு உரியது என்று ஒரு கருத்து இருக்கிறது. அதனாலும் கூட இது முண்டக உபநிஷதம் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். இதற்கு வேறு ஒரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த உபநிஷத்தைப் படித்து, அதை முழுமையாகக் கிரகித்துக் கொள்பவனிடமிருந்து, மாயைகள் எல்லாம் முழுமையாக நீக்கப்படுகின்றன – தலை யில் கேசம் விலக்கப்படுவது போல் – என்பதாலும் கூட இதற்கு முண்டக உபநிஷதம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள்
இந்த உபநிஷதத்தின் தொடக்கத்தில் வருகிற சாந்தி மந்த்ரம் இவ்வாறு அமைந்திருக்கிறது. (இது ப்ரச்ன உபநிஷதத்திலும் சாந்தி மந்த்ரமாக வருகிறது.)
பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:
பத்ரம் பச்யேமாக்ஷ்பிர் யஜத்ரா:
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாம்ஸஸ்தனூபி:
வ்யசமே தேவஹிதம் யதாயு:
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா:
ஸ்வஸ்தி ந : பூஷா விச்வ வேதா:
ஸ்வஸ்தி நஸ்தார்கஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களையே கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! நாங்கள் நல்ல விஷ யங்களையே கண்களால் பார்கக் வேண்டும். உறுதியான அங்கங் கள் கூடிய சரீரத்துடன் வாழ்நாள் முழுவதும் நாங்கள் உங்களை துதிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்றமுடையதைச் செய்த வண்: ணமே நாங்கள் வாழ வேண்டும். பெரும் புகழ் பெற்ற இந்திரன், நமக்கு நன்மை செய்யட்டும். அனைத்தையும் அறிகின்ற சூரியன் நமக்கு நன்மை செய்யட்டும். இமையை ஒழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். ப்ரஹஸ்பதி நமக்கு நன்மையை அருளட்டும். முவ்வகை சாந்தி நிலவட்டும்.
இந்த வேண்டுதலுடன் முண்டக உபநிஷதம் தொடங்குகிறது.