அது இங்கேதான் இருக்கிறது!

[ஈசகேனகடப்ரச்னமுண்டகமாண்டுக்யஇத்ரிஐதரேயசாந்தோக்யப்ருஹதாரண்யகம்ஆய பத்து உபநிஷதங்களை நாம்சுருக்கமாகப்பார்த்தோம்‌. இதைத்தவிர இன்னும்பல உபநிஷதங்கள்இருக்கின்றன. மொத்தம்‌ 108 உபநிஷதங்கள்இடைத்திருக்கின்றன என்று பண்டிதர்கள்கூறு கிறார்கள்‌. 

நாம்பார்த்த பத்து உபநிஷதங்களைத்தவிர, மற்றவை எல்லாம்முக்கியமானவை அல்ல என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லா உபநிஷதங்களிலும்உயர்ந்த கருத்துக்கள்சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாமே வேதங்களைச்சார்ந்தவைதான்‌. ஆனால்‌, ஆதிசங்கரர்‌, ஸ்ரீ ராமானுஜர்போன்ற பெரியவர்கள்உரை எழுதி, பலருக்கு ஓரளவாவது அறிமுகமாகி உள்ளவைநாம்பார்த்த பத்து உபநிஷதங்கள்‌. மற்றவற்றிலும்சில முக்கியமான கருத்துக்கள்எல்லாம்கூறப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றைப்பார்ப்போம்‌. 

வஜ்ரஸுசிகா உபநிஷதம்என்று ஒரு உபநிஷதம்‌. வஜ்ரஸு9ி என்றால்வைரத்தினால்ஆன ஊசி. அதாவது மிகவும்கூர்மை யான, வலுவான 8. ‘அறியாமையைப்பிளந்து எறியும்வஜ்ர ஸுசி தத்துவத்தை, நாம்இப்போது கூறுவோம்‌! என்றே இந்த உபநிஷதம்ஆரம்பிக்கிறது

பிராமணன்‌, க்ஷத்ரியன்‌, வைசியன்‌, சூத்திரன்என்று நான்கு பிரிவுகளில்‌, பிராமணன்முதன்மையானவன்‌. ஆனால்பிராமணன்யார்என்பது ஆராயத்தக்கது. அவன்ஆன்மாவா அல்லது உடலா? பிறப்பினால்ஒருவன்பிராமணனாகிறானா? அல்லது அறிவினால்பிராமணனாகிறானா? அல்லது செய்கையினால்பிராமணனா இிறானா? அல்லது யாகம்போன்ற கர்மங்களைச்செய்வதினால்பிராமணனாகிறானா?’ 

இப்படி தொடங்கி விட்டு, தனது விளக்கங்களை இந்த உப நிஷதம்கூறுகிறது. ‘எல்லா சரீரங்களிலும்இருக்கும்ஆன்மா ஒன்றுதான்‌. ஆகையால்அதில்பிரிவுகள்இருக்க முடியாது. உடலே பிராமணன்என்றும்கூற முடியாது. ஏனென்றால்‌, எல்லா உடல்களுமே பஞ்சபூதங்களால்ஆனவைதான்‌; எல்லா உடல்களுமே மூப்படையும்தன்மை கொண்டவைதான்‌; எல்லாமே மரணத்திற்கு உட்பட்டவைதான்‌. ஆகையால்உடலிலும்விசேஷத்தன்மை எதுவும்கிடையாது‘. 

வஜ்ரஸுசிகா உபநிஷத்தனது விளக்கத்தை மேலும்தொடர்இறது. பிறப்பினால்ஒருவன்பிராமணனாகிறான்என்றும்சொல்ல முடியாது; ஏனென்றால்மிகப்பெரிய ரிஷிகள்கூட வெவ்வேறு வகையான பிறப்புகளை உடையவர்கள்‌; அப்படி பல்வேறு வகையான பிறப்புகளை உடையவர்களானாலும்‌, அவர்கள்எல்லோருமே மஹான்களாகப்போற்றப்பட்டனர்‌; ஆகையால்‌, பிறப்பும்பிராமணத்தன்மையைத்தந்து விடாது. ஒருவனுடைய அறிவுதான்அவனை பிராமணனாக்குகிறது என்றும்சொல்ல முடியாது; ஏனென்றால்‌, மற்ற வர்ணங்களைச்சார்ந்தவர்களும்‌, உண்மையை உணர்ந்து பேரறிவைப்பெற்றிருக்கின்றனர்‌. ஆகையால்‌, ஒருவன்பெற்ற அறிவும்கூட அவனை பிராமண னாக்காது. தனது கர்மவினைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும்இப்பிறவியில்செயல்படுகிறான்எனும்போது, அவனுடைய செயல்களும்கூட ஒருவனை பிராமணனாக்கி விடாது. யாகம்போன்ற கர்மங்களை பல வர்ணத்தவரும்செய்வதால்‌, அதுவும்ஒருவனை பிராமணனாக்காது

பின்‌, யார்பிராமணன்‌? தோஷங்கள்எதுவுமற்ற, சாஸ்வதமான, பிறப்பு இறப்பு அற்ற, எல்லா உயிர்களுக்கும்உள்ளே நின்று இயங்குகின்ற, மனதிற்கெட்டாத, அனுபவத்தால்மட்டுமே அறியக்கூடிய ஆன்மாவின்வடிவாகவே இகழ்ந்து, எவன்இருக்கிறானோஆசாபாசங்களைத்துறந்து, நிம்மதியான நிலையை அடையப்பெற்று, துவேஷம்‌, பொறாமை, எதிர்பார்ப்புகள்‌, திகைப்பு, விருப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகள்அற்று எல்லோரையும்சமமாகப்பார்க்கின்ற மனிதன்எவனோஅவனே பிராமணன்‌. இதுதான்வேதங்கள்கூறுகின்ற கருத்து. இப்படி அல்லாமல்வேறு எந்த வகையிலும்பிராமணத்தன்மையை எய்த முடியாது

இவ்வாறு அடித்துச்சொல்கிறது ஸாம வேதத்தில்இடம்பெறுகிற வஜ்ரஸுசகா உபநிஷத்‌. ஆக, பிறப்பினால்ஒருவன்உயர்ந்தவனாகவும்‌, ஒருவன்தாழ்ந்தவனாகவும்ஆகிறான்என்று வேதங்கள்கூறவில்லை. மஹாபாரதத்தில்யக்ஷ்ப்ப்ரசனத்தில்இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல்‌, வேறு பல இடங்களிலும்இந்த விளக்கம்இர்மானமாகக்கூறப்படுவது

சரி, நாம்பார்த்த வரையில்உபநிஷதங்களின்மையக்கருத்து என்ன என்பதை ஒருமுறை கவனித்து விடுவோம்‌ : 

ஆன்ம உணர்வைப்பெறுவதுதான்இறுதி லட்சியமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும்‌. அதை எங்கோ தேடி அலைய வேண்டாம்‌. அது நம்மிடம்தான்இருக்கிறது. பரம்பொருள்நமக்கு மிக அருகாமையில்தான்இருக்கிறது. ஆனால்நாம்தான்அதைப்பார்க்க மறுக்கிறோம்என்பதை விளக்க, காஞ்சி மஹா ஸ்வாமிகள்ஒரு கதையைச்சொல்லி இருக்கிறார்‌. இது நகைச்சுவை கலந்த ஒரு உதாரணம்‌. 

கல்யாணமாக வேண்டிய பெண்ஒருத்தி இருந்தாள்‌. அவளுடைய பெற்றோர்‌, உறவினர்களுக்குள்ளேயே ஒரு பையனைப்பார்த்து, அவனுக்கு அவளைக்கல்யாணம்செய்து வைக்க இர்மானித்தார்கள்‌. ஆனால்அந்தப்பெண்ணோ, ‘எல்லா மனிதர்களையும்விட உயர்ந்தவன்எவனோ, அவனைத்தான்கல்யாணம்செய்து கொள்வேன்‌’ என்று பிடிவாதம்பிடித்தாள்‌. ‘சரி, உன்இஷ்டம்‌! என்று மற்றவர்களும்விட்டு விட்டார்கள்‌. 

அந்தப்பெண்‌, மனிதர்களில்உயர்ந்தவன்அரசன்தான்என்று நினைத்து, அந்த ஊர்அரசன்பல்லக்கில்போகும்போது, அவன்பின்னால்சென்று கொண்டிருந்தாள்‌. அப்போது எதிரே ஒரு ஸந்யாஸி, நடந்து வந்து கொண்டிருந்ததைப்பார்த்த அரசன்‌, பல்லக்கை விட்டு இறங்கி, அந்த ஸந்யாஸிக்கு நமஸ்காரம்செய்து விட்டு, மீண்டும்பல்லக்கில்ஏறிச்சென்றான்‌.

இதைப்பார்த்த அந்தப்பெண்‌, அரசனை விட, இந்த ஸந்யாஸிதான்உயர்ந்தவன்என்று இர்மானம்செய்து கொண்டு, அவரையே கல்யாணம்செய்வது என்று நினைத்தாள்‌. அவர்பின்னால்அவள்போகும்பொழுது ஒரு ஆலமரத்தடியில்ஒரு பிள்ளையார்விக்ரஹம்இருந்தது. ஸந்யாஸி அந்த விக்ரஹத்தின்முன்னால்மிகவும்மரியாதையுடன்நின்று, தோப்புக்கரணம்போட்டு நமஸ்கரித்தார்‌. இதை அந்தப்பெண்பார்த்தாள்‌. ஸந்யாஸியை விட, இந்தப்பிள்ளையார்உயர்ந்தவர்போல இருக்இறதுஎன்று நிச்சயித்துக்கொண்டு, என்ன செய்யலாம்என்று யோசித்தவாறு ஆலமரத்தின்அடியிலேயே உட்கார்ந்தாள்‌.

அங்கே மனித சஞ்சாரம்இல்லை. ஆனால்‌, ஒரு நாய்அங்கே வந்து, அந்தப்பிள்ளையாருக்கு வெகு சமீபமாக, அலட்சியமாக நின்று அசிங்கம்பண்ணிவிட்டுப்போய்விட்டது. இதைப்பார்த்த பெண்இகைத்தாள்‌. ‘என்ன இது? பிள்ளையாரை விட நாய்உயர்ந்ததா?” என்று புரியாமல்அவள்விழித்தபோது, ஒரு பையன்அந்த நாய்மீது கல்லை விட்டு எறிய, அது குரைத்துக்கொண்டே ஓடிற்று.

அந்தப்பெண்ணின்மனதில்மீண்டும்சந்தேகம்‌. ‘பிள்ளை யாரையே அலட்சியமாக நினைத்த நாய்‌, இப்பொழுது இந்தச்சறுவனுக்குப்பயந்து ஓடுகிறது. ஆகையால்இந்தச்சிறுவன்தான்எல்லோரைக்காட்டிலும்உயர்ந்தவன்போலிருக்கிறதுஎன்று அவள்நினைத்தாள்‌. அப்போது ஒருவன்வந்து, அந்தச்சிறுவனைப்பிடித்து, ‘ஏஎன்இந்த நாயை அடித்தாய்‌?! என்று அதட்டி மிரட்டினான்‌.

பையன்பயந்து கொண்டு, ‘இனி அம்மாதிரி செய்வதில்லைஎன்று சொல்லிவிட்டு மன்னிப்புக்கேட்டு விட்டுப்போய்விட்டான்‌. பார்த்தாள்அந்தப்பெண்‌. ‘இவன்தான்எல்லோரையும்விட உயர்ந்தவன்‌! என்று தீர்மானம்செய்தாள்‌. அவன்யார்என்றால்‌, அவள்வீட்டில்பெரியவர்கள்நிச்சயித்திருந்த உறவுக்காரப்பையன்தான்‌. எங்கெங்கோ சுற்றி விட்டு, தான்தேடிய மனிதன்தன்அருகிலேயே இருப்பதை உணர்ந்தாள்‌.

இப்படித்தான்சம்பந்தா சம்பந்தமில்லாமல்எதை எதையோ உயர்ந்த பொருளாகவும்‌, பெரிய விஷயமாகவும்கருஇக்கொண்டு, நாம்அலைந்து கொண்டிருக்கிறோம்‌. நம்அருகிலேயே, நம்மிடமே, நமது ஆன்மாவாக பரம்பொருள்இருப்பதை நாம்உணர்வதில்லைஎன்பதை விளக்க இந்தக்கதையை காஞ்சி மஹா ஸ்வாமிகள்கூறியிருக்கிறார்‌. 

ஆசைகளுக்குப்பலியாகி பொறாமை, துவேஷம்‌, கோபம்போன்ற குணங்களை எல்லாம்வளர்த்துக்கொண்டு நாம்அலைந்தோமானால்‌, நமக்கு நிம்மதி என்பது கிடையாது. இவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மாவை உணர ஒருவன்முயற்சித்தால்‌, அவனே நிம்மதி உள்ளவன்ஆகின்றான்‌. அப்படிப்பட்டவன்இந்த சரீரத்இல்இருக்கும்போதே கூட ப்ரம்ம நிலையை அடைகிறான்‌ – என்று உபநிஷதங்கள்கூறுகின்றன.

இந்த நிலையை அடைவது மிக எளிது என்று எந்த உபநிஷதமும்சொல்லவில்லை. கடும்முயற்சி வேண்டும்‌.  இந்த நிலையை அடைய முடியாதவர்கள்எல்லோரும்அழிந்து நாசமாக வேண்டியதுதான்என்ற சாபத்தையும்உப நிஷதங்கள்அளித்துவிடவில்லை. இல்லறத்தில்வாழ்ந்து கொண்டு ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்களாக இருந்தும்கூட, நற்காரி யங்களையே செய்து, நல்லதையே நினைத்து வாழ்கிறவர்கள்மீண்டும்பிறப்பெய்தினாலும்‌, அது நல்ல பிறப்பாக இருக்கும்என்ற உத்திரவாதத்தை இந்த உபநிஷதங்கள்எல்லாம்அளிக்கின்றன. ஆகையால்‌, ஆன்ம உணர்வு என்கிற நிலையை அடைய முடி யாத நம்மைப்போன்ற கோடானு கோடி மக்கள்நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாழ்வது என்ற இர்மானத்இற்கு வந்தாலே போதும்‌. அதுவே நமக்கு நற்கதி அளிக்கும்‌. 

இந்த உபநிஷதங்களை எல்லாம்மேலெழுந்தவாரியாகப்பார்க்கும்போதே கூட, ஒரு விஷயத்தை நாம்கவனித்இருக்கலாம்‌. ஒவ்வொரு உபநிஷதத்திலும்பல விவாதங்கள்விவரிக்கப்படு இன்றன. பல கேள்விகள்கேட்கப்படுகின்றன. பல சந்தேகங்கள்எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம்விடைகளும்அளிக்கப்படுகின்றன. அந்த விடைகளை உடனடியாக முழுமையாகப்புரிந்து கொள்கிற சக்தி நமக்கு இல்லை என்பதால்‌, அந்த விடைகள்அர்த்தமற்றவையாகி விடாது. மற்ற எந்த மத நூல்களிலும்இல்லாத அளவிற்கு கேள்விகள்‌, குறுக்குக்கேள்விகள்‌, சந்தேகங்கள்போன்றவை கொட்டிக்கிடக்கிற விவாதங்களை நடத்தி, அவற்றின்மூலம்தத்துவங்கள்நிலை நாட்டப்படுகின்றன; இவை உப நிஷதங்களின்தனிச்சிறப்பு

வேதங்களில்‌, தொடக்கத்தில்வருவது கர்ம காண்டம்‌. ஆரம்பப்படிகளை வரையறுக்கிறவை அந்தப்பகுதிகள்‌. யாகங்கள்போன்ற கர்மாக்களைச்செய்ய வேண்டிய அவசியத்தையும்‌, அவற்றிற்கான வழிமுறைகளையும்கூறுபவை அவை. இந்தப்பகுதிகளில்பல தெய்வங்கள்குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொன்றின்இறப்பும்‌, மேன்மையும்வர்ணிக்கப்படுகின்றனவேதங்களின்இறுதியில்வருவது, உபநிஷதங்களைக்கொண்ட ஞான காண்டம்‌. இது இறுதி லட்சியத்தை நம்முன்வைக்கிறது. பரம்பொருள்ஒன்றுதான்‌. அதற்கு ஒரு உருவத்தையோ, நிறத்தையோ கொடுத்து வர்ணிக்க முடியாது. அது வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அதனால்தான்உபநிஷதங்கள்பல இடங்களில்பரம்பொருளை, ‘தத்‌’ என்று கூறுகிறது. ‘தத்‌’ என்றால்‌ ‘அதுஎன்று அர்த்தம்‌ (‘தட்‌’ என்று ஆங்கிலத்தில்சொல்வது போல இருக்கிறது). 

அதனுடைய பல சக்திகளும்‌, பெருமைகளும்‌, பல தெய்வங்களாகக்காட்சி அளிக்கின்றன; அவற்றை கர்ம காண்டம்வர்ணிக்இறது. அதை பின்பற்றி, கர்மாக்களைச்செய்து, அதன்மூலம்நம்பிக்கையையும்‌, சுய கட்டுப்பாட்டையும்வளர்த்துக்கொண்டு, அதன்பின்னர்‌, ‘எல்லாம்பரம்பொருளே! என்ற ஞானத்தைப்பெறுவதற்காக, ஞான காண்டத்தில்கூறப்பட்டிருப்பவற்றைப்புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்‌. இது, வேதங்கள்மற்றும்அவற்றின்ஒரு பகுதியாகிய உபநிஷதங்கள்ஆகியவை, நமக்கு விளக்குறெ வழிமுறை. நாம்உணர வேண்டியது

ஓம்தத்ஸத்‌ 

அது (பரம்பொருள்‌) உண்மை.