ஒரு பழத்தைப் பிழிந்து, அதனுடைய ரஸத்தை மட்டும் எடுப்பது போல, உபநிஷதங்களில் கூறப்பட்டிருக்கும் தத்துவங் களை எடுத்து, மிகவும் சுருக்கமாக அவற்றை அளிக்கிறது, ப்ரம்ம ஸூத்ரம் என்கிற நூல். இது பாதராயணர் இயற்றியது. வியாஸருக்குத்தான் இப்படி பாதராயணர் என்ற பெயரும் உண்டு. பதரி என்ற இலந்தை மரத்கடியில் இருந்ததால், வியாஸருக்கு. பாதராயணர் என்ற பெயரும் வந்தது என்று கூறப்படுகிறது.
இவர் இயற்றியுள்ள ப்ரம்ம ஸுத்ரங்கள் என்கிற நூல், 555 ஸூத்ரங்களைக் கொண்டது. மிகவும் சுருக்கமாக, அதே சமயத் இல் சந்தேகத்துக்கு இடமில்லாமல், தத்துவங்களை எடுத்துச் சொல்வது – ஸூத்ரம். உபநிஷதங்களின் அடிப்படையில், அவற்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு – ‘ஜீவன் என்பது யார்? அவன் வாழ்கிற உலகம் என்பது என்ன? இதற்கெல்லாம் ஆதாரமான உண்மை தத்துவம் எது?! – என்ற விஷயங்களை ஆராய்ந்து, சுருக்க மாக விளக்குவது ப்ரம்ம ஸூத்ரம்.
வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவது உபநிஷதங்கள் என் பதை ஏற்கெனவே பார்த்தோம். அவற்றின் தத்துவங்களைக் கூறு வதால், இதற்கு உத்தர மீமாம்ஸை என்ற பெயரும் உண்டு. ‘உத்தர‘ என்றால், பின்னர் வருவது. வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகங்கள் போன்ற கர்மங்களை விளக்குகிற, கர்ம காண்டப் பகுதிகளை எடுத்துக் கொண்டு அவற்றின் தத்துவங்களை ஜைமினி என்பவர் எடுத்துச் சொன்னார்; அது பூர்வ மீமாம்ஸை. ‘பூர்வ”என்றால் முதலில் வருவது. பின்னால் வருகிற ஞான காண்ட மாகய; உபநிஷதங்களின் தத்துவத்தை எடுத்துச் சொல்வதால், வியாஸர் இயற்றியது உத்தர மீமாம்ஸை எனும் ப்ரம்ம ஸுத்ரம். இது இறுதியாக ஸந்யாச தர்மத்தின் மேன்மையை எடுத்துச் சொல்வதால், இதற்கு பிக்ஷ£ ஸுத்ரம் என்ற பெயரும் உண்டு.
ப்ரம்ம ஸுத்ரம் மிகவும் சுருக்கமாக விஷயங்களை எடுத்துச் சொல்கிறது என்று மேலே பார்த்தோம். சுருக்கமாக என்றால், எவ்வளவு சுருக்கமாக? ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். ஆரம்பமே இப்படி அமைந்திருக்கிறது.
அதாதோ ப்ரம்ஹஜிஞாஸா
இனி ப்ரம்மத்தைப் பற்றிய ஆய்வு.
ஜன்மாதி அஸ்ய யத:
“இவ்வுலகிற்கு, உற்பத்தி முதலியன எதனிடமிருந்தோ, அதுவே ப்ரம்மம்”.
இறுதிப் பகுதியிலும் இவ்வாறே வருகிறது.
கர்மங்களை (யாகங்கள் போன்றவற்றை) செய்வதன் முக் இயத்துவத்தை வற்புறுத்திவிட்டு, ப்ரம்ம ஸுத்ரம் இவ்வாறு சொல்கிறது.
அத்யயனமாத்ரவத:
“வேதத்தை முறைப்படி பயின்றவர்களுக்கு மட்டும்தான் (யாகங்கள் கூறப்பட்டன; உபநிஷதங்கள் மூலம் ஞானம் பெற்றவர்களுக்கு அல்ல)”
ந அவிசேஷாத்
(கர்மங்களை முறையே செய்து கொண்டு, நீண்ட காலம் வாழ வேண்டும்! என்று பொதுவாக சொல்லப்பட்டதால்) அது ஞானியைக் கட்டுப்படுத்தாது. அவனைப் பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை.
இவை ஒரு சில உதாரணங்களே. இந்த மாதிரி 885 ஸுூத்ரங்களைக் கொண்டது ப்ரம்ம ஸுத்ரம். இவ்வளவு சுருக்கமாக அமைந்திருப்பதால், இதற்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. மற்றவர்களைத் தவிர, ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் – ஆகியோர் இதற்கு விளக்கங்கள் எழுதி இருக்கொர்கள். அவரவர்கள் இந்த ப்ரம்ம ஸுத்ரங்களை தங்கள் சித்தாந்தத்தின் கோணத்திலிருந்து நோக்கி இருக்கிறார்கள். ஆதிசங்கரரின் பார்வை அத்வைதப் பார்வை; ஸ்ரீ ராமானுஜரின் பார்வை விசிஷ்டாத்வைதப் பார்வை; ஸ்ரீ மத்வரின் பார்வை த்வைதப் பார்வை.
இந்த மூன்று தத்துவங்களும் என்ன சொல்கின்றன என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். அந்தந்த சித்தாந்தங்களின் கோணங்களிலிருந்து அவரவர்கள். இவற்றை ஆராய்ந்தாலும், பரம் பொருளாகிய ப்ரம்மமே இறுதி உண்மை என்று நிலைநாட்டு வதலும், அந்த நிலையை அடைவதுதான் மோட்சம் என்று எடுத்துச் சொல்வதிலும், இவர்களிடையே வித்தியாசங்கள் இல்லை – என்று மூன்று விளக்கவுரைகளையும் ஆராய்ந்த பண்டிதர்கள் கூறியிருக்கிறார்கள்.
ப்ரம்மம் என்ற பரம்பொருளின் தத்துவத்தை ஆராய்வதால், ப்ரம்ம ஸூத்ரம் என்று பெயர் பெற்ற இந்த நூல், இறுதி உண்மை ப்ரம்மமே என்றும், அதை உணர்வதால் ஒருவன் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் இருந்து விடுபடுகிறான் என்றும் கூறுஇது. இதற்கு ஆதாரமாக வேதங்களின் ஞான காண்டத்தைச் சார்ந்த உப நிஷதங்களை, ப்ரம்ம ஸூத்ரம் எடுத்துச் சொல்கிறது. தர்க்க வாதத் இனாலோ, வேறு வழிமுறைகளினாலோ, ப்ரம்மத்தை உணர்ந்து விட முடியாது; இந்த்ரியங்களின் மூலமாக பெறப்படுகிற தகவல் களை வைத்துக் கொண்டுதான் அறிவுப்பூர்வமான ஒரு வழிமுறை யைக் கண்டுபிடிக்க முடியும்; ஆனால் ப்ரம்மமோ, இந்த்ரிய உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது; ஆகையால், அனுபவித்து உண்மையைக் கண்டவர்களான ரிஷிகள் இயற்றியுள்ள உபநிஷ தங்களே, ப்ரம்மத்தை உணர்வதற்கான வழி.
நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற ப்ரம்ம ஸுத்ரத்தில் – ‘இனி ப்ரம்மத்தைப் பற்றி ஆய்வு செய்து‘ என்று தொடங்கு முதல் அத்தியாயம், ப்ரம்மத்திடமிருந்தே அனைத் தும் தோன்றின என்றும், அனைத்துமே அவனுள்ளேயே உறை இன்றன என்றும், இறுதியில் அவனிடமே இவை அனைத்தும் ஐக்கியமாகும் என்றும் விளக்குகிறது.
வேறு சிலருடைய கருத்துக்களையும் கூட, பாதராயணர் (வியாஸர்) எடுத்துச் சொல்கிறார். சிலருடைய கருத்திலிருந்து மாறுபடுவதற்கான காரணங்களையும் விளக்குகிறார். உபநிஷதங் களில் முரண்பாடுகள் போல தோற்றம் அளிக்கக் கூடியவற்றை எல்லாம் முறைப்படுத்தி, தெளிவாக்கி 8ர் செய்வதால், இந்த அத்தி யாயத்திற்கு ‘சமன்வயாத்யாயம்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இரண்டாவது அத்தியாயத்தின் பெயர், ‘அவிரோத அத்தி யாயம்? வேதாந்தத்திற்கு விரோதமாக – அதாவது உபநிஷதக் கருத்துக்கள் வகைப்படுத்துகிற தத்துவங்களுக்கு எதிராக – கூறப் பட்டுள்ள அபிப்பிராயங்களைச் சந்தித்து, வேதாந்தக் கருத்துக்களே ஏற்கத்தக்கவை என்று நிலைநிறுத்துகிற அத்தியாயம் இது. உபநிஷதங்களிலே வருகிற சிருஷ்டி பற்றிய விளக்கங்கள் முரண் பட்டவை அல்ல என்றும் இந்த அத்தியாயம் எடுத்துச் சொல்கிறது.
கர்மம் ஒன்றுதான் கடைப்பிடிக்கத்தக்கது என்றும், எக்காரணம் கொண்டும் அது விடத்தக்கதல்ல என்றும் வாதிட்டும், அதைத் தவிர மனிதர்களுக்கு வழி எதுவும் கிடையாது என்றும் ‘ஸாங்க்யம்” என்ற தத்துவம் கூறுகிறது. இதுதான் ‘பூர்வ மீமாம்ஸை. இது ப்ரம்மத்தின் மேல் வைக்கப்பட வேண்டிய நம்பிக்கையையும், பக்தியையும் பற்றி எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால், ஈச்வரன் இல்லை என்று வாதிடுகிற தத்துவமாகவே, இது பார்க்கப் பட்டது. கர்மாவே ஆரம்பமும், முடிவும் என்று கூறுகிற இந்த ஸாங்க்ய தத்துவத்தைச் சந்இத்து, அதை எதிர்கொண்டு, ப்ரம்மத்தைப் பற்றி விளக்கி, வேதாந்தத் தத்துவங்களை நிலைநாட்டுகிறது ப்ரம்ம ஸத்ரம்.
ப்ரம்ம ஸுத்ரத்தின் மூன்றாவது அத்தியாயம் – ‘சாதனாத்யாயம்” என்ற பெயரைக் கொண்டது. மறுபிறப்பு, கனவு, உபநிஷதங்களில் கூறப்பட்டிருக்கிற பல வித்யைகள் எனும் பயிற்சி முறைகள், சில சடங்குகளைப் பற்றிய விளக்கங்கள், ப்ரம்மச்சர்யம், இல்லறம், ஸந்யாசம் – போன்ற நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள், ப்ராயச்சித்தம்… போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் பகுதி கூறுகிறது.
நாலாவது பகுதி – ‘பலாத்யாயம்” என்ற பெயர் கொண்டது. மரணம் எய்திய பிறகு ஒருவன் செல்லுகிற பாதையைப் பற்றி பேசுறெ பகுதி இது. கர்ம பலன்களை மூன்று விதமாகப் பிரிக்க லாம். ஒன்று – சஞ்சித கர்மம். அதாவது, பல பிறவிகளில் நாம் செய்த காரியங்களுடைய பலாபலன்களின் மொத்த மூட்டை இது: ஞானம் எய்தியவன் இதை அழித்து விடுகிறான். இன்னொன்று – ப்ராரப்த கர்மம். இது ஏற்கெனவே இந்தச் சரீரத்துக்கு உண்டான பலன்களை அளிக்கத் தொடங்கி விட்ட முந்தைய கர்மம்; இந்தப் பிறவிக்கே அதுதான் காரணம்; இதை அனுபவித்தேதான் அழிக்க முடியும். ‘ஆகாமீ கர்மம்! என்பது மூன்றாவது வகையான கர்மம். இது உண்மையான ஞானம் எய்திய பிறகு, ஒருவன் செய்கிற செய்கைகளின் பலன்; இது அவனிடம் ஒட்டாது.
நாம் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக, இந்த மூன்று கர்மாக்களை இப்படிப் பார்க்கலாம். ப்ராரப்த கர்மம் என்பது – நமக்கு வந்துவிட்ட நோய் போன்றது. இதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சஞ்சித கர்மம் என்பது – பலவிதமான நோய்களுக்கு இடம் தருகிற நமது உடற்கூறு போன்றது; சரியான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளின் மூலமும், ஒழுங்கு முறைக்கு உட் 1 பட்ட வாழ்வின் மூலமும் இந்த நோய்கள் இனி நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ள முடியும்; ஆகாமீ கர்மம் என்பது – ் தடுப்பு ஊசிகளை ஏற்கெனவே போட்டுக் கொண்டு விட்ட ் மனிதனை அணுகுகிற நோய்; அது அவனை அண்டாது.
ஸந்யாச தர்மத்தைப் பற்றியும், ப்ரம்ம ஸூத்ரம் பல விளக்கங்களைச் சொல்கிறது. யாகம் போன்றவற்றை ஸந்யாசிகள் ் செய்யக் கூடாது என்றும் சொல்வதற்கில்லை; செய்துதான் தீர வேண்டும் என்றும் சொல்வதற்கில்லை; அவரவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். ஞானம் அடைந்தவனுக்குக் கர்மங்கள் நாசம் அடைகின்றன. ஸந்யாச ஆச்ரமத்தை அடைந்தவன், அதிலிருந்து விலகுதல் கூடாது. அம்மாதிரி விலயயவர்களுக்கு, ப்ராயச்சித்தம் உண்டு என்றும், இல்லை என்றும் இரண்டுவித அபிப்பிராயங்கள். இருக்கின்றன என்றாலும் கூட, எந்த வகையாக இருந்தாலும், ஸந்யாச நிலையை அடைந்து விட்டு, அதிலிருந்து விலகியவர் ஒதுக்கத்தக்கவரே.
இவ்வாறெல்லாம் கூறுகிற ப்ரம்ம ஸுத்ரம், ப்ரம்மத்தை உணர்ந்தவன் மோட்ச நிலையை அடைந்து, அதன் பிறகு மீண் டும் பிறப்பு எய்துவதில்லை என்று கூறி முடிகிறது. ப்ரம்ம ஸுத்ரத்திற்கு ஹிந்து மத நூல்களில் ஒரு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. உபநிஷதங்கள், பகவத் இதை, ப்ரம்ம ஸூத்ரம் – ஆகிய மூன்றும் “ப்ரஸ்தானத்ரயம்’ – மூன்று தத்துவங் கள் – என்று ஒன்றாக வைக்கப்பட்டு, போற்றப்படுகின்றன.
வேதத்தில் யாகங்கள் போன்றவற்றை வர்ணிக்கிற கர்ம காண்டம்; அதை அடுத்து ஒருபடி மேலே போய், தத்துவங்களை விளக்குகிற உபநிஷதங்களைக் கொண்ட ஞான காண்டம்; அந்த உபநிஷதங்களின் அடிப்படையில் வ்யாஸர் அருளியுள்ள ப்ரம்ம ஸுத்ரம் – ஆகியவற்றை இதுவரை நாம் பார்த்தோம். இவை ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களை எடுத்துச் சொல்பவை, விளக்குதிறவை.
இன்னும் பல தத்துவ நூல்கள் உள்ளன என்றாலும், இவை மூன்றும் அடிப்படையானவை. எல்லாத் தத்துவ நூல்களையும் நம்மால் பார்க்க இயலாது. ஏனென்றால், அப்படிப் பார்த்து, ஜள வாவது அவற்றைப் புரிந்து கொள்வது என்று ஆரம்பித்தால், இந்த ஆயுள் போதுமோ, போதாதோ! அதனால் இந்தத் தத்துவ விளக் கங்களை இந்த அளவில் நிறுத்திக் கொண்டு, அடுத்த கட்டத்துக்குப் போவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
(இத்துடன் முதற் பாகம் முற்றுப் பெறுகிறது.)