ஸத்யமேவ ஜயதே!

எல்லோருமே ஸந்யாஸிகள்ஆகிவிட வேண்டும்என்ற வற்புறுத்தலோ, அப்படி ஒரு எதிர்பார்ப்போ, முண்டக உபநிஷதத்இல்இல்லை. துறவின்உயர்வைப்பற்றி பேசுகிறபோது, இறை வனை உணர, அந்த நிலை மிகவும்உதவும்என்றுதான்இந்த உபநிஷதம்கூறுகிறது

ஸந்யாஸத்தைப்பற்றி, வேறு கட்டத்தில்நாம்சற்று விவரமாகப்பார்ப்போம்‌. இப்போது கவனிக்கத்தக்க விஷயம்‌, அந்த வார்த்தையே கூட முண்டக  உபநிஷதத்தில்இல்லை. ஆனால்காட்டிலே சென்று நடத்தக்கூடிய தவ வாழ்க்கை போன்றவற்றின்உயர்வு பேசப்படுவதால்‌, இது ஸந்யாஸம்பற்றி இந்த உப நிஷதம்பேசுவதாக ஆகிறது

ஸந்யாஸம்என்ற சொல்லிற்கு, ‘விடுவது, துறப்பதுஎன்று பொருள்‌. ஸந்யாஸி, எல்லாவற்றையும்துறந்தவர்‌. உறவு, உடமை, பாசம்‌, பற்றுபோன்ற அனைத்தையும்துறந்தவன்ஸந்யாஸியாகி, சமப்பார்வை பெற்றுத்திகழ்கிறான்‌. இப்படிப்பட்ட நிலை, எல்லோருக்கும்கிட்டக்கூடியது அல்ல. அத னால்‌, இது வற்புறுத்தப்படவும்இல்லை; ஆனால்இந்த நிலை யின்மேன்மை, எடுத்துக்கூறப்படுகிறது. உண்மையாகவே அந்த நிலையை முயன்று அடைவது, ஆன்ம அறிவுக்கு இட்டுச்செல்லும்நேர்பாதை என்பதைத்தான்முண்டக உபநிஷதம்கூறுகிறது

இறைவனை உணர்ந்து கொள்வதும்‌, ஆன்ம அறிவு பெறுவதும்எல்லோராலும்முடிகிற காரியம்அல்ல என்பதால்தான்‌, கர்மங்களை முறையாகச்செய்து, தர்ம காரியங்களைச்சிரத்தை யுடன்செய்து வாழ்ந்தால்இவ்வுலக வாழ்க்கையில்சிறப்புப்பெற்று, நல்ல உலகங்களை அடைய முடியும்என்பதை ஒரு முறைக்கு, பலமுறைகள்இந்த உபநிஷதம்கூறுகிறதுஎன்பதை மனதில்வைத்துக்கொண்டு, இந்த உபநிஷதம்மேற்கொண்டு சொல்வதைப்பார்ப்போம்‌.

 ‘நன்றாக எரிகின்ற நெருப்பிலிருந்து, எவ்வாறு, அதே நெருப்பின்தன்மையை உடைய நெருப்புக்பொறிகள்ஆயிரக்கணக்கில்உண்டாகி பரவுகின்றனவோஅவ்வாறே இறைவனிடமிருந்து, உயிரினங்கள்உண்டாகின்றன

இறைவன்ஒளிமயமானவன்‌. உருவமற்றவன்‌. பிறப்பற்றவன்‌. மேலானவன்‌. அவனிடமிருந்தே பிராணன்‌, மனம்‌, புலன்கள்‌, காற்று, நீர்‌, நெருப்பு, பூமிஎன்ற எல்லாமே தோன்றின. அந்த இறைவனே எல்லா உயிர்களின்உள்ளும்உறைகிறான்‌. இதய குகையில்உறைகிற இறைவனை அறிபவன்‌, அறியாமை என்ற பிணைப்பிலிருந்து விடுபட்டு விடுகிறான்‌”. 

மனிதனின்‌ – ஒவ்வொரு ஜீவனின்‌ – ஆன்மா இறைவனே என்று கூறி, இந்த உபநிஷதம்‌ ‘அது ஒளிமயமானது; வேறெதையும்விட அருகில்‌, இதயக்குகையில்உறைவது. மூச்சு விடு கின்ற அனைத்து ஜீவராசிகளும்அதையே சார்ந்துள்ளன! என்று விளக்குகிறது. பின்னர்இந்த உபநிஷதம்பேசுவது கொஞ்சம்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ‘ஆன்மா ஜீவராசிகளின்அறிவிற்கு அப்பாற்பட்டது; அதை அறிய வேண்டும்‌! என்று கூறு கிறது முண்டக உபநிஷதம்‌.

 ‘அறிய முடியாது! என்று கூறிவிட்டு, ‘அறிய வேண்டும்‌’ என்றால்எப்படிஎன்ற குழப்பம்ஏற்படுகிறது. முன்பு சொன்ன மைக்ராஸ்கோப்உதாரணத்தை நினைத்துப்பார்த்தால்‌, இந்தக்குழப்பம்தீரும்‌. ‘தண்ணீரில்சார்ந்துள்ள பொருட்களை உன்னால்பார்க்க முடியாது; ஆனால்அவற்றை நீ பார்க்க வேண்டும்‌! என்று ஒரு பரிசோதனைக்கூட்டத்தில்‌, ஒரு விஞ்ஞானியிடம்கூறப்பட்டால்‌, அதில்குழப்பம்இருக்காது; விசேஷ கருவிகளைக்கொண்டு, கண்ணால்பார்க்க முடியாததை அவர்பார்க்க வேண்டும்‌. காதால்கேட்க இயலாத ஒலிகள்இருக்கின்றன; ஆனால்அவற்றையும்கேட்பது ஆராய்ச்சியாளர்களின்பணி

விஞ்ஞானத்தேடலில்ஈடுபடுகிறவன்‌, கண்ணால்பார்க்க முடியாததைப்பார்த்து, காதால்கேட்க முடியாததைக்கேட்பது போல ஆன்மீகத்தேடலில்ஈடுபடுகிறவன்‌, புலன்களால்உணர முடியாத இறைவனைஆன்மாவை உணர வேண்டும்‌. விஞ்ஞானி, கருவியின்மூலம்விசேஷப்பார்வைப்பெறுகிறான்‌; ஆன்மீகவாதி, தவம்‌, சிரத்தை, முனைப்பு போன்றவற்றின்மூலம்விசேஷப்பார்வை பெறுகிறான்‌. இதைத்தான்முண்டக உபநிஷதம்‌ ‘ஆன்மாவை அறிய முடியாது; அதை அறிய வேண்டும்‌’ என்று கூறுகிறது

முண்டக உபநிஷதம்ஆன்மாவைப்பற்றி அணுக்களில்எல்லாம்அணுவானது; அழிவற்றதுஎன்று வர்ணித்து மேலும்கூறுகிறது: ‘அதுவே இறைவன்‌; அது உண்மையானது; மரணமற்றது‘. 

இதன்பின்னர்‌, ஆன்மாவை அறிய, ஒருவன்எடுக்க வேண்டிய முயற்சியில்எவ்வளவு முனைப்பு தேவைப்படும்என்பதை இந்த உபநிஷதம்விளக்குகிறது. ‘உபநிஷத்துக்கள்கூறுகிற சிறந்த ஆயுதமாகிய வில்லை எடுத்து, தியானத்தினால்கூர்ஏற்றப்பட்ட அம்பை அதில்பூட்ட வேண்டும்‌; இறைவன்பற்றிய நினைப்பி னால்நிறைந்த மனதை நாணாக்கி, இலக்கை குறி வைத்துச்செலுத்த வேண்டும்‌; அந்த இலக்கே இறைவன்என்றும்‌, ‘உப நிஷத்துக்கள்கூறுகிற ஓங்கார மந்திரமே வில்‌! என்றும்இந்த உபநிஷதம்சொல்கிறது. அதை சிரத்தையுடன்உச்சரித்து, ஆன்ம அறிவைப்பெற இயானம்செய்து, இறைவனை உணர வேண்டும்என்பது இதன்சாராம்சம்‌. 

இதையடுத்து, முன்பு இந்தத்தொடரில்கூறப்பட்டஒரு மரத்தில்இரு பறவைகள்‌! உதாரணத்தை விளக்குகிற மந்த்ரம்இடம்பெறுகிறது. ஒரு மரத்தில்இரு பறவைகள்‌; ஒன்று பழத்தைக்கொரித்துத்இன்கிறது; மற்றொன்று பழத்தைத்தின்னாமல்‌, வெறும்பார்வையாளனாகத்திகழ்கிறது. ருசித்துத்தின்கிற பறவைஜீவன்‌; மனிதன்‌. அதைப்பார்த்துக்கொண்டிருக்கிற பறவை ஆன்மா

புருஷனும்‌ (மனிதனும்‌) ஆன்மாவும்ஒரே உடலில்தான்இருக்கின்றனர்‌. புருஷன்‌ (மனிதன்‌, ஜீவன்என்றும்சொல்ல லாம்‌) மோகத்தினால்கவரப்பட்டு, துன்புறுகிறான்‌. வழிபடு வதற்குரிய தனது ஆன்மாவை எப்போது அவன்உணர்கிறானோ, அப்போது துன்பத்திலிருந்து விடுதலை பெறுகிறான்என்று விளக்குகிறது முண்டக உபநிஷதம்‌. 

பழத்தைத்தின்பதுவாழ்க்கையில்நாம்இன்பங்கள்என்று கருதுவதை அனுபவிப்பது. அந்த அனுபவங்களின்விளைவு மகிழ்ச்சி என்று நினைத்தால்‌, அது தவறு. அவற்றின்விளைவு, துன்பமும்கூட. செல்வத்தைத்தேடுவதிலிருந்து, மற்ற பல சுகங்களை நாடுகிறவன்‌, கவலையில்மூழ்குகிறான்‌. சில கசப்பான அனுபவங்கள்ஏற்படுகின்றன. செல்வத்தைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்ற கவலை, அவனை தர்மத்தின்பாதை யிலிருந்து விலக்குகிறது; மேலும்செல்வம்ஈட்ட வேண்டும்என்ற ஆசை, அவனைப்பேராசை பிடித்தவனாக அலைய வைக்கிறது. மற்ற இன்பங்களை நாடுகிறபோதும்இதே கதிதான்ஏற்படுகிறது. இருப்தி என்பது இல்லாமல்‌, இன்னமும்வேண்டும்என்ற ஆசையும்‌, இருப்பது போய்விடுமோ என்ற பயமும்‌, மனிதனை வாட்டுகின்றன. வாழ்க்கையின்இன்பத்தை நுகர்ந்து கொண்டே காலம்கழிக்கிறவன்‌ – பழத்தைத்இன்கிற பறவை; அவன்உயர்வு பெற மாட்டான்‌; அவனுக்கு நிம்மதி என்பது கிடையாது

ஆனால்பார்த்துக்கொண்டிருக்கிற பறவைஇனிப்பையும்தின்னவில்லை. கசப்பையும்ரசிக்கவில்லை. அது, தன்னிலேயே நிறைவு கண்டு அமைதி குலையாமல்இருக்கிறது; இன்பம்என்று நினைத்து, அலை பாய்கிற மனம்உடையவனாகக்கவலையில்உழல்கின்ற மனிதன்‌, அந்த நிலை உயர்வு தராது என்பதை உணர்ந்து, ஆன்ம அறிவைப்பெற்றால்‌, அவன்அந்த பார்த்துக்கொண்டிருக்கிற பறவையின்நிலையை எய்துகிறான்‌. அதுவே இறை உணர்வு

ஆன்மாவை எப்போது ஒருவன்உணர்கிறானோ, அப்போது அவன்புண்ணிய பாவங்களை எல்லாம்உதறிவிட்டு, துன்பமே இல்லாத மேலான சமநிலையை அடைகிறான்‌! என்று இந்த உபநிஷதம்கூறுகிறது

இதையடுத்து, உண்மையின்மேன்மையை கூறுகிற இந்த உப நிஷதத்தின்சொல்தான்‌, ஏற்கெனவே கூறியது போல இந்நாட்டின்‌ ‘மோட்டோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த மந்த்ரம்இவ்வாறு அமைந்துள்ளது

ஸத்யமேவ ஜயதே அன்ருதம்‌ 

ஸத்யேன பந்தா விததோ தேவயான

யேனாக்ரமந்தி ரிஷயோ ஹி ஆப்தகாமா 

யத்ர தத்ஸத்யஸ்ய பரமம்நிதானம்‌ 

உண்மையே வெல்லும்‌; உண்மையற்றது அல்ல. ஆன்மிக வழி, உண்மையால்அமையப்பெற்றது. விருப்பங்கள்நிறைவேற்றப்பட்டவர்களாக, முனிவர்கள்அந்த வழியில்செல்கிறார்கள்‌. உண்மையின்உயர்ந்த இருப்பிடம்அங்கேதான்இருக்கிறது

புலன்களினால்மட்டுமல்ல, வெற்றுத்தவத்தினால்கூட ஆன்மாவை அறிந்து விட முடியாது; புத்தி தெளிவடைந்து, அகத்தூய்மை பெற்று, சமப்பார்வையுடன்தியானம்செய்பவனே ஆன்மாவை அறிவான்என்றும்இந்த உபநிஷதம்சொல்கிறது. ஆசை களை வளர்த்துக்கொள்பவன்‌, அந்த ஆசைகளின்காரணமாக, அவற்றையே அவன்நாடுவதன்காரணமாக, மீண்டும்மீண்டும்பிறப்பெய்துகிறான்‌. 

ஆனால்ஆசைகள்ஒடுங்கினால்‌, நிறைவேற்றிக்கொள்ள எந்த விருப்பமும்மீதி இல்லை; அப்படிப்பட்ட நிலையை அடை இறவன்ஆத்ம ஞானியாகிறான்‌. ‘அவன்இறைவனை அடைந்து, அவனிடமே நிலை பெறுகிறான்‌. பெருக்கெடுத்துப்பாய்கின்ற நதிகள்‌, சமுத்திரத்தில்கலக்கின்ற போது, தங்கள்வடிவத்தையும்பெயரையும்துறக்கின்றன. அது மாதிரி, ஒளியுடைய பரமாத்மாவை அறிகிற மனிதன்தனது அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அவனுள்ஐக்கியமாகிறான்‌’ என்று கூறி இந்த உபநிஷதத்தில்கண்டுள்ள விளக்கங்களை அளித்து முடிக்கிறார்அங்கிரஸ்‌.

இதுபற்றி, மீண்டும்மீண்டும்நாம்நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய விஷயம்ஒன்று இருக்கிறது. துறவு நிலை, ஆன்மீக அறிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய உயர்ந்த நிலை என்‌: நாலும்‌ – அது எல்லோருக்கும்விதிக்கப்படவில்லை. முனைப்பு, சிரத்தை, தியாகம்‌, சமப்பார்வைஆகியவற்றின்மூலம்ஆன்மீக அறிவைப்பெறலாம்‌. 

இது தவிர, ஆன்ம அறிவு பெற்றவன்கூட, எந்தக்காரியத்இலும்ஈடுபடாதவனாக, ‘சும்மா இருப்பதே சுகம்‌” என்று வாழ வேண்டியதில்லை. இந்த உபநிஷதமே அப்படிப்பட்ட நிலைப்பற்றிப்பேசுகிறபோது இவ்வாறு கூறுகிறது

ப்ராணோஹ்யேஷ : ஸர்வபூதைர்விபாதி 

விஜானன்வித்வான்பவதே நாதிவாதி 

ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவான்‌ 

ஏஷ ப்ரஹ்மவிதாம்வரிஷ்ட

எல்லா ஜீவராசிகளிலும்இயங்குவது ப்ராணனே என்று எந்த அறிவுடையவன்உணர்கிறானோ, அவன்தேவையற்றுப்பேசிக்கொண்டிருப்பதில்லை. ஆன்ம உணர்வில்இன்பம்காண்பவ னாக, அதில்களிப்படைந்து, அவன்தனது வேலைகளைச்செய்இறான்‌. ஆன்ம ஞானிகளில்அவன்சிறந்தவன்‌. 

ஆன்ம ஞானிகளில்‌, யார்சிறந்தவன்என்று இங்கே கூறப்ப டுகிறது. ஆன்ம ஞானம்பெற்று விட்டதால்‌, சும்மா இருப்ப வன்அல்ல, சிறந்தவன்‌. அந்த அறிவில்பெறுகிற இன்பத்துடன்‌, தனது வேலையைச்செய்கிற ஆன்ம ஞானியே சிறந்தவன்‌. 

ஆக, துறவு நிலையின்மேன்மையைக்கூறுகிற முண்டக உப நிஷதம்‌, அதற்காக உயர்ந்த மனிதர்கள்தங்கள்பணிகளைக்கவ னிக்காமல்விட்டுவிட வேண்டும்என்று கூறவில்லை. ஆன்ம ஞானியும்தனது பணிகளைச்செயல்படுத்துவான்‌; ஆனால்அதன்பலனில்பற்றற்றவனாக, அவன்தனது கடமையைச்செய்வான்‌. 

அடுத்து மாண்டூக்ய உபநிஷத்‌.