நாரதர் நிகழ்ச்சிக்கு வருவோம். நாரதர் கற்றது எல்லாம் வெறும் பெயர்களே என்று ஸநத்குமாரர் கூறிய பிறகு, நாரதர் “பெயரளவேயான இவற்றை எல்லாம் விட எது பெரிதோ அதை நீங்கள் எனக்கு உபதே9ிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். ஸநத்குமாரர் ‘வாக்கு, பெயரினும் பெரிது; மனதோ வாக்கினும் பெரிது; இர்மானம் மனஇனும் பெரிது; அதைக் காட்டிலும் சித்தம் பெரிது; தியானம் இத்தத்திலும் பெரிது; தியா னத்தைக் காட்டிலும் உணர்ந்து கொள்வது பெரிது…” – என்று சொல்லிக் கொண்டே போய் ஆன்ம உபதேசத்தை நாரதருக்குச் செய்தருளினார்.
இவ்வாறு ஆன்ம உபதேசத்தைச் செய்த ஸநத்குமாரரைப் பற்றி, ‘அவர், ஸ்கந்தர் எனக் கூறப்படுகிறார்! ஸ்கந்தர் எனக் கூறப்படுகிறார்!” – என்று வலியுறுத்திக் கூறுகிறது சாந்தோக்ய உபநிஷதம். இப்படி ஸ்கந்தர் என்று கருதப்படுகிற ஸநத்குமாரர், நாரதருக்குச் செய்த உபதேசத்தை அடுத்து, சாந்தோக்ய உபநிஷதம் கூறுந நிகழ்ச்சியிலிருந்து, ஒரு விஷயம் தெளிவாகும் : ஒரே தத்துவத்தை இருவரிடம் விளக்கினால், புரிந்து கொள்ளப்படுகிற அர்த்தம் வெவ்வேறாக விடக் கூடும். கேட்பவனின் தன்மையை யொட்டி கூறப்படுகிற தத்துவத்தின் பொருள் மாறிவிடலாம்.
‘ஆன்மாவைப் பாவம் இண்டாது; அது இழப் பருவம் அடை யாது; சாவற்றது; பசி, தாகமற்றது; இன்ப, துன்பமற்றது. அந்த ஆன்மாவை அறிந்தவன் மேன்மையுறுகிறான்’ என்று ப்ரஜாபதி கூறினார். இதை தேவர்கள், அசுரர்கள் என்ற இரு வகைப்பட்ட வர்களும் கேட்டார்கள். ஆன்மாவைத் தேடிக் காண்போம் என்று இருவருமே இர்மானித்துக் கொண்டார்கள். தேவர்களில் இந்திரனும், அசுரர்களில் விரோசனனும், ப்ரஜாபதியை அணுகினார்கள். (ப்ரம்ம தேவன்தான் இந்த இடத்தில் ப்ரஜாபதி என்று கூறப்படு கிறான் – என உபநிஷதத்தின் விளக்கங்கள் கூறுகின்றன. வேறு ஒரு சமயத்தில், பல ப்ரஜாபதிகளில் ஒருவரான காச்யபரையே இந்தச் சொல் குறிக்கும் என்றும் அந்த விளக்கங்கள் சொல்கின்றன. இங்கே குறிப்பிடப்படுவது ப்ரம்ம தேவன்.)
இந்திரனையும், விரோசனனையும் சில வருடங்கள் தவ மிருக்குமாறு ப்ரஜாபதி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்த பின்னர், ப்ரஜாபதி, ‘கண்ணில் காணும் புருஷன் எவனோ, அவனே ஆத்மா. அந்த ஆத்மா சாவற்றது, பயமற்றது. அதுதான் ப்ரம்மம்” என்று கூறினார்.
காண்பவனை ஆன்மா என்று குறிப்பிட்டார் ப்ரஜாபதி. ஆனால் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்ட இந்திரனும், விரோசனனும், காணப்படுகிற சரீரத்தையே ஆன்மா என்று தவ றாகப் புரிந்து கொண்டு விட்டார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் தங்களைப் பார்த்துக் கொள்ளுமாறு ப்ரஜாபதி சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அதுதான் ஆன்மா என்று ப்ரஜாபதி சொல்லி விட்டார். ‘சாவற்றது; இன்ப, துன்ப மற்றது; பசி, தாகமற்றது – என்றெல்லாம் ப்ரஜாபதி குறிப்பிட்டது இதைத்தானா?’ என்று அவர்கள் யோ9ிக்கவில்லை.
விரோசனனை பொறுத்தவரையில் அவன் ஒரு இீர்மானத்திற்கே வந்துவிட்டான். அலங்கரிக்கப்பட்ட தன்னுடைய உருவத்தை நீரில் பார்த்து, அதுவே ஆன்மா என்று அவன் முடிவு செய்து கொண்டான். ஆகையால் ‘சரீரத்தைத்தான். போற்ற வேண்டும். அதுதான் மேன்மைக்கு வழி என்று அவன் புரிந்து கொள்ள, அதுவே அசுரர்களின் வழியாக விட்டது. இதனால் உலக இன்பமே, அசுரர்களின் நம்பிக்கையாக விட்டது.
இந்திரனும் முதலில் இப்படி நினைத்தாலும், மற்ற தேவர் களிடம் சென்று தான் அறிந்ததைச் சொல்வதற்கு முன்பாக, அவன் இது பற்றி மீண்டும் யோசித்தபோது, அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘சரீரம் அலங்கரிக்கப்பட்ட போது, நீரில் காணப்பட்ட பிம்பமும் அலங்கரிக்கப்பட்டதாக இருந்தது. ஆகை யால், இந்தச் சரீரத்தில் ஒரு அங்கஹீனம் இருந்தால், பிம்பத்திலும் அது இருக்கும். தேஹமே இல்லாமல் நாசம் அடையும்போது, இதுவும் இல்லாமல் போகும். அப்படியிருக்க, இதை ஆன்மா என்று! எப்படி நினைத்துக் கொள்வது?! – இவ்வாறு சிந்தனை செய்த இந்திரன், மீண்டும் ப்ரஜாபதியை அணுகி, தன் சந்தேகத்தை விவரித்தான்.
அவர், அவனை மேலும் தவம் புரியச் சொல்ல, அவனும் அவ்வாறே செய்தான். ‘கனவில் எவன் சஞ்சரிக்கிறானோ – அவனே ஆத்மா! என்று ப்ரஜாபதி இம்முறை கூறினார். இந்திரன் இருப்தியுடன் விடைபெற்றான். ஆனால் மீண்டும் அவனுக்குச் சந்தேகம் வந்தது. ‘சரீரத்தில் உள்ள குறைகளினால் கனவுக் காட்சி குறைவு அடையாவிட்டாலும், அந்தக் காட்சியிலும் சரீரம் பல துன்பங்களுக்கு உள்ளாவது போலத்தான் தெரிகிறது. ஆகையால், இது இன்பமும் இல்லை, ஆன்மாவும் இல்லை‘ என்று அவன் இந்தித்து, மீண்டும் ப்ரஜாபதியை அணுகினான்.
ப்ரஜாபதி அவனை மேலும் தவம் புரியச் செய்து, ‘கனவை யும் தாண்டிய உறக்கத்தில் (‘ஸுஷுப்தி‘ என்று இந்த நிலை விளக்கப்படுகிறது) எவன் பரம சாந்தனாக உறங்குகிறானோ அவனே ஆன்மா என்றார். முன்பு போலவே முதலில் திருப்தி அடைந்த இந்திரன், பின்னால் இதிலும் சந்தேகத்தினால் வாட்டப்பட்டான்.
‘அந்த நிலையில், தன்னையும் அந்த மனிதன் அறிவதில்லை. அழிவடைந்து விட்டவன்போல் இடக்கிறான். ஆகையால், அந்த நிலையில் இருப்பவன் அல்ல ஆன்மா என்று இர்மானித்து ப்ரஜா பதியை அணு, மீண்டும் உபதேசத்தைக் கோரினான். அப்போது ப்ரஜாபதி தனது இறுதி உபதேசத்தைச் செய்தார். இப்படி படிப்படி யாக உபதேசத்தைச் செய்யும் முறையை ஏற்கெனவே பார்த்தோம். இங்கும் அவ்வாறே இந்திரன் உபதேசிக்கப் பெறுகிறான். இந்திரன் பெற்ற ஆன்மா பற்றிய உபதேசத்துடன் சாந்தோக்ய உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
முக்கியமான உபநிஷதங்களின் வரிசையில் நாம் இறுதியாக பார்க்கப் போவது, ப்ருஹதாரண்யக உபநிஷதம். மற்ற எல்லா உபநிஷதங்களைக் காட்டிலும் இது பெரியது. ப்ருஹத் என்றாலே பெரியது என்றுதான் அர்த்தம். இதனுடைய சாந்தி மந்த்ரம், ஈசா வாஸ்ய உபநிஷதத்திற்கும் சாந்தி மந்த்ரமாக அமைந்திருப்பது; நம்மால் 29-ஆம் அத்தியாயத்தில் அது பார்க்கப்பட்டது.
இதன் தொடக்கமாக வருகிற மந்த்ரத்தில், கீழ்க்கண்ட பகுதி யும் இருக்கிறது.
அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
தோற்றத்தில் இருந்து என்னை, மெய்யிற்கு அழைத்துச் செல்;
இருளில் இருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்; அழி விலிருந்து என்னை அழியாமைக்கு அழைத்துச் செல்,
இப்போதும் கூட பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படு கிறது இந்த மந்த்ரம். சில சந்திப்புகளையும், சில விவாதங்களை யும் விவரிக்கிற இந்த உபநிஷதம், அவற்றின் மூலம் ஆன்ம தத் துவத்தை வலியுறுத்துவதோடு மட்டுமல்ல, வேறொரு உண்மை யையும் எடுத்துக்காட்டுகிறது. உபதேசம் செய்கிறவன், ப்ராமண னாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; விவரம் அறிந்தவன் எவனோ, அவன் உபதேசம் செய்ய அருகதை உள்ளவன். இந்த உபநிஷதத்தில் காணப்படுகிற சில நிகழ்ச்சிகள் மூலம் இது தெளிவாகிறது.
கார்க்யர் என்பவர், வேதங்களின் கருத்துக்களை விளக்கிச் சொல்வதில் இிறமை பெற்று, அதனால் பெருமிதம் கொண்டவர். அவர் ஒருமுறை காசி ராஜாவாகிய அஜாதசத்ருவை அணு, ப்ரம்ம ஞானத்தைப் பற்றி அவனுக்கு உபதேப்பதாகக் கூறினார். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் விளைவாக, கார்க்யர் அறிந்ததில் முழுமை இல்லை என்பது தெளிவாகவே, அஜாதசத்ருவிடம் உபதேசம் பெற்றுச் சென்றார் கார்க்யர். உப தேசத்தவர் க்ஷத்ரியன்; உபதேசம் பெற்றவர் பிராமணன்.
பெண்களுக்கும் கூட ஞானப் பாதை தடுக்கப்படவில்லை என்பதும், அவர்களும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை பெற் நிருந்தார்கள் என்பதும் – மற்றொரு நிகழ்ச்சியில் தெரிகிறது. யாக்ஞவல்கியர் ஒரு மஹான். அவர் தன்னுடைய இல்லறத்தைத் துறந்து, ஸந்யாசியாக விரும்பினார். தனது முடிவை தன்னுடைய இரண்டு மனைவிகளிடமும் தெரிவித்தார். அவர்களில் இளைய வளாகய மைத்ரேயி, ”இந்த பூமி செல்வம் நிறைந்தது. அதையே நான் அடைந்து விட்டாலும் கூட, அதன் மூலம் எனக்குச் சாகா நிலை கட்டுமா?! என்று கேட்டாள்.
யாக்ஞவல்தயர், கிட்டாது; உலக இன்பங்களை அனுபவிப் பவர்களின் வாழ்க்கை எத்தகையதோ, அத்தகையதாகவே உன் வாழ்க்கை அமையும். செல்வத்தின் மூலம் சாகா நிலை என்ற அம்ருதத்துவத்தை அடைந்துவிட முடியாது” என்று பதில் கூறினார்.
“அப்படியானால், நீங்கள் விட்டுச் செல்வதை வைத்துக் கொண்டு, நான் என்ன செய்யப் போகிறேன்? நீங்கள் சாகா நிலைக்கு இட்டுச் செல்லும் வழியை அடையத்தான், இதையெல் லாம் உதறி விட்டுச் செல்கிறீர்கள், அந்த வழி எதுவோ, அதை எனக்கும் சொல்லுங்கள்!” என்று மைத்ரேயி கேட்டுக் கொண்டாள்.
நீ பேசுவது எனக்குத் இருப்தியைத் தருகிறது. நான் சொல் வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்! என்று கூறி, அவர் தன் னுடைய விளக்கத்தைத் தொடங்கினார்.
ஒரு கணவன், தன்னுடைய மனைவியிடம் அன்பு காட்டு வது, அவள் பொருட்டல்ல. இப்படிச் செலுத்தப்படுகிற அன்பு, ஆத்மாவின் பொருட்டானது. ஆத்மாவின் பொருட்டே, மனைவி, மக்கள், செல்வம் என்று எல்லாமே அன்பிற்கும், அக்கறைக்கும் உரியவை ஆகின்றன. அந்த ஆன்மா அறியப்பட வேண்டும். அதை அறிந்தால், எல்லாவற்றையும் அறிந்ததாக விடும்” என்று யாக்ஞவல்கியர் சொன்னார்.
இங்கே மனைவியிடம் செலுத்துகிற அன்பும், பிள்ளைகளிடம் செலுத்தப்படுகிற அன்பும் – எல்லாமே ஆத்மாவின் பொருட்டுத் தான் என்று கூறப்படுவதற்கு விரிவுரைகள் சொல்கிற விளக்கம் இது : ஒருவரிடம் அன்பு காட்டும்போது, அதன் மூலம் நாம் இருப்தி அடைகிறோம்; ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது. தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்கிற காரணத்தை நாம் அறியா விட்டா லும், அந்தக் காரணம்தான் நம்மை அன்பு செலுத்தத் தூண்டு இறது. ஆகையால்தான், “ஆத்மாவின் பொருட்டே எதனிடமும் நாம் அன்பு செலுத்துகிறோம்” – என்று யாக்ஞவல்இயர் விளக்குகிறார்.
இப்படி அன்பு செலுத்தத் தூண்டுகிற ஆத்மா, அன்பு நிறைந்த தாகத்தானே இருக்க முடியும்? அதை அறிந்து கொண்டு விட்டால் எல்லோரிடமும் நமக்குச் சமபார்வை தோன்றும். தன்னுடையது, தனக்குச் சொந்தம் – என்ற உணர்வுகள் அகன்று, அனைத்தையும் சமமாகப் பார்த்து அன்பு செலுத்துவோம். ஏனென்றால், அன்பு காட்டப்படும் பொருளினால், உண்டாவதல்ல அன்பு – என்பதை யும், ஆத்மாவின் காரணமாக உண்டாவதே அன்பு என்பதையும் அந்த நிலையில் நாம் உணர்ந்து கொள்வோம். யாக்ஞவல்இயர் கூறியதற்கு இந்த விளக்கத்தைப் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.