தன் மகன் ச்வேதகேதுவிற்கு விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்த உத்தாலகர் மேலும் சொன்னார் : ‘பல திசைகளி லிருந்து வரும் நதிகள் சமுத்திரத்தில் கலந்த பிறகு, அவையும் சமுத்திரமாகவே ஆகி விடுகின்றன. அந்த நிலையில் அந்த நதி களுக்கு – இன்ன நதி என்று – அடையாளம் கிடையாது; எந்த தனித் தன்மையையும் உணராமல் அவை கடலோடு ஐஜக்கதியமாகின்றன. ஜீவராசிகளும் இவ்வாறே தங்களுடைய தோற்றத்தை உணர்வ இல்லை. அந்த அணு மாத்திரமாகவுள்ள சூட்சுமமான வஸ்து வாகிய ஆன்மாவாக நீ இருக்கிறாய்.
அவர் மேலும் தனது விளக்கங்களைத் தொடர்ந்து கூறுகை யில், ஒரு ஆலம் பழத்தைக் கொண்டு வருமாறு அவனிடம் கூறினார். அவனும் கொண்டு வந்தான். அதைப் பிளந்து பார்க்கச் சொன்னார். அவனும் அவ்வாறே செய்தான். ‘அதில் என்ன பார்க்கிறாய்?” என்று தந்தை கேட்டார்.
‘அணு போன்ற விதைகளைப் பார்க்கிறேன்! என்று அவன் கூறினான்.
‘அவற்றுள் ஒன்றை எடுத்துப் பிளந்து பார்.
விதையைப் பிளந்து பார்த்து விட்டு, ச்வேதகேது ‘இதில் நான் ஒன்றும் காணவில்லை! என்று கூறினான்.
தந்தை சொன்னார் : ‘ஜீவசக்தியான அந்த சூட்சும பொருளை உன்னால் பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட சூட்சுமமான பொருளிலிருந்து அந்தப் பெரிய ஆலமரம் உருவாகி நிற்கிறது. அந்த ஆலமரத்திற்குக் காரணமான, அறிவதற்குக் கடினமான, சூட்சுமமான பொருள் அந்த விதையினுள் இருக்கிறது. அந்த சூட்சுமமான பொருளே ஆன்மா. அதுவே நீயாக இருக்கிறாய்”.
இதையடுத்து ச்வேதகேதுவின் தந்தை அவனிடம் கொஞ்சம் உப்பைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கலக்கி, ஒருபுறமாக வைத்து விட்டு, அடுத்த நாள் காலையில் தன்னைப் பார்க்குமாறு கூறினார். ச்வேதகேதுவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் உப்பைப் போட்டு நன்றாகக் கலக்கி, ஒருபுறமாக வைத்து விட்டு உறங்கி னான். அடுத்த நாள் காலையில், தந்தை கூறியவாறே அவரை அணுகினான். அப்பொழுது அவர் ‘நீ நீரில் போட்டாயே, அந்த உப்பைச் கொண்டு வா என்று சொன்னார். அவன் திகைத்தான். இருந்தாலும், அந்த நீரை நன்றாகப் பார்த்தான். உப்பு கரைந்து விட்டிருந்தது.
திகைத்த அவனைப் பார்த்து, அவனுடைய தந்தை உத்தாலகர், அந்தப் பாத்திரத்தில் இருக்கும் நீரில், மேலாக எடுத்துக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்; எப்படி இருக்கிறது என்று சொல் என்று சொன்னார்.
அவனும் அவ்வாறே செய்து விட்டு ‘உப்பாக இருக்கிறது! என்று கூறினான்.
‘நடுவில் இருந்து கொஞ்சம் நீரை எடுத்துச் சாப்பிட்டுப் பார். எப்படி இருக்கிறது என்று சொல்.
‘உப்பாக இருக்கிறது.
இப்படி அவன் கூறிய பிறகு அவனுடைய தந்தை, ‘அந்த நீரைக் கொட்டி விட்டு இங்கே வா: என்றார். அவனும் அவ்வாறே செய்தான். அவனுடைய தந்தை ‘அந்த நீரில் உப்பை நீ காணவில்லை; ஆனால் அது அங்கே இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் அந்த நீர் உப்பாக உனக்குக் கரிக்கிறது. அதாவதுக் அந்த உப்பு இப்போது உன் கண்களுக்குத் தெரியா விட்டாலும், அது அந்த நீர் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதேபோலத்தான் இந்த உலகில் பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. அதை நாம் பார்க்கா விட்டாலும், அது இருக்கத்தான் செய்கிறது. அந்த சூட்சுமமான பொருள் எதுவோ, அதுவே நீயாக உள்ளாய் (தத் த்வம் அஸி).
உத்தாலகர், தன் மகனுக்கு மேலும் ஒரு உதாரணத்தைச் சொன்னார். தன்னுடைய சொந்த ஊராகிய கந்தார தேசத்திலிருந்து ஒரு மனிதனை, யாரோ கண்ணைக் கட்டிக் கொண்டு போய் ஜனநடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் விட்டு விடுகிறான். கண் கட்டப்பட்ட மனிதன், இழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நாற்திசைகளிலும் இரும்பித் இரும்பி நின்று ‘நன்றாகக் கண்ணைக் கட்டி விட்டானே; எந்தத் இசையில் போவது என்று தெரியவில்லையே; வந்த வழி எது என்று புரியவில்லையே: என்று கதறுகிறான்.
‘அப்போது வேறு யாரோ ஒருவன் வர, அவன் இவனுடைய கண் கட்டை மெதுவாக அவிழ்த்து விட்டு ‘கந்தார தேசம் இந்தத் இசையில் இருக்கிறது; அந்த வழியில் செல்வாயாக! என்று சொல் கிறான்.
அவன் அந்தத் இசையில் நடந்து, வழியில் ஒவ்வொரு இராமம் கிராமமாகச் செல்ல வேண்டிய இசையைக் கேட்டு அறிந்து கொண்டு, தன்னுடைய சொந்த ஊராகிய கந்தார தேசத்தைச் சென்று அடைகிறான்.
‘அவ்வாறே நல்ல ஆச்சார்யரை அடைந்த மனிதன், அவ னுக்கு புத்தி தெளிவு உண்டாகி, பிறகு விடுதலை அடைகிறான். அதன் பின்னர் அவன் பரம்பொருளுடன் ஒன்றாகி விடுகிறான். அணு மாத்திரமான அந்த சூட்சுமமான வஸ்து எதுவோ அதுவே நீயாக உள்ளாய் (தத் த்வம் அஸி).
இந்த உதாரணம் எதை விளக்குகிறது? மனிதன். தன்னுடைய கர்ம வினை என்கிற இருடர்களால் கவரப்பட்டு, சம்சாரம் என்ற காட்டில் விடப்படுகிறான். அவன் கண்ணைக் கட்டுகிற விஷயமோ, மோகம், ஆசை, பாசம். இது என்னுடைய வெற்றி என்கிற மகிழ்ச்சி, இது என்னுடைய தோல்வி என்கற சோகம், இது என்னுடைய பிள்ளை என்கிற பாசம், இவள் என்னுடைய மனைவி என்கிற ஆசை, இவர்கள் என் உறவினர்கள் என்ற பரிவு, இது என் செல்வம் என்கிற பெருமிதம்… என்று பல வகையான உணர்ச்சிகள் எல்லாம் பலவிதங்களில் அவனை அலைக்கழிக்க, தான் இறந்து விட்டால் என்ன நேர்ந்து விடுமோ என்ற கவலை அவன் மனதை அரிக்க, அவன் தனது உள்ளத் இல் கதறுகிறான். அந்த நிலையில் ஒரு நல்ல குரு அவனுக்குக் இட்டினால், அவர் அவனுக்குக் செய்கிற உபதேசத்தால், அவ னுடைய கண் கட்டாகிய மோகம் என்பது அவிழ்ந்து விழுகிறது. அப்போது அவன் தெளிவு பெறுகிறான். தான் செல்ல வேண்டிய வழி என்ன என்பதை உணர்கிறான். மேன்மையுறுகிறான். அதனால் தன் சொந்த இடமாகய ப்ரம்மத்துடன் ஐக்கியமாகிறான்.
இந்த உபதேசத்திற்குப் பிறகு சாந்தோக்ய உபநிஷத்தில் வருவது நாரதர் பற்றிய ஒரு நிகழ்ச்சி. ஸநத்குமாரரை நாரதர் அணுகி, தனக்கு உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார். ஸநத்குமாரர்தான் ஸ்கந்தன் (முருகன்) என்று சான்றுகள் உண்டு. ஸ்கந்தன் ஞானத்தின் உறைவிடம். ஆகையால் ஸநத்குமாரர் ஞானவான். (இது தவிர, வேறு சில புராணங்களில் ஸநத்குமாரர் அஹிம்சை, நற்குணம் ஆகியவற்றின் அம்சம் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சாஸ்வதமாக குழந்தை பருவத்தை உடையவர் என்றும் ஒரு புராணம் உண்டு. இப்படி அவரைப் பற்றி பல வர்ணனைகள் இருந்தாலும், அவர் சர்வ வல்லமை படைத்த இறைவனாகய நாராயணனிடமிருந்தே ஞானத்தைப் பெற்றவர் என்பதை, பொது வாக எல்லா சான்றுகளுமே வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட ஞானவானை அணுகி, நாரதர் உபதேசம் வேண்டி நின்றார்.)
ஸநத்குமாரர் ‘நீங்கள் ஏற்கெனவே என்ன அறிவீர்களோ அதைத் தெரிவியுங்கள். அதற்கு மேல் சொல்ல வேண்டியதை நான் சொல்கிறேன்! என்று கூறினார்.
நாரதர் தன்னடக்கத்தை மீறாமலே, விவரத்தைத் தெரிவிக்கும் வகையில் பதிலளித்தார். ‘எனக்கு ரிக் வேதம் தெரியும். யஜூர் வேதம், ஸாம வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றையும் அறிவேன். இதிகாச புராணங்களையும் அறிவேன். இலக்கணம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்கவாத சாஸ்திரம், நீதி சாஸ்திரம், சிகைஷ எனும் நூல், போர் முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை இவற்றை எல்லாம் கற்றுள்ளேன்’.
நாரதர் மேலும் தொடர்ந்தார் : ‘இவ்வளவு கற்றும் கூட நான் மந்திரங்களை மட்டும் அறிந்தவனாக இருக்கிறேனே தவிர, ஆன் மாவை அறிந்தவனாக மாறவில்லை. ஆன்மாவை அறிந்தவனே சோகத்தைக் கடந்து நிற்பான் என்று உங்களைப் போன்ற மகான் கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் சோகத்திற்கு உட்பட்ட வனாக இருக்கிறேன். சோகத்தை தாண்டும்படி என்னைச் செய் விக்க வேண்டும்.
இவ்வாறு கேட்டுக் கொண்ட நாரதரைப் பார்த்து ஸநத் குமாரர், ‘நீங்கள் எதையெல்லாம் கற்றுள்ளீர்களோ, அவையெல் லாம் வெறும் பெயர்கள்தான்! என்று சொன்னார்.
நாரதரும் அசாதாரணமானவரே; அவர் அறியாத சாஸ்திரம் இல்லை; அவர் ஸநத்குமாரர் முன் வைத்த பட்டியல் மட்டுமல் லாமல், கற்க வேண்டியது அனைத்தையுமே கற்றுணர்ந்தவர் நாரதர். அப்பேற்பட்ட சகல சாஸ்திர விற்பன்னர், முழுமையாக ஞானம் அடையவில்லை என்ற உணர்வோடு தனக்கு உபதேசம் செய்து அருளுமாறு ஒரு மகானை அணுகுகிறார். எவ்வளவுதான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், தகுந்த குருவின் உபதேசம் இல்லாமல் ஆன்ம ஞானம் பெற முடியாது என்பதை, இந்த நிகழ்ச் நமக்குக் காட்டுகிறது.
நேரடியாக இறைவன் அருள வேண்டும்; அல்லது தகுதியான குரு நமக்கு உபதேசம் செய்து, எது வழி என்பதை காட்ட வேண்டும். இந்த இரண்டு வழிகள் அல்லாமல், வேறு வழியில் ஆன்ம ஞானத்தைப் பெற்று விட முடியாது. இறைவனே நமக்கு அருளினால் நமக்குச் சிரத்தை உண்டாகும்; முனைப்பு உண்டாகும்; தவம் செய்வது போன்ற நிலையை அடைவோம்; ஞானத்தைத் தேடி அலைவோம். அற்ப சுகங்களே வாழ்க்கை என்ற எண்ணத்திலிருந்து விடுபடுவோம். இதற்கு நேரிடையாக இறை அருள் வேண்டும். அல்லது ஒரு நல்ல குருவின் உபதேசம் கிடைத்து, அதன் மூலம் நாம் ஊக்கம் பெற்று, பயன் அடைய வேண்டும்.
நாரதர் கற்றறிந்த சாஸ்திரங்களோ மிக முக்கியமானவை: ஆனால் அவற்றை எல்லாமே கூட வெறும் பெயர்கள் என்று ஸநத்குமாரர் சொல்லி விட்டார். ஆனால் இன்று நாமோ ஒரு சில புத்தகங்களைப் படித்து, ஒரு சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு, ஒரு சில பட்டங்களைப் பெற்று, ‘இனி நாம் அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை‘ என்று நினைக்கத் தொடங்கி விடுகிறோம். விஞ்ஞானம், கணிதம், சரித்திரம், சட்டம், மருத்துவம்… போன்ற இவை எல்லாம் வெறும் பெயர்களே அன்றி, உண்மையான ஞானமல்ல என்ற உணர்வு நமக்கு வர ஆரம்பித்தால் – வேறு எது இல்லை என்றாலும் – தன்னடக்க மாவது நம்மை வந்து சேரும்.
‘எறும்பும் தன் கையால் எண்சாண்!’ மிகவும் குறுகிய நமது அளவுகோலை வைத்துக் கொண்டு நம்மை நாமே அளந்து, அறி வாளி என்று இர்ப்பளித்துக் கொண்டு விடுகிறோம். கல்வி பெற்ற வன் என்று முடிவு செய்து விடுகிறோம். ‘கற்றது கைம்மண் அளவு; ‘கல்லாதது உலகளவு‘ எனும்போது – ‘கற்றது சட்டம் அல்லது சரித்திரம்; இன்னும் கற்க வேண்டியது மருத்துவம், தொழில்நுட்பம் என்று பல உள்ளன! – என்பதல்ல அர்த்தம், கல்லாதது உலகளவு எனும்போது, பரந்து விரிந்த ஞானத்தை நாம் பெறுவதைத்தான், கல்லாதது உலகளவு என்று குறிப்பிட்டிருக் கிறார்கள். அந்த ஞானம் என்ன? நான் யார் என்பதை உணர்வது தான் அது. அந்த உணர்வைப் பெறுகிறவன்தான் உயர்வைப் பெறுகிறான். உண்மையான மேன்மை அதுவே. அதைத்தான். உபநிஷதங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.