மனுஸ்மிருதியில் ப்ராம்மணன்

மனுஸ்ம்ருதி என்றவுடன்பலருக்கு நினைவுக்கு வரக்கூடியது, அது பற்றிய கண்டனங்கள்தான்‌. ‘இது உயர்ஜாதியினரின்சதிஅதுவும்குறிப்பாக ப்ராம்மணர்களின்சூதுமனிதர்களை நாலு வகையாக்கி, அதில்நாலாம்வகையினரை மிகவும்தாழ்ந்த நிலையில்வைத்து புரியப்பட்ட கொடுமைமொத்தத்தில்பெரும்அநீதியை இழைத்த நூல்‌’ என்றெல்லாம்மனுஸ்ம்ருதியைப்பற்றிய விமர்சனங்கள்பல ஆண்டுகளாகச்செய்யப்பட்டு வருகின்றன

அப்படிப்பட்ட மனுஸ்ம்ருதியிலிருந்து, எடுத்த எடுப்பிலேயே சில பகுதிகளை நாம்பார்த்து விடுவோம்‌. 

சூத்ரோ ப்ராம்மணதாமேதி 

ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்‌ 

க்ஷ்த்ரியாஜ்ஜாதமேவம்து 

வித்யாத்வைச்யாத்ததைவச 

சூத்ரன்‌, ப்ராம்மணன்ஆகலாம்‌); ப்ராம்மணனும்சூத்ரன்ஆகலாம்‌; அதே போல்க்ஷத்ரிய மற்றும்வைசிய வர்ணங்களைச்சார்ந்தவர்களின்மகன்களும்வேறு வர்ணத்தை அடையலாம்‌.

குரும்வா பாலவ்ருத்தெள வா 

ப்ராம்மணம்வா பஹுச்ருதம்‌ 

ஆததாயினமாயாந்தம்‌ 

ஹன்யாதேவாவிசாரயந்‌ 

குருவோ, இளைஞனோ, வயோதிகளோ, ப்ராம்மணனோ, மெத்த கற்றவனோ ஆயினும்சரி, ஒருவன்வன்முறை எண்ணத்துடன்வந்தால்‌, அவனை தயக்கமின்றி கொன்றுவிட வேண்டும்‌. 

அஷ்டாபத்யம்து சூத்ரஸ்ய 

ஸ்தேயே பவதி இல்பிஷம்‌. 

க்ஷோடசைவ து வைச்யஸ்ய

 த்வாத்ரிம்சத்க்ஷத்ரியஸ்யச

ப்ராம்மணஸ்ய சது: வூஷ்டி

பூர்ணம்வாபி சதம்பவேத்‌ 

த்விகுணா வா சது

ஷஷ்டி தத்தோஷகுணா வித்தி:

அறிந்து இருட்டு குற்றத்தைச்செய்கிற சூத்ரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனையை விக்க வேண்டும்‌; வைசியனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு; குற்றத்தின்தன்மையை அறிந்தவன்என்பதால்‌, ப்ராம்மணனுக்கு அறு பத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்‌ 

அப்ராம்ணாத்அத்யயனம்‌ 

ஆபத்காலே விதீயதே 

அனுவ்ரஜ்யா சுச்ருஷா 

யாவத்அத்யயனம்குரோ

தவிர்க்க முடியாத நேரங்களில்‌, ப்ராம்மணனானவன்ப்ராம்மணன்அல்லாத குருவிடமிருந்து போதனை பெறலாம்‌.

அப்படி போதனை பெறுகின்ற காலத்தில்‌, அந்த குருவுக்கு அந்த மாணவன்பணிவிடை செய்ய வேண்டும்‌.

கோரக்ஷ்கான்வாணிஜிகாம்ஸ்ததா

காருகுசலவான்

ப்ரேஷ்யான்வார்துஷிகாம்ஸ்சைவ

விப்ராச்சூத்ரவதாசரேத்

மாடு மேய்ப்பது, வர்த்தகம்செய்வது, தொழில்களை நடத்துவது, நடிப்பு அல்லது சங்கதத்தை தொழிலாக மேற்கொள்வது, வட்டிக்கு பணம்விடுவது மற்றும்பிறரிடம்பணி செய்வதுபோன்றவற்றில்ஈடுபடுகிற ப்ராம்மணர்கள்‌, சூத்திரர்களாகவே நடத்தப்பட வேண்டும்‌.

சாஸ்த்ர விதிமுறைகளின்படி நடக்காத ப்ராம்மணனை, மனு தர்மம்எவ்வாறு அணுகுகிறது என்பதையும்பார்த்து விட்டு, மேலே செல்வோம்‌ :

சாதுவைப்போல்வேடம்அணிந்து கொண்டு மற்றவர்களின்பொருளின்மீது விருப்பம்வைத்து, பொய்யைப்பரப்பி, கர்வம்கொண்டு, மற்றவர்களைப்பற்றிய நல்ல வார்த்தைகளைப்பொறுக்க முடியாத பொறாமைக்காரனாகத்இகழ்பவன்‌, பூனையின்தன்மையை உடையவன்எனப்படுகிறான்‌. தான்தேடுகிற இரை வெளியே வருகிற வரையில்அடக்க குணம்உள்ளது போல்நடித்து, இரை வெளியே வந்தவுடன்பாய்ந்து பிடித்து, அதைக்கொன்று இன்று விடுகிற குணம்பூனையினுடைய குணம்‌… இப்படிப்பட்ட குணமுடைய ப்ராம்மணன்நரகத்தில்வீழ்கிறான்‌… பூனை குணமுடைய ப்ராம்மணனுக்கோ, வேதங்களைக்கற்றறியாத ப்ராம்மணனுக்கோ ஒரு சிறிய தானத்தையும்கூட, நன்னடத்தை உள்ள மனிதன்செய்து விடக்கூடாது. இப்படிப்பட்ட ப்ராம்மணர்களுக்கு தானம்செய்யப்பட்டால்‌, தானம்வாங்கியவனோடு சேர்ந்து தானம்கொடுத்தவனும்௯ட துன்பத்தையே அனுபவிப்பான்‌. வேதங்களிலும்‌, சாஸ்த்ரங்களிலும்கூறப்பட்டிருக்கும்வழிமுறைகளைக்கடைப்பிடிக்காத ப்ராம்மணனுக்கு சிராத்தத்தில்உணவளிக்கப்பட்டால்‌, அந்த உணவு அரக்கர்களால்உட்கொள்ளப்பட்ட தாகிறது

ப்ராம்மணர்களுக்கு பல சலுகைகளை அளித்து, வசதி களைச்செய்து கொடுத்து விடுகிற நூல்‌! – என்று விமர்சிக்கப்படுகிற மனு ஸ்ம்ருதி, ப்ராம்மணர்களைப்பற்றிச்சொல்லியிருக்கிற சல நிபந்தனைகளை மேலே பார்த்தோம்‌. ‘ப்ராம்மணனும்சூத்திர னாகலாம்‌; சூத்திரனும்ப்ராம்மணனாகலாம்‌… தன்னைக்கொல்இன்ற எண்ணத்தோடு வருகிற ப்ராம்மணனை, சற்றும்தயக்கம்இல்லாமல்கொன்றுவிட வேண்டும்‌… ஒரு குற்றத்தைப்புரிகிற ப்ராம்மணனுக்கு சாதாரண தண்டனையை விட, அறுபத்தெட்டு மடங்கு அதிக தண்டனையைக்கொடுக்க வேண்டும்‌… சில நேரங்களில்ப்ராம்மணர்அல்லாதவரிடத்திலும்‌, ப்ராம்மணன்வேதம்கற்கலாம்‌… சூத்திரன்விருந்தாளியாக வந்தால்‌, ப்ராம்மணன்அவனை உபசரிக்க வேண்டும்‌… வர்த்தகம்‌, தொழில்கள்ஆகியவற்றில்ஈடுபடுகிற ப்ராம்மணர்கள்‌, சூத்திரர்களாகவே நடத்தப்பட வேண்டும்‌… வேதத்தை நன்கு கற்று அறி யாமலும்‌, சாஸ்த்ர விதிமுறைகளின்படி நடக்காமலும்உள்ள.ப்ராம்மணனுக்கு தானம்செய்தால்‌, தானம்செய்கிறவன்நரகத்திற்குப்போவான்‌…! என்றெல்லாம்சொல்கிற ஒரு நூல்‌, ப்ராம்மணர்களுக்கு எல்லா வசதிகளையும்செய்து கொடுத்து, அவனை மிகவும்செளகரியமாக வைக்கிற நூல்என்று கருதப்படுவது விந்தைதான்‌. 

ஒரு விஷயத்தை நாம்மறந்துவிடக்கூடாது. நான்கு வர்ணங்களை சிருஷ்டி செய்தது மனு ஸ்ம்ருதி அல்ல. வர்ணங்கள்பற்றிய குறிப்பு ரிக்வேதத்திலேயே வருகிறது. ஆனால்வேத காலத்தில்‌, பிறப்பினாலேயே ஒருவன்எந்த வர்ணத்தையும்சார்ந்தவனாகி விடவில்லை. பின்னர்இந்த நிலை மாறியது. ஒவ்வொருவரும்தங்கள்தங்கள்இயல்புகளுக்கேற்ப ஒவ்வொரு வகையில்வாழ; ஒரு மனிதனின்வாழும்வகையே அவன்சந்ததிகளின்வாழும்வகையாக விட; காலப்போக்கில்இதுவே குடும்பத்தின்வாழும்வகையாக விட, வர்ணங்கள்பிறப்பினாலேயே அடையப்படுகின்றன என்ற நிலை தோன்றிவிட்டது. இந்த நிலை எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாவிட்டாலும்‌, மஹாபாரதத்திலேயேப்ராம்மணன்யார்‌? மற்ற வர்ணத்தவர்யார்யார்‌? என்றெல்லாம்வருகிற விவாதங்களிலிருந்து, சுமார்‌ 5000 வருடங்களுக்கு முன்பாகவே இந்த நிலை தோன்றியிருக்கலாம்என்று கருதக்கூடும்‌. அப்படிப்பட்ட நிலையில்தான்மனு ஸ்ம்ருதி வந்திருக்கிறது. அப்படி இருந்தும்கூட, பிறப்பினால்மட்டுமே ப்ராம்மணனாகிறவனுக்கு முதன்மையைத்தர மனு ஸ்ம்ருதி முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மனு ஸ்ம்ருதி ப்ராம்மணனுக்கு விதித்திருக்கிற நிபந்தனைகளை எல்லாம்பார்க்கும்பொழுது, ப்ராம்மணன்என்பது ஒரு அந்தஸ்தா அல்லது ஒரு தண்டனையா என்ற சந்தேகமே கூட வந்து விடும்‌; அவ்வளவு நிபந்தனைகள்‌. அந்த நிபந்தனைகளை எல்லாம்ஏற்று, அந்த விதிமுறைகளுக்கெல்லாம்உட்பட்டு, நெறிமுறை தவறாத வாழ்க்கை வாழ்கிற ப்ராம்மணனுக்குத்தான்‌, மனு தர்மம்சலுகைகளை அளித்தது. பிறப்பில்மட்டுமே ப்ராம்மணனாக இருந்து, மற்றபடி ப்ராம்மணனுக்குரிய விதிமுறைகள்எதையும்கடைப்பிடிக்காமல்வாழ்கிறவனுக்கு மனுதர்மம்அளித்த ஒரே ஒரு சலுகை, அரசனின்நீதி நிர்வாகத்துறையில்பதவி வகிப்பது மட்டும்தான்‌. இப்படி ஒரே ஒரு ஷரத்தில்‌ ‘பிறப்பினால்மட்டுமே ப்ராம்மணன்‌’ என்று இருப்பவனுக்கு முன்னுரிமை தரப்பட்டிருப்பதில்இருந்தேமற்ற ஷரத்துகவில்குறிப்பிடப்பட்டிருக்கிற ப்ராம்மணர்கள்பிறப்பினால்மட்டுமல்லாமல்‌, வாழும்வகையினாலும்ப்ராம்மணர்களாகத்திகழ வேண்டும்என்பது எளிதாகப்புரிகிற விஷயம்‌. அதாவது மனு ஸ்ம்ருதியில்ப்ராம்மணர்களுக்கு அளிக்கப்படுகிற சலுகைகள்‌ (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றைத்தவிர) எல்லாமே பிறப்பினால்மட்டுமல்லாமல்‌, வாழும்வகையினாலும்ப்ராம்மணனாகத்திகழ்ந்தவர்களுக்கே.

பல கடுமையான நிபந்தனைகளையும்‌, வாழும்‌,வகைகளையும்ப்ராம்மணனுக்கு விதித்து விட்ட மனு ஸ்ம்ருதி, அப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வாழ்கிற ப்ராம்மணனுக்கு சில சலுகைகளைத்தந்தது. இன்றைய இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால்கூட, அதனால்பயன்பெறுபவர்களுக்கு எந்த நிபந்தனையும்‌  கிடையாது.  ஆனால்அன்று சில விஷயங்கீளில்ப்ராம்மணனுக்கு முன்னுரிமை தந்த மனு ஸ்ம்ருதி, அவனுக்கு விதித்த டிஸிப்ளின்மிகவும்கடுமையானது. அந்த டிஸிப்ளினை ஏற்று ஒருவன்வாழ்ந்தால்‌, அவனுக்கு எந்த சமூகமுமே மரியாதை அளிக்கும்‌. 

மனு ஸ்ம்ருதி ப்ராம்மணர்களுக்கு விதிக்கிற கடுமையான நிபந்தனைகளை பிறகு பார்ப்போம்‌. இப்போதைக்கு பிறப்பை மட்டும்வைத்துக்கொண்டு, எந்த வகுப்புக்கும்மனு ஸ்ம்ருதி பெரும்சலுகைகளைக்காட்டிவிடவில்லை என்பதை மட்டும்மனதில்வாங்கிக்கொண்டு, மேலே உள்ள பல விஷயங்களைப்பார்ப்போம்‌. நல்ல குணங்கள்‌; ப்ரம்மச்சாரியின்கடமைகள்‌; மாணவர்களுக்கான விஇமுறைகள்‌; வெவ்வேறு இருமண வகைகள்‌; விருந்தாளிகள்நடத்தப்பட வேண்டிய விதம்‌; இதி என்றும்‌, இவசம்என்றும்வழங்குகிற சிராத்தத்தின்முக்கியத்துவம்‌; பொதுவாக இல்லறத்தில்உள்ளவர்கள்கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்‌; ஏற்கத்தகாத மற்றும்ஏற்கத்தக்க உணவு வகைகள்‌; மனைவியின்கடமை; நான்கு வர்ணத்தவர்களின்கடமைகள்‌; அரசனின்அதிகாரமும்‌, கடமையும்‌; ஒரு ராஜ்யத்தைப்பாதுகாப்பதற்காக அரசன்கடைப்பிடிக்கக்கூடிய வழிமுறைகள்‌; நீதிமன்ற அமைப்பு: வழக்குகளை நடத்தும்வழிமுறைகள்‌: சாட்சியங்களை ஏற்பதற்கும்நிராகரிப்பதற்குமான விதிமுறைகள்‌; வெவ்வேறு குற்றங்களுக்கான தண்டனைகள்‌; சொத்துரிமைக்கான விதிமுறைகள்‌; பிராயச்சித்த வழிமுறைகள்‌; மறுபிறவி; ஞானம்எய்தும்வழிமுறைகள்‌; தன்னைத்தானே ஒருவன்உயர்த்திக்கொள்வதற்கான வழிமுறைகள்‌… என்று ஆட்சி நிர்வாகத்திலிருந்து, குடும்பக்கடமைகள்உட்பட, தனிமனித தர்மங்கள்வரை பல்வகையான விதிமுறைகளை மனுஸ்ம்ருதி வகுத்திருக்கிறது

ஆனால்‌, ஒரு விஷயத்தை நாம்மனதில்கொள்ள வேண்டும்‌. இப்போது பாராளுமன்றத்தில்ஒரு சட்டம்இயற்றப்பட்டால்‌, அது நாடு முழுவதும்செல்லுபடியாகிறது. அது செல்லுபடியாகும்வகையில்மக்களை நிர்பந்திக்கும்அதிகாரம்‌, மத்திய அரசுக்கு இருக்கது. அதற்கான அதிகாரிகள்நாடெங்கும்இருக்கிறார்கள்‌. ஆனால்மனுஸ்ம்ருதியில்கூறப்பட்டுள்ள விதிமுறைகள்இப்படிப்பட்டவையல்ல. ஏனெனில்எல்லா அரசர்களும்அதை ஏற்று அதன்படியே நடந்தார்கள்என்று சொல்ல முடியாது. பாரத நாடு கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டு இருந்தாலும்‌, நிர்வாகம்மற்றும்அரசியல்ரீதியாக பல ராஜ்யங்களாக இருந்தபோது, சில அரசர்கள்இதை ஏற்றிருக்கலாம்‌; பலர்இதைப்பற்றி கவலைப்படாமல்இருந்திருக்கலாம்‌. மனுஸ்ம்ருதி மட்டுமல்லாமல்வேறு பல ஸ்ம்ருதிகளும்இருந்ததால்‌, வெவ்வேறு ராஜ்யத்தில்‌. வெவ்வேறு: நூலின்அடிப்படையில்அரசன்ஆட்சி செலுத்தி இருக்கக்கூடும்‌. 

மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டது சுமார்கி.மு.200 ஆண்டுகளுக்கும்முன்பாக என்று இப்போது சொல்கிறார்கள்‌. அதற்கு முன்பாகவே கூட மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டிருக்கலாம்‌. ஆனால்.மு. 200 என்று எடுத்துக்கொள்ளும்பொழுதேஉலகன்பல்வேறு நாடுகளில்‌, சட்டத்திட்டங்கள்ஒழுங்கு முறைப்படுத்தப்படாமல்இருந்த சமயத்திலேயேநீதிமன்றம்‌, வழக்கு விசாரணை வழி முறை, சாட்சியங்கள்ஏற்பு மற்றும்நிராகரிப்பு, குற்றங்களுக்கான தண்டனைஎன்றெல்லாம்‌, சட்டத்திட்டங்களை பாரதம்கிண்டிருந்தது என்பதற்கு, மனுஸ்ம்ருதி ஒரு அத்தாட்சி. இப்படிப்பட்ட வியக்கத்தக்க முறையில்அமைந்திருக்கிற இந்த நூலிலிருந்து சில பகுதிகளை அடுத்துப்பார்ப்போம்‌.