வேதங்களை அடுத்து வருவது ஷடங்கங்கள் என்று கூறப்படுகிற வேதங்களின் ஆறு அங்கங்கள். இவை பற்றி ஒரு–கிறு குறிப்பை இரண்டாம் அத்தியாயத்தில் முதல் பாகம் பார்த்தோம். வேதாங்கங்களாகிய இவை சிட்சை; வியாகரணம்; சந்தஸ்; நிருக்தம்; ஜோதிவம் மற்றும் கல்பம். இந்த ஆறும் வேத புருஷனின் ஆறு அங்கங்கள் என்று கூறப்படுகின்றன.
‘சிட்சை‘ என்பது இந்த ஆறு அங்கங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிறது. இது வேத புருஷனின் மூக்கு என்று வர்ணிக்கப்படுகிறது. மூக்கினால்தான் மனிதன் சுவாசிக்கிறான். வேத மந்த்ரங்களின் உயிர் மூச்சாக இருப்பது சிட்சை. எழுத்துக்களின் தன்மையையும் சொல்லி, அவற்றின் உச்சரிப்பை யும் விளக்குவது சிட்சை. ஏற்ற, இறக்கம்; அழுத்தம்); தாழ்த்திச் சொல்வது; ஒரே €ராகச் சொல்வது – போன்ற பாகுபாடுகளை எல்லாம் இது விளக்குகிறது.
இன்னின்ன எழுத்துக்கள் ஒரு மனிதனின் உடம்பில், இன்னின்ன இடத்திலிருந்து பிறக்கின்றன என்று கூறி, அவற்றை எந்த மாதிரி முயற்சியால் முறையாகச் சொல்ல வேண்டும் என் பதை விவரித்து, உதடுகளை எப்படிச் சேர்த்தால் என்ன சத்தம் வரும் என்பது போன்ற விவரங்களைக் கூறி, ஒழுங்கான உச்சரிப்புக்கு வழி செய்வது சிட்சை. வேதங்களின் உச்சரிப்பில் தவறு நேர்ந்தால், அதில் கூறப்பட்டுள்ள மந்த்ரங்களுக்கு பலன் இருக்காது என்று ஏற்கெனவே பார்த்தோம். ஆகையால்தான் எழுத்தின் தன்மையை யும், உச்சரிக்கும் முறையையும் விளக்குகிற சிட்சை வேத புருஷனின் மூக்காகக் கருதப்படுகிறது.
இரண்டாவது அங்கம் – முகம். முகம் என்றால் இங்கே வாய் என்று அர்த்தம் – இது வியாகரணம். வேத மொழியின் லக்ஷணத்தை விளக்குவது வியாகரணம். லக்ஷணம் என்பதுதான் இலக்கணம். லக்ஷ்மணன் என்பது இலக்குமணன் என்று தமிழில் ஆவது போல, லக்ஷணம் என்பது இலக்கணமாகிறது என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்தத் தகவல் மட்டு மல்லாது, இந்த அத்தியாயத்தில் வேறு பல விவரங்களும் கூட, அவர் கூறியுள்ள விவரங்களின் அடிப்படையில்தான் தரப் பட்டுள்ளன.
மொழிக்கு வாய் மிகவும் முக்கியமானது. ஆகையால் லக்ஷணத்தை விளக்குகிற வியாகரணம், வேத புருஷனின் வாய் எனக் கருதப்படுகிறது. வியாகரண நூல்களில் முக்கியமாகக் கருதப்படுவது பாணினி மஹரிஷி இயற்றிய வியாகரணம். இதற்கு பதஞ்சலி எழுதிய விளக்கம் மஹாபாஷ்யம் என்று போற்றப் படுகிறது. பரமசிவனாகிய நடராஜனின் தாண்டவத்தில், அவர் உடுக்கையில் இருந்து உண்டாகிய பதினாலு சப்தங்களைக் கொண்டு, அவற்றில் சில பாகுபாடுகளைச் செய்து, அவற்றை பதினான்கு சூத்திரங்களாக வைத்து, தனது வியாகரண நூலை பாணினி இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. ஆக, வியாகரண நூலுக்கு பரமேச்வரனே மூலமாகக் கருதப்படுகிறார்.
சந்தஸ் என்பது செய்யுள் இலக்கணம். இது வேத புருஷனின் காலாக, அதாவது பாதமாகக் கூறப்படுகிறது. யஜூர் வேதத்தில் கவிதை மாதிரி அமையாத பகுதிகளும் உண்டு என்றாலும் – வேதங்களில் பொதுவாக எல்லாமே செய்யுள்களாக இருப்பதால், சந்தஸ் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இத்தனை அடிகள் இருக்க வேண்டும், இத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும்… என்றெல்லாம் நிர்ணயித்துச் சொல்வது சந்தஸ் என்கிற சாஸ்த்ரம். இதைக் கொண்டு வேதச் செய்யுள்களுக்கே சந்தஸ் என்ற பெயரும் வந்து விட்டது. ‘காலுக்குத்தான் சம்ஸ்க்ருதத்தில் பாதம் என்றும், தமிழில் அடி என்றும் பெயர் இருக்கிறது. ஆங்கிலத்திலும் கூட ஒரு ‘ஸ்டான்ஸா‘விற்கு இத்தனை ‘ஃபீட்’ இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். பாதம் – அடி – ஃபுட் – என்று கவிதை லட்சணம் பற்றி, பல பாஷைகளில் ஒரே பொருள்படும்படி வார்த்தை இருக்கிறது” என்று மஹாஸ்வாமிகள் குறிப்பிடுகிறார்.
‘பாதத்துக்குப் பாதம் ஸமமாக இல்லை என்றால், அது ஸமம் இல்லாதது, வி – ஸமம். இதுவே ‘விஷமம்’ என்பதற்கு மூலம். சமம் என்பது வித்தியாசமில்லாத நிலை. வித்தியாசம் கற்பிக்கப் படும் பொழுது அது விஷமமாகிறது. ஆகையால் நடுநிலை தப்பிய காரியங்கள் விஷமம் எனப்படுகின்றன.
ஷடங்கங்களில் அடுத்து வருவது நிருக்தம். இதை வேதத்திற்கு ஒரு அகராதி என்று எடுத்துக் கொள்ளலாம். அகராதிக்கு ‘நிகண்டு‘ என்றும் பெயருண்டு. நிருக்தம், வேத புருஷனின் காது. வேதத்தில் உள்ள அரிய சொற்களுக்கு அர்த்தத்தைக் கூறி, அந்தச் சொல் குறிப்பிட்ட இடத்தில் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்குவது நிருக்தம். வேதத்தில் வருகிற வார்த்தைகளுக்கு, அர்த்தத்தைக் கூறுவதோடு மட்டுமல்லாமல், அது எப்படி உண் டாயிற்று என்றும் நிருக்தம் கூறுகிறது.
உதாரணத்திற்கு, ஹ்ருதயம் என்ற பதம் பற்றி நிருக்தம் கூறுவது என்ன? ஹ்ருத்-அயம் என்பது ஹ்ருதயம். ஹ்ருத்- அயம் என்றால், ‘ஹ்ருதயத்தில் அவன் இருக்கிறான்’ என்பது அர்த்தம். ஹ்ருத் என்பது பெளதீக ரீதியான மனித இருதயத்தின் பெயர். ஆனால், ‘அயம்! என்று அதில் ஈச்வரனும் சேர்த்துக் கொள்ளப்படுவதால், அதில் ஆன்மீகமான முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டு விடுகிறது. ஹ்ருத் என்ற இதயத்தில் பரமேச்வரன் இருப்பதால், அதற்கு ஹ்ருதயம் என்றே பெயர் வந்துவிட்டது.
நிருக்தத்தை அடுத்து வருவது ஜோதிஷம். இது வேதத்தின் கண்: என்று கூறப்படுகிறது. ஒரு க்ரஹம் எந்த நிலையில் இருக்கிறது? அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பலன் என்ன? அது என பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எல்லாம் ஜோதிஷம் எடுத்துச் சொல்கிறது. இது வான சாஸ்த்ரமும் கூட்.அ ஆனால் வான சாஸ்த்ரம், க்ரஹங்களின் நிலைமைகளை மட்டும் ஆராய்கிறது. ஜோதிஷமோ அதன் பலனையும் கூறுகிறது.
பிற்காலத்தில் உலகில் மேல்நாட்டு விஞ்ஞானிகள், பெரும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டுபிடித்த பல வானியல் தத்துவங்களையும், உண்மைகளையும் இந்த ஜோஷித சாஸ்த்ரம், பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்துச் சொல்லி விட்டது.
எப்படி ஜோதிஷ சாஸ்த்ரத்தில் வான சாஸ்த்ரமும் அடங்குகிறதோ, அதே போல கணிதமும் அடங்குகிறது. மிகவும் பிற்காலத்தில் கணிதத்தின் அங்கங்களாக வந்த ‘அல்ஜீப்ரா’, ‘ட்ரிக்னாமெட்ரி’ போன்றவை எல்லாம் கூட ஜோதிஷ சாஸ்த்ரத்தில் இடம் பெறுகின்றன.
கர்க்கர், நாரதர், பராசரர் போன்ற ரிஷிகள், ஜோதிஷ விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். தேவர்களும் இதை இயற்றியதாக நம்பிக்கை இருக்கிறது. சூரிய பகவான் மயனுக்கு ஜோதிஷத்தை உபதேசம் செய்ததாக ஒரு நூல் கூறுகிறது. சூரியன் செய்த அந்த உபதேசத்திற்கு சூரிய சித்தாந்தம் என்றே இன்றும் பெயர் வழங்குகிறது. மனிதர்களும் ஜோதிஷ ஆராய்ச்சி செய்து பல விஷயங்களைக் கண்டிருக்கிறார்கள். வராஹமிஹிரர், ஆர்யபட்டர், பாஸ்கராச்சாரியார் போன்றவர்கள் ஜோதிஷத்தைப் பற்றியும், அதில் உள்ளடங்கிய வான சாஸ்த்ரம், கணிதம் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அருகில் இருப்பதை மட்டுமல்லாமல், தொலைவில் இருப்பதையும் அவர்கள் கண்டனர். அதுதான் ஜோதிஷ சாஸ்த்ரம். அதனால்தான் இது வேத புருஷனின் கண் என்று வர்ணிக்கப்படுகிறது.
கணித சாஸ்த்ரத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்றிருந்த பாஸ்கராராச்சாரியார், ஒரு கனித நூல் இயற்றினார். அதற்கு ‘லீலாவாதி’ என்று அவர் பெயர் வைத்தார். லீலாவதி என்பது அவருடைய மகளின் பெயர். இந்த மகள் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி தன்னுடைய மகளின் ஜாதகத்தை அராய்ந்த்8உ பார்த்த பாஸ்கராச்சாரியார், அவளுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் “தன்னுடைய ஜோதிஷ ஞானத்தை வைத்து, எல்லா நலன்களையும் கொடுக்கக் கூடிய கிரஹ நிலைகளைக் கொண்ட ஒரு நேரத்தைக் கண்டுபிடித்து, அதில் தன் மகளுக்கு திருமணம் செய்து விட்டால், அவள் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள்! என்று அவர் நினைத்தார். ஆகையால், நன்கு கணக்கிட்டு, லீலாவஇக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கக் கூடிய ஒரு முஹூர்த்தத்தை அவர் தேர்ந்தெடுத்தார்.
கடிகாரம் இல்லாத காலம் அது. அப்போது ஒரு வகை பாத்திரம் நேரத்தை கண்டறிய பயன்படுத்தப்பட்டது. மேலே ஒரு பகுதி. இழே ஒரு பகுதி. இடையில் ஒரு சிறிய வழி கொண்ட ஒரு பாத்திரம். இப்போதும் ‘அவர் கிளாஸ் என்று சொல்லப்படுகிற முறையில் அமைந்த பாத்திரம். இதில் மேல் பாகத்தில் விட்ட தண்ணீர், இடையில் இருக்கும் வழி மூலமாக, கழ் பாகத்தில் ஒவ்வொரு துளியாக விழும். ஒரு துளி விழுந்தால் இவ்வளவு நேரம் என்று கணக்கு உண்டு. கழே உள்ள பாத்திரத்தில் கோடுகள் வரையப்பட்டிருக்கும். அதைக் கொண்டு எவ்வளவு துளிகள் _ விழுந்திருக்கின்றன; எவ்வளவு நேரம் கழிந்திருக்கிறது – என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தின் மூலம் நேரத்தை பாஸ் கராச்சார்யார் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். முஹூர்த்த நேரம் எது என்று பார்ப்பதற்கு அவர் இதைத்தான் நம்பினார். லீலாவதி அப்பொழுது சிறு பெண். அவள் இந்த கடிகாரப் பாத்திரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் மூக்குத்தியில் இருந்து ஒரு முத்து விலக, இந்த பாத்திரத்தினுள் விழுந்து விட்டது. மேல் பாகத்திற்கும், கீழ் பாகத்திற்கும் நடுவே உள்ள வழியில் அது சிக்கிக் கொண்டது. இதனால் தண்ணீர்த் துளிகள் விழுகிற வேகம் தடைப்பட்டு விட்டது. நேரம் மாறி விட்டது. அந்த பாத்திர கடிகாரம் சரியான நேரத்தைக் காட்ட வில்லை.
அதை நம்பி பாஸ்கராச்சார்யார் ‘நல்ல முஹுர்த்தம் வந்தது” என்று தீர்மானித்து, கல்யாணத்தை நடத்தினார். ஆனால் அதுவோ மிகவும் கெட்ட நேரமாக அமைந்தது. லீலாவதியின் ஜாதகப்படியே அவள் சின்னஞ்சிறு வயதிலேயே கணவனை இழந்தாள். முத்து விழுந்தது என்பது அவளுக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் பின்னர் பாஸ்கராச்சார்யார் எதனால் தன்னுடைய கணக்குத் தவறியது என்று ஆராய்ந்த பொழுது, கடிகாரப் பாத்திரத்தில் முத்து இருப்பதைக் கண்டார். விதியை யாரும் மாற்ற முடியாது என்று அவர் உட்பட எல்லோருமே புரிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஒருபுறம் இருக்க, பாஸ்கராச்சார்யாருக்கு 1500 வருடங்களுக்கு முன்பாகவே வராஹமிஹிரர் ‘ப்ருஹத்ஸம் ஹிதை’, ‘ப்ருஹத்ஜாதகம்’ என்ற நூல்களை இயற்றினார். ப்ருஹத்ஸம்ஹிதையில் விஞ்ஞானத்தின் பல பிரிவுகள் அடங்கி உள்ளன. இவரைத் தொடர்ந்து, ஆர்யபட்டர் என்பவரும், ‘ஆர்ய பட்ட சித்தாந்தம்! என்ற நூலை எழுதினார். அது மிகவும் புகழ் பெற்ற கணித சாஸ்த்ரம்.
ஜோதிஷம் பற்றி இன்னமும் சில விவரங்கள் இருக்கின்றன…