ப்ரம்மத்தைப் பற்றிய அறிவை, அதாவது இறுதி உண்மை யைப் பற்றிய அறிவை, ப்ரம்ம தேவனிடமிருந்தே அதர்வன் பெற்றார்.அதன் பின்னர் அதர்வன், அங்கிரருக்குச் சொன்னார். அவர் ஸத்தியவஹனுக்கு இதை விளக்கினார். ஸத்தியவஹன், அங்கிரஸுக்கு இதை உபதேசித்தார். இவ்வாறு இந்த ஞானம் குருவிடமிருந்து, சீடருக்கு வழி வழியாக வந்தது…
– என்று தொடங்குகிறது முண்டக உபநிஷதம். ப்ரம்ம வித் யை – இறுதி உண்மையை இவ்வாறு அறிந்து அங்கிரஸை, செளனகர் அணுகி, ‘தெய்வத்திற்கு சமமானவரே! எதை அறி சந்து கொண்டால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?’ என்று கேட் டார். இப்படித் தன்னிடம் கேள்வியை எழப்பிய செளனகருக்கு, அங்கிரஸ் எடுத்துக் கூறிய விளக்கங்களே முண்டக உபநிஷதம் ஆகிறது. அங்கிரஸ் சொன்னார்: உயர்ந்தது மற்றும் சாதாரணமானது என்று இரண்டு வகை அறிவுகள் உள்ளன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மகான்கள் கூறுகிறார்கள். நான்கு வேதங்கள், உச்சரிப்பு, சடங்குகள், இலக்கணம், அகராதி, வான வியல், ஜோதிடம்… போன்றவை எல்லாம் சாதாரண அறிவைச் சார்ந்தவை. அழிவற்றவராகிய இறைவன், எந்த அறிவின் மூல மாக அடையப்படுகிறானோ, அதுவே உயர்ந்த அறிவு‘.
இப்படிக் கூறிவிட்டு அங்கிரஸ் இறைவனின் தன்மையைப் பற்றி விளக்குகிறார். ‘அவனைப் பார்க்க முடியாது; புரிந்து கொள்ளவும் முடியாது; அவனுக்கு ஆரம்பம் கிடையாது.
நிறங்கள் இல்லாதவன். என்றென்றும் இருப்பவன்; எண்ணற்ற வடிவங்கள் உடையவன்; எங்கும் நிறைந்தவன்.மிகவும் நுண்ணி யமானவன். அழிவற்றவன், படைப்புக்கு மூலகாரணமானவன். விழிப்படைந்தவர்கள் அவனை எங்கும் காண்கிறார்கள்.
அங்கிரஸ் கூறியதில் ஒரு முரண்பாடு இருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ‘அவரைப் பார்க்கவே முடியாது! என்று கூறி விட்டு, பின்னர் ‘விழிப்புற்றவர்கள் அவரைக் காண்கிறார்கள்” என்றால் அது எப்படி? பார்க்கவே முடியாதவனை எப்படி சிலர் மட்டும் பார்க்கிறார்கள்? ஒரு சாதாரண உதாரணத்தின் மூலமா கவே கூட இந்தச் சந்தேகத்தை நாம் களைந்து விடலாம். இருமி கள் இருக்கின்றன. அவை கண்களுக்குப் புலப்படாதவை. நிச்ச யமாக அவை நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் மைக்ராஸ் கோப் மூலம் அந்தக் கிருமிகளை விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள். அவற்றின் தன்மையைப் புரிந்து கொள்கிறார்கள்; ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். மைக்ராஸ்கோப் மூலம் இட்டுகிற பார்வை, விசேஷமான பார்வை. சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் இருந் தால், அதன் மூலம் கட்டுகிற விசேஷப் பார்வையைப் பயன் படுத்திக் இிருமிகளைப் பார்த்து விடலாம். ஆன்மீக விஷயத்தில் விசேஷமான பார்வை என்பதற்கு மைக்ராஸ்கோப் எதுவும் இடையாது. அதற்கு விழிப்புற்ற நிலை வேண்டும். அதுதான் மைக்ராஸ்கோப்.
அந்த விழிப்புப் பெற்ற நிலையை அடைவதற்குத் தவமும், சிரத்தையும், நம்பிக்கையும் தேவை. அதை அடைந்தவர்கள் இறைவனைக் காண்கிறார்கள். மற்றவர்களால் காண முடியாது. இதில் முரண்பாடு எதுவும் இல்லை.
அங்கிரஸின் உபதேசம் தொடர்கிறது. ‘ஒரு சிலந்தி தன்னிட மிருந்து எவ்வாறு வலை நூலை வெளிப்படுத்தி, தன்னிடமே அடக்கக் கொள்ளவும் செய்கிறதோ – எவ்வாறு பூமியிலிருந்து செடி, கொடிகள் தோன்றுகின்றனவோ – ஒரு மனிதனின் உடலில் முடி எவ்வாறு தோன்றி வளர்கிறதோ – அவ்வாறே அழிவற்ற இறைவனிடமிருந்து இந்த உலகம் தோன்றுகிறது. இறைவனிட மிருந்து தோன்றுகிற படைப்பு அவரிடமே ஒடுங்கவும் செய்கிறது என்பது – சிலந்தி உதாரணத்தின் மூலமாக விளக்கப்படு கிறது; இந்த உலகத்தைப் படைப்பதற்காக, இறைவன் பெரும் முயற்சி எடுக்கவில்லை என்பதும், அவரிடமிருந்து இயல்பாகவே இந்த உலகம் தோன்றியது என்பதும் – பூமியிலிருந்து செடி, கொடிகள் வளரும் உதாரணத்தின் மூலம் காட்டப்படுகிறது; மனி தனின் உடலில் முடி வளர்வது போல – என்ற உதாரணத்தின் மூலம், உலகத்தைப் படைக்கும் இறைவன் ஜடப் பொருள் அல்ல என்பதும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு இறைவனின் தன்மையை விளக்கிவிட்டு அங்கி ரஸ், யாகங்கள் முதலியவற்றைப் பற்றிப் பேசுகிறார். ‘மந்த்ரங் களில் முனிவர்கள் கண்டறிந்த பல்வேறு கர்மங்கள் உள்ளன. அவை உண்மையானவையே. அவை வேதங்களில் மிகவும் புகழப்பட்டுள்ளன. உண்மையை நாடுகிறவர்கள் அவற்றைச் செய்ய வேண்டும். இந்த உலகில் சிறப்பாக வாழும் வழி அது என்று கூறி, மேலும் யாகங்களின் பயனைப் போற்றி விளக்கம் அளிக்கிற அங்கிரஸ்,அடுத்துச் சொல்வது கொஞ்சம் வியப்பைத் தரக் கூடிய விஷயம்,
‘இந்த யாகங்கள் எல்லாம் பலவீனமான படகுகளைப் போன் றவை. ஏனென்றால், இவை சாதாரணமான கர்மங்களை அடிப் படையாகக் கொண்டவை. இவற்றையே சிறப்பானதாக நினைத்து மகிழ்கின்ற மூடர்கள் மீண்டும் மீண்டும் மூப்பிற்கும், மரணத்திற் கும் ஆளாகிறார்கள்.
‘உலக நடைமுறையின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள், தங் களை அறிவாளிகள் என்றும், பண்டிதர்கள் என்றும் நினைத்துக் கொண்டு மூப்பு, மரணம் ஆகியவற்றில் உழல்கிறார்கள். குருட னால் வழிகாட்டப்பட்ட ஒரு குருடன் போல் இவர்கள் மீண்டும் மீண்டும், பிறவிச் சுழலில் உழல்கிறார்கள். தங்களுடைய லட்சியத்தையே அடைந்து விட்டதாக நினைக்கின்ற அவர்கள், உண்மையை உணர்வதில்லை. அவர்கள் கர்மம் செய்யும்போது, மனதில் ஆசையுடன் அதைச் செய்கிறார்கள். ஆகையால், புண்ணியம் தீர்ந்து போனதும் ஸ்வர்க்கத்தில் இருந்து விழ்ந்து, மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். அவர்கள், யாகங்களே எல்லாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலான எதையும் அவர்கள் அறிவதில்லை. ஆகையால் புண்ணியத்தின் பலனை ஸ்வர்க்க லோகங்களில் அனுபவித்த பிறகு, அவர்கள் மீண்டும் பிறப்பெய்து கிறார்கள்.
‘இந்த உலஇல் சிறப்பாக வாழ்வதற்கு வழி செய்கிற யாகங் கள் என்று கூறிவிட்டு, அவற்றையே இப்படி பயனற்றவை என் றும் அங்கிரஸ் கூறுகிறார். யாகங்களைப் பற்றி இப்படிக் கூறிய அங்கிரஸ், அதன் பிறகு யார் மேன்மை பெறுவார்கள் என்ப தைப் பற்றி பேசுகிறார். ”மனம் ஒரு நிலையில் இருக்கும் தன்மை படைத்தவர்கள், உண்மையான அறிவைப் பெற்று பிக்ஷை எடுத்து வாழும் வாழ்க்கையையோ, காட்டில் முனைப்புடன் செய்யக் கூடிய தவ வாழ்க்கையையோ மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய வினைப் பயன்கள் எல்லாம் விலகுகின்றன.
கர்மங்களால் இறைவனை அடைந்துவிட முடியாது. பற் நின்மையினால்தான் இறைவனை அடைய முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்து உணர்ந்து, பற்றின்மை என்ற நிலையை ஒரு வன் அடைய வேண்டும். பிறகு இறைவனை உணர்வதற்காக வேதங்களை உணர்ந்த குருவை நாடி, உபதேசம் பெற்று, அமைதி யுள்ள மனதை அடையப் பெற்று, இந்திரியங்களை அடக்கி, முனைப்புடன் ஈடுபட்டு, இறைவனை அவன் அறிவான். அதற்கு குரு, முறையான வழியில் உபதேசம் செய்ய வேண்டும்.
அங்கிரஸ் கூறிய இந்த உபதேசங்களைப் பார்க்கிற பொழுது, நம் மனதில் ஒரு திகைப்பு ஏற்படக் கூடும். ‘யாகங்களைச் செய்ய வேண்டும். அது இந்த உலக வாழ்க்கைக்குச் சிறந்த வழி. வேத மந்த்ரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! என்றெல்லாம் சொல்லி விட்டு, ‘இவையே மேன்மை யானவை என்று நினைத்துக் கொள் பவன் மூடன்! என்றும், ‘அவன் பிறவித் துன்பத்திலேயே உழன்று கொண்டிருப்பான்! என்றும் கூறினால் எப்படி? யாகங்களின் சிறப்பைப் போற்றி விட்டு, அவற்றை இகழ்ந்து, அவற்றினால் ஒருவன் மேன்மை அடைய முடியாது என்று கூறினால், அது எவ்வாறு? காட்டிற்குச் சென்று சன்னியாச வாழ்க்கையை மேற்கொண்டு தவம் செய்து, இறைவனை அறியும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுதான் ஒரே வழி என்றும் கூறினால் – எல்லோரும் சன்னியாசிகள் ஆகிவிட முடியுமா? இந்த உலகம் உய்வுற அதுதான் வழியா? இப்படி பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்யும்.
ஆனால் நாம் கொஞ்சம் யோசித்தால், இது பற்றிய ஒரு மனத் தெளிவை நாம் பெறலாம். முண்டக உபநிஷதத்தில் அங்கிரஸ் கூறுகிற உபதேசங்களில் இதுவரை நாம் பார்த்த பகுதியின் சாராம் சம் என்ன? வேதங்களில் புகழப்படுகிற மந்த்ரங்களில் முனிவர் கள் கண்டறிந்த பல்வேறு கர்மங்கள் அடங்கி இருக்கின்றன; அவை அனைத்தும் உண்மையானவையே. அவற்றைத் தவறா மல் செய்ய வேண்டும். இந்த உலகில் சிறப்பாக வாழ அது வழி. ஆனால் இதுவே எல்லா மேன்மையையும் தந்து விடும் என்று நினைத்துக் கொண்டு, இவற்றிலேயே ஈடுபடுகிறவர்கள் மூடர்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். யாகங்களும், சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள நற்பணிகளுமே எல் லாம் என்றும், அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் இவர் கள் நினைக்கிறார்கள். ஆகையால் தாங்கள் செய்த யாகங்கள், நற் பணிகள் ஆகியவற்றின் மூலம் இிடைத்த புண்ணியத்தின் பல னாக ஸ்வர்க்கத்திற்குச் சென்று, அந்த புண்ணியங்கள் இர்ந்த வுடன் மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். பிறவிச் சுற்றில் சிக்கு கிறார்கள். இதைக் காட்டிலும் மேலான வழி உண்டு என்று அறிந்தவர்கள், குருவை நாடுகிறார்கள். உபதேசம் பெறுகிறார் கள். சுகங்களைத் தியாகம் செய்கிறார்கள். தவ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். அவர்கள் அறிவொளி பெற்றவர்கள். அவர்கள் மீண்டும் பிறப்பில்லாத நிலையை அடைகிற வாய்ப்பு பெற்ற வர்கள். அவர்கள் இறைவனை உணர்கிறார்கள்.
இதில் எந்தக் குழப்பமும் இல்லை, எந்த முரண்பாடும் இல்லை. சாதாரண அறிவு, மேலான அறிவு என்று இரண்டு வகைப்பட்டதாக அறிவு பிரித்துச் சொல்லப்பட்டது. அதன் பிறகு, வேதங்கள், இலக்கணம், பயிற்சி போன்றவை எல்லாமே சாதாரண அறிவு என்பதில் சேர்க்கப்படுகிறது. அது தேவைதான், ஆனால் அதுவே எல்லாம் என்று நினைத்து விடக் கூடாது. பொறுப்புள்ள ஒரு தந்தை வெவ்வேறு கட்டங்களில் தன் மகனுக்குச் சொல்லக் கூடிய அறிவுரை போன்றது – என்று இதை நாம் பார்த்தால், நமக்கு இதனுடைய உட்கருத்து விளங்க ஒரு வழி கிடைக்கும்.
ஒரு பொறுப்புள்ள தந்தை வெவ்வேறு கட்டங்களில் தன் மகனுக்கு என்ன அறிவுரை சொல்வான்? ‘நன்றாகப் படி, கல்வி அறிவு மிகவும் தேவை! என்று ஒரு கட்டம். பின்னர் ‘நல்ல வேலையில் சேர்ந்து நன்றாகச் சம்பாதிக்க வேண்டும். குடும்பத் தைப் பாதுகாக்க, பணம் அவசியம் தேவை. ஜாக்கிரதையாக செலவு செய்ய வேண்டும். சம்பாத்தியத்தில் முடிந்த அளவு சேமிக்க வேண்டும்” என்ற வகையில் தந்தையின் அறிவுரை அமையும்.
ஆனால் இதற்குப் பின்னர் வேறு ஒரு கட்டத்தில், தந்தை யின் உபதேசம் முழுமையாக வேறு திசையில் செல்லக் கூடும். மகன் பணம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு, அதை சம்பா இப்பதிலும், சேமிப்பதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டு மற்ற எதுவுமே வாழ்க்கையில் முக்கியமில்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டால், அப்பொழுது தந்தை என்ன சொல்வான்? ‘இது முட்டாள்தனம். பணமே வாழ்க்கையில் எல் லாவற்றையும் சாதித்துக் கொடுத்து விடாது. மேலும் மேலும் பணம் சம்பாதித்துச் சேமித்துக் கொண்டிருந்தால் போதும் என்று நினைத் துக் கொண்டிருந்தால், அது உன்னை அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். வாழ்க்கையில் மேன்மையுற பல வழிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் மனதில் கொள்ளாமல், அவற்றை எல்லாம் அலட்சியப்படுத்தி, பொருள் ஈட்டுவதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்காதே. அது உன்னை நாசம் செய்து விடும்” என்று தந்தை அந்த கட்டத்தில் சொல்வான்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவனே, இப்பொழுது இப்படிச் சொல்வதா? என்றால் செல்வம் தேவை என் பது ஒரு நிலை; அந்தச் செல்வமே எல்லாம் என்று நினைத்து விடக் கூடாது என்பது மற்றொரு நிலை.
இதே போலத்தான் யாகங்கள் நற்காரியங்கள் ஆகியவை ஒரு மனிதன் நிச்சயமாகச் செய்ய வேண்டியவை என்று உபதேசிக்கிற அங்கிரஸ், பின்னர் ‘அவையே எல்லாம் என்று நினைத்து விட்டால் அது மூடத்தனம் என்று எடுத்துரைக்கிறார். ஆகையால் இதில் முரண்பாடு எதுவும் இல்லை. உலக நடைமுறையை ஏற்று வாழவும், புண்ணியங்களைச் சம்பாதிக்கவும், நற்காரியங் களையும், யாகங்களையும் செய்கிற மனிதன் – அறிவு முதிர்ச்சி பெறுகிற போது இறைவனை நாடும் வழியை யோசிக்க வேண்டும். அதற்கான பாதையில் செல்ல வேண்டும். இதையே முண்டக உபநிஷதம் கூறுகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் பரி ணாம வளர்ச்சி இது.
சரி, சந்நியாசம்தான் மேன்மையான வழி என்றால், எல்லோ ரம் சந்நியாசிகள் ஆகிவிடமுடியுமா? அது நல்லதுதானா? – என்ற கேள்வி பிறக்கிறது.