மண்டூகம் என்றால் தவளை. சிறிய அளவில் அமைந்திருக் இற மாண்டுக்ய உபநிஷதத்திற்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பது பற்றி சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின் றன. விழிப்பு, கனவு, தூக்கம் – ஆகிய நிலைகளில் மனிதன் மாறி மாறி நிற்கிறான்; ஒரு தவளை குதிப்பது போல ஒரு நிலை யிலிருந்து மற்றொரு நிலைக்கு அவன் தாவுகிறான்; இதை விவ ரிப்பதால் இந்த உபநிஷதத்திற்கு மாண்டூக்ய உபநிஷத்! என்று பெயர் வந்ததாக ஒரு விளக்கம் இருக்கிறது. மற்றொரு விளக்கம் “மாண்டுக்யர் என்ற பெயருடைய ரிஷி மூலமாக வந்ததால், இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்! என்று கூறுகிறது. மூன்றாவது விளக்கம் ‘வருண பகவானே மாண்டுக உருவமாக தஇகழ்ந் ததும் உண்டு; அவரிடமிருந்து கிடைத்த உபதேசம் இது என்ப தால், இதற்கு மாண்டுக்ய உபநிஷதம் என்ற பெயர் வந்தது! என்று கூறுகிறது. வேறொரு விளக்கம், முதல் விளக்கத்தையே வேறு விதமாகச் சொல்கிறது. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்து, நான்காவது நிலையை, ஓங்கார மந்த்ரத்தின் தியானத்தின் மூலமாக அடைந்து விடலாம் என்று சொல்லி, நான்காவது நிலைக்குத் தாவி விடுகிற வழியைக் கூறு வதால், இதற்கு இந்தப் பெயர் வந்தது என்பது அந்த விளக்கம்.
உபநிஷதங்களுக்குள்ளேயே மிகவும் சிறியதாகிய இதில்தான் ஆத்மாவும், ப்ரம்மனும் ஒன்றே என்ற மஹா வாக்கியம் வரு இறது. ‘இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே” என்று தொடங்குகிற மாண்டுக்ய உபநிஷதம், அதை அடுத்து ‘சென்றவை, இருப் யவை, வருபவை – எல்லாமே ஓங்காரம்தான். மூன்று காலங் களையும் கடந்ததாக எது இருக்கிறதோ, அது ஓங்காரமே! எல் லாமே இறைவன்தான். இந்த ஆன்மாவும் இறைவனே! இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது.
மேலே சொன்னதில் உள்ள ‘இந்த ஆன்மாவும் இறைவனே‘ என்ற சொல்தான் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மஹா வாக்கி யம். ‘அயம் ஆத்மா ப்ரம்ம” என்ற இது நான்கு மஹா வாக்கி யங்களுள் ஒன்று.
சரி. ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது என்று எவ்வாறு கூறப்படுகிறது? இந்த உபநிஷதம் அடுத்து அதை விளக்கு கிறது. முதல் பரிமாணம் விழிப்பில் நிலை கொண்டிருக்கிறது என்றும், அது வைச்வானரன் என்றும் மாண்டுக்யம் கூறுகிறது. இந்த உலகில் நடைமுறை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிற விழிப்பு நிலையில், வைச்வானரன் என்ற பெயர் தாங்கப்படு கிறது. இரண்டாவது பரிமாணம் தைஜஸன் என்ற பெயரோடு கனவு நிலையில் திகழ்வது. மூன்றாவது பரிமாணத்தின் பெயர் ப்ராஜ்ஞன். விழிப்பு நிலையில் உள்ளது போல இதில் ஆசைகள் கிடையாது; கனவுகளும் காணப்படுவதில்லை. இது அனுபவங்கள் ஓடுங்கிய நிலை. முதலாவது பரிமாணத்தில் – புற உலக அனுபவங்கள்; இரண்டாவது பரிமாணமாகிய கனவு நிலையில் – மனஉலக அனுபவங்கள்; மூன்றாவது நிலையாகிய உறக்க நிலையில் இது கிடையாது. அதனால் இது ஆனந்தத்தை அனுபவிக்கிற நிலை,
மூன்று நிலைகளை இவ்வாறு விளக்கி விட்டு, மாண்டுக்யம் நான்காவது நிலையை விளக்குகிறது. அந்த விளக்கத்தின் படி – நான்காவது பரிமாணம் புறமுக நிலை என்று கூறக்கூடிய விழிப்பு நிலையும் அல்ல; அகமுக நிலை என்று கூறக்கூடிய கனவு நிலையும் அல்ல; இவை இரண்டுமே ஐக்கியமாகி விடு கிற உறக்க நிலையும் அல்ல. இந்த நான்காவது பரிமாணம், உணர்வு நிலையும் அல்ல; உணர்வற்ற நிலையும் அல்ல. அதைக் காண முடியாது. செயல்களற்ற, புரிந்து கொள்ள முடியாத, இந்தனைக்கு அப்பாற்பட்ட விளக்க முடியாத நிலை அது. இதற்கு துரியம்! என்று பெயர். துரியம் என்றாலே ‘நான்காவது‘ என்று பொருள். அதை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய முடியும். அது மங்களகரமானது, சாந்தம் நிறைந்தது. அதுவே நான்காவது பரிமாணம். அதுதான் ஆன்மா. அதை அறிய வேண்டும்.
இப்படி நான்காவது பரிமாணத்தை விளக்கிவிட்டு, மாண்டுக்ய உபநிஷதம் ஓங்காரத்தைப் பற்றிக் கூறுகிறது: ‘இந்த ஆன்மாவை ஓங்காரம் என்று சொல்ல வேண்டும். இதை எழுத்துக்களாகப் பிரித்துச் சொல்வதானால் அதில் உள்ள பகுதிகளே அதன் எழுத்துக்கள், அதில் உள்ள எழுத்துக்களே அதன் பகுதிகள். அவை அ, உ, ம் – ஆகியவை… விழிப்பு நிலையை நிலைகளமாகக் கொண்ட வைச்வானரன், ‘அ*காரம். இது முதற் பகுதி; கனவு நிலையை தன் நிலைக்களமாகக் கொண்ட தைஜஸன் இரண் டாவது பகுதி. இது ‘உ‘காரம்; ஆழ்ந்த உறக்கத்தை நிலைகள மாகக் கொண்ட ப்ராஜ்ஞன் மூன்றாவது பகுதி. இது ‘ம‘காரம். ஓங்கார மந்த்ரத்தின் நான்காம் பகுதியோ, பகுதி என்று சொல்லவே முடியாதது. அது செயல்களற்றது, உணர்வுகளைக் கடந்தது, மங்களமானது ‘.
இவ்வாறு ஓங்காரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, இதை அறிபவன் உயர் நிலையை அடைகிறான் என்று கூறி, மாண் டூக்ய உபநிஷதம் முடிகிறது. இந்த ஓங்காரத்தை எப்படி தியா னம் செய்வது என்ற முறை பற்றி, ஆதிசங்கரரின் குருவிற்கு குரு வான கெளடபாதர் அளித்திருக்கும் விளக்கம் மாண்டுக்ய உபநி ஷதத்துடன் சேர்ந்தே சொல்லப்படுவது மரபு. அந்த விளக்கத்தில் ஒங்கார மந்த்ரத்தை உச்சரிக்கும் முறை, அதை இயானம் செய்யும் முறை போன்றவை எல்லாம் விளக்கப்பட்டிருக்கின்றன. அதைப் படித்து, அந்த வழிமுறைகளை அறிந்து கொண்டு விடுவது கடினம்; ஒரு குருவின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் அது.
நாம் அடுத்து பார்ப்பது தைத்திரிய உபநிஷத். யஜூர் வேதத்தில் கிருஷ்ண, யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்ற இரு பிரிவுகள் உண்டானது பற்றிய நிகழ்ச்சியை நாம் முன்பே ஒரு அத்தியாயத்தில் பார்த்தோம். வைசம்பாயனரின் சிஷ்யர் யாக்ஞு வல்கியர். சிஷ்யரின் மீது கோபம் கொண்ட வைசம்பாயனர், ‘என்னிடம் கற்றதை கக்ஜிவிடு‘ என்று சொல்ல, யாக்ஞவல்கயரும் தான் கற்றதை அங்கேயே விட்டு விட்டார். இந்த நிகழ்ச்சியை உருவகப்படுத்தி வர்ணிக்கிறபோது, ‘யாக்ஞவல்இயர் கக்கினார்; வைசம்பாயனரின் உத்தரவின்படி மற்ற சிஷ்யர்கள், இத்திரி என்ற வகையான புறாவின் உருவத்தை எடுத்துக் கொண்டு, யாக்ஞவல் இயர் கக்கியதை சாப்பிட்டார்கள்” என்று கூறப்படுகிறது. அதா வது யாக்ஞவல்கியர் வைசம்பாயனரிடம் கற்றதை அங்கேயே விட்டார்; மற்ற சிஷ்யர்கள் அந்தக் கல்வியைத் தொடர்ந்தனர். இத்திரி பறவை என்று உருவகப்படுத்தும் முறையில் இந்த நிகழ்ச்சி வர்ணிக்கப் பட்டது. இப்படி தித்திரி பறவை என்ற வர் ணனை கொடுக்கப்பட்டதால், வைசம்பாயனர் அளித்த வேத சாகைக்கு, அதாவது வேதப் பிரிவிற்கு, வேத கிளைக்கு, தைத் இரீய சாகை என்று பெயர் வந்தது. அதில் இடம் பெறுகிற உப நிஷதம் தைத்திரீய உபநிஷதம்.
இந்த தைத்திரீய உபநிஷதம் சஷாவல்லீ, ஆனந்தவல்லி, ப்ருகுவல்லீ என்ற பெயர்களுடைய மூன்று பாகங்களாக அமைந் துள்ளன. வல்லீ என்றால் – பகுதி, க்ஷாவல்லீயில் கல்விப் பயிற்சியைப் பற்றிய பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. நான்கு ஆச்ரமங்களில் ஒன்றாகிய ப்ரம்மச்சரிய ஆச்ரமம், அதனு டைய பெருமை, வேதத்தை அத்யயனம் செய்யும் முறை, ப்ரண வத்தை தியானிக்கும் முறை… போன்றவை இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகின்றன. இந்தக் கல்வி பெருக வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஆச்சார்யர், தன்னிடம் ப்ரம்மசாரிகள் வந்து இதைக் கற்றுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆவஹந்தி என்ற ஹோமம் செய்யவேண்டும் என்பது இதில் கூறப்படுகிறது. இத பற்றிக் குறிப்பிடுகையில் மஹா ஸ்வாமிகள், ‘இன்றைக்கும் கூட இந்த ஹோமத்தைப் பண்ணிப் பார்த்ததில் – பல இடங்களில் குற்றுயிரும், குலை உயிருமாய் இருந்த வேத பாடசாலைகளில் புதிதாக மாணவர்கள் சேர்ந்து, அந்த வேத பாடசாலைகளுக்குப் புத்துயிர் உண்டானதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்’ என்று கூறுகிறார். அடிப்படை நெறிகள் இந்தப் பகுதியில் உபதேசிக் கப்படுகின்றன. சீக்ஷாவல்லீயை அடுத்து ஆனந்தவல்லீ என்ற பகுதி. ஆனந்த மயமான ப்ரம்மத்தை – அந்த நிலையை – அடைவது பற்றி இதில் விளக்கப்படுகிறது. ஆன்மா பற்றிய விவரங்கள் இதில் கூறப்படுகின்றன.
ப்ருகுவல்லீ என்பது வருணபகவான், தன்னுடைய மகனா யய ப்ருகுவிற்கு செய்த உபதேசத்தை விளக்குகிறது. தன் மகன் முயற்சி செய்து உண்மையை உணர்வதற்கு உரிய வகையில் வருண பகவான், மீண்டும் மீண்டும் ப்ருகுவைத் தூண்டி விட, அவர் ஒவ்வொரு படியாக முன்னேறி, உண்மையை தனது அனுபவத் இன் மூலமாகவே தெரிந்து கொள்கிறார். அதை விளக்குகிறது இந்தப் பகுதி. ப்ரம்மத்தை உணர்ந்து, இறை உணர்வில் நிலை பெற்ற பிறகும் கூட, இந்த உலக வாழ்க்கையில் தனக்குள்ள கட மைகளை ஒருவன் மறந்து விடக் கூடாது என்ற வகையான அறி வுரையுடன், இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன் இந்த உபநிஷதம் தொடங்கு கிறது: _
ஓம் சம் நோ மித்ர: சம் வருண:
சம் நோ பவத்வர்யமா
சம் ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
சம் நோ விஷ்ணுருருக்ரம:
நமோ ப்ரஹ்மணே
நமஸ்தே வாயோ
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி
ரிதம் வதிஷ்யாமி
ஸத்யம் வதிஷ்யாமி
தன்மாமவது தத்வக்தாரமவது
அவதுமாம்
அவது வக்தாரம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
மித்ரன் நமக்கு நன்மை புரியட்டும்; வருணன் நமக்கு நன்மை செய்யட்டும்; அர்யமான் நமக்கு நன்மை செய்யட்டும்; இந்திர னும், ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும். எங்கும் வியா பித்திருப்பவராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும். ப்ரம் மனை நமஸ்கரிக்கிறேன். வாயு தேவனே! உன்னை நமஸ்கரிக் இறேன். நீயே கண் கண்ட தெய்வமாக விளங்குகிறாய், கண் கண்ட தெய்வம் என்று உன்னை நான் போற்றுகிறேன். ஸத்யம் என்று உன்னை நான் கூறுகிறேன். அந்தப் பரம் பொருள் என்னைக் காப்பாராக. அவர் ஆசிரியரைக் காப்பாராக. என்னைக் காப்பாராக. ஆசிரியரைக் காப்பாராக. மூவகை சாந்தி நிலவட்டும்.
இந்தப் ப்ரார்த்தனை பற்றி ஒரு சில விளக்கங்கள் பகலுக்கு தேவன் மித்ரன். இரவுக்கு வருணன். சூரியனுக்கு அர்யமான். வலிமைக்கு இந்திரன். வாக்கிற்கு ப்ருஹஸ்பதி. பாதங்களுக்கு அபிமான தேவன் விஷ்ணு. இவர்களிடம் நமக்கு நன்மை புரியு மாறு வேண்டப்படுகிறது.
அடுத்து, ரிதம் என்பது இந்த உலக இயக்கத்தின் ஒழுங்கு முறை சட்டம். அதற்கு அடிப்படையாக விளங்குவது ஸத்யம். எல்லாவற்றையும் இயக்குகிற இறைவன் ஆசிரியரையும், மாண வனையும் காக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இந்த மந்த்ரம் முடிகிறது.
இதையடுத்து வேதம் ஓதுகையில் கவனத்தில் கொள்ள வேண்: பூய விஷயங்கள் பற்றிய விளக்கம் வருகிறது.