சந்தோகன் என்றால் ஸாம வேதத்தை ஓதுகிறவன் – ஸாம கானம் செய்கிறவன். இதிலிருந்து வந்ததுதான் சாந்தோக்யம் என்று பெயர். வேறு சில உபநிஷதங்களில் ஒரு ரிஷியின் உப: தேசங்களே இடம் பெற்றுள்ளன. அதுபோல் அல்லாமல், சாந்தோக்ய உபநிஷதத்தில் பல ரிஷிகளின் உபதேசங்களும், அறிவுரைகளும் இடம் பெறுகின்றன. பல நிகழ்ச்சிகளும் இந்த உபநிஷதத்தில் வர்ணிக்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அறிவுரைகள் விளக்கப்படுகின்றன.
‘ஓம் – என்னுடைய அங்கங்கள், வாக்கு, ப்ராணன், வன்மை, கண், காது முதலிய எல்லாம் தங்கள் தங்கள் தொழிலை நன்றாகச் செய்யும் திறனுடையவையாக விளங்கட்டும். இவை அனைத்தும் உபநிஷதங்களில் கூறப்படும் ப்ரம்மமே. ப்ரம்மம் என்னைவிட்டு விலகக் கூடாது. நானும் ப்ரம்மத்தை விட்டு விலகக் கூடாது, அந்த அறுந்து போகாத உறவு, நிலை பெறட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். ஆன்மாவை உணர்ந்து வாழ்பவர்களிடம் என்ன: உபநிஷத தர்மங்கள் அடங்கி இருக்கின்னனவோ, அவை என்னிட மும் நிலை பெறட்டும் என்று வேண்டுகிறேன்’ – என்ற ப்ரார்த்த னையுடன் இந்த உபநிஷதம் தொடங்குகிறது.
எடுத்த எடுப்பிலேயே ‘ஓம்’ என்பதன் முக்கியத்துவம் வலி யுறுத்தப்படுகிறது. இந்த ‘ஓம்’ என்ற சொல்லிற்கு, ‘உத்தம்’ எனப் பெயரிடுகிறது, சாந்தோக்ய உபநிஷதம். ‘சகல ஜீவன்களின் ரஸம்
மண் (ரஸம் என்றால் எஸென்ஸ் அதாவது சாரம் – ஒரு பொருளில் உள்ள சத்து) மண்ணின் ரஸம் – தண்ணீர்; தண்ணீரின். ரஸம் – தாவர வர்க்கம்; தாவரங்களின் ரஸம் – மனிதன்; மனி தனின் ரஸம் – வாக்கு; வாக்கின் ரஸம் ரக் (மந்த்ரம்); ருக்கின் ரஸம் – ஸாமம்: ஸாமத்தின் ரஸம் – உத்கீதம்’. இப்படி ஓங்காரத்தின் பெருமையை கூறத் தொடங்குகிற இந்த உப நிஷதம் மேலும் சொல்கிறது :
‘ஓங்காரத்தினாலேயே மூவகை அறிவு வியாபிக்கிறது. யாகங் களில் தேவர்களுக்கு ‘ஓம்’ என்று அழைப்பு விடப்படுகிறது. ‘ஓம்! என்று தொடங்கியே ஸாம கானம் செய்கிறார்கள். இந்த “ஓம்! என்ற சொல் மகிமை பொருந்தியது. இந்த சொல்லை உச்சரிப்பது, பரம்பொருளையே போற்றுவதாகும். ஞானத்துடனும், முனைப்புடனும் முறைப்படி எது செய்யப்படுகிறதோ, அது வீரியம் உடையது‘.
இதை அடுத்து கண் முதலிய இந்திரியங்களை ஒவ்வொன் றாக உத்ததம் எனப்படுகிற ஓங்காரமாக நினைத்து, தேவர்கள் வர்ணித்ததும்; இறுதியில் ப்ராணனையே அவர்கள் உத்தீதம் என உணர்ந்து உபாரித்ததையும், இந்த உபநிஷதம் சொல்றிது. அடுத்த பகுதியில் ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம் ஒரு தர்மம் – விதி முறை விளக்கப்படுகிறது.
குருதேசம் ஒரு சமயத்தில் பஞ்சத்தில் சிக்கியது. உஷஸ்தி என் பவர், மற்றும் அவர் மனைவி ஆகியோர் பசியில் வாடி மிகவும் துன்பமுற்று தவித்தார்கள். செய்வதறியாமல் தவிக்கின்ற நிலையில், யானைப் பாகர்களின் இராமம் ஒன்றில் அவர் தங்க நேர்ந்தது. அப்போது அங்கே ஒரு யானைப் பாகன் ஒரு தட்டில் கொள்ளை சமைத்து வைத்துத் இன்று கொண்டிருந்தான். உஷஸ்தி அவனிடம் சென்று பிக்ஷை கேட்டார். அவன் ‘நான் இன்று மீதியாக விட்ட இந்தக் கொள்ளைத் தவிர வேறு ஒன்றும் என்னிடம் இல்லையே” என்று கூறினான்.
உஷஸ்தி ‘சரி, அதைத்தான் எனக்குக் கொடு! என்று கூற, அவனும், அவருக்கு அதைக் கொடுத்தான். உஷஸ்தியும், அவர் மனைவியும், யானைப் பாகன் தின்று மீதி இருந்த கொள்ளைச் சாப்பிட்டார்கள்.
அப்பொழுது யானைப் பாகன் “இந்தாருங்கள். நான் குடித்து மீதியான தண்ணீர் இருக்கிறது. அதையும் குடியுங்கள்! என்று அவரிடம் கொடுத்தான்.
உஷஸ்தி, ‘வேண்டாம். இந்தத் தண்ணீரை நான். குடித்தால் எச்சிலை உண்டவனாவேன். அது தவறு” என்று கூறி மறுத்து விட்டார்.
யானைப் பாகன் பார்த்தான். ‘நான் உண்ட பின் மீதி இருந்த கொள்ளைத் இன்றீர்களே. அது மட்டும் எச்சில் இல்லையா? என்று கேட்டான்.
உஷஸ்தி, ‘நான் பசியால் மிகவும் அவதியுறுகிற நிலையில், அந்தக் கொள்ளை நான் சாப்பிட்டிருக்கா விட்டால், உயிர் துறந் இருப்பேன். ஆனால் கொள்ளைச் சாப்பிட்டவுடன் எனக்கு அந்த ஆபத்து நீங்கி விட்டது. அதன் பிறகு நான் தண்ணீரைக் குடித் தால், அதை இருப்திக்காகத்தான் செய்ய வேண்டும். அதுதான் தவறு! என்று விளக்கினார்.
ஆபத்துக் காலங்களில் சில தர்ம நெறிமுறைகளிலிருந்து விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதையொட்டியே, உஷஸ்தி, யானைப் பாகன் தின்று மீதியான எச்சிலை உண்டார். அதன் பிறகு தாக சாந்தி செய்து கொள்வது என்பது, ஆபத்தைப் போக்கு வதற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல; சாப்பிட்ட பிறகு ஒரு நிறைவுக்காகச் செய்யப்படுகிற காரியம். ஆகையால், விதி விலக்கு, இதற்கு ஒத்து வராது. இப்படி ஒரு சூட்சுமமான தர்மம் இருப்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. இன்று இயற்றப் படுகிற சட்டங்களில் கூட தேவைப்பட்ட இடங்களில் விதி விலக்குகள் அளிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த வழிமுறை, தர்ம சாத்திரங்களிலும் அனுஷ்டிக்கப்படு கிறது. குருவைக் கொல்வது மஹாபாவம். ஆனால் தன்னைத் தாக்க ஒரு குரு முனைந்தால், அப்பொழுது அந்த குருவையே கொன்று விடலாம் என்று மனு நீதி சொல்கிறது. இவ்வாறு வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக, விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன. இங்கே உஷஸ்தக்கு, எதையாவது உண்ணா விட்டால் உயிர் போய் விடும் என்கிற நிலை; ஆகையால் ஆபத்து தர்மத்தை அவர் கடைப்பிடித்தார்.
இதையடுத்து காயத்ரியின் மேன்மை எடுத்துச் சொல்லப்படு இறது: மனித வாழ்வே ஒரு யாகம்தான் என்ற தத்துவம் விளக்கப் படுகிறது; ஆன்மாவின் சிறப்பும் கூறப்படுகிறது. ஜனஸ்ருதி என்ற மன்னன் பெரும் புகழ் படைத்தவனாக விளங்கியதும்; அவன் எதிரில் இரண்டு அன்னப் பறவைகள் ரைக்வன் என்பவனின் மேன்மையைப் பற்றிப் பேசியதும்; அந்த ரைக்வனைச் சந்திக்க மன்னன் செய்த முயற்சிகளும்; அந்த ரைக்வன் ஒரு கட்டை வண்டிக்காரன் என்பதும்; அவனிடம் இருந்து ஜனஸ்ருதி என்கிற மிகப் பெரிய அரசன் உபதேசம் பெற்றான் என்பதும் – முன்னொரு அத்தியாயத்தில் நம்மால் பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி சாந்தோக்ய உபநிஷதத்தில்தான் வருகிறது. மேன்மை என்பது ஒருவனுடைய பிறப்பிலோ, வெளித் தோற்றத்திலோ இல்லை என்பதும், தான் பெறுகிற ஞானத்தின் காரணமாகவே ஒருவன் உயர்ந்த மகானாகப் போற்றப்படுகிறான் என்பதும், இந்த ரைக்வன் நிகழ்ச்சியிலிருந்து தெளிவாகின்றன.
நம்மால் ஏற்கெனவே சுருக்கமாகப் பார்க்கப்பட்ட சத்யகாம ஜாபாலி என்பவரின் அனுபவம் பற்றிய நிகழ்ச்சியும், சாந்தோக்ய உபநிஷதத்தில்தான் கூறப்பட்டிருக்றெது. கெளதமர் என்று ஒரு ரிஷி. அவருக்கு ஹாரித்ருமதர் என்ற பெயரும் உண்டு. அவரிடம் பயில விரும்பி, சத்யகாமன் என்ற சிறுவன், அவரை அணுகினான்.
அவர் அவனை ‘நீ யார்?! என்று வினவினார்.
தன் பெயரை அவன் சொன்னான், தாய், தந்தையரைப் பற்றி அவர் கேட்க, சத்யகாமன் தன்னுடைய தாயின் பெயர் ஜபாலா என்பதைத் தெரிவித்து விட்டு, தந்தையின் பெயர் தெரியாது என்று கூறினான். மற்ற டர்கள் கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்த நிலையில் கெளதமர், சத்யகாமனிடம் ‘உன் தாயாரிடமே சென்று விவரங்களை அறிந்து வா! என்று கூறி அவனை அனுப்பினார்.
சத்யகாமன், தன்னுடைய தாயாகிய ஜஐபாலாவை அணுகி இது பற்றி கேட்டபோது அவள், ‘உன் தந்தை யார் என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய இளமைக் காலத்தில் நான் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். யார் யாரையோ சந்தித்தேன். அந்தக் காலத்தில்தான் உன்னைப் பெற்றேன். உன் தந்தை யார் என்று எனக்குத் தெரியாது. என் பெயர் ஜபாலா. உன் பெயர் சத்யகாமன். ஆகையால் நீ குருவிடம் சென்று சத்யகாமன் என்ற ஜாபாலன் என்று உன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாயாக! என்று சொல்வி‘ விட்டாள். (ஜபாலாவின் மகன் என்பதால் ஜாபாலன்.)
கெளதமரை அணுகிய சத்யகாமன், ‘என் தாயாரை நான் விவரங்கள் கேட்டேன். அவள் இளமைக் காலத்தில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் என்னைப் பெற்றதால், என் னுடைய தந்தை யார் என்பது தனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாள். தன் பெயர் ஜபாலா என்றும், என் பெயர் சத்யகாமன்: என்றும், அதனால் சத்யகாம ஜாபாலன் என்றும் என் தாய் கூறி னாள்! என்று கூறி, வணங்கி நின்றான்.
கெளதமர் வியப்புடன் அவனைப் பார்த்தார். உண்மையை இவ்வளவு தெளிவுடனும், உறுதியுடனும் கூறுகிற உன்னை ப்ரா மணன் அல்ல என்று சொன்னால் – அது தகுதியற்ற வார்த்தை யாக இருக்கும். ஆழமான சிந்தனையுடையவனே! ஸமித்துகளை (சுள்ளிகளைக்) கொண்டு வா. உனக்கு நான் உபநயனம் செய் விக்கிறேன். நீ ஸத்யத்திலிருந்து விலகாதவன். உன்னை என் சிஷ்யனாக ஏற்கிறேன்’ என்று சொல்லி, கெளதமர் அவனைத் தனது ஆச்ரமத்தில் ஏற்றுக் கொண்டார்.
இன்று இருக்கிற ஆயிரமாயிரம் ஜாதி வித்தியாசங்களுக்கு எல்லாம் அன்றைய வேதங்களைக் காரணமாக்குகிறவர்கள், சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தந்தை யார் என்றே தெரியாத ஒரு சிறுவன் – ஒரு பணிப்பெண்ணின் மகன் – ப்ராமணன் என்று ஏற்கப்படுகிறான். எதை வைத்து? பிறவியை வைத்தா? இல்லை. அவனுடைய குணத்தை வைத்து, அவன் ஏற்கப்படுகிறான். சத்யம் தவறக் கூடாது என்பது ப்ராமணனுக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மிகப் பெரிய கடமை. அதை இயல்பாகவே கொண்டிருந்த ஸத்யகாமன், அந்த ஒரு காரணத்தினாலேயே ப்ராமணன் என்று ஏற்கப்படுகிறான். ஏற்றவரோ தர்ம சாத்திரங்களை அறியாதவர் அல்ல. வேதங்களைப் படிக்காதவர் அல்ல. கெளதமர் என்ற ரிஷி. அவர், தந்தை பெயர் அறியாத அந்தச் சிறுவனைப் பார்த்து, “உன்னை ப்ராமணன் அல்ல என்று கூறினால், அது தகுதியற்ற சொல்லாகும்” என்று சொல்கிறார். அதாவது பின்னர் வந்த கால மாற்றங்களினால், பிறப்பின் மூலமே ஒருவனுடைய வர்ணம் நிர் ணயிக்கப்படுகிறது என்ற நிலை தோன்றி விட்டாலும் – வேத காலத் இல், பிறப்பின் மூலமாக ஒருவன் ப்ராமணத்துவத்தை அடைந்து விடுவதாகச் சொல்லப்படவில்லை. இது பற்றிய விவரங்களை எல்லாம் பிறகு ஒரு கட்டத்தில் நாம் பார்ப்போம். இப்போதைக்கு, வேத காலத்தில் காணப்பட்ட பரந்து, விரிந்த பார்வைக்கு சத்ய காம ஜாபாலியின் வரலாறே ஒரு சான்று – என்பதை நாம் கவனத்தில் கொண்டால் போதும்.
இதே உபநிஷதத்தில் வருகிற மற்றொரு நிகழ்ச்சியும் கூட, ஞானம் என்பது ஒரு வர்ணத்தின் ஏகபோக உரிமையாக இருந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது.