எது தர்மம்?

தர்ம சாஸ்த்ரங்கள்என்ற நூல்களும்இருக்கின்றன; ஸ்மிருதிகள்என்பவையும்தர்ம சாஸ்த்ரங்கள்என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதிகள்என்பவை வேதம்போல்அல்லாமல்‌, இயற்றப்பட்டவை என்பதைப்பார்த்தோம்‌. தர்ம சாஸ்த்ரங்களைப்பார்ப்பதற்கு முன்பாக, தர்மம்என்றால்என்ன என்பதைப்பார்க்க வேண்டும்‌. தர்மம்என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை ஒன்றே ஒன்றினால்விளக்கம்அளித்து விட முடியாது. நியாயம்என்று சொல்லலாம்‌; நேர்மையான நடத்தை என்று சொல்லலாம்‌: மனசாட்சியின்படி நடந்து கொள்வது என்று சொல்லலாம்‌; ஒழுக்கம்என்று கூறலாம்‌; ஒருவன்ஏற்றுக்கொண்ட வழிமுறை என்று சொல்லலாம்‌; சட்டம்என்று சொல்லலாம்‌; மத நம்பிக்கை வழி வந்த விதிமுறைகள்என்று சொல்லலாம்‌; கடமைகள்என்று சொல்லலாம்‌… இப்படி பல பொருள்களைக்கொண்டதாக இருக்கிறது தர்மம்என்கிற சொல்‌. 

இதில்இன்னமும்விரிவாகப்போனால்அரசர்களுக்குரிய ராஜ தர்மம்இருக்கிறது; போர்க்காலத்தில்கடைப்பிடிக்கக்கூடிய யுத்த தர்மம்இருக்கிறது; ஆபத்துக்காலங்களில்ஏற்கக்கூடிய ஆபத்து தர்மங்கள்இருக்கின்றன. இப்படி சில விசேஷ சூழ்நிலைகளுக்கான தர்மமும்இருக்கிறது

மஹாபாரதத்தில்பீஷ்மர்கூட, ‘தர்மம்என்பதற்கு ஒரு விளக்கத்தைத்தருவது கடினம்தான்‌. மனிதர்களை உயர்த்துவது எதுவோ, அது தர்மம்‌; எது எல்லாவற்றையும்தாங்கி நிற்கிறதோ, அது தர்மம்‌ – என்று ரிஷிகள்கூறியிருக்கிறார்கள்‌’ என்று தர்மத்தைப்பற்றி யுதிஷ்டிரருக்கு விளக்குகிறார்‌. ஹிந்து நூல்களின்படியும்‌, வழக்கு முறைகளின்படியும்‌, தர்மம்என்ற சொல்‌, ‘எல்லா விதமான ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும்குறிப்பதோடு மட்டுமல்லாமல்‌ – நற்கதியை அடைவதற்குரிய வாழ்க்கை முறையைச்சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல்‌ – அவரவர்களின்மனசாட்சிக்கு ஒத்த நடவடிக்கைகளை ஏற்பதோடு மட்டு மல்லாமல்‌ – மோட்ச சாதனமாகவும்கூறப்படுகிறது

விதிமுறைகளை இயற்றியுள்ள சட்டம்போன்ற ஸ்மிருதி களும்தர்மம்தான்‌. சில வைதீகக்காரியங்களுக்கான வழி முறைகளை விதஇக்கின்ற தர்ம சாஸ்த்ரங்கள்கூறுவதும்‌, தர்மம்தான்‌. வர்ண தர்மம்‌, குல தர்மம்‌, ஜாதி தர்மம்‌, ஸ்வதர்மம்என்றெல்லாம்பேசப்படுகிறது. வர்ணம்வேறு, ஜாதி வேறு. வர்ணம்பிறப்பினால்உண்டாவதல்ல. ஜாதி பிறப்பினால்உண்டாவது. நான்கு வர்ணங்களுக்கென்று தர்மங்கள்விதிக்கப்பட்டிருக்கின்றன. ஜாதிகளுக்கு என்று தர்மங்கள்விதிக்கப்படா விட்டாலும்‌, வழக்கு முறையில்அவை வந்து விட்டதால்‌, அவை ஏற்கப்பட்டுள்ளன. குல தர்மம்என்பது, ஒரு குடும்பத்தின்நடைமுறை வழக்கங்களைத்தான்குறிக்கும்என்பது என்னுடைய கருத்து; ஜாதி தர்மத்திலிருந்துல்‌, வர்ண தர்மத்திலிருந்தும்இது மாறுபட்டது என்பதால்தான்‌, குல தர்மம்என்பது தனியே குறிக்கப்பட்டிருக்கிறது என்று கருது வதற்குத்தான்இடம்உண்டு. இதைத்தவிர ஸ்வதர்மம்என்ற ஒன்று இருக்கிறது. அதாவது அவனவன்மனசாட்சிக்கு ஏற்பதன்மனசாட்சியை ஏமாற்றிக்கொள்ளாமல்‌ – இதுதான்சரி என்று ஒருவன்ஏற்கும்நடைமுறை எதுவோ, அது அவனுடைய ஸ்வ தர்மம்‌. சில உதாரணங்களைப்பார்ப்போம்‌. 

ஸீதையை அபகரித்து வந்த தன்னுடைய மூத்த சகோதர னாகிய ராவணனுடைய செயல்மிகவும்தவறானது என்பதை உணர்ந்த விபீஷணன்‌, அவனை விட்டு விலகினான்‌. ராமருடன்சேர்ந்து கொண்டான்‌. கும்பகர்ணனோ, ராவணனுடைய தவறைச் சுட்டிக்காட்டினாலும்‌, அவன்பக்கமே நின்று அவனுக்காகப்போரிட்டு உயிர்துறந்தான்‌. இந்த இருவரில்யாருடைய செயல்மேன்மையானது? தவறான செயல்என்று தெரிந்தவுடன்‌, அதை எதிர்த்துப்பேசியதால்‌, ராவணனால்விபீஷணன்வெளியேற்றப்பட்டான்‌. அத்துடன்அவன்நின்றுவிடவில்லை. போய்ராமருடன்சேர்ந்து கொண்டு, ராவணன்தரப்பை எதிர்த்துப்போரிட்டான்‌. இது: காட்டிக்கொடுக்கும்செயலா அல்லது ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்கிற செயலா? ராமர்‌ – தர்மத்தின்சின்னமாகவும்‌, ராவணன்‌: – அதர்மத்தின்சின்னமாகவும்நின்று போரிடுகையில்‌, தர்மத்தின்பக்கம்நின்று வெற்றி பெற உதவுவது மேன்மையான செயல்அல்லவா? ‘தர்மம்ஒரு பக்கம்போரிடட்டும்‌. அதர்மம்ஒரு பக்கம்போரிடட்டும்‌. இரண்டுக்கும்நடுவே நான்ஒன்றும்செய்யாமல்பேசாமல்இருந்து விடுகிறேன்‌! என்று கையாலாகாத்தனமாக ஒரு முடிவெடுக்காமல்‌, தர்மம்வெற்றி பெற உதவுவேன்என்று, விபீஷணன்இீர்மானித்தது நல்ல செயல்தானே? இதை இப்படியும்பார்க்கலாம்‌. 

கும்பகர்ணன்‌, ராமர்பக்கம்போய்ச்சேரவில்லையே? ராவணன்செய்தது தவறு என்று சொன்னாலும்‌, அவன்பக்கமே நின்று போரிட்டான்‌; இன்ற உப்புக்கு அவன்மோசம்தேடவில்லை; ஆனால்விபீஷணனோ, ராஜ்யத்தின்மீது ஆசைப்பட்டு ராமர்பக்கம்போய்நின்றான்‌. இது துரோகச்செயல்அல்லவாஎன்றும்இதைப்பார்க்கலாம்‌. 

அதர்மத்தைச்சுட்டிக்காட்டியதோடு தன்கடமை இர்ந்தது என்று நினைத்து, தர்மமமோ, அதர்மமோ அண்ணனை விட்டுப்பிரிவ இல்லை என்ற தீர்மானத்துடன்‌, அவன்பக்கமே நின்று போரிட்ட கும்பகர்ணனுடைய செயல்‌ – அவனுடைய ஸ்வதர்மம்‌. அவ னுடைய மனசாட்சிக்கு ஏற்ப, அவன்எடுத்த முடிவு அது. அதர்மத்தைச்சுட்டிக்காட்டி, அதன்காரணமாக வெளியேற்றப்பட்ட பிறகு, தர்மத்துடன்சேர்ந்து நின்று, தர்மத்தின்சின்னமாக விளங்கிய ராமர்வெற்றி காண உதவுவதுதான்தனது கடமை என்று விபீஷணன்நினைத்தான்‌. அது அவனுடைய ஸ்வதர்மம்‌. அவனுடைய மனசாட்சியின்படி அவன்எடுத்த முடிவு அது.

தாய்அன்பைக்காட்டிலும்மிஞ்சியது வேறு எதுவும்இல்லை. பெற்ற தாய்தெய்வத்திற்குச்சமமானவள்‌. அவளுக்கு துரோகம்நினைக்கிற மாதிரி ஒரு பாவத்தை ஒரு மனிதன்செய்ய முடியாது. ஆனால்கர்ணன்என்ன செய்தான்‌? குந்தி அவளிடம்வந்து மன்றாடியபோது, ‘என்னைப்பெற்றவுடன்நீ ஆற்றில்விட்டு விட்டாய்‌. தேரோட்டியின்மனைவியோ என்னை வளர்த்தாள்‌. அவளுடைய அன்பு எப்படிப்பட்டது? என்னை எடுத்து அவள்மடியில்வைத்துக்கொண்டவுடன்‌, அவளுக்கு தானாகவே பால்சுரந்தது. அந்த அளவுக்கு அவள்மனதில்அன்பு பொங்கியது. நான்அவளைத்தாயாக நினைப்பேனா? அல்லது என்னை அவமானச்சின்னமாகக்கருதி நட்டாற்றிலே விட்டு விட்ட உன்னை தாயாக நினைப்பேனா?’ என்று கேட்கிறான்கர்ணன்‌. இதனால்கர்ணன்நிந்திக்கப்படவில்லை. ‘துரியோதனனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது எதுவோ, அதைச்செய்வதுதான்என்னுடைய தர்மம்‌! என்று நினைத்து செயல்பட்டவன்கர்ணன்‌. ஒரு காரியத்தைச்சாதித்துக்கொள்வதற்காகவோ, செல்வத்தை அனுபவிப்பதற்காகவோ, இன்பங்களைப்பெறுவதற்காகவோ, பயத்தை தணித்துக்கொள்வதற்காகவோ அவன்எடுத்த நிலை அல்ல இது. ‘என்னுடைய கெளரவத்தைக்காப்பாற்றிய நண்பன்துரியோதனன்‌. அவன்இருப்தியுற நடந்து கொள்வதே எனது கடமை என்று, தனது மனசாட்சியின்படி கர்ணன்முடிவெடுத்தான்‌. ஆகையால்தான்அது அவனுடைய ஸ்வதர்மமாயிற்று. அதனால்தான்அவன்மேன்மையுற்றான்‌. 

தர்மங்களை எல்லாம்மிகவும்நன்றாக அறிந்த விதுரர்‌, துரியோதனனைக்கண்டித்து வெளியேறினார்‌. அவரும்மேன்மை யானவரே! தீமையின்பக்கம்நிற்க அவருடைய மனசாட்சி இடம்தரவில்லை. ‘அப்படியானால்இமையின்பக்கம்நின்ற கர்ணன்செய்தது அதர்மம்அல்லவா?! என்று கேட்கலாம்‌. கர்ணன்நின்றது. அவனுடைய மனசாட்சியின்படி பார்த்தால்‌, இமையின்பக்கம்அல்ல; உண்மையான நட்பின்பக்கம்‌. 

மாண்டவ்யர்என்று ஒரு ரிஷி. அவர்நிஷ்டையில்இருந்த போது, அங்கே ஒரு இருடன்வந்து விட்டான்‌. அவனைத்துரத்திக்கொண்டு, அரசனின்சேவகர்கள்வந்தார்கள்‌. இவர்‌, திருடனையும்கவனிக்கவில்லை. அவர்களையும்கவனிக்கவில்லை. அவர்கள்இவரை திருடன்‌ ‘எங்கேஎன்று கேட்க, இவர்பதில்அளிக்காமல்இருக்க, திருடனும்அகப்பட்டு விட, இவர்தான்அவனை மறைத்து வைத்தார்என்று அவர்கள்நினைத்து விடுகிறார்கள்‌. அவர்கழுவில்ஏற்றப்படுகிறார்‌. ஆனால்இறக்கவில்லை; கழுவில்ஏற்றப்பட்ட நிலையிலும்‌, நிஷ்டையிலேயே இருந்தார்‌. தகவல்அறிந்த அரசன்‌, பதறிப்போய்‌, அவரைக்கழுவிலிருந்து இறக்கி, மன்னிப்புக்கேட்டுக்கொண்டான்‌. 

மாண்டவ்யர்‌, தர்மதேவனிடம்‌ ‘தவறே செய்யாத எனக்கு ஏன்இந்த தண்டனை? என்று கேட்கிறார்‌.  தர்மதேவன்‌,

நீ சிறுவனாக இருந்தபொழுது, ஊசியினால்பூச்சிகளைக்குத்தினாய்‌. அதனால்இப்பொழுது உனக்கு இந்த தண்டனை கிடைத்திருக்கிறதுஎன்று கூறுகிறான்‌.  “சிறிய வயதஇல்நான்அறியாமல்செய்த தவறு அது. பூச்சிகளை இம்மாதிரி செய்யக்கூடாது என்று தெரிந்து வைத்துக்கொண்டு, நான்அதைச்செய்யவில்லை. இப்படி அறியாமல்செய்த தவறுக்கு, இவ்வளவு பெரிய தண்டனையை நீ அளித்திருக்கிறாய்‌. அதனால்நீ மனிதனாகப்பிறக்கக்கடவதுஎன்று மாண்டவ்யர்‌, தர்மதேவனுக்கு சாபமிடுகிறார்‌. தர்மதேவன்‌, மனிதனாகவிதுரராகப்பிறந்தார்‌. இப்படி மனிதனாகப்பிறக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏன்ஏற்பட்டது? அளவுக்கு மீறிய தண்டனையை அவன்கொடுத்தான்என்பதுதான்அவன்செய்த குற்றம்‌. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்எவ்வளவு சாரம்அடங்கியிருக்கிறது! அதர்மத்இற்குத்தண்டனை விதிப்பது என்பது தர்மதேவனுக்கு உரிய தர்மம்தான்‌; அவனுடைய கடமைதான்அது. ஆனால்‌, அளவுக்கு மீறிய தண்டனையைக்கொடுத்தான்என்பதால்‌, அவன்செயல்அதர்மமாகி விட்டது. அதற்குரிய தண்டனையை அவன்அனு பவித்தான்‌. தர்மதேவனுக்கே கூட, அதர்மப்பாதையில்செல்லும்போது, தண்டனை உண்டு

தர்மவியாதன்ஒரு கசாப்புக்கடைக்காரன்‌. அவன்ஒரு முனிவருக்கு தர்மம்என்றால்என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்‌! அந்த நிகழ்ச்சியைப்பார்ப்போம்‌.