ஒரு பெண்ணின் பாண்டித்யம்!

ப்ரம்ம ஞானத்தை நாடிய தனது மனைவி மைத்ரேயிக்கு மேலும்சில விளக்கங்களை அளித்து, தன்னிலிருந்தோ மற்ற எதனிடமிருந்தோ, பரம்பொருளைப்பிரித்துப்பார்க்க முடியாது என்று எடுத்துக்கூறினார்யாக்ஞவல்கியர்‌. 

சங்கு ஒலிக்கிறதுஅதிலிருந்து புறப்படும்ஒலியைத்தனியே பிரித்து, பிடித்து விட முடியாது; பேரிகை முழங்குகிறதுஅதிலிருந்து புறப்படும்சப்தத்தைத்தனியே பிரித்து, பிடித்து விட முடியாது; வீணையின்நாதத்தை அடைய, அந்த ஒலியை மட்டும்தனியே பிரித்து, பிடித்து விட முடியாது. சங்கையும்அதை ஊதுகிறவனையும்‌, பேரிகையையும்அதை முழங்கு கிறவனையும்‌, வீிணையையும்அதை மீட்டுகிறவனையும்அடைந்தால்தான்அந்த ஒலியை அடைய முடியும்‌. அது போலவே இதுவும்‌! என்று கூறினார்யாக்ஞவல்‌8யர்‌. 

எல்லாவற்றிலும்உறைவது பரம்பொருளே என்பதால்‌, அதை தனியே பிரித்துப்பார்க்கிற முயற்சியை விட்டுவிட்டு, தன்னிலே உறைவது ஆன்மாஅதாவது பரம்பொருள்என்பதை உணர்ந்து, அதை நாட வேண்டும்‌. 

இங்கே அத்வைத சித்தாந்தம்பேசுபவர்களுக்கு வலு ஊட்டு கிற வகையில்‌, யாக்ஞவல்கியர்ஒரு விளக்கம்தருகிறார்‌. இரண்டு அல்லஎன்பது அத்வைதம்‌; அதாவது, தான்வேறு, பரம்பொருள்வேறு அல்ல. யாக்ஞுவல்இயர்‌, மைத்ரேயியிடம்‌ “எந்த நிலையில்‌, இரண்டானவை என்கிற எண்ணம்உண்டோஅங்கேதான்ஒருவன்‌, வேறொன்றைப்பார்க்கிறான்‌, நுகர்கிறான்‌, உணர்கிறான்‌. ஆனால்‌ ‘ஆன்மாவே எல்லாம்‌” என்கிற நிலையில்‌, எதை நுகர்வது, எதைப்பார்ப்பது?” என்று எடுத்துச்சொல்கிறார்‌. அதாவதுதான்வேறு, பரம்பொருள்வேறு என்ற இரண்டான நிலை இல்லை! என்று ஒருவன்உணர வேண்டும்என அவர்வற்புறுத்துகிறார்‌.

அனைத்தும்ஆன்மாவே. அதுவே அமிர்தம்‌. அதுவே ப்ரம்மம்‌” என்று கூறிய யாக்ஞவல்கியர்‌,

அயமாத்மா ப்ரம்ம

இவ்வாத்மாவே ப்ரம்மம்‌.

என்று கூறி தனது விளக்கத்தை முடிக்கிறார்‌. ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில்‌, அடுத்து ஜனக மன்னர்சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி வர்ணிக்கப்படுகிறது. ஜனக மன்னர்ஒரு யாகம்நடத்தினார்‌. வேறு தேசங்களிலிருந்தும்கூட, கற்றறிந்த ப்ராமணர்கள்அந்த யாகத்திற்கு வந்தனர்‌. இத்தனை பேரில்‌, யார்மிகவும்கற்று, முற்றும்உணர்ந்தவர்என்பதை அறிய வேண்டும்என்று ஜனக மன்னர்நினைத்தார்‌. அதற்காக அவர்ஒரு வழி யைக்கையாண்டார்‌. ஓரிடத்தில்ஆயிரம்பசுக்கள்கட்டப்பட்டன; ஒவ்வொரு பசுவின்கொம்புகளிலும்‌, குறிப்பிட்ட அளவு தங்கம்கட்டப்பட்டது.

கூடியிருந்த, வேதம்அறிந்த, ப்ராமணர்களைப்பார்த்து ஜனகர்‌, ‘உங்களுக்குள்எவர்பெரிதும்அறிந்தவரோ, அவர்இப்பசுக்களை ஓட்டிச்செல்லலாம்‌! என்று கூறினார்‌.

கூடியிருந்தவர்களில்யாருமே அரசனின்அறிவிப்பின்படி பசுக்களை ஓட்டிச்செல்ல முன்வரவில்லை. அப்போது, யாக்ஞு வல்இயர்தன்சிஷ்யன்ஒருவனைப்பார்த்துஅன்புக்குரியவனே! இப்பசுக்களை ஓட்டிச்செல்வாயாக!” என்று கூறினார்‌.

அந்தச்சீடனும்பசுக்களை ஓட்டிச்செல்லத்தொடங்கினான்‌.

இவர்எப்படி தன்னை சிறந்தவராகக்கருதிக்கொள்ளலாம்‌? என்று பலர்கோபமுற்றனர்‌. 

யாகத்தில்முக்கிய பங்கேற்று இருந்த ஆச்வலர்‌, நமக்குள்ளே நீங்கள்தான்ப்ரம்ம நிஷ்டரோர (ப்ரம்ம வித்தை அறிந்த கற்ற வரோ?)” என்று கேட்டார்‌. 

யாக்ஞவல்கியர்‌ ‘ஆச்வலரே! நாம்அனைவருமே பசுக்களை விரும்புகிறவர்கள்தான்‌. ஆனால்சிறந்தவனை வணங்கச்கடமைப்பட்டவர்களாகிறோம்‌’ என்று பதில்அளித்தார்‌. 

இதையடுத்து, அங்கு கூடியிருந்தவர்களில்சிலர்‌, ஒருவர்பின்‌. ஒருவராக கேள்விகள்கேட்க, அவற்றுக்கு யாக்ஞவல்‌&யர்பதில்அளிக்கத்தொடங்கினார்‌. 

ஆச்வலர்‌, உஷஸ்தர்‌, கஹோலர்‌, உத்தாலக ஆருணி…. என்று பலர்கேள்விகள்கேட்க, யாக்ஞவல்கியர்அவற்றிற்கெல்லாம்உரிய விளக்கங்களை அளிக்க, இறுதியில்கார்க்கி என்ற பெண்மணி எழுந்து, ‘நான்இவரை இரண்டு கேள்விகள்கேட்க விரும்பு கிறேன்‌. அக்கேள்விகளுக்கு இவர்விடை அளித்து விட்டால்‌, அதன்பின்இவர்வெல்லப்பட முடியாதவர்என்பதை ஒப்புக்கொள்ளலாம்‌! என்று கூறினாள்‌. 

கற்றறிந்தவர்கள்கூடிய சபையில்‌, கற்றறிந்த பல ப்ராமணர்களுக்குச்சமமாக அமர்ந்து, ஒரு பெண்மணியும்‌ ‘ப்ரம்மஞானம்பற்றிய தர்க்கம்‌! என்திற உயர்ந்த விவாதத்தில்பங்கேற்கலாம்என்ற வழிமுறை, வேத காலத்திலேயே இருந்திருக்கிறது

இந்த நிகழ்ச்சி பற்றி விவரிக்கிற ப்ருஹதாரண்யக உப நிஷதம்‌, இது ஏதோ விதி விலக்காக நடந்த நிகழ்ச்சி என்று கூற வில்லை. அந்த சபையில்நடந்த விவாதத்தில்கார்க்கி என்ற பெண்மணி சர்வ சாதாரணமாகப்பங்கேற்று, மிகவும்கற்றறிந்த யாக்ஞுவல்கியரை, சோதனைக்கு உள்ளாக்குகிற எண்ணத்துடன்கேள்விகள்கேட்டாள்‌. 

பெண்கள்அடக்கி வைக்கப்பட்டனர்‌; ஆண்களுக்குச்சம மாக அவர்களுக்கு ஒரு உரிமையும்கிடையாது…’ என்றெல்லாம்அக்காலத்தைப்பற்றி இப்போது விமர்சிக்கப்படுகிறது. ஆனால்உண்மை என்ன? வேத காலத்திலேயே, ஒரு மாபெரும்சபை யில்‌, ஒரு மாபெரும்தத்துவம்பற்றி, ஒரு மாபெரும்பண்டிதர்கூட்டத்தில்‌, ஒரு மாபெரும்ப்ரம்மஞானியை கேள்வி கேட்டு திணற அடிப்பதற்கு முயற்சிக்கும்உரிமை, பெண்ணிற்கு இருந்திருக்கிறது

அதுவும்‌, அடக்க ஒடுக்கத்தோடு பேச வேண்டிய நிர்பந்தம்கூட அந்தப்பெண்மணிக்கு இருக்கவில்லை. கேள்வியைக்கேட்பதற்கு முன்பாக அவள்மிக்க பெருமிதத்துடன்பேசுகிறாள்‌. 

யாக்ஞுவல்கியரே! காசி ராஜனின்வீர மகனோ அல்லது, விதேஹ தேசத்து வீர புத்திரனோ, தளர்ந்த வில்லை நிமிர்த்தி, நாணேற்றி, எதிரிகளை மிகவும்வருத்தக்கூடிய பாணங்களை கையில்எடுத்துக்கொண்டு, எதிரியின்முன்எப்படி நிற்பார்களோஅப்படி உமக்கு முன்னால்நான்என்கேள்விகளுடன்நிற்‌  . இறேன்‌. பதில்சொல்லும்‌…”

 – இப்படி ஆரம்பித்தாள்கார்க்கி. இதுவா சம உரிமை இல்லை என்பதற்கு அத்தாட்சி? இதுவா பெண்கள்ஒடுக்கப்பட்டனர்என்பதற்கு உதாரணம்‌? சரி, கார்க்கியின்கேள்விக்கு வருவோம்‌. 

எது வானத்திற்குக்மேலும்‌, பூமிக்குக்கீழேயும்‌, வானத்திற்கும்பூமிக்கும்இடையிலும்கூட உள்ளதாகவும்‌ – இறந்த காலத்திலும்‌, நிகழ்காலத்திலும்‌, எதிர்காலத்திலும்உள்ளதாகவும்‌ – கூறப்படுவது எதுவோ, அது எதில்குறுக்கும்நெடுக்குமாகக்கோர்க்கப்பட்டுள்ளது?’ என்று கேட்டாள்கார்க்கி

யாக்ஞவல்கியர்‌ ‘வானவெளியில்‌ (52806) அது கோர்க்கப்பட்டுள்ளது! என்று பதில்அளித்தார்‌. 

மேலும்அவர்சொன்னார்‌ : ‘ப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்அதை அக்ஷரம்எனக்கூறுகிறார்கள்‌. (அக்ஷரம்‌ – என்றால்அழிவற்றது) அது பார்வைக்கு உட்பட்டதுமல்லஅப்பாற்பட்டதுமல்ல; அது குட்டையானதுமல்லஉயரமானதுமல்ல; நெருப்பு போல இறந்ததும்அல்லதண்ணீரைப்போல ஈரமானதுமல்ல; உள்ளும்புறமும்அதற்கில்லை; அது எதையும்உண்பதுமில்லை, எதனாலும்உண்ணப்படுவதுமில்லை.

 இந்த அழிவற்றதன்கட்டளையினால்தான்சூரியனும்‌, சந்திரனும்தங்களுடைய இடங்களில்நிற்கிறார்கள்‌; இந்த அழிவற்றதன்கட்டளையினால்தான்வானமும்‌, பூமியும்தங்கள்‌: தங்கள்நிலைகளில்உள்ளன; இந்த அக்ஷரத்தை (அழிவற்றதன்‌) அறிந்து கொள்ளாமலேயே ஒருவன்‌, எத்தனை ஹோமங்கள்செய்தாலும்‌, எத்தனை யாகங்கள்செய்தாலும்‌, அவை எல்லாமே ஒரு முடிவு உள்ளவையே. இந்த அக்ஷரத்தை அறியாமலே, ஒருவன்இவ்வுலகை விட்டுச்சென்றால்‌, அவன்‌ ‘க்ருபணன்‌’ ஆகிறான்‌. இதை அறிந்து கொண்டு ஒருவன்இவ்வுலகை விட்டுச்சென்றால்‌, அவன்ப்ரம்மஞானம்எய்தியவனாகக்கருதப்படு கிறான்‌”. 

(மேலே குறிப்பிடப்பட்ட யாக்ஞவல்கயரின்விளக்கத்தில்வருகிறக்ருபணன்‌’ என்ற சொல்லிற்குப்பரிதாபத்திற்கு உரிய வன்என்று பொருள்‌; தனது மனிதப்பிறவியை உரிய முறையில்பயன்படுத்திக்கொள்ளாமல்வீணாக்கியதால்‌ – அவன்க்ரு பணன்‌, பரிதாபத்திற்கு உரியவன்‌.) 

யாக்ஞவல்கியர்‌, அக்ஷரம்என்பதற்கு அளித்த விளக்கம்‌ – பரம்பொருளை பற்றிய பேச்சு. நிர்குணம்‌ – அதாவது எந்த வர்ணனைக்கும்உட்படாத, எந்த ஒரு அளவோ, நிறமோ, உருவமோ கூறப்பட முடியாதது நிர்குணம்‌; அதாவது வர்ணிக்கக்கூடிய குணம்எதுவும்இல்லாதது. இதுவே பரம்பொருளின்தன்மை. (அதுவே பல உருவங்களில்நாம்வழிபடும்போது, நமக்குச்சற்குணமாகக்காட்சி அளிக்கிறது. அதாவது நல்ல தன்மையுடைய உருவமாகிறது.)] 

அழிவற்ற அந்தப்பரம்பொருளில்தான்எல்லாமே கோர்க்கப்பட்டிருக்கின்றனஎன்பது யாக்ஞவல்கியர்அளித்த பதிலின்சுருக்கம்‌. 

யாக்ஞவல்கியர்அளித்த விளக்கத்தை, நாம்ஒரளவு பார்த்து விட்டதால்‌, அந்தத்தத்துவத்தையே முழுமையாகப்புரிந்து கொண்டு விட்டோம்என்று நினைப்பதற்கு இடமில்லை. மின்சாரம்எப்படி இயங்குகிறது என்று ஒரு விஞ்ஞானி அளித்துள்ள விளக்கத்தைப்படித்தால்‌, ‘சரி; ஸ்விட்சைப்போட்டால்விளக்கு எரியும்‌” என்று பலரும்புரிந்து கொள்வோம்‌; சிலர்இதற்குக்கொஞ்சம்மேலே போய்‌, ஒயர்வழியாக வருகிற மின்சாரம்ஸ்விட்சில்தடைப்பட்டு, அது போடப்படுகிறபோது, பல்பிற்குப்போலிறது என்று புரிந்து கொள்வோம்‌ – இப்படி அவரவர்தகுதிக்கேற்ப ஓரளவு புரியும்‌. விஞ்ஞானி அறிந்ததை, அவர்சொல்வதின்ஆழத்தைப்புரிந்து கொள்ள, அவர்அடைந்த பயிற்சி நமக்கும்தேவைப்படும்‌. இதே போலத்தான்இந்தத்தொடரில்வருகிற விளக்கங்களை வாசகர்கள்அணுக வேண்டும்‌. தத்துவத்இன்ஆழத்தை இது விளக்கி விடாது; தத்துவத்தின்அறிமுகத்தை இது செய்து வைக்கும்‌. யாக்ஞவல்கியர்‌, அக்ஷரம்பற்றிக்கூறிய விளக்கத்துடன்நாம்அறிமுகம்பெற்றோம்‌; மேலே செல்வோம்‌. 

கார்க்கி, யாக்ஞவல்கியரின்விளக்கத்தைக்கேட்டு அவரை நமஸ்கரித்து, ”இவரை வெல்ல எவரும்இல்லைஎன்று கூற, யாக்ஞவல்கியர்‌ ”கற்றறிந்தவர்களே! என்னை யார்கேள்வி கேட்க விரும்பினாலும்‌, கேட்கலாம்‌. எல்லோருமே கேட்டாலும்கேட்க லாம்‌. அல்லது உங்களில்யார்விருப்பம்தெரிவிக்கிறீர்களோ அவர்களை நான்சில கேள்விகள்கேட்கிறேன்‌. உங்கள்அனை வரிடமும்நான்கேள்வி கேட்க வேண்டும்என்றாலும்கேட்இறேன்‌!’ என்று சபையோரைப்பார்த்துச்சொன்னார்‌.  அவரைக்‌ கேள்வி கேட்கவோ, அவரால்‌ கேள்வி கேட்கப்‌ படவோ எவரும்‌ முன்‌ வரவில்லை – என்று கூறி இந்த நிகழ்ச்சியை முடிக்கிறது, ப்ருஹதாரண்யக உபநிஷதம்‌. கொஞ்சம்‌ மேலே போய்‌, ஒயர்‌ வழியாக வருகிற மின்சாரம்‌ ஸ்விட்சில்‌ தடைப்பட்டு, அது போடப்படுகிறபோது, பல்பிற்குப்‌ போலிறது