அடுத்து ஜனக மன்னரின் சபைக்குச் சென்ற யாக்ஞவல்கியர், அங்கே ஜனகருக்கு உபதேசம் செய்த நிகழ்ச்சியை ப்ருஹதாரண் யக உபநிஷதம் விவரிக்கிறது. ஜனகர் எழுப்பிய சந்தேகங் களுக்கு விடைகள் அளிக்கையில், இரு வகையான மனிதர்களைப் பற்றி யாக்ஞவல்கியர் பேசுகிறார். ஆசைகளை விட முடியாமல் வாழ்கிறவன், ஆசைகளை விட்டொழித்தவன் – ஆகிய இரு வகையான மனிதர்கள் என்ன நிலைகளை அடைகிறார்கள் என் பதை யாக்ஞவல்கியர் ஜனகருக்கு விளக்குகிறார்.
ஆசைகளை விட முடியாமல் வாழ்கிறவன், தான் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு, மரணத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பிறப்பை எய்துகிறான். நல்லதையே செய்தவன் நல்ல பிறப்பு எய்துகிறான்.
ஆசைகளை விட்டவனைப் பாவம் தீண்டுவதில்லை. அவன் எல்லாப் பாவங்களையும் தாண்டி நிற்கிறான். பாவமற்றவனாக வும், அழுக்கற்றவனாகவும், சந்தேகமற்றவனாகவும் அவன் இருக் கிறான். அவன் ஆன்மாவை உணர்ந்தவனாகி, தண்ணீரோடு தண் ணீர் கலப்பது போல, ப்ரம்மத்தோடு கலந்து விடுகிறான். சரீரத்துடன் வாழ்கிறபோதே கூட அவன் ப்ரம்மத்தோடு, ப்ரம்மமாகவே இருந்து கொண்டிருக்கிறான். ஆகையால், சரீரம் விழுந்த பிறகு, அவன் ப்ரம்மத்துடனே ஐக்கியமாகி விடுகிறான். அவனுக்கு மறு பிறப்பு இல்லை. இந்தக் கருத்தை யாக்ஞவல்கியர் விவரமாகக்கூறுவதை வர்ணிக்கிற ப்ருஹதாரண்யக உபநிஷதம், அடுத்து தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறது.
ஒரே விஷயத்தை வெவ்வேறு நபர்களிடம் கூறினாலும் – கேட்பவர்களின் தன்மை, நிலைமை, தேவை ஆகியவற்றையொட்டி கூறப்படுகிற விஷயத்திற்கு அவரவர்களுக்கு வெவ்வேறு அர்த்தம் இட்டுகறது. ப்ரஜைகளை சிருஷ்டி செய்வதற்காக ப்ரம்மனால் படைக்கப்பட்ட ப்ரஜாபதிகள் பலர். எல்லாப் படைப்புகளுக்கும் அவரே காரணம் என்பதால், ப்ரம்ம தேவனும் கூட ப்ரஜாபதி என்று அழைக்கப்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் ப்ரஜாபதி என்பது ப்ரம்ம தேவனைத்தான் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என்ற மூன்று வகையினரும் ப்ரஜஜாபதியை அணுகி – அதாவது தங்களுடைய தகப்பனை அணுகி – தங்களுக்கு உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண் டனர். தேவர்களிடம் ப்ரஜாபதி, ‘த‘ என்று கூறி, ‘இதைப் புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்.
தேவர்கள் ‘புரிந்து கொண்டோம் – த – தாம்யத – அடக்கமாக இருங்கள் – என்று சொல்இறீர்கள்’ என்றனர்.
சரிதான். நீங்கள் புரிந்து கொண்டீர்கள்! என்று ப்ரஜாபதி கூறினார். அடுத்து மனிதர்கள் அவரை அணுக, ப்ரஜாபதி அவர் களுக்கும் ‘த! என்று சொல்லி, ‘புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்.
மனிதர்கள் *புரிந்து கொண்டோம் – த – தத்த – தானம் செய்யுங்கள் – என்று சொல்கிறீர்கள்: என்று சொன்னார்கள்.
ப்ரஜாபதி ‘சரிதான். நீங்கள் புரிந்து கொண்டீர்கள்! என்று சொன்னார்.
அடுத்து அசுரர்கள் அவரை அணுகினார்கள். ப்ரஜாபதி அவர் களுக்கும் ‘த‘ என்று கூறி, ‘புரிந்து கொண்டீர்களா?! என்று கேட்டார்.
அசுரர்கள், புரிந்து கொண்டோம். த – தயத்வம் – தயை உடையவர்களாக இருங்கள் – என்று சொல்கிறீர்கள்! என்றனர்.
ப்ரஜாபதி ‘சரிதான். நீங்கள் புரிந்து கொண்டீர்கள்! என்று சொன்னார்.
உபதேசிக்கப்பட்டது ‘த! – என்ற ஒரு அக்ஷரம்தான். இதற்குத் தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் அவரவர்களுடைய இயல்புகளுக்கும், குறைகளுக்கும் ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டனர்.
தேவர்கள் அடக்கத்தில் குறைந்தவர்கள். ஆகையால், அவர்கள் ப்ரஜாபதி தங்களிடம் ‘த! என்று சொல்லியபோது, ‘தாம்யத – அடக்கமாக இருங்கள்” – என்பதே அதற்கு அர்த்தம் என்று புரிந்து கொண்டார்கள்.
மனிதர்கள் தாராள மனம் இல்லாமல், சுயநலம் உடையவர் களாக இருக்கின்ற குறையை உடையவர்கள். ஆகையால் அவர் கள் ப்ரஜாபதி தங்களிடம் ‘த‘ என்று சொல்லிய போது, ‘தத்த – தானம் செய்யுங்கள்! என்று கூறியதாகப் புரிந்து கொண்டார்கள்.
அசுரர்களோ, கருணையற்றவர்கள். மற்றவர்களை ஹிம்சிக்கும் குறையை உடையவர்கள். ஆகையால் அவர்கள் ப்ரஜாபதி தங்க ளிடம் ‘த‘ என்று கூறியபோது, ‘தயத்வம் – தயை உடையவர்களாக இருங்கள் என்று சொன்னதாக எடுத்துக் கொண்டார்கள்.
சொல்லப்பட்ட விஷயம் ஒன்றுதான் என்றாலும், அந்தக் குறிப் பிலிருந்து – அவரவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்தவர்களாக இருந்ததால் – அவரவர் நிலைக்கு ஏற்ப அர்த்தம் புரிந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றிய விளக்கங்களில் ஒரு விவரம் தரப் படுகிறது. : மனிதர்களிடையே கூட எல்லா குணங்களும் பொருந்தி இருந்தும், அடக்கமின்மை என்ற குறையை உடைய வர்கள்; பல நற்குணங்கள் இருந்தாலும், கருமித்தனம் என்ற குறையை உடையவர்கள்; பல சக்திகள் பெற்றிருந்தாலும், பிறரை ஹிம்சிக்கும் குறையை உடையவர்கள் – என்று வெவ்வேறு வகையானவர்கள் உண்டு. இப்படி மனிதர்கள் முறையே தேவ குணம், மனித குணம், அசுர குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்,
ஆகையால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும் ப்ரஜாபதி கூறிய அறிவுரையை எல்லா மனிதர்களுமே புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஏனென்றால் இது மனித இனத் இற்கே கூட பொருந்துகிற அறிவுரை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிவுறுத்தப்படுவது அடக்கம், தானம், தயை – என்ற மூன்று நற்குணங்கள். இவ்வாறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இது ஆதிசங்கரர் அளித்துள்ள விரிவுரையை ஒட்டிய விளக்கம்.
இந்த உபநிஷதத்தின் இறுதிப் பகுதியில் ஒரு மந்த்ரம் வரு இறது. ‘நோயினால் பீடிக்கப்பட்டு, அதன் காரணமாக வருந்து வது கூட, உண்மையிலேயே ஒரு பெரும் தவமாகும் – என்று எந்த மனிதன் அறிவறானோ, அவன் உயர்ந்த உலகை அடை கிறான்! என்று இந்த மந்த்ரம் சொல்கிறது.
பல மகான்கள் செய்த தவங்கள் பற்றிய வரலாறுகளை புரா ணங்களிலும், இதிஹாசங்களிலும் படிக்கிறோம். அவர்கள் உடலை வருத்திக் கொண்டார்கள். எதற்காக? இந்தச் சரீரத்தின் மீது இருக்கும் ஆசை, அதன் மீது உள்ள அபிமானம் ஒழிய வேண் டும் – அதற்காக. இந்தச் சரீரத்தை ஒட்டிய பாவங்களை விலக்க வேண்டும் என்ற எண்ணம் பரிபூரணமாக உண்டாவதற்காக.
இந்த மந்த்ரத்தைப் பற்றி பேசுகையில் காஞ்சி மஹா ஸ்வாமி கள், ‘உடம்பிற்கு ஜுரம், நோய் நொடி என்று வந்தால், உடனே டாக்டரை சென்று பார்த்து, அதை எப்படியாவது இர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று முனையாமல், அந்த நோயின் அல்லது ஜுரத்தின் கொடுமையை அனுபவித்து விட வேண்டும். அது ஒரு தபஸ் மாதிரி ஆகும்! என்று கூறியிருக்கிறார். இது நம்மால் எல்லாம் முடிகிற காரியம் இல்லைதான்.
முன் காலத்தில் பார்த்திருக்கிறோம். பல பெரியவர்கள் தலை வலி, வயிற்று வலி, ஜுரம் போன்றவை வந்தால், உடனே டாக்டரைச் சென்று பார்க்க மாட்டார்கள். அதை அனுபவித்து விடுவார்கள். அந்த மாதிரி நம்மால் இப்போது இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு மாத்திரையைப் போட்டுக் கொண்டு, வந்த நோயைச் சரிப்படுத்தத்தான் நாம் முனைகிறோம். இதற்கு விதிவிலக்காக யாராவது ஒரு சிலர் இருப்பார்களோ, என்னவோ தெரியாது. ஆனால், பொதுவாக இதுதான் நமது வழி. ஆகை யால் மஹா ஸ்வாமிகள் சொன்ன மாதிரி, இந்தத் தவத்தை மேற் கொள்வது என்பது நமக்குக் கடினம்.
அதே சமயத்தில் நாம் செய்யக் கூடியதும் ஒன்று இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒரு நோய் நொடி என்று வந் தால், என்னதான் நாம் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் கூட, அது சில நாட்கள் தொடரத்தான் செய்கிறது. அந்தச் சில நாட்களில், நாம் யார் யார் மீதோ மனதளவிலோ, வாயளவிலோ பழி போடுகிறோம். ‘டாக்டர் சரியில்லை; வர வர மருந்துகள் போலியாகவே இருக்கின்றன; உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரே கலப்படம்; சுற்றுப்புறம் ஒரே அசுத்தம்; காரியாலயத்தில் இன்னார் ஜுரத்துடனே வந்ததால், அவரிடமிருந்து தொற்றிக் கொண்டு விட்டது… என்றெல்லாம் பழிகளை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறோம். நமது நோய் அல்லது ஜுரம் சரியாகப் போகிற வரையில், பலருக்குச் சாபமிட்டுக் கொண்டு இருக் கிறோம். அதற்குப் பதிலாக மனதளவில் ‘நாம் செய்த பாவங் களுக்குப் பிராயச்சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பமாக, இந்த நோய் அல்லது இந்தக் காய்ச்சல் நமக்கு வந்திருக்கிறது. இதை நாம் ஓரளவாவது அனுபவிப்பதால், நம்முடைய பாவத்திற்கு ஓரளவு பிராயச்சித்தமாவது செய்ததாக இருக்கும்” என்று நாம் இர்மானித்துக் கொண்டாலே போதும். வந்து விட்ட ஜுரத்தை அல்லது நோயை முழுமையாக அனுபவித்து விடுவது என்ற தவத்தை நம்மால் மேற்கொள்ள முடியா விட்டாலும் கூட, ‘நமது பாவத் இற்குப் பிராயச்சித்தம் செய்யக் இடைத்த ஒரு சந்தர்ப்பம் இது – என்ற அளவில் அதை புரிந்து கொண்டாலே போதும். வேறு உயர்ந்த பலன்களுக்காக இல்லா விட்டாலும் – மருந்து, மாத்திரைகளையும் மீறி, நோய் நீடிக்கிற ஒரு சில நாட்களில், எல்லோரையும் தூற்றிக் கொண்டிருக்காமல் நமது மனம் ஒரு அமைதியான நிலையை அடைவதற்காவது இது உதவும்.
இதன் பின்னர் இல்லறத்தில் உள்ளவர்கள் கடைப்பிடிக்கக் கூடிய சில கர்மங்கள் விளக்கப்படுகின்றன – அதாவது யாகங்கள், ஹோமங்கள் போன்றவை. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உபநிஷதங்கள், கர்மங்களை மீறிய, அந்த எல்லையைத் தாண்டிய தத்துவ ஞானத்தை விளக்க முற்படுகின்றன; ஆனாலும் கூட, வேதங்களில் கூறப்பட்ட சில கர்மாக்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்வதால் இல்லறத்தில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு விளையக் கூடிய நற்பயனையும் எடுத்துச் சொல்கின்றன. அவை எல்லாம் ஆரம்பப் படிகள். அவற்றைக் கடக்காமலேயே மிக உயர்ந்த நிலையாகிய ஆன்ம உணர்வுக்கு நாம் ஏறிக் குதித்து விட முடியாது – என்பதால் அந்த ஆரம்பப் படிகளும் கூட விளக்கப்படுகின்றன.
வேதங்கள் வேறு, உபநிஷதங்கள் வேறு; வேதங்களைப் புறக்கணித்துத் தோன்றியவைதான் உபநிஷத்துகள் என்ற மேலை நாட்டவரின் கருத்துக்கு, இது முரண்பாடாக இருக்கிறது. வேதங் களில் கூறப்பட்டுள்ள யாகங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத் தையும் ஏற்றுக் கொண்டே, உபநிஷதங்கள், அதற்கு அடுத்தபடியாக, ப்ரம்ம ஞானத்தை உணர்த்துவதற்கு முயற்சிக்கின்றன. உபநிஷதங் களைப் பற்றிய நமது பார்வையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்திற்குப் போவதற்கு முன்பாக, ஒரு சில வார்த்தைகள்.