பிறப்பில் பேதமா?

மனுஸ்ம்ருதி, இன்று இருக்கிற வகையில்மனுவினால்தான்இயற்றப்பட்டதா அல்லது, ப்ருகு என்ற முனிவரால்இயற்றப்பட்டதா என்ற ஒரு சர்ச்சை, ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வந்திருக்கிறது. மனு இயற்றிய மனுஸ்ம்ருஇதான்இன்று நம்மிடையே இருக்கிற நூல்என்று பலர்கூறுகிறார்கள்‌. ஆனால்சிலர்‌ ‘மனுஸ்ம்ருதியிலேயே மனு கூறுவதாக ஒரு விளக்கம்வருகிறது; என்னிடமிருந்து இந்த ஸ்ம்ருதி நூலை முழுமையாகக்கற்று அறிந்துள்ள ப்ருகு அதைக்கூறுவார்‌! என்று தன்னை அணுகிய ரிஷிகளிடம்மனு கூறினார்என்று அந்த வாக்கியம்அமைந்திருக்கிறது. ஆகையால்இந்த நூல்ப்ருகு இயற்றியதேஎன்று வாதிட்டிருக்கிறார்கள்‌. 

ஆனால்மற்ற பல்ஆராய்ச்சியாளர்கள்‌ ”இல்லை; ப்ருகு கூறியிருப்பது அனைத்தும்மனுவிடம்இருந்து அவர்கற்றவையே என்பதால்‌, இது மனு இயற்றிய நூலேஎன்று வாதம்புரிகிறார்கள்‌. 

இரு சாராருமே, இந்த நூலில்கண்டுள்ளவை எல்லாம்மனுவின்கருத்துக்களே என்பதை ஏற்கிறார்கள்‌. சென்ற அத்தியாயத்தில்குறிப்பிட்டதைப்போல, சிருஷ்டியை வர்ணித்து விட்டு, குற்ற விசாரணை, சொத்துரிமை உட்படஆன்ம உணர்வை எய்துவது வரை பல விஷயங்கள்பற்றி மனுஸ்ம்ருதி வழிமுறைகளை வகுக்கிறது. வினாடிகள்‌, நிமிடங்கள்‌, நாழிகை, தினம்‌, வருடம்போன்ற காலக்கணக்குகள்கூறப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர்நான்கு யுகங்களின்கால அளவுகளும்‌, பல யுகங்களை உள்ளடக்கிய மன்வந்தர கால அளவும்விளக்கப்பட்டு, இதுவரை எண்ணற்ற மன்வந்தரங்கள்வந்து போய்விட்டன என்று கூறப்படுகிறது

நற்குணம்க்ருத யுகத்தில்நான்கு கால்களில்நின்றது; அந்த யுகத்தில்மனிதர்கள்தவறான வழியில்சம்பாதிக்கவில்லை. அதன்பின்னர்‌, மனிதர்கள்‌, கலைகளையோ செல்வத்தையோ அடைய, நேர்மையற்ற வழிமுறைகளை மேற்கொள்ளத்தொடங்கவே, க்ருத யுகத்திற்கு அடுத்து வந்த யுகங்களில்‌, தர்மம்ஒவ்வொரு காலாக இழந்தது; இருட்டு, பொய்‌ – ஆகியவற்றின்காரணமாகவும்‌, நேர்மையான தொழிலை நடத்துவதில்ஏற்பட்ட குறைபாட்டின்காரணமாகவும்‌, யுகங்கள்$ணித்தன. இவ்வாறாக, தர்மம்ஒவ்வொரு அடுத்த யுகத்திலும்பலவீனம்அடையிறது ‘. 

இவ்வாறு கூறிவிட்டு மனுஸ்ம்ருதி, ஒவ்வொரு யுகத்திலும்புண்யத்தைத்தேடும்வழியை வர்ணிக்கிறது

முதலாவது யுகமாகிய க்ருத யுகத்தில்‌, தவம்மேன்மை யானது; த்ரேதா யுகத்தில்ஞானம்மேன்மையானது; த்வாபர யுகத்தில்யாகங்கள்செய்வது மேன்மையானது; கலியுகத்தில்தானம்செய்வது மேன்மையானது ‘. 

கடுமையான தவம்புரிவதோ, மிகவும்முயற்சித்து உண்மையான ஞானத்தைப்பெறுவதோ, சிரத்தையுடன்மேன்மையான யாகங்களைச்செய்வதோ கலியுகத்தில்தேவை இல்லை; மிக எளிதாக புண்ணியம்தேட, தானம்செய்வது மேன்மையுறும்வழியாக கலியுகத்திற்குக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலத்திற்குத்தகுந்தாற்போல, மேன்மைபெறுகிற வழிமுறை எளிதாக்கப்பட்டுவிட்டது

ஒருவன்க்ருத யுகத்தில்தவம்செய்து பெற்ற உயர்வை, த்ரேதா யுகத்தில்ஞானத்தை அடைந்து பெற்ற உயர்வை, த்வாபர யுகத்தில்யாகங்கள்செய்து பெற்ற மேன்மையைகலியுகத்தில்தானம்செய்வது மூலமாகவே பெற்று விடலாம்‌. பலவீனமானவர்களுக்குஹாண்டிகேப்‌! தருவது பந்தயங்களின்வழிமுறை; கலியுகத்தில்தர்மரீதியாக மனிதர்கள்பலவீனமானவர்கள்என்பதால்‌, அவருக்கு ஸ்ம்ருதி நூல்அளித்திருக்கிற ஹாண்டிகேப்இது

இதையடுத்து, சர்ச்சைக்குரியதாகி விட்ட, நான்கு வர்ணப்பிரிவுகள்பற்றிய குறிப்புகள்வருகின்றன. ‘ப்ராம்மணன்படைப்புக்கடவுளின்வாயிலிருந்தும்‌, க்ஷத்ரியன்தோள்களிலிருந்தும்‌, வைச்யன்தொடையிலிருந்தும்‌, சூத்ரன்காலிலிருந்தும்தோன்றினான்‌! என்று புருஷ ஸுக்தத்தில்கூறப்பட்டிருப்பதை, மனுஸ்ம்ருதியும்கூறுகிறது

இது பற்றி ஏற்கெனவே நாம்பார்த்தோம்‌. காலிலிருந்து தோன்றியது சூத்ரன்மட்டும்அல்ல; பூமியே கூட படைப்புக்கடவுளின்காலிலிருந்து தோன்றியதுதான்‌. ‘பூமி தோன்றிய அங்கம்எதுவோ, அதிலிருந்து சூத்ரன்தோன்றினான்என்பது எப்படி இழிவாகும்‌?’ என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்‌. வேதம்ஓதுதல்அவன்கடமை என்பதால்‌, ப்ராம்மணனுக்கு வாயும்‌; தோள்வலிமை காட்டுவது அவன்கடமை என்பதால்க்ஷ்த்ரியனுக்கு தோளும்‌; சமுதாயத்திற்கு வன்மை அளிக்கும்வகையில்‌, வர்த்தகம்புரிவது அவன்கடமை என்பதால்வைசியனுக்கு தொடையும்‌; தனது பணிகளால்சமூகத்தைத்தாங்கி நிற்பது கடமை என்பதால்சூத்ரனுக்கு காலும்‌, தோற்றுவாய்களாகக்கூறப்பட்டிருக்கின்றன என்று பலர்விளக்கி இருக்கார்கள்‌; அது மட்டுமல்லஎல்லோரமே ஒரே விராட புருஷனின்அங்கங்களே என்பதைக்காட்டவும்‌, இந்த தோற்றுவாய்களைப்பற்றிய விவரம்பயன்படுகிறது

மேலும்‌, பிறப்பில்எவனும்எந்த வர்ணத்தையும்சார்ந்தவன்ஆகி விடுவதில்லை என்பதை இந்தத்தொடரில்ஏற்கெனவே பார்த்தோம்‌. இதை வலியுறுத்திப்பல பகுதிகள்‌, புராணங்களிலும்‌, இதிஹாசங்களிலும்‌, மனுஸ்ம்ருதியிலும்கூட வருகின்றன. ஆகை யால்இந்த வர்ணப்பிரிவுகள்‌ – பகவத்தையில்சொல்லப்பட்டிருப்பது போலகுணத்தையும்‌, வாழும்வகைகளையும்பொறுத்ததே. இதைக்கூறுகிற மனுஸ்ம்ருதி வாசகங்களையும்நாம்பின்னர்பார்க்க இருக்கிறோம்‌.

ப்ராம்மணனுக்கு மனுஸ்ம்ருதி, சமூக அந்தஸ்தில்உயர்ந்த இடத்தைத்தருகிறது என்பது மறுக்க முடியாதது

பூதானாம்ப்ராணின: ச்ரேஷ்டா

ப்ராணினாம்புத்திர்ஜீவிந

புத்திமத்ஸு நரா: ச்ரேஷ்டா 

நரேஷு ப்ராம்மணா: ஸ்ம்ருதா

படைக்கப்பட்டவற்றில்‌, அசையும்தன்மை உடையவை உயர்ந்தவை; அசையும்தன்மை உடையவற்றில்புத்தி சக்தி படைத்தவை உயர்ந்தவை; புத்தி சக்தி கொண்ட படைப்பு களில்மனிதர்கள்உயர்ந்தவர்கள்‌; மனிதர்களில்ப்ராம்மணர்கள்உயர்ந்தவர்கள்‌. 

இப்படி மனுஸ்ம்ருதி கூறியிருப்பதால்‌, அது பிறப்பில்பேதம்கற்பித்து விட்டது என்ற முடிவிற்கு வருவது சரியாக இருக்காது, எந்த விதிமுறையாகட்டும்‌, சட்டமாகட்டும்‌ – அது பயன்படுத்துகிற சொற்கள்என்ன அர்த்தத்தில்பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குகிற பகுதிகள்‌, அந்த சட்டத்திலேயே இருக்கும்‌. மனு ஸ்ம்ருதியில்ப்ராம்மணன்உயர்ந்தவனாகக்கூறப்படுகிறபோது, ‘ப்ராம்மணன்‌’ யார்என்பது பற்றி மனுஸ்ம்ருதி கூறுவதை நாம்கவனிக்க வேண்டும்‌. மனுஸ்ம்ருதியில்ஆங்காங்கே இது பற்றிய விளக்கம்இடம்பெறுகிறது. இரண்டாவது அத்தியாயத்திலேயே கூறப்படுவது இது

பெண்ணிடம்‌, அலி பலன்அளிக்க முடியாதவன்‌; இரண்டு பசுக்கள்சேர்வதால்பலன்இல்லை; மூடனுக்கு அளிக்கப்படுகிற தானம்பயனற்றது; இதே போல, வேதங்களைக்கற்றறியாத ப்ராம்மணன்பயனற்றவன்‌. 

மரத்தினால்செய்யப்பட்ட யானை, பெயரளவில்மட்டுமே யானை; தோலினால்செய்யப்பட்ட மான்‌, பெயரள வில்மட்டுமே மான்‌; வேதங்களைக்கற்றறியாத ப்ராம்மணன்பெயரளவில்மட்டுமே ப்ராம்மணன்‌?” 

இப்படிப்பட்ட ப்ராம்மணனுக்கு, மனுஸ்ம்ருதி, உயர்வை அளிக்கவில்லை; சலுகைகளைக்காட்டவில்லை. மனுஸ்ம்ருதி இயற்றப்பட்டபோது, பிறப்பின்மூலமே வர்ணங்கள்என்ற நிலை தோன்றி விட்டாலும்கூட, மனுஸ்ம்ருதி பிறப்பினால்மட்டுமே ப்ராம்மணனாக இருப்பவனைக்கடுமையாக நிந்திப்பதோடு நில்லாமல்‌, அவனை யாகம்போன்றவற்றிலிருந்து ஒதுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல்‌, அவனுக்கு சலுகைகளைக்காட்ட வும்மறுத்துள்ளது. ஆகையால்மனுஸ்ம்ருதி, பிறப்பிலேயே பேதம்கற்பித்த நூல்என்ற விமர்சனம்நியாயமற்றது

மனுஸ்ம்ருதி மேலும்சொல்கிறது

வேதங்களைக்கற்றறியாமல்‌, நடைமுறை வாழ்வில்உள்ள மற்ற கல்விகளை கற்க முற்படுகிற ப்ராம்மணன்‌, அவனுடைய வாழ்நாளிலேயே, தன்சந்ததிகளோடு சூத்ரன்ஆகிறான்‌.

இப்படியெல்லாம்சொல்வதினால்சூத்ரன்என்பது இழிவான நிலை என்றாகி விடவில்லை. சூத்ரர்களுக்கு வேதக்கல்வி மறுக்கப்பட்டது. மற்ற எல்லா கல்விகளும்அவனுக்கு இறந்தே இருந்தன. செல்வம்ஈட்டுவது அவனுடைய உரிமையாகக்கூறப்பட்டிருக்கிறது

ப்ராம்மணனுக்கு செல்வத்தைப்பற்றிய நினைவே வரக்கூடாது. அதன்காரணமாக நேரிடும்அவமதிப்பை அவன்பொருட்படுத்தக்கூடாது என்பது மட்டுமல்லஅம்மாதிரியான அவமதிப்பை அவன்பெருமையாகக்கருத வேண்டும்‌ – என்றும்மனுஸ்ம்ருதி விதித்திருக்கிறது. ப்ரம்மசாரியாக இருக்கும்போது தேன்‌, மலர்கள்‌, வாசனை இரவியங்கள்‌, இத்திப்புகள்போன்ற வற்றை அவன்நாடக்கூடாது; குடை, செருப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது; நடனம்‌, சங்கதம்போன்றவற்றில்அவன்ஈடுபாடு கொள்ளக்கூடாது; பிச்சை எடுத்துத்தான்உணவு உட்கொள்ள வேண்டும்‌. 

இப்படி பல கடும்நிபந்தனைகளை ஏற்று ப்ரம்மசர்யம்இருந்து, பின்னர்அவன்இல்லறத்தில்புகும்போது, மீண்டும்கடுமையான நிபந்தனைகளை அவன்ஏற்க வேண்டும்‌. அப்படி எல்லாம்வாழ்ந்தவனுக்குத்தான்மனுஸ்ம்ருதி உயர்வைக்கூறியது. இதில்தவறு காண்பதற்கில்லை. வாழ்க்கையையே, ஒரு விரதம்ஆக்கிக்கொண்டவனுக்கு, ஒரு சமூகம்மதிப்பளிக்கத்தான்செய்யும்‌; அதைத்தான்மனுஸ்ம்ருதி கூறுகிறது

இந்த விஷயம்மீண்டும்எடுத்துக்கொள்ளப்பட வேண்டிவரும்என்பதால்‌, இந்தக்கட்டத்தில்இதை இத்துடன்நிறுத்தி, அடுத்த விஷயத்திற்குப்போவோம்‌. 

அன்னை, தந்தை, ஆச்சார்யன்‌ – ஆகிய மூவரையும்துதித்து வாழ்பவன்‌, எல்லா தர்மங்களையும்துதிப்பவன்ஆகிறான்‌; இந்த மூவரைப்பழிப்பவன்‌, எல்லா தர்மங்களை யும்பழித்தவன்ஆகிறான்‌. 

இந்த மூவரும்வாழ்கிற வரையில்‌, அவன்வேறு பக்தியை செலுத்த வேண்டியதில்லை; அவர்களுக்கு பணிவுடன்சேவை செய்து, அவர்களுக்கு இனியதைச்செய்வதே ஒருவனின்கடமை. அவர்களுக்கு பணி செய்வதே அவனுடைய முதல்கடமை; மற்ற தர்மங்கள்இரண்டாம்பட்சமே

நூறு வருடங்கள்முயன்றாலும்‌, ஒரு மகனால்தன்னுடைய தாய்‌, தந்தையர்தனக்காகப்பட்ட கஷ்டங்களுக்கு ஈடு செய்ய முடியாதுதாய்‌, தந்தை, ஆச்சார்யன்‌ – ஆகி யோருக்கு எப்போதும்ஒருவன்நன்மை செய்ய வேண்டும்‌; இந்த மூவரின்மனநிறைவில்‌, எல்லா வகையான தவங்களும்பூர்ணத்துவம்அடைகின்றன ”. 

தாய்‌, தந்தை, குருஆகியோருக்கு பணி செய்வதை இப்படி வலியுறுத்துகிற மனுஸ்ம்ருதி, திருமணங்கள்பற்றிகூறுவதைஅடுத்துப்பார்ப்போம்‌.